முதன் முதலாக கச்சை கட்டி நின்ற பெண்மணி யார்?
இன்று கச்சை கட்டி நிற்கிறான் என்றால் எதிர்த்து நிற்கிறான் என்று பொருள். அன்று அந்தப் பெண்மணி கச்சை கட்டி நின்றது ஏன்? எதற்காக? இன்று நாம் ஆற்றிய உரை நாம் ஹஜ்ஜுடைய மாதத்தில் இருக்கிறோம். ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இம் மாதத்தில் ஹாஜிகள் செய்யும் ஹஜ் என்ற வணக்கத்திலும். நாம் செய்யும் வணக்கங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சுற்றியே இருக்கிறது. https://mdfazlulilahi.blogspot.com/2020/07/blog-post_37.html )இணைப்பில் உள்ளது விண்வெளியில் இருந்து மெக்கா நகரை துபாய் செயற்கைகோள் 2013ல் படம் பிடித்து அனுப்பியது) இப்ராஹீம் (அலை) அவர்களுக் கு யாருக்கும் அளிக்காத மாபெரும் தனிச் சிறப்புக்களை அல்லாஹ் வழங்கி இருக்கிறான். அதில் ஒன்று உலகில் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை புனர் நிர்மானம் செய்கின்ற மகாத்தான பணியை பாக்கியத்தை இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் வழங்கினான். وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّ...