அல்லாஹ்வுக்காக பிரிவினை என்பது இஸ்லாத்தில் இருக்கிறதா?
பிரிவினை என்பதே இஸ்லாத்தில் இல்லை எனும்பொழுது அல்லாஹ்வுக்காக பிரிவினை என்பதா? நல்லடியார்கள் பிரிந்து
சென்றார்கள் என்பது சரியா? கலைந்து சென்றார்கள் என்பது சரியா? அல்லாஹ்வுக்காக பிரிதல் சேர்தல்
என்பதற்குரிய சரியான விளக்கம் என்ன?
இரண்டு பேர்களுக்கு அல்லது
இரண்டு சாராருக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டால் அல்லாஹ்வுக்காக பிரிந்து விடுங்கள்
என்ற தீர்ப்பு பரவலாக வழங்கப்பட்டு வருகிறது.
அதுவும் குர்ஆன்
ஹதீஸ்கள் தான் மார்க்கம் என்பதை நிலைநாட்ட பாடுபட்டவர்கள் நாங்கள். தவ்ஹீது தாஇகள் நாங்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்கள் தான். இந்தக் கருத்தை பரவலாகப் பதிந்து வருகிறார்கள்.
இந்தக்
கருத்து மிகத் தவறானது, இஸ்லாத்திற்கு முரணானது. அல்லாஹ்வும் அவனது துாதரும் காட்டிய வழிக்கு முறைக்கு மாற்றமானது. இட்ட கட்டளைக்கு நேர் எதிரானது.
பிரிந்து
விடுங்கள் எனும் தப்பான கருத்தை பதிந்தவர் அறியாமையில் பதிந்த நல்லவர் என்று நம்பி அவரது முகநுாலில்
போய் பிரிந்து விடாதீர்கள் 3:103 என்று அல்லாஹ் சொல்லி உள்ளான்
என்று பதிவு செய்தேன்.
அவர் ஷைத்தானின் செம பிடியில் சிக்கி பிரிவினை சதி திட்டக் குழுவில் இருந்துள்ளார். இது அவரது பிந்தைய நடவடிக்கை காட்டி
விட்டது.
பிரிந்து
விடுங்கள் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று பலர் நம்மிடம் வாதம் வைத்துள்ளார்கள். எந்த ஹதீஸை ஆதாரமாக வைத்துள்ளார்கள்?
பைசல் ரெஸ்ட்ராரண்ட் துபையில் இருந்தபொழுதே அதாவது 2004லேயே இந்த மொழி பெயர்ப்பு தவறு என்று சொன்ன ஹதீஸைத்தான் ஆதாரமாகக் காட்டி உள்ளார்கள்.
இது
சம்பந்தமாக இஸ்லாமிய பிரச்சாரகர் பெரம்பலுர் நாஸர் அலிகான் அவர்களைக் கொண்டு அர்ஷின் நிழலினிலே என்ற தலைப்பில்
2004ல் கிஸஸிலும் தேராவிலும் விளக்க நிகழ்ச்சி நடத்தி உள்ளோம்.
இந்த நிகழ்ச்சியை கோவை சிறைவாசிகள் வழக்கு வசூல்
நிகழ்ச்சியாக நடத்தினோம். CTM சார்பில் வந்திருந்த கோவை தங்கப்பா
ஹாஜியார், காயல் S.K. ஆகியவர்கள் கலந்து
கொண்டார்கள்.
அல்லாஹ் தன்னுடைய (அர்ஷ்ஷின் - அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் என்று வரக் கூடிய ஹதீஸின் தலைப்பிலேயே தவறு உள்ளது என்று சுட்டிக் காட்டி உள்ளோம்.
அல்லாஹ் தனது அர்ஷின் நிழலின் மூலம் நிழலளிப்பான் என்பதில் ஏழு பேர் அல்லது ஏழு நபர் என்று வார்த்தைக்கு வார்த்தை மொழி
பெயர்த்துள்ளதுதான் அந்த முதல் தவறு.
ஏழு
வகையினர் அல்லது ஏழு சாரார் அல்லது ஏழு கூட்டத்தார் என்று மொழி பெயர்த்து இருக்க
வேண்டும். அதுதான் சரியானதாகும்.
அதே மாதிரி பிரிந்தவர்கள் என்ற மொழி பெயர்ப்பு. பிரிவினை என்ற அடிப்படையில் பிரிந்து சென்றால். சண்டையிட்டு பிரிந்து சென்றால். இருவரில் யாராவது ஒருவர் பக்கம் தான் நியாயம் இருக்கும்.
ஆகவே அல்லாஹ்வுக்காக பிரிந்தவராக ஒருவரே இருப்பார். இந்த ஹதீஸில் பிரிந்து சென்ற இரண்டு பேருக்கும் அர்ஷின் நிழல் கிடைக்கும் என்றுதான் உள்ளது. ஆகவே இது சண்டையிட்டு மனதால் வெறுத்து பிரிவதை சொல்லவில்லை.
ஒரு சபையில் அல்லாஹ்வுக்காக ஒன்று
கூடி இருந்தார்கள். எதற்காக கூடினார்களோ அது சம்பந்தமாக அல்லாஹ்வின்
பொருத்தத்தை தரும் பேச்சுக்களை பேசினார்கள்.
பேசி முடித்து விட்டு அல்லாஹ்வின்
பொருத்தத்துடன் அல்லாஹ்வுக்காக அந்த சபையில் இருந்து பிரிந்து சென்றார்கள். உடலால் பிரிந்து சென்றார்கள். உள்ளத்தால் பிணைப்புடன் இருந்தார்கள். உள்ளத்தால் யாரும் யாரையும் வெறுத்து பிரியவில்லை.
இந்த இடத்தில் இரண்டு அர்த்தம் தரக்
கூடிய பொருள் மயக்க வார்த்தையாக உள்ள பிரிந்தார்கள் என்று மொழி பெயர்ப்பதை விட, கலைந்து சென்றார்கள் என்ற தெளிவான வார்த்தையைக் கொண்டு மொழி பெயர்ப்பதே சரியான புரிதலை விளக்கத்தை தரும். இதை 2004லேயே சுட்டிக் காட்டி இருந்தோம். அந்த உரையை சி.டி.களாகவும் ஆக்கினோம்.
அனாதை
ஆசிரமங்கள் கூடுமா? என்ற தலைப்பில்
அனாதைகளை நபி வழியில் பராமரிப்பது எப்படி? என்பதை விளக்கி அனாதை ஆசிரமங்கள் கூடாது
என்பதையும் விளக்கி சி.டி.களாக ஆக்கினோம்.
அந்த சி.டி.க்களை தவ்ஹீது மார்க்க அறிஞர்களுக்கும் அனாதை ஆசிரமங்கள் நடத்தி அனாதைகள் பெயரால் வசூலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அனுப்பினோம்.
அந்த சி.டி.க்களை தவ்ஹீது மார்க்க அறிஞர்களுக்கும் அனாதை ஆசிரமங்கள் நடத்தி அனாதைகள் பெயரால் வசூலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அனுப்பினோம்.
அவற்றை
சுட்டிக் காட்டி ஈமெயில்களும் அனுப்பினோம். யாரும் கண்டு
கொள்ளவில்லை. இது ஆலிம் பட்டம் வாங்காதவர்கள் கருத்து. ஆகவே ஆலிம்
பட்டம் வாங்கிய அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று எடுத்துக் கொள்வதா?
அனாதை ஆசிரமங்கள் கூடாது என்று வசூலுக்கு எதிராக அடி வயிற்றில் கை வைக்கிறானே என்று கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்பதா? அல்லாஹ்வே அறிவான்.
அனாதை ஆசிரமங்கள் கூடாது என்று வசூலுக்கு எதிராக அடி வயிற்றில் கை வைக்கிறானே என்று கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்பதா? அல்லாஹ்வே அறிவான்.
கலைந்து
செல்வது சம்பந்தமாக எப்படியெல்லாம் மொழி பெயர்த்துள்ளார்கள்? பாருங்கள்.
இருவர்
அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்,
அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப்
பிரியும் இரு மனிதர்கள்.
அல்லாஹ்விற்காகவே
இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்.
இப்படியான மொழி பெயர்ப்புகளிலிருந்து யாருமே பின் வாங்கவில்லை. கொஞ்சம் சிந்தித்தவர்கள்
அல்லாஹ்வுக்காக
நட்புக் கொண்ட இருவர்.
இறை வழியில் நட்பு கொண்ட
இருவர்.
(புஹாரி 6806) இப்படியாக
மொழி பெயர்ப்பை சுருக்கிக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸாகத்தான் இருக்கும் ஆகவே அந்த பெருந்தகையும் இதைப் படித்துப் பார்த்து விட்டு. பிரிதல் என்ற ஷைத்தானிய கொள்கையை விட்டு விட வேண்டும். பிரிவினை வாதம் பேசும் ஷய்த்தான்கள் கூட்டத்தை விட்டும் விலகி நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
நேற்று (04-07-2019) கூட நமது சமுதாய முன்னோடிகளில் ஒருவர் இந்த ஹதீஸை ஆதாரம் காட்டி பிரிந்து விடுங்கள் என்று பேசியதைக் கேட்டேன். உடனே நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று பேசி உள்ளது தவறு என்று வாட்ஸப்பில் பேசி அனுப்பினேன்.
அவர் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று அடித்துப் பேசினார். ஆதாரம் தாருங்கள் என்றேன். மீட்டிங்கில் இருக்கிறேன் பிறகு தருகிறேன் என்று கூறினார். இந்த ஹதீஸாகத்தான் இருக்கும் ஆகவே அந்த பெருந்தகையும் இதைப் படித்துப் பார்த்து விட்டு. பிரிதல் என்ற ஷைத்தானிய கொள்கையை விட்டு விட வேண்டும். பிரிவினை வாதம் பேசும் ஷய்த்தான்கள் கூட்டத்தை விட்டும் விலகி நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சுட்டிக் காட்டிய ஆலிம்களின் அந்த மொழி பெயர்ப்பு தவறுதான் என்ற நிலைக்கு இந்த ஆண்டில் (2019ல்) தான் ஒரு சாரார் வந்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ்படி வரதட்சணை
வாங்கும் நண்பன் கல்யாணத்திற்கு போகாமல் பிரிந்த நண்பனுக்கு அர்ஷுடைய நிழல்
கிடைக்கும் என்று TNTJயில் இருக்கும்போது அதன் நிறுவனர் என்று நம்ப வைக்கப்பட்ட பீ.ஜே. விளக்கம் சொல்லி இருந்தார். அது
தவறு என்று இன்றைய TNTJ அறிஞர்கள் குழு தீர்ப்பு கூறி உள்ளது.
மேலும் அந்த ஹதீஸுக்கு சரியான விளக்கம் என்ன என்று TNTJ அறிஞர்கள் குழு அவர்கள் அறிவுக்குப்பட்டதை கூறி உள்ளது. ஒரு தாயிடம் பால் குடித்தவர்கள் சம்பந்தமான ஹதீஸே இதற்கு விளக்கம் என்று விளக்கி உள்ளது TNTJ அறிஞர்கள் குழு.
ஹதீஸில் உள்ள வாசகத்தை - வார்த்தையை கவனத்தில் கொண்டு சிந்திக்காமல் மேலோட்டமாக பார்ப்பவர்கள், கேட்பவர்கள் தலையாட்டிகள் சரி காணலாம். ஆனால் இதுவும் மகாத தவறுதான்.
இந்த ஹதீஸின் மூலத்தில் அல்லாஹ்வுகாக நேசித்த ரஜுலானி என்று தான் உள்ளது.
மேலும் அந்த ஹதீஸுக்கு சரியான விளக்கம் என்ன என்று TNTJ அறிஞர்கள் குழு அவர்கள் அறிவுக்குப்பட்டதை கூறி உள்ளது. ஒரு தாயிடம் பால் குடித்தவர்கள் சம்பந்தமான ஹதீஸே இதற்கு விளக்கம் என்று விளக்கி உள்ளது TNTJ அறிஞர்கள் குழு.
ஹதீஸில் உள்ள வாசகத்தை - வார்த்தையை கவனத்தில் கொண்டு சிந்திக்காமல் மேலோட்டமாக பார்ப்பவர்கள், கேட்பவர்கள் தலையாட்டிகள் சரி காணலாம். ஆனால் இதுவும் மகாத தவறுதான்.
இந்த ஹதீஸின் மூலத்தில் அல்லாஹ்வுகாக நேசித்த ரஜுலானி என்று தான் உள்ளது.
رَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ
ரஜுலானி என்றால் இரண்டு ஆண்கள் என்று அரபு நாட்டில் என்னைப் போன்று ஹோட்டலில் வேலை செய்பவர்களுக்கே - டேபிளில் பெஞ்சு துடைப்பவர்களுக்கே தெரியும் புரியும்.
அப்படி இருக்க ஏழு ஆண்டுகள் அரபி கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்று காணாததற்கு B.A. ஆங்கிலம் படித்தவர்கள் அறிவுக்கு எட்டாமல் போனது ஏனோ? ஆக ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணி பிரிவதை இது குறிக்காது
இந்த விளக்கத்தையே திருவாளர் பீ.ஜே.யும் கூறி TNTJ அறிஞர்கள் குழுவின் மொத்த விக்கெட்களையும் வீழ்த்தி விட்டார்.
அப்படி இருக்க ஏழு ஆண்டுகள் அரபி கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்று காணாததற்கு B.A. ஆங்கிலம் படித்தவர்கள் அறிவுக்கு எட்டாமல் போனது ஏனோ? ஆக ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணி பிரிவதை இது குறிக்காது
இந்த விளக்கத்தையே திருவாளர் பீ.ஜே.யும் கூறி TNTJ அறிஞர்கள் குழுவின் மொத்த விக்கெட்களையும் வீழ்த்தி விட்டார்.
இரு தரப்பு அறிஞர்கள் விவாதிக்கும் போதுதான் கல்லுாரிகளில் போய் படித்தவர்களை விட கூடுதல் விளக்கத்தை அவர்களிடமிருந்து கேட்கும் நாம் பெற்று விடுகிறோம்.
இதைத்தான் இக்திலாபில் அஇம்மா ரஹ்மதுல் உம்மா என்று அரபியில் கூறுவார்கள். ஆலிம்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு - கருத்து மோதல் சமுதாயத்து அருள் என்று.
Comments