குர்பானி மாடுகள் வகையில் 20 சதவீதம் கமிஷன் அடித்தது ஏன்? இது சரியா? இதை மக்களிடம் பரப்புவதுதான் மார்க்கமா?


நிர்வாகம் கூலியாக கொடுத்தது தவறா? 20 சதவீதம் கமிஷன் அடித்தது தவறாநீங்கள் நல்ல எண்ணம் உடையவர் என்றால்இதை இப்படி பகிரங்கமாக பரப்பலாமா? தவ்ஹீதுவாதியும் தருவான் தர்காவாதியும் அள்ளித் தருவான் எதற்காக?
கூட்டுக் குர்பானி குழறுபடிகளில் நான் அறிந்ததில் விடுபட்டது.   காஞ்சி மேற்கில், மாநில பொருளாளராக இருந்த சித்தீக் கமிஷனாகவே 20 சதவீதம் எடுத்துக் கொண்டார்

மாவட்ட நிர்வாகிகள் சிலர் (சிலர் தான் எல்லாரும் அல்ல)  கமிஷனை ஷேர் பண்ணிக் கொண்டார்கள். மாடுகள் பிடிக்க அலைந்து திரியாமல் ஒரே நபரிடம் காண்ராக்ட் விட்டு விட்டு மாடுகள் பிடிக்க அலைந்து திரிந்த வகைக்கு என்று 20 சதவீதம் கமிஷன் அடித்தார்கள்.

குர்பானி மாடுகள் அறுக்கப்படும் 4 நாட்களும் கறிகளை மக்களுக்கும் கிளைகளுக்கும் சப்ளை செய்ததற்காகவும் TNTJயினர் 20 சதவீதம் காசு எடுப்பார்கள் என்கிறார்கள்.

மக்களுக்கும் கிளைகளுக்கும் சப்ளை செய்ய என்று TNTJ அல்லாதவர்களை அந்த பணியில் அமர்த்தினாலும் அவர்களுக்கு கூலி கொடுக்கத்தான் வேண்டும். மற்றவர்களுக்கு கூலியாகப் போகக் கூடிய பணம் TNTJயினருக்கு பயன்படட்டும் என்று TNTJயினருக்கு நிர்வாகம் கூலியாக -சம்பளமாக கொடுத்திருந்தால். அது தவறே இல்லை.

வெளியில் சேவை செய்தது போல் காட்டிக் கொண்டு. இன்ன மாதிரி பணி செய்ததால் 20 சதவீதம் என்று கமிஷன் அடித்தார்களே அப்படி கமிஷன் அடித்ததுதான் தவறு.

நீங்கள் நல்ல எண்ணம் உடையவர் என்றால். இதை இப்படி பகிரங்கமாக பரப்பி இருக்கக் கூடாது. மாநில தலைமைக்கு அனுப்பி இருக்க வேண்டும். இப்படி  எனக்கு அறிவுரை வழங்கி சிலர் என்னை விமர்சித்தும் உள்ளார்கள்.

மக்களிடம் பரப்பக்கூடாது. அதிகாரமுடையவர்களுக்கு எத்தி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குர்ஆன் மூலம் அல்லாஹ் இட்ட கட்டளையாகும் என்பதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை.

நீங்கள் கூறும் மாநிலத் தலைமை எப்படிப்பட்டது? ஜிஹாது செய்யப் போவதாக ஜாக்கிலிருந்து விலகிய மவுலவிகளுக்கு போதிய வருமானம் இல்லை என்பதால் பலப்பல பெயர்களில் கள்ள அமைப்பு கண்டார்கள். பல பொய்களை சொல்லி வசூல் செய்து ஏமாற்றினார்கள். அதில் ஒன்று தஃவா பணி.
த.மு.மு.க. ஆரம்பித்த பின் எல்லாருமே த.மு.மு.க.வுக்குத்தான் உதவுகிறார்கள். தவ்ஹீது மவுலவிகள் சம்பள வகை, தவ்ஹீது பணிகளுக்கு என்று கேட்டால் வசூல் ஆக மாட்டேன் என்கிறது. தஃவா பணி என்றால் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதுதான் தஃவா பணி என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆகவே தஃவா பணி என்று  சொன்னால் தவ்ஹீதுவாதியும் தருவான் தர்காவாதியும் அள்ளித் தருவான். நாம் செய்யும் தவ்ஹீது பிரச்சாரமும் தஃவா தான். எனவே முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் தஃவா பணி என்ற பொருள்பட தஃவா பணி என்று இரு பொருள்பட சொன்னால் பொய் சொன்ன மாதிரி ஆகாது என்று ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டார்கள்.

குவைத்  இஹ்யாத் துராஸ் என்ற நிறுவனம் இவர்களை நம்பி தமிழ் நாட்டில் பள்ளிகள், மதரஸாக்கள் கட்டவும் தஃவாவில் ஈடுபடும் தாயி-களுக்கு சம்பளம் கொடுக்கவும் முன் வந்தது. 

குவைத் வாழ் தமிழக மக்களிடமும் வசூல் செய்ய குவைத்தில் கிளை அமைத்தார்கள். புதிதாகஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு  அபிடவிட் போடும் பணி லுஹா உடையது என்றார்கள். லுஹா எத்தனை பேருக்கு அபிடவிட் எடுத்துள்ளார்? என்று கேட்டு இது பொய் என்று நிரூபித்தேன்.

லுஹா மொழி பெயர்க்க உள்ளதாகக் கூறி அபூதாவூதுக்கு ஷேர் சேர்த்தார்கள். லுஹா 1988லிருந்து அபூதாவூது மொழி பெயர்ப்பதாகக் கூறி என்னை ஏமாற்றியவர். 

பீ.ஜே.யும் லுஹாவை நம்பி 27-06- 1990ல் என்னிடம் பணம் வாங்கினார். பிறகு இதோ இதோ என காலம் கடத்தி பீ.ஜே. எனக்கு எழுதிய கடிதங்களை காட்டி ஷேர் சேராதீர்கள் என்றேன்.

இதற்கு எதிராக பீ.ஜே.யிடமிருந்தும் கடிதம் வரவழைத்து லுஹாவை நம்பி ஷேர் சேராதீர்கள் என்றேன். முத்துப் பேட்டை நாநா ஆபீஸ் மூலம் தான் பீ.ஜே. கடிதம் பேக்ஸாக வந்தது.

இந்த மாதிரி லுஹா செய்த மோசடிகளை மக்களிடம் பரப்பாமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரவித்து அதை முறியடிக்கும் வேலை செய்தவன்தான் நான்.

மீறி சேர்ந்தவர்கள் பணத்தை கொடுத்து ஏமாந்தார்கள். ஷேரிலிருந்து பணம் பெற்ற லுஹா கடைசி வரை அபுதாவூது மொழி பெயர்த்து கொடுக்கவே இல்லை. ஷேர் சேர்த்த அந்த சங்கத்தை இரவோடு இரவாக  கலைத்தார்கள். இப்படிப்பட்டவர்தான் தலைவராக உள்ளார். ஆகவே அதிகாரமுடைய அவருக்கு எத்தி வைத்து நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை என்பதல்ல.

2011ல் மேலாண்மைக் குழு தலைவராக இருந்த லுஹா குபுரா மேட்டர் சம்பந்தமாக தனக்கு மெயில் அனுப்பினால் நடவடிக்கை எடுப்பதாக அறிக்கை விட்டார். உடனே லுஹாவுக்கு மெயில் அனுப்பினேன். நீங்கள் 2002ல் என்னிடம் கூறி குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என்று.

நடவடிக்கை எடுத்தாரா சமுதாயத்தை ஏமாற்றினாரா? 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.