குணங்குடி ஹனீபா வீடு காட்டி கொடுத்த கயவர்கள் வழியில் கட்டப்பட்டதா?
தலைப்பு நம்முடையது. விளக்கம் மேலப்பாளையம் சப்பாணி
ஆலிம் தெரு சப்பாணி வீட்டு மாப்பிள்ளை குணங்குடி மைதீன் ரஸாக் அவர்களுடையது.
குணங்குடி ஹனீபா காவல் துறையிடம் பணம் வாங்கித்தான்
வீட்டை கட்டினார் என்று த.மு.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் ஹைதர் அலி என்பவர் கூறிய
குற்றம் சாட்டு உண்மையா?
குணங்குடி ஹனீபா அவர்களின் வீடு ஆயிரம் சதுர அடிகள்
கூட இருக்காது என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையில் அந்த வீட்டின் மொத்த அளவே 390 சதுர
அடிதான். அந்த வீட்டை கட்டவதற்கு முதன் முதலில் உதவி செய்தவர் ஜிஹாத் கமிட்டி காமில்
அவர்கள் தான் குறிப்பிட்ட அளவு சிமெண்ட் மூட்டைகள் கொடுத்து உதவி இருக்கிறார்.
அதன் பிறகு குடும்பத்தார், மற்றும் பாட்டாளி மக்கள்
கட்சியினர் உதவி. பழனி பாபா வழிகாட்டலில் ஜிஹாத் கமிட்டியினர் உதவிகளுடன் அந்த வீடு
கட்டி முடிக்கப்பட்டது.
அந்த வீட்டு திறப்பு விழாவில் டாக்டர் ராமதாஸ்,
பேராசிரியர் தீரன், (உணர்வு வார இதழ் தந்த) டாக்டர் சேப்பன், பெரியவர் சக்திதாசன் போன்றவர்கள்
கலந்து கொண்டார்கள்.
டாக்டர் ராமதாஸ் அவர்களின் மனைவி டாக்டர் சரஸ்வதி
ராமதாஸ் அந்த (மனித நேய இல்லம்) வீட்டை திறந்து வைத்தார்கள். இது த.மு.மு.க. புணரமைப்பு
செய்யப்படுவதற்கு முன்பு நடந்து முடிந்து விட்டது.
வீடு கட்டி திறக்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகுதான்
த.மு.மு.க. புணரமைக்கபட்டது. எந்த வீடு கட்டுவதற்காக காவல் துறையிடம் குணங்குடி ஹனீபா
பணம் பெற்றார் என்று ஹைதர் பாயால் குற்றம் சாட்டப்பட்டதோ அந்த வீட்டின் முகவரிதான்
ஆரம்ப கால த.மு.மு.க. முகவரியாக பயன்படுத்தப்பட்டது. இதை நினைவூட்டிக் கொள்கிறோம்.
எங்களைப் பற்றி அவதுாறு பரப்பினால் நிச்சயமாக மறுமையில்
சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லி ஆக வேண்டும். துஆச் செய்யுங்கள்.
இவ்வாறு குணங்குடி ஹனீபா மகனார் குணங்குடி மைதீன்
ரஸாக் பேசி அனுப்பி உள்ளார்கள். அவர்கள் ஆடியோ யூடியூப் லிங்
https://www.youtube.com/watch?v=ViH5IwhX7OI&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=ViH5IwhX7OI&feature=youtu.be
குணங்குடி ஹனீபா
ஜெயலலிதாவிடம் இரண்டு லாரியும் (பிளஸ் டூவில் பாசாகாத)தன் மகனுக்கு டாக்டர் சீட் பெற்றார் என்று என்னிடம் கூறியவர் அன்சாரி
கட்சயில் மாநில இணைச் செயலாராக இருந்து பிரியா விடை பெற்ற A.S. அலாவுதீன் என்பதையும் நான் பதிவு செய்து
கொள்கிறேன்.
Comments