நான் பீ.ஜே.யையும் பீ.ஜே.யிடமுள்ள அறிவையும் எதிர்ப்பவனா? ஆதரிப்பவனா?

ஹைதர் அலி பீ.ஜே.யின் பினாமி என்று நாம் அடையாளம் காட்டியதால் உத்தமர் ஹைதர் அலியின் ஆட்கள்  நமது பேஸ்புக்குக்கு ரிபோட் அடித்து  அந்த போஸ்ட்டை முடக்கி உள்ளார்கள் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்

ஓரளவு த.மு.மு.க.வை உடைத்த பின். அல்லது சட்ட போராட்டத்தில் ஹைதருக்கு த.மு.மு.க. இல்லை என்று ஆகும் வரை. ஹைதரிடம் த.மு.மு.க. பெயரால் பதவி பெற்றவர்களோடு ஆலி ஜனாப் அண்ணன் ஹைதர் அலி அவர்கள் எங்கே போய் இணைவதாக உள்ளார் தெரியுமா?
த.மு.மு.க.வை காப்பாற்ற? கைப்பற்ற சட்ட போராட்டம் என்ற பெயரில் 16-07-2019 அன்று த.மு.மு.க. அறக்கட்டளை கூட்டத்தைக் கூட்டினார் ஹைதர் அலி. 2003ல் துவங்கப்பட்டது இந்த த.மு.மு.க. டிரஸ்ட். த.மு.மு.க.வில் உறுப்பினராக இருப்பவர்கள் தான் த.மு.மு.க. டிரஸ்ட்டில் இருக்க முடியும். இந்த பைலாவை ஹைதர் அலி அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அப்படி இருக்க உகாண்டா, கடாங்கா, மற்றும் காட்டுப் பகுதிகளில் போய் குளித்து விட்டு த.மு.மு.க.வை காப்பாற்றப் போவதாக தொண்டர்கள் மண்டையை கழுவி வரும் ஹைதர் அலி. த.மு.மு.க. டிரஸ்ட் கூட்டத்துக்கு கொடுத்துள்ள முதல் அழைப்பு யாருக்கு? த.மு.மு.க.வை 6 மாதத்தில் அழித்துக் காட்டுவேன் என்று 20-04-2004ல்  சவால் விட்ட பீ.ஜே.க்குத்தான் முதல் அழைப்பு.

த.மு.மு.க.வை 6 மாதத்தில் அழித்துக் காட்டுவேன் என்று திருச்சியில் பீ.ஜே. சபதம் ஏற்றபொழுது அல்லாஹு அக்பர் அழித்துக் காட்டுவோம் என்று கோஷம் போட்ட A.S.அலாவுதீன், S.M.பாக்கர் ஆகியவர்களுக்கும் அழைப்பு.

இதுவே ஹைதர் அலி த.மு.மு.க.வை காப்பாற்ற பாடுபடுகிறாரா? அழித்தொழிக்கப் பாடுபடுகிறாரா? என்பதற்குரிய மிகத் தெளிவான ஆதாரமாகும்.

அழைப்பு அனுப்பப்பட்டவர்களில் ஜவாஹிருல்லாஹ் தவிர அனைத்தும் செல்லாக்  காசுகள் பீஸ் போனவை. போலியான இந்தக்  கூட்டத்தில் சட்டப்படி த.மு.மு.க.வில் உறுப்பினராக உள்ளவரும் தலைவருமான ஜவாஹிருல்லாஹ் கலந்து கொள்ளவில்லை.

தேர்தலில் போட்டியிடாத சமுதாய சேவை அமைப்பான த.மு.மு.க. வேண்டாம். த.மு.மு.க.  கீழ் இயங்க மாட்டோம். தேர்தலில் போட்டியிடும் தனி அமைப்பே தேவை. என்று த.மு.மு.க. விட்டு போன ம.ஜ.க. அன்சாரி, 

முன்னாள் ... இணைப்பொதுச் செயலாளரும்  NTF மாநில பொதுச் செயலாளருமான ஏ.எஸ். அலாவுதீன், த.மு.மு.க.வை விட்டுப் போய் அனாதையாகி விட்ட விஞ்ஞானி அப்துல் ஜலீல், த.மு.மு.க. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஹைதர் அலி,    ஒ.யு. ரஹ்மதுல்லா ஆகிய செல்லாக்  காசுகளும் பீஸ் போனவைகளும்தான் கலந்து கொண்டன.

... துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன், ஹைதர் அலியை இயக்கிக் கொண்டிருக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் ஆகிசெல்லாக்  காசுகள் ஹைதர் அலி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு என்று கூறி உள்ளன.

பாக்கர், சாதிக், ரிபாஈ கலந்து கொள்ளவில்லை நடுநிலை என கூறி உள்ளார்கள்.

த.மு.மு.க.வை கைப்பற்ற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தோற்று விட்டவர் பீ.ஜே. அவரது பணியை அண்ணன் ஹைதர் அவர்கள் ஏற்று பினாமியாக சுழன்று செயல்பட்டு வருகிறார்.

நான் 100க்கு 100 அல்ல இருநுாறு தவ்ஹீதுவாதி ஆகவே கல்யாண நிகழ்ச்சிகளுக்கு என்று பயணம் போக மாட்டேன். அழைத்தால் வர மாட்டேன் என்று சொன்னவர் அண்ணன்  ஹைதர் அலி அவர்கள். 

இதை ஸல்லி நஸீர் அவர்கள் கூட என்னிடம் பேசும்போது ஒப்புக் கொண்டார். த.மு.மு.க. நிகழ்ச்சிகளுக்கே துாரம் தொலைவுகளுக்கு செல்ல மாட்டேன் என்று இருந்தவர்.

நெல்லை மேற்கு மாவட்ட நிகழ்ச்சிக்கு ஹைதர் வருவதே இல்லை. நீங்கள் அழைத்தால் வருவார். ஆகவே நீங்கள் அழையுங்கள் என்று 2015ல் ரிபாஈ என்னிடம் சொன்னார். நான் அழைத்த போதும் துாரம் தொலைவுகளுக்கு செல்லவதில்லை என்று என்னிடம் சொன்னவர் அண்ணன் ஹைதர் அலி.

த.மு.மு.க.வை கைப்பற்ற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து பீ.ஜே.யின் பினாமியாக அந்நிய சக்திகளை அந்தரங்கமாக சந்தித்தவர் ஹைதர்.

இப்பொழுது பகிரங்க பணியில் குதித்த பின்  சும்மாவே இருப்பதில்லை.  மண வீடா ஹைதர் அலி வருகிறார், பிண வீடா ஹைதர் அலி வருகிறார் என்று மட்டும் அல்ல. லட்டர் பேடு அமைப்புகள் என்று இவரால் விமர்சிக்கப்பட்ட அத்தனை அமைப்பு நிர்வாகிகளையும் போய் காலில் விழாத குறைாயக சந்தித்து வருகிறார்.

நாங்கள் வெளியே போகிறோம் சந்திக்க நேரம் இல்லை என்றாலும் லப்பைக் இதோ வந்து விட்டேன் என்று ஓடுகிறார்.

பிரிந்து பிரிந்து போவது சரி இல்லை. எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்னை த.மு.மு.க.விலிருந்து நீக்கி விட்டால் ஒதுங்கி விடுவேன். தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார். அதுதான் நீக்கி விட்டார்களே! ஒதுங்கி ஒரு இடத்தில் கிடக்க வேண்டியதுதானே என்றதும்.

சட்ட போராட்டத்தில் எனக்கு த.மு.மு.க. இல்லை என்று ஆகி விட்டால் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று கூறி சமாளித்து இருக்கிறார். இப்படியாக குட்டி குட்டி அமைப்பு தலைவர்களின் அனுதாப ஆதரவுகளை திரட்டி வருகிறார்.

ம.ஜ.க.வில் பீ.ஜே.யின் பினாமியாக இருந்து ஆள் சேர்த்த அலாவுதீனின் பூத வழியில். த.மு.மு.க.வை காப்பாற்றவும் மீட்கவும் போவதாக மண்டையை கழுவி பதவிகள் கொடுத்து ஆள் சேர்த்து வருகிறார் அண்ணன் ஹைதர் அலி. 

ஓரளவு த.மு.மு.க.வை உடைத்த பின். அல்லது சட்ட போராட்டத்தில் ஹைதருக்கு த.மு.மு.க. இல்லை என்று ஆனதும். ஹைதரிடம் த.மு.மு.க. பெயரால் பதவி பெற்றவர்களோடு ஆலி ஜனாப் அண்ணன் ஹைதர் அலி அவர்கள் NTF மாநில பொதுச் செயலாளராக ஆகப் போகிறார். இதுதான் திட்டம்.

அண்ணன் ஹைதர் அலி அவர்கள் பற்றி எழுதியதால். பீ.ஜே.யையும் எதிர்ப்பேன் பீ.ஜே.யுடன் செல்பவர்களையும் எதிர்ப்பேன் என்பது தான் உங்கள் கொள்கையா? என்று ஒரு சாரார்.

பீ.ஜே. செல்லாக் காசாக ஆகி விட்டார். அவரைப் பற்றி திரும்பத் திரும்ப எழுதி நீங்கள் தான் பீ.ஜே.யை துாக்கிப் பிடிக்கிறீர்கள். மக்கள் மறந்து விட்ட பீ.ஜே.யை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் நீங்கள் தான் பீ.ஜே.யை நினைவூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி அறிஞர் குழு ஆலிம்கள். நம்மை இடித்துப் பேசுகிறார்கள். உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது மாதிரி ஆகி விட்டது. கைர்.

நான் பீ.ஜே.யை எதிர்ப்பவனில்லை. பீ.ஜே.யிடமுள்ள அறிவை மதிக்கிறேன். கெட்ட உணர்வுகளை எதிர்க்கிறேன். TNTJயினர் பீ.ஜே.யை தலையில் வைத்து பேயாட்டம் ஆடியபொழுதும் TNTJயினரிடம் சொன்னேன். நான் பீ.ஜே.யின் பிரச்சாரத்தை எதிர்க்கவில்லை. விபச்சாரத்தைத்தான் எதிர்க்கின்றேன் என்று. 

இப்பொழுது சந்திக்கும் NTFகாரர்களிடமும் அதையேத்தான் சொல்கிறேன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு