இஸ்லாம் தலைவரை மதித்து கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்கிறதா?


தலைவர் என்றவுடன் ஒரேயடியாக தலையில் வைத்து கொண்ட வேண்டுமா? வானளாவ வைத்து பார்க்க வேண்டுமா? அவரை ஒரு தனிப் பிறவியாக எண்ண வேண்டுமா? 

தனி டிரஸ் தனி ஆசனம் தனியான உணவு கொடுக்க வேண்டுமா? தலைவர் என்ன வானில் இருந்தா குதித்து வந்து விட்டார்? தலைவர் என்றவுடன் ஒரேயடியாக தலையில் வைத்து ஆட வேண்டும் என்கிறதா (4:59)  அல் குர்ஆன் 
தலைவர் மீது அளவுக்கு அதிகமாக விருப்பம் வைத்துள்ளவர்கள் தலைவரை மதிக்கிறோம் உயரிய மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் ஜிந்தாபாத் போடுகிறார்கள். இவ்வாறு பிறரை விமர்சிப்பார்கள். தங்கள் தலைவர் மீது வெறுப்பு வந்து விட்டால் ஜெகந்ரா பாத் ஓடு , காக்கிநாடா போடா என்பார்கள்.

தலைவர் வாழ்க கோஷம் போடுபவர்களை தவறான வழியில் உள்ளவர்கள் என  விமர்சிப்பார்கள். இவர்கள் தலைவருக்கு சலி பிடித்தாலும் குணம் அடைய வாழ்த்து என்று வாழ்த்துப்பாவும் புகழ் பாவும் பேஸ்புக்களில் பாடித் திரிவார்கள்.

மேடையில் தலைவருக்கு கதராடையை  பொன்னாடையாக எண்ணி போர்த்துகிறேன் என்பவர்களை பன்னாடைகள் என்று விமர்சிப்பார்கள்

தனிமையில் கொடுக்க வேண்டிய அன்பளிப்பை- கிப்ட் பாக்ஸைபரிசு பெட்டகத்தை மேடையில் வைத்து கொடுப்பார்கள். கேட்டால் கண்ணியப்படுத்துதல் கவுரவித்தல் என்பார்கள். கதராடையை  பொன்னாடையாக போர்த்தியவன் இழிவுபடுத்தவா போர்த்தினான்?

பெண்கள் மதரஸாவில் புகுந்து விளையாடி விபச்சார ஆலிம்ஸா இருக்கிறானே அவன். ஒரு கட்சியில் இருக்கும்போது பொன்னாடை போர்த்தாதே என்பான். புது கட்சிக்கு போய் விட்டால் கொள்கை மாறிய கேப்மாறியாக ஆகி விடுவான்.

தலைவரை மதிக்கிறோம் என்ற பெயரில் காலில் விழுபவர்களை விமர்சித்துப் பேசுவார்கள். இவர்கள் தலைவருக்கு காலணி துாக்கிக் கொண்டு அலைவார்கள். கேட்டால் தலைவரை மதிக்க வேண்டாமா? உயரிய மரியாதை செலுத்த வேண்டாமா? என்பார்கள்.

இஸ்லாம் தலைவரை மதிக்க வேண்டும். தலைவருக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். உயரிய இடத்தில் வைத்து பார்க்க வேண்டும்.  கண்ணியப்படுத்த வேண்டும். கவுரவிக்க வேண்டும். புகழ வேண்டும்  என்று சொல்லவில்லை. இவை தலைவருக்கு கொடுக்கும் தகுதிகள் கிடையாது. இப்படி இஸ்லாம் சொல்லாதவைகளை தலைவருக்காக செய்து மதிப்பார்கள்.

இஸ்லாம் தலைவர் விஷயத்தில் என்ன சொல்லி உள்ளதோ அதை காலில் போட்டு மிதிப்பார்கள். இவர்கள் தலைவருக்கு செய்கின்ற எதுவுமே இஸ்லாம் கிடையாது. இஸ்லாம் தலைவர் விஷயத்தில் என்ன சொல்லி உள்ளது?

தலைவருக்கு கட்டுப்பட வேண்டும் என்றுதான் அல்லாஹ்வும் துாதரும் சொல்லி உள்ளார்கள்.. சாதாரண சொல்லாகச் சொல்லவில்லை. கட்டளை இட்டுள்ளார்கள். 

கட்டுப்பட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ள விஷயத்தில கட்டுப்படுவதில்லை. அல்லாஹ்வும் துாதரும் இட்ட கட்டளையை காலில் போட்டு மிதிக்கிறார்கள்.

தலைவர் ஒரு கட்டளையிட்டால் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிறார்கள். தலைவர் சொல்லுக்கு கட்டுப்படாவிட்டால், அல்லாஹ்வும் துாதரும் இட்ட கட்டளைக்கு மாறு செய்கிறார்கள் என்று அர்த்தம். அங்கே ஷைத்தான் வந்து விட்டான் என்று அர்த்தம். அவர்களை ஷைத்தான் ஆக்கிரமித்து விட்டான் என்று அர்த்தம்.

அவர்களிடம், யார் தலைவருக்கு கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார் என்ற கருத்துள்ள அவர்களே மேடையில் சொன்ன ஹதீஸை நினைவூட்டினால்,

யார் ஒருவன் தலைவருக்கு கட்டுப்பட்டு நடக்கிறானோ அவன் ரசூலுக்கே கட்டுப்படுகிறான் என்று அவர்களே மேடையில் சொன்ன  ஹதீஸ்களையும் சொன்னால். 

ஸஹீஹ் ளயீப் என திசை திருப்பி விடுவார்கள். ஆகவே குர்ஆனிலிருந்து ஆதாரம் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தலைமையின் கீழ் செயல்படச் சொல்லித் தரும் குர்ஆன் வசனத்தைக் கூட பாதிக்கு பயன்படுத்திக் கொண்டு மீதியை மறுத்துக் கொண்டு வீதிக்கு போய் விடும் கூட்டமாக ஆகி விடுகிறார்கள்.

ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! ன்றால்ரி என்பார்கள்.

அல்லாஹ் உடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்ன்றால் சரி என்பார்கள். 

அதே வசனத்தில் (4:59) தொடராக உள்ள  உங்களின் தலைவருக்கும் கட்டுப்படுங்கள்! என்பதைச் சொன்னால்! இல்லை ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! என்று சொல்லி உள்ளது என்று மறுப்பு கருத்து கூறுவார்கள்.

உண்மைதான் அந்த கருத்தை மட்டும்தான் அந்த ஆயத்து சொல்லி உள்ளதா? தலைவருக்கு கட்டுப்படுங்கள் என்ற கட்டளையை முதலில் சொல்லவில்லையா?

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அல்லாஹ்வுடைய துாதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களுடைய தலைவருக்கும் கட்டுப்படுங்கள் என்று சொல்லி விட்டுத்தான்.  

குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக தலைவர் சொல்லும்பொழுது தான் அதில் கட்டுப்படாதீர்கள் என்கிறது. அல்லாஹ்விடமும் தூதரிடமும் (குர்ஆன், ஹதீஸ் பக்கம்)  செல்லுங்கள்! என்கிறது.

குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமான கட்டளைக்கு மட்டும் கட்டுப் படாதீர்கள். அதை மட்டும் புறக்கணியுங்ள் என்கிறது. 

இந்த ஆயத்து மூலம் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பாடான சமுதாயமாக செயல்பட சொல்லித் தருகிறது. இந்த வசனத்தை ஒற்றுமையை குலைக்க பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஆயத்து இரண்டு விஷயங்களை கற்றுத் தந்துள்ளது. 1.நீங்கள் தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள். 2.கருத்து வேறுபாடுகள் வந்து விட்டால் குர்ஆன் ஹதீஸ் பக்கம் வந்து விடுங்கள் என்று.

கருத்து வேறுபாடுகள் இல்லாத குர்ஆன் ஹதீஸுக்கு ஒத்ததாக உள்ள குர்ஆன் ஹதீஸுக்கு முரண்படாததை தலைவர் சொன்னால் அப்படியே கட்டுப்பட வேண்டும். இவ்வளவு தெளிவாக உள்ளது.
ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பாடாக செயல்படச் சொல்லித் தரும் இந்தக் குர்ஆன் வசனத்தைத்தான் பாதிக்கு பயன்படுத்தி மீதியை மறுத்து நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குபுர் (இறை நிராகரிப்பு) செய்தல், காபிராகிப் போதல் என்றால் அல்லாஹ் இல்லை என்பதும் அல்லாஹ்வை கடவுளாக ஏற்க மறுப்பதும்தான் குபுர் (இறை நிராகரிப்பு) என பலர் விளங்கி வைத்துள்ளார்கள். 

அல்லாஹ்வின் சொல்லை நிராகரித்தால் அதற்குப் பெயரும் குபுர் (என்ற இறை நிராகரிப்பு)தான் என்ற உண்மையை பலர் விளங்கியதாகவே தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு