எடுத்தெறியப்பட்ட ஷைத்தான்களை விரட்டி அடிப்பதா கட்டி அணைப்பதா? எது இஸ்லாம்?

இவர்கள் சொல்வது போலெல்லாம் தலைவரை மதித்து  கட்டுப்பட  வேண்டுமா?. தலைவர் என்பவர் யார்?  நபியாமலக்காஅல்லாஹ்வாஇந்த மாதிரி கேள்விகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த சமுதாயம் நாதியற்ற சமுதாயமாக நாசமாக போனது எப்போது? முஸ்லிம்கள் என்றால் சிம்ம சொப்பனமாக இருந்தது எப்பொழுது? முஸ்லிம்களின் பலம் – சக்தி – வலிமை எங்கே இருக்கிறது? https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_10.html
-----------------------------------------------------
தலைவர் என்பவர் அல்லாஹ்வும் கிடையாது. மலக்கும் கிடையாது. நபியும் இல்லை மனிதர்தான். ஆகவே மனிதனிடம் இருக்கக் கூடிய நிறைவுகளும் இருக்கும். எல்லா விதமான குறைகளும் இருக்கும். பலமும் இருக்கும் எல்லா விதமான பலஹீனங்களும் இருக்கும்.

தலைவர் மீது குறைகள் சொல்பவர்கள் குறைகள் இல்லாதவர்களா? குற்றச்சாட்டுகளுக்கு அப்பால்பட்டவர்களா? தீய செயல் செய்யாதவர்களாகவா இருக்கிறார்கள்தலைவர் பற்றி குறைகள் சொல்பவர்களிடம் வேறு பல குறைகள் இருக்கிறது. இவர்களிடம் இருக்கின்ற மாதிரி குறைகளும் தலைவரிடம் இருக்கலாம். அல்லது. குறைகள் சொல்பவர்களிடம் இருப்பது போன்ற அல்லாத வேறு குறைகள் தலைவரிடம் இருக்கலாம்.

குறைகள் இருந்தால் என்ன? எடுத்துச் சொன்னால் திருத்திக் கொள்ளப் போகிறார். உடனே தலைவரை மாற்று ராஜினாமா செய் என்பதா இஸ்லாம் காட்டிய வழி?

இவர்கள் சொல்லும் குறைகளுக்காக தலைவரை கீழே இறக்க வேண்டும். ஆளை மாற்ற வேண்டும்  என்று முடிவு எடுத்தால் என்ன அர்த்தம்

தவறே செய்யாத மனிதப் புனிதர்களும் இருக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம். இதுவே இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரான கொள்கை ஆயிற்றே.

அன்று அப்படிச் செய் என்று சொன்னவர் இன்று இப்படிச் செய் என்று மாற்றி சொல்கிறார் என்கிறார்கள்.


لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ؕ

அல்லாஹ்வின் சொல்லில் கட்டளைகளில் மாறுதல் இருக்காது 10:64. என்பது போல் மனிதர்களின் சொல்லிலும் மாறுதல் இருக்காது என்பதுதான் உங்கள் ஈமானா?

தலைவர் என்பவர் யார்நபியா? மலக்காஅல்லாஹ்வா? என்று கேட்டு விமர்சித்தவர்கள்.  தலைவரின் கலிமா - சொல்  அல்லாஹ்வின் சொல் போல் மாற்றப்படாததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  

சரி வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்வோம் அல்லது இடி அமீன் நாட்டிலிருந்தே ஆளை கொண்டு வருவோம் என வைத்துக் கொள்வோம். அவர் தவறே செய்ய மாட்டார் என்ற உத்தரவாதம் யாராலும் தர முடியுமா? அவரும் தவறு செய்யத்தானே செய்வார்

கனடாவிலிருந்து அவரைக் கொண்டு  வைப்போம். அவர் ஒரு தவறு செய்வார். சில நாள்கள் கழித்து அவரையும் இறக்க வேண்டும். கடைசியாக உகாண்டாவிலிருந்தே கொண்டு வந்து விடுவோம். அவர் தவறுகளின் தந்தையாகவோ பிறப்பிடமாகவோ இருப்பார். அவரையும் துாக்கி வீசுவோம்.

இப்படியாக தலைவரை துாக்கு, மாற்று என்பது சமுதாயத்தை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு செல்லும் அதி முக்கியமான செயலுக்கு வைக்கும் வேட்டு தானே இது. 

தலைவரிடம் ஆயிரம் தவறுகள் இருக்கலாம். தவறைத்தான் சுட்டிக் காட்ட வேண்டும். தலைவர் அவர்களே இந்த விஷயத்தில் நீங்கள் செய்வது தவறு என்று சொல்ல வேண்டும்.

அந்த தவறை நீயும் சேர்ந்து செய் என்று வற்புறுத்தினால் அதில் கட்டுப்படக் கூடாது. 

தலைவரிடமுள்ள தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். தலைவரின் ஆணைக்கு தவறில் மட்டும் தான் கட்டுப்படக் கூடாது. அப்பொழுதும் அவர்தான் தலைவர். 

தலைவர் ஒரு தீமையை ஏவினால் அந்த தீமைக்கு மட்டும் கட்டுப்படக் கூடாது. மற்ற விஷயங்களில் அவர் தான் தலைவர்.  இதுதான் இஸ்லாம். 

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதலை விட்டு விட்டு. ஒரு தலைமைக்கு - ஒரு தலைவருக்கு கட்டுப்படாமல் ஷய்த்தான்களின் பின்னால் என்று போனதோ. அன்றுதான் இந்த சமுதாயம் நாதியற்ற சமுதாயமாக நாசமாக போனது. இதுதான் வரலாறு..

ஒரு தலைவனுக்கு கீழ் ஒரு வழி காட்டுதலுக்கு கீழ் கட்டுக் கோப்பாக இருந்து வா என்றால் வந்து போ என்றால் போன காலங்களில் தான் முஸ்லிம்கள் என்றால் சிம்ம சொப்பனமாக இருந்தது. எவனாவது அநியாயமாக கை வைத்தானா?

முஸ்லிம் சமுதாயம் ஒரு தலைவரின் கீழ் இயங்கக் கூடிய சமுதாயம். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய சமுதாயம். ஒரு தலைவரின் உத்தரவுக்கு கட்டுப்படக் கூடிய சமுதாயம் என்று இருந்த காலத்தில் தான். இந்த சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்பட்டது. 

அப்பொழுதும் முஸ்லிம்கள் மைனாரிட்டிதான். இன்று இருப்பதை விட முஸ்லிம் மக்கள் தொகை மிக குறைவாகத்தான் இருந்தது.

மைனாரிட்டிகளாக இருந்தாலும் மைதா ரொட்டிகளாக இருக்கவில்லை. வருகிறவன் போகின்றவன் இழுத்த இழுப்பின் பக்கம் பிய்ந்து போகும் மைதா ரொட்டிகளாக இருக்கவில்லை. 

முஸ்லிம்களின் பலம் – சக்தி – வலிமை எங்கே இருக்கிறது? ஒரு கட்டுப்பாடுடன் இருப்பதில்தான் சக்தி இருக்கிறது. 

எண்ணிக்கை கூடுதலாக இருப்பது பலம் அல்ல. மக்கள் தொகை கணக்கிலடங்காமல் இருந்து. விழுந்து கிழிந்த நெல்லிக்காய் மூட்டை மாதிரி பல பாகங்களில் சிதறி ஓடும் கூட்டம் இருந்து என்ன? இல்லாமல் இருந்தென்ன?  

தலைவரிடம் இருப்பதாகச் சொல்லப்படும் குறைகள் பலஹீனங்கள் பற்றி தலைவருக்கு உபதேசிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

இன்று சிலர் தலைவர்களுக்கு தர்பியா செய்ய வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர்களுக்கு தர்பியா செய்ய வேண்டும் என்ற பன்மையில் நமக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் ஒரு நேரத்தில், ஒரே காலத்தில் பல தலைவர்கள் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒருவரே தலைவர் என்பதுதான் இஸ்லாம்.

எவர்களைக் கொண்டு தர்பியா செய்ய வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்களோ. அவர்கள் நிலையே ரொம்ப பரிதாபமாகத்தான் உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரண்டு ஆண்டுகளாக அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

அவர்கள்தான் இவர்களுக்கு தர்பியா செய்ய வேண்டும் இவர்கள் தான் அவர்களுக்கு தர்பியா செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. 3:110 வசனப்படி எல்லாரும் எல்லாருக்கும் தர்பியா செய்யலாம்.

அந்த வசனத்தில் உலகில் கோடான கோடி சமுதாயங்கள் தோன்றி மறைந்துள்ளன. அவர்களில் நீங்கள் தான் மிகச் சிறந்த மேன்மையான சமுதாயம் என்றும் அல்லாஹ் நமக்கு நற்சான்று கூறி பாராட்டி உள்ளான். நற்சான்று அளித்த அல்லாஹ்வே எதனால் சிறந்த சமுதாயம்? என்ற விபரமும் சொல்லி உள்ளான்.

تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ
நன்மையை ஏவுகின்றீர்கள்.

وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
தீமையைத் தடுக்கின்றீர்கள்!
அதனால்தான் மேன்மையான சிறந்த சமுதாயம். 

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் நற்செயலை பிரிந்து பிரிந்து போவதால் செய்ய முடியுமா? தீமையை தடுக்க வேண்டும் 3:104. என்ற கட்டளையிலிருந்தே பிரிந்து போகக் கூடாது சேர்ந்தே இருக்க என்பது அறிவுள்ளவர்களுக்கு விளங்கும். 

நன்மையை ஏவ 3:104. என்ற கட்டளையிலிருந்தே இணைந்தே இருக்க வேண்டும் என்பது அறிவுள்ளவர்களுக்கு தெளிவாகத் தெரியும். பிரிந்து போனவன் சொல்லை யார்தான் கேட்பார்கள்?

சமுதாயத்தை விட்டு பிரித்து ஒதுங்கி போவது அல்ல இஸ்லாம் காட்டிய வழி. சமுதாய அமைப்பு அவ்வளவு முக்கியத்துவமானது. 

நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய வசனங்கள் ஏராளமாக குர்ஆனில் உள்ளன. அவை அனைத்தும் தனித்து போகக் கூடாது. பிரிந்து போகக் கூடாது. ஒதுங்கி போகக் கூடாது. ஒரு கட்டுக்கோப்பிலிருந்து விலகி விடக் கூடாது என்று மிக மிக அழுத்தமான கட்டளையாகவே கூறி உள்ளது.    

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு எடுத்தெறியப்பட்ட  ஷைத்தான்களை விரட்டி  அடிப்பதே இஸ்லாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு