திசை திருப்புகின்றவர்கள் யார்? TNTJவா? NTFபா? மாட்டு வியாபாரி அபுகிதரா?


இந்த விஷயத்தில் இஸ்லாத்தின் மீது பற்றுள்ளவர்கள் எந்த மாதிரி துஆ கேட்க வேண்டும்?
அபுகிதர் அவர்களை மாட்டு வியாபாரி என்று எழுதியதற்கு மன்னிக்கவும் நான் இப்படி இகழ்வதாக எண்ணி விடாதீர்கள். அண்ணன் அபுகிதர் என்ற அறிஞர்கள் குழு ஆலிம்கள்(?) தான் இன்று மாட்டு வியாபாரி அபுகிதர் என்று எம்மிடம் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வார்த்தையைத்தான் பயன்படுத்தி உள்ளேன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/07/tntj-ntf.html
இந்த ஸ்கிரீன் ஷாட் அறிஞர்கள் குழுவின் இரண்டு ஆலிம்கள் நமக்கு அனுப்பியது. இதுவும் நாம் இந்த பதில் எழுத காரணமாக அமைந்தது.

குர்பானி ஆட்டை (ஆடுகளை) ஆட்டை போட்டவர்கள் பற்றி அல்தாபி சொன்ன வீடியோவை  பம்பரமாக சுழன்று பரப்பியவர்கள் பலர். அதைவிட மோசமானது குர்பானி மாடுகள் பற்றிய குற்றச்சாட்டு

ஆட்டை ஆட்டை போட்டது குர்பானி என்ற அமலை பாதித்த செயல் அல்ல. குர்பானி ஆடுகளை ஏழைகளுக்கு கொடுக்காமல் தலைமை நிர்வாகிகள் மட்டுமே அறுத்து தின்றார்கள் என்பதுதான்.

மாடுகள் பற்றிய குற்றச்சாட்டு அப்படி அல்ல. ஹஜ் பெருநாள் வணக்கங்களில் (அமல்களில்) ஒன்றை பாதிக்கும் செயலாகும். அது பற்றி எனக்குத் தெரிந்ததை பிறகு சொல்கிறேன். பீ.ஜே. சொல்லி உள்ளது என்ன என்பதை முதலில் பார்ப்போம். (நான் அறிந்தது அடைப்புக் குறிக்குள்ளும் உள்ளது. அதன் விளக்கத்தை இறுதியில் தெரிவீர்கள்)

அபுகிதர் அவர்களிடம் TNTJயின் ஒரு மாவட்ட நிர்வாகிகள் குர்பானி  மாடுகள் கேட்டுள்ளார்கள். குர்பானிக்கு தகுதியான மாடு பத்தாயிரம் ரூபாய். (அதற்கு குறைவாக என்றால் தரமற்ற கன்று குட்டிகள் தான் கிடைக்கும். அது பாவம்) என்று அபுகிதர் சொல்லி உள்ளார்.

அபுகிதரிடம் உள்ள தரமான மாடுகளை வாங்காமல் (வந்தவாசியிலோ வராதவாசியிலோ) போய் 7500 ரூபாய் வீதம் குர்பானிக்கு தரமற்ற 80  மாடுகளை மொத்தமாக (காண்ட்ராக்டாக) வாங்கி உள்ளார்கள்.

இவர்கள் வாங்கி உள்ள விலைப்படி கூட்டுக் குர்பானி ஒரு பங்கு - ஷேர் 1075 ரூபாய்தான் ஆகிறது. ஆனால் இவர்களோ டபுளாக 2300 ரூபாய் என்று வசூலித்தார்கள். 7 பங்குக்கு 16,100 ரூபாய் ஆகின்றது

ஒரு மாட்டுக்கு 8,600 ரூபாய் வீதம் TNTJ லாபம் அடைந்தது. 80 மாடுகள் மேல் ஆறு லட்சத்தி எம்பத்தி எட்டாயிரம் (688000) ரூபாய் சொளையாக ஒரு மாவட்டத்துக்கு மட்டும்  கிடைத்துள்ளது. (அப்படியானால் மாநில அளவில் மாவட்டங்கள்? எத்தனை கோடி?) இது ஒரு குற்றச்சாட்டு.

குர்பானி பிராணிகளை வியாபாரமாக தனி மனிதன் செய்யலாம் என்றால் அமைப்போ, இயக்கமோ, ஜமாஅத்தோ செய்யலாம் தான். ஆனால் தனி மனிதர்களிடமுள்ள வளர்ப்பு ஆடு, மாடுகளையோ, அல்லது வியாபாரிகளிடமோ வாங்கினால் இது பிஸ்னஸ். அவர்கள் லாபம் இல்லாமல் தர  மாட்டார்கள், விற்க மாட்டார்கள் என்று எண்ணியே வாங்குவார்கள்.

ஜமாஅத்களிடம் வாங்கும் போது இவர்கள் லாப நோக்கு உடையவர்கள் அல்ல. அல்லஹ்வுக்காக சேவை நோக்குடையவர்கள் என்று எண்ணியே வாங்குவார்கள்

ஜமாஅத்கள் அல்லஹ்வுக்காக தாங்கள் சேவை செய்பவர்கள் போல் காட்டி விட்டு. வியாபாரியாக செயல்பட்டதும் டபுள் லாபம் வைத்ததும் தான் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது மற்றவர்கள் அமலை பாதிக்கும் பெருந்தவறல்ல. ஒரு வகை கொள்ளை.  சுட்டிக் காட்டி திருத்த வேண்டிய கொள்ளை.

இதைவிட மோசமானது கண்டிக்க வேண்டிய பெரும்பாவம். கண்டு கொள்ளாமல் இருந்ததுடன் திசை திருப்பும் வேலை செய்யப்பட்டுள்ளது. அது என்ன?

வட சென்னை மாவட்ட TNTJ  மாடுகளை சென்னையில் அறுக்காமல் ஊருக்கு வெளியில் கானத்துாரில் வைத்து அறுத்தார்கள். மாடுகள் அறுப்பதை கண்காணிக்கும் பொறுப்பை அபுகிதர் அவர்களிடம்தான் கொடுத்திருந்தார்கள்.

குர்பானி கொடுப்பதற்கு தகுதி இல்லாத தரமற்ற ஒரு வயதுக்கும் கம்மியாக உள்ள கன்றுக் குட்டிகளை கொண்டு வந்து அறுத்தார்கள். இதைப் பார்த்த அபுகிதர் அவர்கள் அப்பொழுது வட சென்னை மாவட்ட நிர்வாகி  இருந்த அப்துல்றஹீம் என்பவரிடம் கேட்டுள்ளார்

பெரிய மாட்டுக்கு என்று டபுளாக காசு வங்கி விட்டு கன்றுக்குட்டிகளை அறுக்கிறீர்களே. அந்தக் கன்றுக் குட்டிகளும் குர்பானிக்கு ஏற்றதாகவும் இல்லையே என்று.  அதற்கு நமக்கு தலைதான் கணக்கு அவ்வளவுதான் என்று அப்துல்றஹீம் கூறி உள்ளார்.

இந்த விஷயத்தை (காஞ்சி மாவட்ட நிர்வாகிகளிடமும் சொல்லி வேதனைப் பட்டுள்ளார்) அப்பொழுது பொதுச் செயலாளராக இருந்த கோவை ரஹ்மதுல்லாஹ்விடம் கம்ளைண்ட்டாக அபுகிதர் சொல்லி உள்ளார்.

அதற்கு கோவை ரஹ்மதுல்லாஹ் உங்களுக்கு மாடு அறுக்கிற வாய்ப்பு தரவில்லை என்பதால்தான் இந்த குற்றச்சாட்டு கூறுகிறீர்கள் என்று உங்கள் மீது பலி போட்டு விடுவார்கள். அறுப்பு வேலை அப்படியே கிடந்து விடும். பேசாமல் விட்டு விடுங்கள் என்று சொல்லி இந்த குர்பானி  மோசடிகளை பிரச்சனை ஆக்காமல் விட்டு விட்டார்கள். இது சாதாரண குற்றச்சாட்டா?

மார்க்கத்தின் மீது பற்று உள்ளவர்கள் இதை திசை திருப்ப மாட்டார்கள். இஸ்லாத்தை விட இஸ்லாம் கூறியுள்ள அமல்கள் பாழாவதை விட இயக்கமே பெரியது என்று செயல்படக் கூடிய இயக்க வெறியர்கள் தான் தெளிவாக உள்ள இந்தக் குற்றச்சாட்டை திசை திருப்புவார்கள்.

7500 ரூபாய்க்கு மாடுகள் வாங்கப்பட்டது கடந்த 2018, 2017 ஆம் ஆண்டுகளில் என்று பீ.ஜே.யும் சொல்லவில்லை. அபுகிதரும் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் அவர்கள் பொய்யர்கள். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தித்து பிரச்சனையை முடித்திருக்கலாம்.

7500 ரூபாய்க்கு மாடுகள் என்ற சம்பவம், அபுகிதர் காஞ்சி மாவட்ட தலைவராகவும் இன்று மாநில நிர்வாகியாக உள்ள அப்துல்றஹீம் வட சென்னை மாவட்ட நிர்வாகியாகவும். கோவை ரஹ்மதுல்லாஹ் மாநில பொதுச் செயலாளராகவும்  பீ.ஜே. தலைவராகவும் இருந்த காலத்தில் என்று தெளிவாக கூறி உள்ளார்கள். அப்படியானால் இது 2018லோ அதற்கு முந்தைய ஆண்டுகளிலோ நடந்தது அல்ல.

2013 அல்லது அதற்கு முந்தையது ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முந்தையது. 5 ஆண்டுகளுக்கு முந்தைய 2014 மாட்டு விலைகளை மறைத்து 2017, 2018, 2019 ஆகிய இந்த ஆண்டுகளின் மாட்டு விலைகளோடு ஒப்பிடுபவர்களே திசை திருப்புபவர்கள் என்பது தெளிவு என்றாலும். இஸ்லாத்தின் மீது பற்றுள்ளவர்கள் இரு சாராருக்கும் பொதுவாக துஆ கேட்போம்.

TNTJ, NTF, அபுகிதர், பீ.ஜே. ஆகியவர்களில் யார் குர்பானி மாடுகள் விஷயத்தில் உண்மையை மறைத்து திசை திருப்பி உள்ளார்களோ அவர்கள் அத்தனை பேர் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். அவர்களில் ஒருத்தனையும் விட்டு விடாதே!

இனி எனக்குத் தெரிந்த தகவல்களைத் தருகிறேன். ரமழான் இறுதியில் அல்லது நோன்புப் பெருநாள் முடிந்த உடன் குர்பானி தினத்திற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே  வருடா வருடம் மொத்த காண்ட்ராக்ட் விட்டு விடுவார்கள். 

எப்படி காண்ட்ராக்ட்? 2014ல் மாட்டு குர்பானி ஒரு பங்கு 2300 அதாவது ஒரு மாட்டுக்கு 16100 என்று பொது மக்களிடம் வாங்கினார்கள். அறுப்புக் கூலியுடன் ஒரு மாட்டுக்கு 7500 என்று காண்ட்ராக்ட் விட்டு விட்டார்கள். நன்றாக கவனிக்க வேண்டும் அறுப்புக் கூலியுடன் சேர்த்துதான் 7500.

குர்பானி கொடுப்பதற்கு தகுதி இல்லாத தரமற்ற ஒரு வயதுக்கும்  உள்ள கன்றுக் குட்டிகளைத்தான் அறுத்தார்கள். இன்றைக்கு மாநில செயலாளராக உள்ள அப்துல் றஹீமிடம் இது பற்றி சொல்லப்பட்டது. 

மார்க்க ரீதியாக தப்புங்க. இந்தக் கன்றுக் குட்டிகள் குர்பானிக்கு தகுதி இல்லாததுங்க என்று சொன்னதற்கு. நமக்கு அதுவெல்லாம் (மார்க்கமெல்லாம்) கணக்கு கிடையாதுங்க. எங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்  அதைத்தான பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மார்க்க அறிவற்ற மடையன் கூட இந்த மாதிரி சொல்ல மாட்டான். சொல்ல பயப்படுவான்.  இப்படிச் சொன்னவன் மார்க்கம் சொல்லும் அமைப்பின் இன்றைய மாநில செயலாளராம்.

அப்துல் றஹீமிடம் மார்க்க சட்டமெல்லாம் விளக்கப்படுகிறது. எனக்கு அதுவெல்லாம் இல்லை தலை கணக்கு தான் மார்க்கம் சம்பந்தமாக விளக்கியவரிம் மாட்டுக்கு 200 கமிஷன் தருவதாக அப்துல் றஹீம் கூறி உள்ளார்.

கோவை ரஹ்மதுல்லாஹ்வும் TNTJல் குர்பானி  காண்ட்ராக்ட் எடுக்கும் வியாபாரியுடன் பங்குதாரராக இருந்துள்ளார். அயோக்கிய ஆட்சியாளர்கள். அரசாங்கத்தில் காண்ட்ராக்ட் எடுத்து கொள்ளை அடிப்பவர்கள் செயலுக்கும். அல்லாஹ்வின் பெயரால் அமைப்பு நடத்தி அதில் பதவி வகிப்பவர்களே பார்ட்னர் மூலம் காண்ட்ராக்ட் எடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

அநியாயம் நடக்கிறது கம்ளைண்ட் எழுதி தருகிறேன் நடவடிக்கை எடுங்கள் என்று கோவை ரஹ்மதுல்லாஹ்விடம் சொல்லியும் அவர் தட்டி கழித்துள்ளார்.

இந்த காண்ட்ராக்ட் முறைப்படிதான் ஒரு வயதுக்கு குறைவான கன்றுக் குட்டிகள் தான் 2018 வரை  கொடுத்துள்ளார்கள். கோவை ரஹ்மதுல்லாஹ்வும் TNTJ கூட்டு குர்பானி காண்ட்ராக்ட் வியாபாரியுடன் பாட்னராக இருந்துள்ளார் 

இது நான் அறிந்த உண்மை. இதை பொய் என்று கருதுபவர்கள் எனக்கு எதிராக உங்கள் விருப்பப்படி கண்டிப்பாக துஆச் செய்யுங்கள். இந்த மாதிரி விஷயத்தில் எனக்கு எதிராக யார் துஆச் செய்தாலும் அது அல்லாஹ்வின் சாபத்துக்குரிய கூட்டத்தினரையே போய் சேரும். 

யா அல்லாஹ் மார்க்க ரீதியாக தப்பு. கன்றுக் குட்டிகள் குர்பானிக்கு தகுதி இல்லை. இப்படி  மார்க்க சட்டமெல்லாம் விளக்கியும். எனக்கு அதுவெல்லாம் இல்லை. தலை கணக்கு தான். எங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்  அதைத்தான பார்க்க வேண்டும் என்று கூறிய அமைப்பைச் சார்ந்த அத்தனை பேர்  மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு