ஏர்வாடி காசிமை காட்டிக் கொடுத்தது யார்? ஏர்வாடி காசிம் பிடி பட்டதும் பீ.ஜே. அழுதது யாருக்காவது தெரியுமா?
ஏர்வாடி காசிம் அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டது சம்பந்தமான விஷயத்தை காமில் அவர்கள் எழுதிக் கொண்டு இருப்பதால் நான் எழுத வேண்டாம் என்று
இருந்தேன். நான் ஜவாஹிருல்லாஹ்வுக்கு ஆதரவாக இருப்பதால் அவர் காட்டிக் கொடுத்தார் என்பது
சம்பந்தமாக நான் பேசாமல் இருப்பதாக என்னை நம்பியவர்களே எண்ணும் நிலை வந்து விட்டது.
ஆகவே இது சம்பந்தமாக எனக்கு தெரிந்த உண்மைகளைத் தருகிறேன்.
1998 மே 22 அன்று புளியந்தோப்பு
போலீஸ் ஏர்வாடி காசிம் அவர்களை கைது செய்து விடுகிறார்கள். அப்பொழுது SDPI,PFI எல்லாம்
கிடையாது. விடியல் வெள்ளிதான் இருந்தது துபையிலிருந்த
விடியல் வெள்ளியினர் த.மு,மு.க. ஏர்வாடி காசிமை காட்டிக் கொடுத்து விட்டது என்றார்கள்.
நான் லுஹாவிடம் கேட்டேன்.
ஜவாஹிருல்லாஹ் தான் காட்டிக் கொடுத்து விட்டார். பீ.ஜே. ஜவாஹிருல்லாஹ்வை கடுமையாகத்
திட்டி விட்டார். ஏர்வாடி காசிம் பிடி பட்டதும் பீ.ஜே. அழுது விட்டார் என்று லுஹா சொன்னார்.
ஜவாஹிருல்லாஹ்வை திட்டும்பொழுது
நீங்கள் உடன் இருந்து நேரில் பார்த்தீர்களா? என்று கேட்டேன் இல்லை. என்னிடம் தான் ஜவாஹிருல்லாஹ்
காட்டிக் கொடுத்து விட்டார் என்று சொல்லி ஜவாஹிருல்லாஹ்வை கடுமையாகத் திட்டிய பீ.ஜே. அழுதார் என்றார். அப்பொழுதே அனுபவ ரீதியாக
உண்மையை புரிந்து கொண்டேன்.
1995ல் தடா எதிர்ப்பு பேரணியின்
போது கலர் கிளாஸ் மஞ்சள் பேப்பரில் தடாக் கைதிகள் பீ.ஜே.யை புகழ்ந்த மாதிரி நோட்டீஸ்
வெளியிடப்பட்டது. வெளியீடு JAQH என போடப்பட்டது. பேரணி வெற்றிக் களிப்பில் சந்தோஷமாக
இருந்த JAQH சகோதரர்களிடம் எல்லா உளவுத்துறையினரும் விசாரணை நடத்த ஆரம்பித்து விட்டனர்.
சிறையில் உள்ள தடாக் கைதிகள் பெயரால் நோட்டீஸ் போட்டது சம்பந்தமாக.
அண்ணன் பீ.ஜே. அவர்கள் பழுலுல் இலாஹிதான் என்று கூறி JAQH நிர்வாகிகளிடம் என்னை திட்டி தீர்த்து விட்டார். இதை அறிந்த
நாம் அண்ணனுக்காக தியாக மனப்பான்மையுடன் இருந்தோம்.
நுாலாம் பூச்சியை கண்டு பயப்படக்
கூடிய ஜிஹாது சிங்கம் காஜா பரதேசி போன்றவர்கள் அளவுக்கு அதிகமாக குதிக்க ஆரம்பித்து
விட்டார்கள்.
குஞ்ஞாலி மரைக்காயர் என்ற பெயரில் அல் ஜன்னத்தில் கட்டுரை எழுதிய கோட்டாத்துக்
காரரும் இருந்த ஒரு சபையில். இந்த நோட்டீஸால் எவ்வளவு பாதிப்பு தெரியுமா என்று காஜா
பரதேசி கொதித்தான் விழி பிதுங்கி கூத்தாடினான். (ஸனது வாங்கி இருந்தால் பிர்தவ்ஸி, ஸனது வாங்காதவன் எல்லாம் பரதேசி)
உடனே குஞ்ஞாலி மரைக்காயரிடம்
நோட்டீஸ் எங்கே தயாரித்து பிரிண்ட் செய்யப்பட்டது என்று கேட்டேன். சென்னை அல்ஜன்னத்
ஆபீஸில் வைத்து பீ.ஜே.தான் எழுதினார்.
பீ.ஜே.யும் நானும்தான் புரூப் பார்த்தோம் என்று
சொன்னார். இதை நினைவில் கொண்டு ஏர்வாடி காசிமை காட்டிக் கொடுத்தது யார் தலைமையிலானவர்கள்
என்பதை புரிந்து கொண்டேன்.
2000 மே
13ல் குமரி மாவட்டம் வேர்க்கிளம்பியில் த.மு.மு.க. மாநில பொதுக்குழு நடந்தது. அதில்
பேசிய அண்ணன் ஹைதர் அலி அவர்கள். இதோ இருக்கிறாரே இலாஹி அவர் துபையிலிருந்து போன் போட்டுத்தான்
தமிழ்நாடடில் உள்ள நாங்களே இங்கு நடந்ததை தெரிந்து கொள்வோம்.
24 மணி நேரமும் அவரை
தொடர்பு கொள்ளலாம். இன்ன ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதே என்று அவரிடமிருந்து
போன் வரும் அப்படியா என்று அதன் பிறகு விசாரிதித்து தெரிந்து கொள்வோம் என்றார்.
இதனால் என்னிடம் பலர் பேசவும்
போன் நம்பர் கேட்பதுமான நிலை. அப்பொழுது ஏர்வாடி காசிமை நான் காட்டிக் கொடுக்கவில்லை
என்று சத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று அன்சாரி கட்சியான ம.ஜ.க.வின் மாநில
பொறுப்பில் இருக்கும் மண்டலம் ஜெய்னுல் ஆபீதீன் ஏர்வாடி காசிமை நான் காட்டிக் கொடுக்கவில்லை
என்று சத்தியம் செய்தார்.
சரி இனி பீ.ஜே. போலீஸில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தின் 3348ஆம் பக்கத்தை பாருங்கள்.
1997 வாக்கில் நசுருத்தீன்
ஏர்வாடி காசிம் ஏதாவது செய்ய இருக்கிறார் என்று என்னிடம் சொல்ல அவனை ஏதாவது ஒரு
வகையில் போலீஸிடம் பிடித்து கொடுத்து விடு என்று நான் (பீ.ஜே.) சொன்னேன்.
ஒரு நாள்
மண்டலத் தலைவர் (மண்டலம்) ஜெய்னுல் ஆபீதீனிடம் காசிம் வர அவர் நசுருத்தீனிடம் கொடுத்து
அவன் காசிமை ஒரு நாள் தங்க வைத்து சென்னை இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலம் காசிமும் நசுருத்தீனும்
வண்டியில் வரும்போது பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்து அதன்படியே போலீஸ் ஏர்வாடி காசிமை
பிடித்துக் கொண்டது.
இனி 2008ல் TNTJன் வல்லம் மாநாட்டில் ஷம்சுல்லுஹா
எழுதி வெளியிட்ட தவ்ஹீது வரலாறில் ஏர்வாடி
காசிம் காட்டிக் கொடுக்கப்பட்டாரா? என்ற தலைப்பில் உள்ள செய்தியை பாருங்கள்.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு
தலைமறைவாக இருந்த ஏர்வாடி காசிம் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை அன்றைய தமுமுக குறிப்பாக பீஜேயும் ஹைதரும் காட்டிக் கொடுத்தனர் என்று ஒரு
பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. தமுமுகவில் இருந்து நாம் விலகிய பின்னர் ஹைதர்
பெயர் நீக்கப்பட்டு பீஜே பெயர் மட்டும் இப்போது பரப்பப்படுகிறது என்று லுஹா எழுதி
உள்ளார்.
2005
நவம்பரில் சென்னை சென்ரல் சிறையில் த.மு.மு.க. நிறுவனத் தலைவர் குணங்குடி ஹனீபா அவர்களைக்
காணச் சென்றேன். அப்பொழுது என்னிடம் பேசிய ஏர்வாடி காசிம் அவர்கள் த.மு.மு.க.
பொதுச் செயலாளர் ஹைதர் அலி தான் அவரைக் காட்டிக் கொடுத்தார் என்று என்னிடம் கூறி கோபமாகப்
பேசினார். நான் அவரை அமைதிப்படுத்தினேன். அண்ணன் இதை ஹைதர்
அலி அவர்களிடமும் வந்து சொன்னேன்.
எனது பாணியில் முடிவுக்கு வருகிறேன். யாரெல்லாம் சேர்ந்து ஏர்வாடி
காசிம் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டு அடுத்தவர்கள் மீது பலி
சுமத்துகிறார்களோ அவர்கள் மீதும் இந்த விஷயத்தில் அவர்களை துாய்மைப்படுத்தி ஆதரித்து நிற்பவர்கள் மீதும்
யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக! அந்தக் கூட்டத்தினர் அனைவரையும் அட்ரஸ்
இல்லாமல் ஆக்குவாயாக! ஆமீன்.
Comments