ஊருக்கு உபதேசித்த உத்தம உலமாக்களும் அவர்கள் அடையும் தண்டனைகளும்
1. தான் செய்யாத நற்செயலை பிறர் செய்யும்படி கட்டளையிட்ட உலமாவுக்குரிய
தண்டனை
மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது
அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவது
போன்று அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக்
கட்டளையிட்டு, தீமை செய்ய
வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர், நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை
நான் செய்யவில்லை. தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால்
அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் என்று கூறுவார். புகாரி 3267, 7098, முஸ்லிம் 5713
https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_28.html
2.குர்ஆனை கற்று அதனை செயல்படுத்தாத உலமாவுக்குரிய தண்டனை
.......ஒரு
மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும்
இன்னொருவர், அதைக்
கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது.
அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது.
மீண்டும் வந்து உடைத்தார்.......தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே!
அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும், அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்;
பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை
அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். புகாரி 1386
3. விபச்சாரம் செய்தவர்களுக்குரிய
தண்டனை
.......அடுப்பு
போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம்
விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற
முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.)
நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும்
பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். ...... அடுத்து ஒரு பொந்தில் சிலரைப்
பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். புகாரி 1386
விபச்சாரத்தில்
ஈடுபட்டவர்களுக்குத்தான் தண்டனை என்று உள்ளதா. கூட்டிக் கொடுத்த மாமாப்
பயல்களுக்கும். கண்டும் காணாமல் இருந்து காசடித்த கயவர்களுக்கெல்லாம் இஸ்லாத்தில் தண்டணை இல்லையா? இந்தக் கேள்விக்கு மற்ற ஹதீஸ்களில் பதில் உள்ளது.
வட்டி
வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள், மேலும், இவர்கள் அனைவரும்
(பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள். முஸ்லிம்
இந்த ஹதீஸே விபச்சாரத்தில் கூட்டி கொடுக்கும் தொழில் செய்த மாமாப் பயல்களுக்கும். கண்கண்ட சாட்சிகளாக இருந்து விட்டு பல்டி அடித்து காசடித்த கயவர்களுக்கும் இஸ்லாத்தில் சம தண்டணை உண்டு என்பதற்குரிய ஆதாரமாக உள்ளது. இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்களே!
... வட்டி
உண்பவனையும், வட்டி உண்ணக்
கொடுப்பவனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் .... விபசாரியின்
வருமானத்தையும் தடை செய்தார்கள். ... சபித்தார்கள். புகாரி 2086 5347 5945
மது
அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன்
மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா.
“அல்லாஹ்(வும்) சபிக்கிறான்” அஹ்மத், இப்னு
ஹிப்பான், ஹாகிம்.
மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு
பருகக் கொடுப்பவரையும், அதை
விற்பவரையும், அதை
வாங்குபவரையும், அதை
(பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே)
தயார் செய்து கொள்பவரையும், அதைச்
சுமந்து செல்பவரையும், யாருக்காக
அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு மாஜா 3371
மது
அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால்
சபிக்கப்பட்டவர்கள் போலவே இந்த ஹதீஸ்படி கூட்டிக் கொடுத்த மாமாப் பயல்களும். கண்டும் காணாமல் இருந்து காசடித்த கயவர்களும் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) ஆகியவர்களின் சாபத்துக்குரியவர்களே!
வட்டி மற்றும் மதுவில் தொடர்புடைய அனைவரும் நரகவாசிகள் என்று எப்படி சபிக்கப்பட்டிருக்கிறார்களோ அது போல் ஒருவரின் விபச்சாரத்தில் தொடர்புடைய, கண்டும் காணாதது போல் இருந்த அத்தனை பேருக்கும் இந்த ஹதீஸ்களின்படி சாபமும் நரமும் உண்டு.
விபச்சாரம்
என்பது தனி மனித ஒழுங்கீனம் மட்டுமல்ல, சமூகத்தையும்
நாட்டையும் பாதிக்கின்ற மிகப் பெரிய சமூகத் தீமையாகும்.
விபச்சாரத்தால் குடும்ப உறவு, இல்லற அமைதி, மானம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் மட்டங்களிலும் பாதிப்பு உண்டாகும்.
எய்ட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய்களுக்கும் பாலியல் குற்றங்களே காரணம்.
எனவே விபச்சாரத்திற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது.
எனவே, விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை மறுமையில் உண்டு.
விபச்சாரத்தால் குடும்ப உறவு, இல்லற அமைதி, மானம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் மட்டங்களிலும் பாதிப்பு உண்டாகும்.
எய்ட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய்களுக்கும் பாலியல் குற்றங்களே காரணம்.
எனவே விபச்சாரத்திற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது. விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது.
எனவே, விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை மறுமையில் உண்டு.
Comments