பி.ஜே. கைது செய்யப்பட்டாரா? கைது செய்யப்படுவாரா? தப்பிக்க என்ன வழி?
ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் பி.ஜே. மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மன் கொடுக்கப்பட்டது. சம்மனை வாங்க பி.ஜே. மறுத்தார். விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவு. பி.ஜே. ஆஜராக மாட்டார். வழக்கறிஞர்கள் தான் வருவார்கள். பெண் விவகாரத்தால் பி.ஜே.யை நீக்கியதாகக் கூறிய TNTJ தலைமை மிரட்டல். இதன் மூலம் பி.ஜே. நீக்கம் என்பது நாடகம்தான் என்பது உறுதியானது. ஆகிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கோண்டிருக்கின்றன. பி.ஜே.யை தப்ப வைக்க என்ன வழி என்று ததஜ தலைமை தலைகீழாக நிற்கிறது. தனது வீட்டோ பவர் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது. ஜகாத், சதகா, பித்ரா என களவாடிய சேர்த்து வைத்த பண டேமை திறந்து விட்டு விட்டது. பணம் வெள்ளமென பாய்கிறது. இந்த பண வெள்ளம் பி.ஜே.யையும் அவருடன் சேர்ந்து இருக்கின்றவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டுதான் போகும். தப்பிக்க சரியான வழி? ஜிஹாது பெயரால் அவர் கெடுத்த இளைஞர்களின் குடும்பத்தாரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவரால் சிறையில் த...