கன்னியாகுமரி ததஜ கலகலத்தது ஏன்? அன்று ISI கைக் கூலிகள் பற்றி சொன்னபோது?
இது அடுத்த அமைப்பின் செய்தி அல்ல. உங்கள் தலைக்கு மேலும் குறிப்பாக உங்கள் தலைமைக்கு மேலாகவும் தொங்கிக் கொண்டிருக்கும் விஷம் தேய்க்கப்பட்டுள்ள கூறிய வாள். பாகிஸ்தானை அதன் உளவுப் பிரிவான ISIயை விமர்சிக்காத இந்தியன் பெயர் தாங்கி அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை. தேசத் துரோகிகள், காட்டிக் கொடுக்கும் கயவர்கள். இப்படி பேசியவர்களில் கடுமையாக பேசியவர்கள் யார்? என்ற போட்டிதான் நடந்தது . நாங்கள்தான் எல்லாரையும் விட முதன்மை எதிர்ப்பாளர்கள். எங்களைப் போல் பாகிஸ்தானை ISIயை விமர்சித்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமைபட்டுக் கொண்டவர்கள்தான் அதன் தலைமை ரகசிய கூலியாக கைக்கூலிகளுக்கு தலைவராக செயல்பட்டுள்ளார்கள். இந்த உண்மைகள் 22-01-1995 அன்று மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டத்திலும் போட்டு உடைக்கப்பட்டது. http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/isi.html எனது நண்பரும் ஐக்கிய ஜமாஅத்தின் அன்றைய செயலாளருமான மொன்னி மைதீன் பிச்சை Ex M.C. அவர்கள் போட்டு உடைத்தபொழுது ஜீரணிக்க முடியாமல் ஏற்க மறுத்தவர்கள் சொன்ன வார்த்தை அதெல்லாம் இருக்காது என்ற ஒரே வார்த்தை...