எம் எஸ்சும் தடம்புரண்ட ஜும்ஆ உரையும்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
கடையநல்லூர் ததஜ மர்கஸில் குர்ஆன்,ஹதீஸை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் அடுத்தவர்களை வசைபாடுவதையே ஜும்ஆ உரையாக இதுவரையிலும் நிகழ்த்தப்படுகிறது என்பதை ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.
கடந்த 2-10-15 அன்று கடையநல்லூர் ததஜ டவுண்கிளை மர்கஸ் ஜும்ஆவில் எம் எஸ் ஒருபாட்டு பாடிவிட்டு சென்றுள்ளது.அதாவது முபாரக் பள்ளிக்குள் ததஜ பிரச்சனை ஏற்படுத்தியது சரிதான்.என்று சொல்லிவிட்டு.ததஜவிலுள்ள நியாயமான சகோதரர்கள் முபாரக் பள்ளியில் பிரச்சனை ஏற்படுத்தியது தவறு என்று சொல்லியிருக்கிறார்கள்.இப்படி சொன்னவர்களை தவ்ஹீத் வாதிகள் கிடையாது கொள்கையற்றவர்கள் பச்சோந்திகள் என்று பொருள்பட பேசியிருக்கிறார்.இதை அந்த மக்கள் உணர்ந்து பார்க்கவேண்டும்.இது அவர்களுக்குள்ள பிரச்சனை.
90களிலே ஜலீல்மதனி இருக்கும்போது குர்ஆன் வகுப்பு நடத்தினேன்.என்று தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.சொந்த ஊர் தென்காசிக்கே பிரையோஜனமில்லாதவர் கடையநல்லூரில் வந்து குர்ஆன் வகுப்பு நடத்தினாரா?பொருளாதாரத்தையே குறிக்கோளாக கொண்ட எம் எஸ் சுலைமானைப் பற்றி அவருடன் பாடம் பயின்ற சகோதரர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார் அதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
இவர் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.வயது 43. இவரின் பள்ளிப்படிப்பு 15 வருடங்கள்.நான்கு வருடங்கள் பிர்தௌசியாவில் படிக்கவேண்டியவர் நான்காவது வருடம் முழுமையாகாமல் இடையில் ஓடிவந்தவர். தற்போது ஜாக்கிற்கு சொந்தமான பிர்தவ்ஸி என்ற பட்டத்துடன் வலம் வருபவர்.இடையில் நாகர்கோவில் ஹனீபா நகரில் இரண்டு வருடங்களாக இமாமத் பணியுடன் பிரட் வியாபாரம் செய்தவர்.அடுத்து காயல்பட்டினம் ஆயிஷா சித்தீகாவில் ஒருவருடம் பெண்களுக்குப் பாடம் நடத்தியவர்.பின்பு தொடர்ந்து மேலப்பாளையத்தில் பெண்கள் மதரஸாவில் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இவர் எத்தனை வயதில் கடையநல்லூருக்கு குர்ஆன் நடத்த வந்திருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்களேன் கடையநல்லூரில் ஆரம்ப காலத்தில் பள்ளிவாசல் ஒருகட்டிடத்தின் மாடியில் இருந்தது.அப்போது இவர் குர்ஆன் வகுப்பு நடத்தியதாக பேசியிருக்கிறார்.அந்த நேரத்தில் இவர் சைபுல்லாஹ்,ஜலீல்மதனியிடம் பாடம் கற்றுக்கொண்டிருந்த பிரதவ்சியாவின் மாணவர்.கடையநல்லூருக்கு தொன்னூறுகளில் வந்ததாக சொல்லும் இவரின் வயதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அப்படியே வந்தாலும் இவர்ஜாக்கின் சார்பாகத்தான் வந்தார்.கமாலுத்தீன் மதனி கடையநல்லூருக்குப் போய் குர்ஆன் வகுப்பு நடத்திவிட்டுவா என்ற உத்தரவு போட்டிருப்பார் இவர் வந்தார்.
வந்தவரை ஜலீல்மதனி சும்மா விடமாட்டார்,அவரும் சும்மா வரவுமாட்டார் ஜலீல்மதனி கைமடக்கு கொடுப்பார் என்றுதான் வந்திருப்பார்.ஆனால் இதுவரையிலும் கடையநல்லூர் முபாரக் பள்ளியில் ஒரு ஜும்ஆ நடத்திருப்பாரா?தற்போது தமுமுக தலைவராக இருக்ககூடிய ஜவாஹிருல்லாஹ்கூட ஜும்ஆ நடத்தியுள்ளார். இவர்தான் கடையநல்லூர் பெண்பிள்ளைகளை மேலப்பாளையம் மதரஸாவில் சேர்க்கமாட்டோம் என்று சொன்னவர்.நான் அப்படி சொல்லவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் அடித்து சொல்லட்டும்.
அல்லது கடையநல்லூர் அப்துந்நாசர் எம்.எஸ்.சுலைமான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று அவர் சத்தியமடிக்கட்டும்.அந்த நேரத்தில் இந்த இருவரும் கூட்டாகத்தான் இந்த முடிவு எடுத்திருக்கிறார்கள். இப்போது என்ன கடையநல்லூர் மீது இவ்வளவு கரிசனம்.ஜும்ஆ நடத்தினாயா அவர்கள்தரும் காசை வாங்கிவிட்டு செல்லவேண்டியதுதான். என்ன பொய்யோ தெரியவில்லை அதுதானே இவர் ஏற்றிருக்கும்கொள்கை. காசுக்காக குர்ஆன் வகுப்பு நடத்தியவர்களெல்லாம் பள்ளிக்கு உரிமையாளர்கள் என்று சொல்லமுடியுமென்றால் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்பவர்கூட சொந்தம் கொண்டாட முடியும்.
இன்று முபாரக் பள்ளியில் இருக்ககூடியவர்களுக்கு யாருக்கும் ஒரு பிட்டுகூட முபாரக் பள்ளிக்கு சம்பந்தம் கிடையாது என்று தன்னுடைய பொய்யை உறுதிப்படுத்தி தன் கொள்கையை நிலைநாட்டியுள்ளார்.சகோதரர்களே! முபாரக் பள்ளிக்கு சொந்தம் என்று சொல்லக் கூடியவர்கள் இவர்களிடம் யாராவது உண்டா?என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.ஆதாரத்திற்கு அப்துந்நாசர், முஹம்மது நாசர்,கலந்தரிஅய்யூப் என்று சொல்லுவார்கள். அப்துந்நாசர், முஹம்மது நாசர் இவர்களை படிக்க வைக்கவோ ஓதவைக்கவோ அவ்விரு குடும்பத்திலுள்ளவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் ஜலீல்மதனி அவர்கள் இதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு அப்போது முபாரக்பள்ளி பொறுப்பாளராக இருந்த இப்போதும் முபாரக்பள்ளி பொறுப்பாளராகத்தான் இருக்கிறார் இவரிடமும் உதவியைப் பெற்று இவர்களின் குடும்ப செலவுக்கும் கொடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இந்த ஆதாயத்திற்காகவே இவர்கள் பள்ளியைவிட்டு போகாமல் இருந்தார்கள் என்று இந்த கடையநல்லூர் வாசிகளுக்குத் தெரியும்.ஏன் அல்லாஹ் ஒருவனுக்குத் தெரியும்.இதை இவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சொல்லுவார்கள். செய்த உதவியை சொல்லிக் காட்டக் கூடாதுதான்.எதைவைத்து வளர்ந்தார்களோ அதற்கே உலைவைக்கும் போது சொல்லிக்காட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.இந்த விபரங்களெல்லாம் எம் எஸ் ஆகிய உமக்குத் தெரியாது.நீதான் குர்ஆன் வகுப்பு நடத்திவிட்டு அதற்கான தொகையை வாங்கிவிட்டு சென்றுவிட்டாயே.
அய்யூபை எடுத்துக்கொண்டால் அவர் பதவி ஆசை கொண்டவர்.எதையும் தான் செய்வதாகத்தான் பிறர் நினைக்க வேண்டும் என்று எண்ணுவார்.அதனடிப்படையில் தான் அவர் ரியாத்தில் இருக்கும்போது பெரிய முஸ்தபா மக்தூம் போன்ற மக்கள் வசூல் செய்து இவரிடம் கொடுப்பார்கள் இவர் என்னவோ தான் வசூல் செய்து அனுப்பியதாக தன்னை காட்டிக்கொள்வார்.முபாரக் பள்ளியிருந்து ததஜ பிரியும் காலகட்டத்தில் அவரே தக்வாவில் நடந்த முபாரக் பள்ளி பொதுக்குழுவில் முபாரக் பள்ளிக்குத்தான் ரியாத்தில் வசூல் செய்யப்பட்டது அதை நான்தான் முபாரக்பள்ளிக்கு கொண்டு வந்து கொடுத்தேன்.வேறு எந்த இயக்கத்தின் பெயரிலும் வசூல் செய்யவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்லுவார்.அதன் வீடியோ ஆதாரமும் உள்ளது.
அன்றைய கூட்டத்தில் இருந்த குறுச்சி சுலைமான் மக்கட்டி முஹம்மது அலி போன்ற ஆட்களிடம் கேட்டுப்பார்.இப்படித்தான் இப்போது ததஜவில் இருக்ககூடியவர்களின் முபாரக்பள்ளிக்கான பங்கு.முபாரக் பள்ளி பிரச்சனைக்காகத்தான் அப்துந்நாசர் ஜெயிலுக்குப் போனார் என்று சொன்னாலும் அதிலும் உண்மையில்லை.அவர் பிடிபட்ட இடம் முபாரக் பள்ளியில்லை பிரச்சனை என்று வந்ததும் பக்கத்திலுள்ள கட்டிடத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.இதைப் பார்த்த ரஹ்மத்துல்லாஹ் இம்தாதிதான் காட்டிக்கொடுத்து காவல் துறையால் பிடிபட்டார்.இதுதான் இப்போது ததஜவிலிருப்போரின் முபாரக்பள்ளிக்கான தொடர்பு.
சில தகவல்கள் தந்த கடையநல்லூர் பாஷாவுக்கு நன்றி
இன்ஷாஅல்லாஹ் தடம்புரண்ட ஜும்ஆஉரை தொடரும்.
இப்படிக்கு
காதிர்கனி எம் ஐ எஸ் சி
Comments