நம் பிள்ளைகளுக்கு மார்க்கத்தைக் கற்பிப்போம்...(1)
1. நாம் யார்?
நாம் முஸ்லிம்கள்.
2. நம் மார்க்கம் எது?
நம் மார்க்கம் இஸ்லாம்.
3. இஸ்லாம் என்றால் என்ன?
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.
4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.
5. கலிமாவை கூறு
லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.
7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை
எத்தனை? அவை யாவை?
எத்தனை? அவை யாவை?
ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா
8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
9. ஜகாத் என்றால் என்ன?
பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.
10. ஹஜ் என்றால் என்ன?
துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.
11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
உடல் வசதியும், பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை
ஹஜ் செய்வது கடமையாகும்.
ஹஜ் செய்வது கடமையாகும்.
12. ஈமான் என்றால் என்ன?
ஈமான் என்பது
உறுதியான நம்பிக்கை ஆகும்.
உறுதியான நம்பிக்கை ஆகும்.
13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.
14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)
நன்றி மைதீன் உலவி
Comments