தாஃவா பணி செய்துவரும் சகோதரர்களே ஓர் விழிப்புணர்வு பதிவு
91 98421 44688ல் இருந்து வந்தது
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே
ஓர் விழிப்புணர்வு பதிவு
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் தளங்களில் தாஃவா பணி செய்துவரும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே..
நம் பணிகளின் மூலம் இறைவனின் பொருத்தத்தைப் பெற உங்களுக்கும் எனக்குமான ஒரு நினைவூட்டல் இது.. (தயவுசெய்து ஒருமுறை முழுவதும் படிக்கவும்)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.
(திருக்குர்ஆன் 3:114)
என்ற இறைவசனத்திற்ககேற்ப நாம் வலைத்தளங்களில் நன்மையை ஏவி தீமையை தடுத்தாலும் ஒரு சில நேரங்களில் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி பொய்யன் என்ற நிலையை அடைகிறோம் ஏனெனில்
கேள்விபட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி
இதிலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்து கொள்வதற்காக இந்த பதிவு
1⃣ பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் ல் அடிக்கடி பார்க்க நேரிடும் ஒரு விஷயம், "பிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்ற செய்தி". ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, இவர் இஸ்லாத்தை ஏற்றார், அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்பது போன்ற செய்திகள்/போட்டோ வராமல் இருக்காது. இதன்மூலம் நாம் சொல்ல வருவது என்ன? ஒரு முஸ்லிம் அல்லாதவர் அவற்றைப் பார்த்தால் என்ன நினைப்பார்? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை வைத்து நாம் இஸ்லாத்திற்கு பப்ளிசிட்டி தேடுவதாக நினைப்பார்.. பொய்யென்னும் பட்சத்தில் அதை விட கேவலம் வேறு ஏதும் இல்லை..
2⃣ மீன் உடம்பில் குர்ஆன் வசனங்கள்.. சந்திரனில் பாங்கு சத்தம், மேகங்களில் "அல்லாஹ்" என்ற எழுத்து.. காபாவின் மீது வானவர்கள்.. கப்ரு குழியில் பாம்பு.. இப்படி ஏகப்பட்ட அற்புதங்கள் வீடியோ/போட்டோ வாக?? இவை அற்புதங்களா?
அசிங்கம்.. நமது ஈமான் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது சகோதரர்களே..
அசிங்கம்.. நமது ஈமான் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது சகோதரர்களே..
இறைவன் படைத்த வானத்திலும், பூமியிலும் உள்ள இயற்கை எனும் அதிசயம் நமக்கு போதாதா? தலை முதல் கால் வரை நாம் சிந்தித்து உணர வேண்டி இறைவன் அருளிய உறுப்புகள் போதாதா?
குர்ஆனில் பக்கம் பக்கமாக சொல்லப்பட்ட அற்புதங்கள் போதாதா? சிந்திக்க வேண்டாமா?
3⃣ இன்ன முஸ்லிம் பெண்ணுக்கும், இன்ன ஹிந்து மத ஆணுக்கும், இன்ன தேதியில் திருமணம்.. பெயர், முகவரி எல்லாமே அச்சிடப்பட்ட ஒரு திருமண பத்திரிக்கையின் புகைப்படம்.. அதுவும் பொய்யான செய்தி
பார்த்த உடனே கோபம் கொப்பழிக்க... ரத்தம் துடிக்க..
...எல்லாருக்கும் இதனை Forward செய்துவிட்டு தூங்கிவிடுவோம்..
...எல்லாருக்கும் இதனை Forward செய்துவிட்டு தூங்கிவிடுவோம்..
🏻கேலிக்கூத்து.. எந்த செய்தி என்றாலும் அதை உறுதிப் படுத்தாமல் உடனே பரப்புவது ஒரு முஃமினுடைய செயல் அல்ல.
❌புற்று நோய்க்கு மருந்து இலவசம்... (வியாபார யுக்தி)
❌போட்டோவில் உள்ள பெண்ணுக்கு பார்வை போய்விட்டது...Share செய்தால் 10 பைசா என்பது போன்ற முட்டாள்தனமான செய்திகள்
❌ஹஜ்ஜுக்கு இலவசமாக அனுப்புகிறார்கள்... (தொலை பேசி எண் வேலை செய்யாது)
❌அவசரமாக இரத்தம் தேவை...
ஆராயாமல் மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள் (ஏனெனில் பல தகவல்களில் தொலை பேசி எண் வேலை செய்யாது)
❌ இந்த Message பலருக்கு அனுப்பினால் Mobile Data இலவசம்...
❌ இந்த Message பலருக்கு அனுப்பினால் பேட்டரி சார்ஜ் ஆகும்...
❌வேலைக்கு ஆட்கள் தேவை... (தொலை பேசி எண் வேலை செய்யாது)
போன்ற செய்திகளை பரப்பாதீர்கள்
போன்ற செய்திகளை பரப்பாதீர்கள்
🏻இதேபோன்று மாற்று மத கொள்கைகளை ஒப்பிட்டும், குறைகூறியும் இஸ்லாத்தை நிலைநாட்ட சில சகோதர்கள் முயற்சி செய்கிறார்கள்..
இது பெரும் தவறு..
இது பெரும் தவறு..
🏻உங்களிடம் மாற்றுமதத்தைப் பற்றி கேட்டால் மட்டும் அதற்கு விளக்கம் சொல்லுங்கள்..
🏻வாதத்தை மட்டும் கண்ணியமாக எடுத்து வையுங்கள். அது தவறாகவே இருந்தாலும் அதை இழிவாக பேச வேண்டாம்..
🏻நீங்கள் அவர்களின் மதத்தை இழிவாகப் பேசினால், அவர்கள் அறியாமல் அல்லாஹ்வை இழிவாகப் பேசுவார்கள்..
🏻உங்கள் வாதங்களை பார்த்து எது சரி, எது தவறு என மக்கள் புரிந்து கொள்ளட்டும்..
🏻ஆதாரமில்லாத ஹதீஸ்கள், பத்து பேருக்கு சலவாத்தை Forward செய்தால் நூறு நன்மை, ஒரு கதை சொல்லி அதை இரவுக்குள் ஏழு பேருக்கு Forward செய்தால் நல்ல செய்தி வரும், போன்ற செய்திகளை நீங்கள் பார்த்தால் உடனே Delete செய்யவும். அனுப்பியவரையும் கண்டிக்கவும்..
ஏனெனில்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்; முகீரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி(1291)
ஷஹீஹ் புகாரி(1291)
🏻இது எதுவுமே நபிகளார் நமக்கு கற்றுக் கொடுத்ததல்ல..
மேற்கூறியவற்றுடன்.. பொதுவாகவே எந்த செய்தியாக இருந்தாலும் அதை ஆராயாமல் மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள்..
மேற்கூறியவற்றுடன்.. பொதுவாகவே எந்த செய்தியாக இருந்தாலும் அதை ஆராயாமல் மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள்..
🏻உங்களால் முடிந்தால் அவற்றை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கவும்..
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
Comments