அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஓஸோன் தெர
« on: August 08, 2014, 08:59:33 PM »
|
இருபது
பிளஸ்சிலேயே இளமை விடைபெறுகிறது. முப்பதின் தொடக்கம், நோய்களின்
தொடக்கமாகவும் இருக்கிறது. நாற்பதில் நமக்கே நம்மை பிடிப்பதில்லை.
ஐம்பதில் ஐம்புலன்களும் அடங்கி ஒடுங்குகிறது. இப்படி ஒவ்வொரு வயதிலும் வயதுக்கு
மீறிய பிரச்னைகளுடனேயே கழிகிறது பலரின் வாழ்க்கையும். என்னதான் ஆரோக்கியமான உணவு, அவசியமான
உடற்பயிற்சிகளை எல்லாம் பின்பற்றினாலுமே, நாம் வாழும்
சூழலில் பொதிந்து போன மாசு, நம்மை சும்மா
விடுவதில்லை. குடிக்கிற தண்ணீரிலிருந்து சுவாசிக்கிற காற்று வரை சகலத்திலும்
மாசு... ஒரு பக்கம் உள்ளுக்குள் மாசை வளர்த்துக் கொண்டே, இன்னொரு பக்கம்
ஆரோக்கியத்துக்காக பிரயத்தனப்படுவது எப்படி சரியாக இருக்கும்?
சரி...
என்னதான் செய்வது என்கிறவர்களுக்கு ஓஸோன் தெரபி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் தெரபியை
தீர்வுகளாகச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.
வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் பிரபலமாக இருக்கும் இந்த சிகிச்சைகளை இங்கே
அறிமுகப்படுத்தி, பலன்களைக் கண்கூடாகப் பார்க்கிற அனுபவங்களுடன் பேச ஆரம்பிக்கிறார்
அவர்.‘‘பிராண வாயுவான
ஆக்சிஜனோட அளவு இன்னிக்கு ரொம்பவே குறைஞ்சு போச்சு. நாம
சுவாசிக்கிற ஆக்சிஜனானது, நுரையீரலுக்குள்ள போய், அங்கேருந்து
உடம்புல உள்ள ரத்த நாளங்கள் வழியா எல்லாப் பகுதிகளுக்கும் போகும். ஆக்சிஜன்
சப்ளை குறையும் போது, உடம்புல உள்ள செல்கள் வீரியமிழக்கிறதும், அதன் விளைவா
பலவித நோய்கள்
தாக்கறதும்
நடக்குது.
நம்மோட
சுற்றுச்சூழல்ல ஓஸோன் அளவும் குறைஞ்சிட்டு வருதுனு கேள்விப்படறோம். ஓஸோனை நாம
சுவாசிக்க முடியாது. அதை மருந்து வடிவுல உடலுக்குள்ள
செலுத்தி, அதுலேருந்து ஆக்சிஜனை பிரியச் செய்து, உடலோட
பாகங்களுக்கு அனுப்பற சிகிச்சைதான் ஓஸோன் தெரபி.
ஓஸோனை O3னு சொல்றோம். அதை
சலைன் வாட்டர்ல கலந்தா, உடனே கரைஞ்சிடும். அதோட வீரியம் வெறும் 20 நிமிடங்கள்தான்.
அதை
நரம்புல
ஊசி மூலமா உடம்புக்குள்ள செலுத்தறபோது, O3யானது உள்ளே போய்
O2 ஆயிடும்.
மிச்சமுள்ள ஒரு ளிவானது உடம்புல உள்ள பாக்டீரியா, வைரஸ், ஃபங்கஸ்னு அத்தனை கிருமிகளையும் அழிக்கும். செல்களுக்கு
போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறபோது அதெல்லாம் புத்துணர்வு
பெறுது.
ஓஸோன் தெரபியை
சலைன் வாட்டர் மூலமா மட்டுமில்லாம, சம்பந்தப்பட்டவங்களோட ரத்தத்தை எடுத்து அதுல கலந்தும்
செலுத்தலாம். 250 மி.லி. அளவு ரத்தத்தை வெளியே எடுத்து, அதுல ஓஸோன்
கலந்து மறுபடி அவங்க உடம்புக்குள்ளே அனுப்புவோம். ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு, ஹீமோகுளோபினுக்குள்ள
இருக்கிற ஆக்சிஜனையும் செறிவூட்டி, அதை புத்துணர்வு பெறச் செய்யும். இதே சிகிச்சையை 2 லிட்டர் ரத்தம்
வரைக்கும் எடுத்தும் செய்யலாம். அது அவங்கவங்களோட தேவை மற்றும்
பிரச்னைகளைப் பொறுத்தது.
நன்றி
Comments