நியாயமற்ற உளறல்களுக்கு நியாயமான பதில்கள்
உளறல் : 1. அறிமுகவுரையாற்றிய அறிமுகமற்றவரிடம் சில கேள்விகள் !
பதில் : அறிமுகம் இல்லாதவர் என்று சொல்லும் நீ - தலைவர் இனாயத்துல்லாஹ் சவூதிப்பிறை துணைத்தலைவர் நான் - என்று எழுதியதன் மூலம் நான் வடிகட்டிய பொய்யன் என்பதை நிரூபித்துள்ள்ளாய் . தக்வா பள்ளியின் துணைத் தலைவர் என்று உனக்கே அறிமுகமாகி இருக்கையில் மற்றவருக்கு அவரைத் தெரியாதோ ?
உளறல் : 2. மொட்டை நோட்டீஸ் போட நாங்கள் ஒன்னும் பொட்டை இல்லை.
பதில் : மொட்டை நோட்டீஸ் என்பதன் பொருள் பொருளற்ற நோட்டீஸ் எழுதும் போது மஸ்ஜிதுர் ரஹ்மான் பெயரை போட துணிவில்லாமல் வார்டு பெயரை பயன்படுத்தி அதன் பின் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள் ? என்பதுதான். நாங்கள் கண்ணுள்ளவர்கள்தான் . நீங்கள்தான் இதைக் கூட புரிந்து கொள்ளாத மூளையற்ற மூடர்கள் .
உளறல் : 3. தவ்ஹீத் ஜமாத் ஒருநபரைப் பற்றி பேசிட்டா உடனே பார்த்தீர்களா? இவர்கள் இப்படித்தான் தனிநபரை விமர்சனம் செய்வார்கள் னு சொல்றது நேற்று நீ வார்த்தைக்கு வார்த்தை சம்சுல் லுஹா அவர்களைப் பற்றி தானே பேசின இது தனிநபரை சாராதா? ஏன்டா உனக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
பதில் : தனி நபர்களை விமர்சிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு நீங்கள் பைலா போட்டு விட்டு பின்னர் அதை மீறி பழைய குருடி கதவை திறடி என்று விமர்சிக்கும் உங்களை இடித்துரைக்கத்தான். நீ விமர்சனம் பண்ணு. அதுதான் உன் வேலை என்று உன்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். பைலா என்ற பெயரில் அப்பாவிகளை ஏன் ஏமாற்றுகிறாய் என்பதுதான் எங்கள் கேள்வி
உளறல் : 4. சென்ற மேடையில் சம்சுல் லுஹா வை விவாதத்திற்கு அழைத்தேன் அவர் வரவில்லை வரவில்லை னு சத்தம் போடுரியே! நீ கூப்பிட்ட அடுத்த வாரம் சகோ.அப்துல் கரீம் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தாரே! வந்தியா நீ?
பதில் : அட மடையா? நம்ம ஊரில் பிறையைப் பற்றி மடத்தனமாக விமர்சித்து மைக் பிடிப்பவர் லுஹா தான். அவரைத் தான் கதாநாயகனாக பார்கிறீர்கள். உங்கள் கதானயகனின் கதறலை ஒடுக்கி விட்டால் காரியம் முடிந்து விடும். அதற்குத்தான் லுஹாவின் கருத்தற்ற கதறலை ஒடுக்க அழைக்கின்றோம் . அப்துல் கறீம் நேற்று முளைத்தவர் . வெகுஜன முஸ்லிம் மக்களுக்கு அவரைத் தெரியாது. நான் தெரியாமல் கேட்கிறேன். லுஹா ஆலிமை ஏன் அனுப்ப மறுக்கிறீர்கள் ? மெகா போன் பேசுபவனுக்கு இருக்கும் திறமை கூட மேலாண்மை குழு தலைவருக்கு இல்லையா? மேலாண்மை குழு தலைவர் ஏன் எந்த விவாதத்திற்கும் வருவதில்லை ? மேடையில் பி ஜே சொன்னதை சொல்ல மட்டும்தான் அவருக்குச் சொல்லத் தெரியுமோ ?
உளறல் : 5. உன்னை மாதிரி போன மீட்டீங்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அந்த கேள்விய அப்டியே விட்டுட்டு வேற கேள்விக்கு போறவங்க நாங்க இல்லை உன்னுடைய கேள்விகளுக்கு வரிக்கு வரி பதில் சொல்வோமே தவிர ஓட மாட்டோம்.
பதில் : நாங்கள் எந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி இருக்கின்றோம்? உங்களின் மடத்தனமான, வழிகெட்ட ஹதீஸ் மறுப்புக் கொள்கையால் சைபுத்தீன் ரஷாதிக்கு கூட வலுவான களம் அமைத்துக் கொடுத்த அதி புத்திசாலிகலாகிய நீங்கள் வரிகக்கு வரி பதில் சொல்லிட்டாலும் ? அச்த்தியவாதி ஜமாலியைக் கூட சமாலிக்கத் தெரியாதவர்கள்தானே நீங்கள். உங்கள் விவாதங்களை எடிட் செய்யாமல் வெளியிட முடியுமா?
உளறல் : 6. தலைவர் இனாயத்துல்லாஹ் சவூதிப்பிறை துணைத்தலைவர் நான் கணிப்பு பிறை நாங்க வேற வேற நாட்கள்ல பெருநாள் கொண்டாடுவோம் உனக்கு என்ன னு கேட்கிறியே! எங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்பா! உன் அப்பாவித் தொண்டர்களுக்கு பதில் சொல்லு.
பதில் : எங்களுக்கு அப்பாவி தொண்டர்கள் கிடையாது அதனால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. உன்னைப் பார்த்தால்தான் எனக்கு அப்பாவியாகத் தெரிகின்றது . அதனால் உனக்குச் சொல்கின்றேன் கேட்டுக் கொள் . தலைவர் ஒரு நாள் பெருநாள் கொண்டாடவும் மற்றவர்கள் ஒருநாள் பெருநாள் கொண்டாடவும் எங்களுக்கு சிந்தித்து செயல் பட சுதந்திரம் இருக்கின்றது. உனக்கு இருக்கின்றதா ? இல்லை . அப்படி நீ செய்தால் அடுத்த விநாடி உன் அமைப்பில் நீ இருக்க முடியாது. உன் ஜமாத்தின் காஜி முதலில் ஒரு நாளில் பெருநாளை அறிவித்து விட்டு பின்னர் தமிழ்நாடு காஜி மறுநாள் பெருநாள் என அறிவிக்க இணை கற்பிக்கும் காஜியின் அறிவிப்பை ஏற்று அந்நாளில் பெருநாள் கொண்டாடுவது உங்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா ? இதுதான் உங்களின் கொள்கை இலட்சணம் குருட்டு தக்லீத் . ஜகாத் கொடுத்தால் ஏழை ஆகிவிடுவான் என்று பீ ஜே சொன்ன போது மற்றவர்கள் சொல்லி அவர் திருத்தி கொண்டார் அப்போதும் லுஹா உட்பட உங்கள் அமைப்பின் அறிஞர்கள் வாய் மூடிய மௌனிகளாக இருந்தார்களே அப்படி பட்ட அவமனகரமான நிலை எங்களுக்கு இல்லை அல்ஹம்துலில்லாஹ் .
உளறல் : 7. உனக்குத் தேவை கேட்ட கேள்விக்கு பதில் அதை யார் சொன்ன என்ன?
பதில் : எங்களுக்கு தேவை பதில் மட்டும் அல்ல மேடையில் உளருபவர்களை அடக்குவதும் தான்
உளறல் : 8 யாராக இருந்தாலும் தன் பொண்டாட்டி பத்தினியாக இருக்கனும்னு தான் விரும்புவான் நீ யார் கூட வேணும்னாலும் ____________ ஆன எனக்கு பொண்டாட்டியா இருன்னு சொல்றது எதை காட்டுகிறது என்னுடைய கொள்கைக்கு அளவுகோல் நீ தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிரானவனாக இருக்கனும் அந்தத் தகுதி மட்டும் போதும்.
பதில் : எங்கள் மனைவிமார்கள் பத்தினி யாக இருக்க வேண்டுமென்பதால்தான் நாங்கள் மஹ்ரமான யாருடனும் அனுமதிக்க படாத பயண தூரத்திற்கு நாங்கள் அனுப்புவதில்லை ஆர்பாட்டத்தின் பெயரால் நீங்கள் அனுப்புகிறீர்கள் சரியா? உங்கள் ஜமாத்தின் குருட்டு கொள்கையை நாங்கள் மட்டும் எதிர்க்கவில்லை உலகமே எதிர்ப்பதை நினைவில் கொள்.
உளறல் : 9 சரிப்பா நீ சொல்வது சரியான கொள்கை தானே நான் தற்போது தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வெளியேறி உன்னுடைய கொள்கைக்கு வந்தால் தலைவர் இனாயத்துல்லாஹ் சவூதிப்பிறைதான் சரியானதுனு சொல்வார் நீ கணிப்புப் பிறை தான் சரியானதுனு சொல்வ இன்னும் மற்ற மற்ற நிர்வாகிகள் என்ன சொல்வாங்களோ? இப்ப நான் எதன் படி நடக்கனும்.
பதில் : யாரையும் கண்மூடி பின்பற்றாமல் குரான் ஹதீஸை பின்பற்றுங்கள் என்று கூறுவோம்
உளறல் : 10 கொள்கையில் ஒருவனுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவருக்கு உரிய விளக்கத்தை அளிப்போம் அதிலும் திருப்தி அடையவில்லை என்றால் அவர் ஏதேனும் நிர்வாக பொறுப்புகளில் இருந்தால் அந்த விஷயத்தில் அவர் தெளிவு பெறும் வரை பொறுப்புகளில் இருந்து நீக்குவோமே தவிர ஜமாத்திலிருந்து வெளியே போ என்று எவரை குறிப்பிட்டோம் சொல். நான் பொறுப்பில் இருந்தால் தான் கொள்கையில் இருப்பேன் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஜமாத்திலிருந்து வெளியே சென்று தனி இயக்கம் தொடங்கினால் அதற்கு சம்சுல் லுஹா காரணமா?
பதில் : உரிய விளக்கத்தை தரக்கூடிய அறிஞர்க்கே (அப்பாஸ் அலி ) சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் ?
உங்கள் பார்வையில் உலக அறிஞர்களுக்கு முரண்படும் பீ ஜே யின் விளக்கம் தான் உரிய விளக்கம் என்றால் அது தனி மனித வழிபாடு இல்லையா தக்லீது இல்லையா. தனி மனித வழிபாடுகளை பற்றியும் தக்லீதை பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருகின்றது ?
அறிவுள்ளவனுக்கு இந்த பதில் போதும் என நினைக்கின்றோம். உனக்கு போதாது என்றால் மீதமுள்ள உனது உளறல்களுக்கும் பதில் தர தயாராக இருக்கின்றோம். முஸ்லிம்களே தனி மனித வழிபாட்டை சிரமேற்று அல்லாஹ்வின் தூதரின் ஹதீஸை பொய்யாக்கும் இந்த அறிவீலிகளின் விசயத்தில் எச்சரிக்கையோடு இருந்து முஸ்லிம்களாகவே மரணிக்க உறுதிபூண்டு செயல்படுவீர்.
Comments