சரத்குமார் பேசி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தள்ளுபடி செய்த மூன்றரை கோடி ரூபாய்
91 76676 60550 shajahan
கூத்தாடிகள் சங்கத்திற்க்கு நாளை தேர்தல் என்பதால் இரண்டு அனியாக பிரிந்து ஒருவரை ஒருவர் திட்டுவது அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பாகியது.
என்னதான் திட்டுகிறார்கள் என்று பார்ப்போமே என்று கொஞ்ச நேரம் பார்த்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்தேன்.
இதில் சரத்குமாரை ஆதரித்து பேசிய சேரன் சரத்குமாரை புகழ்வதற்க்காக ஒரு உண்மையை போட்டு உடைத்தார்.
இதுதான் நமக்கு அதிர்ச்சியை தந்தது இதை மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்
நடிகர் சங்கம் ஐந்து கோடிரூபாய் கடனில் இருந்ததாகவும் அந்த கடனை அடைக்க அனைத்து நடிகர்களும் சேர்ந்து திரட்டிய நிதி ஒன்னரைகோடி ரூபாய் என்றும் மீதி மூன்றரை கோடி ரூபாயை சரத்குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேங்க் மேனேஜரிடம் பேசி தள்ளுபடி செய்யவைத்தார் என்கிறார்.
சாதரன மனிதன் ஆயிரம் இரண்டாயிரம் விவசாயத்திற்க்காக கடன் கேட்டால் ஆயிரம் செக்யூரிட்டி கேட்கும் அரசுவங்கி நடிகர் சங்கத்திற்க்கு ஐந்துகோடி ரூபாயை எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் எப்படி கடனாக கொடுத்தது?
ஒரு நடிகர் ஒரு படம் நடிக்க 100 கோடிவரை சம்பளம் வாங்கி நடிக்கும் அந்த சங்கத்திற்க்கு அரசு வங்கி கடன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அப்பாவிகள் ஆயிரம் இரண்டாயிரம் கடனை கட்டாவிட்டால் வட்டிக்கு வட்டி போட்டு வீட்டை ஜப்தி பன்னும் வங்கி நடிகர் சங்கத்திற்க்கும் மட்டும் ஏன் தள்ளுபடி செய்தது.?
சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருப்பதால் அவரின் சொத்தை ஜப்தி செய்து பனத்தை வசூல் செய்யாமல் அவர் சொன்னார் என்பதற்க்காக அரசு பணத்தை தாரைவார்பது எந்த வகையில் நியாயம்?
நடிகர்கள் ஒன்னரை கோடி வசூல் செய்ததுகூட துபாயில் போய் குத்தாட்டம் போட்டு மக்களிடம் வசூல் செய்த பனம்தான்
கோடி கோடியாக சம்பளம் வாங்கியும் ஒரு ரூபாய்கூட சொந்த காசை போடாமல் பேங்கிர்க்கு சங்கு ஊதியது எந்த வகையில் நியாயம்?
நடிகர் என்ன எல்லைபாதுகாப்பு படையினரா?
அவர்கள் இல்லாவிட்டால் நாட்ட்டின் பாதுகாக்க இயலாதா?
என்ன முக்கியத்துவம் கருதி இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது?
இதுபோன்ற நிகழ்வுகளை மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் பொது நல வழக்குகள் சம்மந்த பட்ட வங்கியின் மீது தொடுக்க வேண்டும்.
உனவுக்காக தன்னை வருத்தி சேற்றில் உழைக்கும் உழைப்பாளிக்கு உதவி கிடைப்பதில்லை
சதையைகாட்டி சம்பாரிக்கும் கூத்தாடிகளுக்கு நம் பனத்தை தாரைவார்க்கிறார்கள்.
மக்களிடம் வட்டிக்கு வட்டி போட்டு வசூல் செய்யும் பனத்தை கூத்தாடிகளுக்கு வாரிவழங்கும் பொதுவுடமை வங்கிகளை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
Comments