அல்லாஹ்வின் தூதரை அன்பின் தூதராக முன்னிறுத்துவோம் !


இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம், என்று பொருள்! ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் என்றால் முரடர்கள், வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என உலகம் முழுதும் உள்ள யூத சியோனிச பார்ப்பன ஊடகங்களால் பரப்பப்பட்டு   இந்த மார்க்கம் வன்முறை மார்க்கம் எனும் அவப் பெயர் சுமந்து நிற்பதற்கு நாமும் ஒரு காரணம் ! 
ஆம்!  சிலுவைபோர்களிலும்,   இரண்டு உலகப் போரிலும், ஜப்பானிலும், வியட்நாமிலும் இராக்கிலும் ஆப்கானிலும் பலகோடி மக்களை கொன்று குவித்த கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் ஏசுவை முன்னிறுத்தி தங்கள் மதத்தை அன்பின் மதமாக உருவகப்படுத்த முடியுமென்றால்,
பர்மாவிலும் இலங்கையிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த  பவுத்த பேரினவாதிகளால் புத்தரை வைத்து அமைதியின் மதமாக உறவாகப் படுத்த முடியும் என்றால்
தான் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மட்டுமே நடத்திய போர்களில் எண்ணிச் சொல்லிவிடும் அளவுக்கே உயிர்சேதம் 
எனும் அளவுக்கு  வன்முறை தவிர்த்த   நன்முறையாளரை

தன்னையும் தன தோழர்களையும் துன்புறுத்திய,  கொலை செய்த, ஊர் துறக்கச் செய்த கொடியவர்களை வெற்றி கொண்டு  மக்காவில்  கத்தியின்றி ரத்தமின்றி வெற்றி வீரராக நுழைந்த போது கூட நான் எப்படி உங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் ? என எதிரிகளைக்கூட தன் கருணையால் வென்ற வீரத் திருமகனை
போருக்கான நெறிமுறை வகுக்க ஐநா போன்ற அமைப்புகள் இல்லாத காலத்திலேயே போருக்கு செல்லும் தோழர்களிடத்தில், '' இறந்த எதிரிகளின் அங்கங்களை சிதைக்க கூடாது  குழந்தைகளை, பெண்களை, வயதானவர்களை, மதகுருக்களை, சரணடைந்தோரை   கொல்லக் கூடாது!  சித்திரவதை கூடாது   ! நீர்நிலைகள், தாவரங்கள் பயிர்பச்சைகளை அழிக்கக் கூடாது !   உணவுக்காகவே அன்றி விலங்குகளைக் கொல்லக் கூடாது ! என்று விதிகளை வகுத்து நெறிமுறைகளை வகுத்தளித்த பெருமகனை
அன்பின்  உருவம், அமைதியின் வடிவம், கருணையின் பிறப்பிடம் காருண்ய நபிகளாரை சமாதானத்தின் தூதராக நாம்  அறிமுகப் படுத்த தவறியதன் விளைவு இன்றைக்கு இந்த அவப்பெயரை சுமந்து நிற்கிறோம் ! 
அல்லாஹ்வின் தூதரை அன்பின் தூதராக முன்னிறுத்துவோம் !
இஸ்லாத்தை அமைதி மார்க்கமாக அறிமுகப்படுத்துவோம் ! 
முஸ்லிம்கள் முரடர்கள் எனும் முகத்தை மாற்றுவோம்!  உண்மை இஸ்லாத்தை எடுத்தியம்பி மக்களின் மனங்களை வெல்வோம் ! அன்பால் அழைப்பால்  இந்த அகிலத்தை வெல்வோம்!

-செங்கிஸ்கான்
[நெல்லை ஏர்வாடியில் வியாழனன்று நடைபெற்ற  மார்க்க விளக்க கூட்டத்தில்  எனது உரையில் இருந்து ...]

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن