‎தவறுகளை_நியாயப்படுத்தலாமா ?

நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர், நீங்கள் செய்தவைப் பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் 49:6 ஜாண் ட்ரஸ்ட்)

வாட்ஸப்பில் வந்தது
க் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்". திருக்குர்ஆன் (49:6)

ஆனால் பரபரப்பு செய்திகளைப் பரப்புவதில் இங்கே ஒரு போட்டியே நடக்கிறது. யாராவது ஒரு போலீஸ்காரர் அல்லது அதிகாரி முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி இழைத்துவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அல்லது அவரை சரிசெய்ய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு பதிலாக, காவித்துறையே... எனத் தொடங்கி மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் களத்தில் பிரச்சனையைக் கையாளக் கூடியவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு, பிரச்சனைகள் திசை மாறுகின்றன. நீதியைக் கேட்க வேண்டிய இடத்தில், மன்னிப்பு கேட்கக்கூடிய தலைகீழ் நிலை ஏற்படுகிறது. இப்படி அதிகாரிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படுவது நியாயம்தானா?

காவல்துறை அதிகாரிகளை எல்லை மீறி விமர்சிக்க கூடாது. அதில் ஒரு ஜனநாயக மரபு தேவை. அவர்கள் பணிபுரியும் இடங்களில் எல்லாம் சமுதாயத்திற்கு எதிரான மனநிலையோடு பணிபுரியும் சூழலை உருவாக்கி விடக்கூடாது. அவர்களை எச்சரித்து ஒழுங்குபடுத்த வேண்டும். என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

#‎தவறுகளை_நியாயப்படுத்தலாமா ?

முகநூலில் பதிவிடும் கருத்துக்களில் நடுநிலை இருப்பதில்லை. நளினம் இருப்பதில்லை. மதிநுட்பம் இருப்பதில்லை. நாகரீகம் இருப்பதில்லை. சாதாரண விவாதங்கள் சண்டைகளாக மாறுகின்றன.

ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டால், ‘அந்த ஆர்.எஸ்.எஸ்.காரன் அப்படி எழுதுகிறான். அதனால் அவனுக்கு அப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

தங்கமும், பித்தளையும் சமமாகுமா? ஓடையும், சாக்கடையும் ஒன்றாகுமா? நீங்களும் அவர்களும் ஒன்றா? அவர்கள் செய்யும் அதே தவறை நீங்களும் செய்யலாமா?

அந்த ஆர்.எஸ்.எஸ்.காரரை அழகிய கருத்துக்களால் வெல்லத் தெரியவில்லை. ஆணித்தரமான வாதங்களால் தனிமைப்படுத்த தெரியவில்லை. அவரை பொதுமக்களுக்குமத்தியில் அம்பலப்படுத்த தெரியவில்லை. மாறாக காது கூசும் வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பதிவுகளைப் பார்க்கும் பொதுவானவர்கள், நமக்கு ஆதரவாகப் பேசும் நிலை மாறி ‘இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது’ என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

"நபியே... மென்மையையும், மன்னிக்கும் தன்மையையும் மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!" என திருக்குர்ஆன் (7:199) இறைவன் அறிவுறுத்துகிறான்.

இதைப் புரியாத சில அறிவீனர்களின் ‘கருத்து அராஜகத்தால்’ முஸ்லிம் சமுதாயத்தின் மென்மைத்தன்மையும், மன்னிக்கும் பெருமனமும் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

#‎விமர்சனமும்_நாகரீகமும்

விமர்சனங்களில் பொறுப்புணர்வு தேவை. அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் படுகேவலமாக விமர்சிக்கிறார்கள். இது சமூக நல்லிணக்கத்திற்காக நமது முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழிகாட்டலாகும். இது பிடிக்கவில்லையென்றால் நாகரீகமான கருத்துகளை எடுத்து வைக்கலாம். ஆனால் இழிவான வார்த்தைகளில் விமர்சனங்கள் வருகின்றன. அந்த தலைவர்களிடமும் அதன் தொண்டர்களிடமும் எத்தகைய எதிர்விளைவுகளை மனதில் ஏற்படுத்தும் என்பதை யோசிக்கவில்லை. நபிகள் நாயகம் பின்வருமாறு கூறினார்கள்:-

"ஒரு இறை நம்பிக்கையாளர் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள மாட்டார். கரடுமுரடாக பேசமாட்டார்" என்றார்கள்.

ஒருவர் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு கேள்வியை வைத்துவிட்டால், அவர் கடுமையாக வசைபாடப்படுகிறார். அதற்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பதிலளிக்க முயல்வதில்லை. அதுபோல சல்மான்கான், குஷ்பு போன்றோர் முஸ்லிமா? இல்லையா? என்ற தேவையற்ற விவாதம் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. அலட்சியப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

பாஜகவின் தலைவர்களின் வன்முறைக் கருத்துகளுக்கு பதிலடி என்ற பெயரில் அவர்களை விலங்குகளோடு ஒப்பிடுவதும், கேவலமாக சித்தரிப்பதும் எத்தகைய நியாயம்? கோபம் அறிவை மறைக்கிறதா? அவர்கள் செய்யும் அதே இழிவான வழிமுறைகளை நாமும் செய்ய வேண்டுமா?

அக்கட்சியின் பெண் தலைவர்களின் வன்முறைக் கருத்துக்களை நாகரீகமாக கண்டிக்கலாம். ஆனால் அவர்களை தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்தலாமா? கேவலமாகத் திட்டலாமா? 

பொங்கும் உணர்ச்சி மனசாட்சியை வெல்லலாமா?

இது சமுதாயத்திற்கு எப்படி நன்மையைப் பெற்றுத்தரும்? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இப்படியா எதிர்வினையாற்றச் சொன்னார்கள்? கோபம் அறிவை மறைக்கலாமா?


‘அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள்; மக்களை மன்னிப்பார்கள்’ என இறைவன் திருக்குர்ஆனில் (3:134) அறிவுறுத்துகிறான்.

‘சண்டையில் வெல்பவன் அல்ல வீரன்; கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்’ என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். பெரும்பாலும் இதுபோன்ற பொறுப்பில்லாமல் செயல்படுபவர்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு