ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மரணம் - த.மு.மு.க, ம.ம.க அறிக்கை

அனைவராலும் விரும்பப்பட்ட பெருமகனை நாடு இழந்துவிட்டது!
அப்துல் கலாம் மறைவுக்கு தமுமுக இரங்கல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
இந்திய நாட்டின் பெருமைமிகு மூத்த குடிமகன் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 
இந்தியாவின் ஏவுகணை இயலின் தந்தையாக அணு விஞ்ஞானத்தின் மூலம் நம்நாட்டை சர்வதேச அளவில் தலைநிமிரச் செய்த, துணிச்சலும் மிகுந்த அறிவாற்றலும் மிக்க அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்தியர் ஒவ்வொரு வருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
ஒவ்வொரு நொடியிலும் எதிர்காலத் தலைமுறை குறித்து கவலைப்பட்டார். இளம் தலைமுறையினருக்காக இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கல்வி கற்பிக்க பயணம் செய்தார். கண் துஞ்சாது கருமமே கண்ணாக வாழ்ந்த அறிவியல் விஞ்ஞானியாக மட்டுமல்ல சமூக விஞ்ஞானியாகவும் விளங்கினார். துளியும் அரசியல் மாறுபாடு, விருப்பு வெறுப்பற்ற மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார்.
மேலும், மதச்சார்பற்ற நாட்டின் முதல் குடிமகனாக செயல்பட்டு அனைத்து மதத்தவராலும் மதிக்கப்படுபவராக, பதவியின் போதும் அதற்குப் பின்னும் நடுநிலையாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டு, எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று மாணவர்களிடம் சொல்லி கனவு காணச் சொன்னவர். இன்றும் மாணவர் களுடன் கலந்துரையாடிய நிலையில்தான் மரணம் அடைந்துள்ளார்.
அவரின் மறைவால் வாடும் இந்திய நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக

மமகவின் நிகழ்ச்சிகள் ரத்து 
(மமக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் அறிக்கை) :
முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி இன்றும் , நாளையும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது .
தற்போது ராமநாதபுர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பேரா. M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் , ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இறுதி சடங்குகளை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் ,அப்துல் கலாமின் குடும்பத்தினர் ஆகியோரோடுதொடர்ந்து ஆலோசித்து வருகிறார் .
நாளை ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள உடல் அடக்க இறுதி நிகழ்ச்சிகளில் மமகவின் சட்டமன்றக்குழு தலைவரும் ,ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான பேரா .M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களும் , இணைப் பொதுச் செயலாளர் S.S. ஹாருண் ரசீது அவர்களும் , மாநில அமைப்புச் செயலாளர்கள் மொவுலா நாசர் , முகைதீன் உலவி, மன்னை . செல்லச்சாமி ,ராவுத்தர்ஷா ஆகியோரும் பங்கேற்க விருக்கிறார்கள் .
இவண் 
M. தமிமுன் அன்சாரி ,
பொதுச் செயலாளர் ,
மனிதநேய மக்கள் கட்சி . 
29-07-2015

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.