கேக்குறவன் கேனையனா இருந்தா நம்புங்க...‎தவறுகளை_நியாயப்படுத்தலாமா ?100% உண்மை ? தான் நம்புங்க....!


ஜூலை 28 போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்?
மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் புகுந்து மிருகவெறியாட்டம் போட்ட காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 28 போராட்டத்தை நாம் அறிவித்திருந்தோம். இப்போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டு அதிக நாட்கள சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்படலாம் என்பதால் பெண்கள் வர வேண்டாம் என்றும் முடிவு செய்தோம். போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் சகோதாரர்களுக்கு இதை விளக்கி விட வேண்டும் எனவும் இதை எற்றுக் கொண்டு தயாராக உள்ளவர்களுக்கு போராட்ட முறை பற்றியும் இடம் பற்றியும் தெரிவிப்பது என முடிவு செய்திருந்தோம்.
ஆனால் நமது போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசரமாக உயர் நிலைக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் உறுப்பினர்கள் பின் வரும் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
ஆம்பூர் ஷமீல் பாஷாவை காவல் துறை அதிகாரி அடித்துக் கொலை செய்ததை ஒட்டி ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது. சமூக விரோதிகள் புகுந்து கத்தி அரிவாள் மற்றும் கற்களால் தாக்கியதில் பெண் காவலர்கள் உட்பட பல காவலர்கள் காயமுற்றனர். பொது மக்களும் தாக்குதலுக்கு உள்ளாயினர். பேருந்துகளும் போலீஸ் வாகனங்களும் சில கடைகளும் தீக்கிரையாயின.
ஒட்டு மொத்த அரசுக்கு விடப்பட்ட சவாலாக காவல்துறை இதை எடுத்துக் கொண்டது நமக்குத் தெரிய வருகிறது. தாக்கிய முஸ்லிம்களை ஏன் சுட்டுத்தள்ளவில்லை என்று காவல் துறை அதிகாரிகள் தமக்குள் பேசிக் கொள்ளும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் போராட்டம் நடத்தும் போது, விஷமிகள் ஊடுறுவி போராட்டக் காரர்கள் பகுதியில் இருந்து காவல்துறையினர் மீது கற்களை வீசலாம், அல்லது பொதுச் சொத்துக்களைத் தீயிட்டு கொளுத்தலாம், விஷமிகள் இப்படிச் செய்யாவிட்டால் முஸ்லிம்களைப் பழி தீர்க்க துடிக்கும் சில காவலர்கள் இதைச் செய்து விட்டு நம் மீது பழி போட்டு தடியடியைக் கடந்து துப்பாக்கிச் சூடுவரை நடத்தலாம். இது போல் நடந்தால் நம் மக்கள் எதிர்பார்க்காத விளைவுகள் ஏற்படும். ஆம்பூரைப் போல் முஸ்லிம்கள் எங்களைத் தாக்கினார்கள் என்ற பொய்யை உண்மையாகக் காட்டினால் அது தான் எடுபடக் கூடிய நிலை நிலவுகிறது. முஸ்லிம்களுக்காக யாரும் குரல் கொடுக்க முடியாத நிலையை இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
மேலும் இப்போராட்டம் இந்துக்களைத் தாக்குவதற்காக நடத்தப்படுகிறது என்று சங்பரிவார இயக்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் கலவரம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதை காவல் துறை கண்டு கொள்ளாது என்றும் ஊகிக்க முடிகிறது.
எனவே இந்த சூழ்நிலை மாறும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கூறினார்கள்.
நம் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் தாக்கிய மூன்று காவலர்களும் உதவி ஆய்வாளரும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மத்தியில் ஏற்கனவே நற்பெயர் எடுத்த அதிகாரியையும் உதவி ஆய்வாளராக போட்டுள்ளனர். இந்த நிலையில் காவல்துறையின் மூலம் போடப்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் என்று சொல்லி சேக் அப்துல் காதர் என்ற உதவி ஆய்வாளர் மாதவனை அழைத்து வந்ததாகவும், பள்ளிவாசல் என்று சொன்னவுடன் உடனே கீழே இறங்கி விட்டதாகவும் மாதவன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். மேலும் மாதவன் சொல்வது தான் சரி என்று சமுதாய துரோகிகளான தமுமுகவினர் பொது மக்கள் என்ற பெயரில் சாட்சியளித்துள்ளனர்.
உங்கள் சாட்சியத்தை விட உங்களுக்கு எதிரான முஸ்லிம்களின் சாட்சியம் அதிகமாக உள்ளதால் மாதவன் இதில் குற்றம் செய்யவில்லை என்று விசாரணைக் கமிஷன் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மாநில காவல் துறைத் தலைவர் அவர்கள் நம்மை அழைத்து மாதவனுக்கு எதிராக நீங்கள் கேட்டபடி கமிஷன் அமைத்தோம், அவர் பள்ளிவாசல் என்று சொன்னவுடன் உடனே இறங்கி விட்டார் என்று கூறிய பிறகு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மேல் நடவடிக்கை எடுத்துள்ளோம். மாதவன் இனி மேல் பொறுப்புடன் நடந்து கொள்வார். கமிஷன் அறிக்கைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்க இடமில்லை என்றும் இனி இது போல் எந்தப் பள்ளிவாசலிலும் நடக்காது என்று உறுதியும் அளித்தார், நீங்கள் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை நீங்கள் நடத்தினாலும் அதன் பிறகும் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்தார்கள். நாற்பது நிமிடங்கள் நம்முடைய குறைகளையும் சமுதாயத்துக்கு ஏற்பட்ட அச்சத்தையும் நாங்கள் விளக்கிய போது பொறுமையுடன் கேட்டு இனிமேல் இது போல் நடக்க விடமாட்டோம் என உறுதியளித்தார்.
டிஜிபி அவர்களைச் சந்தித்து விட்டு வந்த மாநிலப்பொருளாளர் கலீல் ரசூல், துணைப்பொதுச் செயலாளர் தவ்ஃபீக், மாநிலச் செயலாளர் யூசுஃப் அலீ ஆகியோர் இதை விளக்கினார்கள்.
சமுதாய துரோகிகள் பள்ளிவாசல் அவமதிப்பில் கூட சந்தோசம் கண்டு பொய் சாட்சியம் அளித்திருக்காவிட்டால் மாதவன் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் அவர்கள் விளக்கினார்கள்.
மாநில அளவில் அறிவிக்கப்பட்ட போராட்டமாக இருப்பதால் இந்த அசாதாரண சூழ்நிலையை செயற்குழுவில் வைப்போம். செயற்குழு உறுப்பினர்கள் இந்த சூழல் போராட்டத்துக்கு உகந்தது அல்ல என்று கருதினால் போராட்டத்தைக் கை விடுவோம். இல்லாவிட்டால் போராட்டத்தை நடத்துவோம்  என்று உயர் நிலைக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
அதன் படி செயற்குழு கூட்டப்பட்டு இந்த விபரங்கள் விளக்கப்பட்டன. இதன் பின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைவரும் இந்த சூழ்நிலை போராட்டத்துக்கு உகந்ததல்ல என்று வாக்களித்தனர்.
எனவே செயற்குழு முடிவின் படி தற்போது அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம்,
இப்படிக்கு
தவ்ஃபீக்
துணைப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தவறுகளை_நியாயப்படுத்தலாமா ?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.