சர்வதேசப் பிறை[ இரண்டு பேர் சாட்சி கூறினால் ஏற்றுக் கொள்வதற்]க்கான ஆதாரங்கள்.

🌙 மேற்கண்ட தலைப்பில் 919487770692 என்ற நம்பரிலிருந்து whats Appஇல் நாம் என்ற  குரூப் மூலம் வந்தது.
♦♦♦♦♦♦♦♦♦♦

1}:-⬇
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَأَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدِّثُونِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا ثَلَاثِينَ، وَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا وَأَفْطِرُوا(السنن الكبرى-2437)

அப்துர்ரஹ்மான் பின் ஸைத் ஷக்குடை(சந்தேகத்திற்குரிய) நாளில்  உரை நிகழ்த்தினார். அதில்
 அவர்  பின்வருமாரு கூறினார். நான் நபி(ஸல்) அவர்களது தோழர்களுடன் அமர்ந்துள்ளேன். அவர்கள் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை சொன்னார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'பிறை கண்டு நோன்பு பிடியுங்கள்! பிறை கண்டு நோன்பை விடுங்கள்! (பிறை காணுதலை அடிப்படையாக வைத்து) வணக்கம் செய்யுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (மாதத்தை) முப்பதாக முழுமைப்படுத்துங்கள்! மேலும் இரண்டு பேர் (பிறை கண்டதாக) சாட்சி கூறினால் (அதை) ஏற்று நோன்பு மற்றும் பெருநாளை அனுஷ்டியுங்கள்!அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸைத் நூல்: ஸுனனுல் குப்ரா 2437)

2}:-⬇
عَنْ عُمُومَةٍ لَهُ مِنَ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَصْبَحُوا صِيَامًا فِي رَمَضَانَ فَجَاءَ رَكْبٌ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوْهُ بِالْأَمْسِ، فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ يُفْطِرُوا بَقِيَّةَ يَوْمِهِمْ، فَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ
(السنن الصغير-1314)

(ஷவ்வாலின் தலைப்பிறை மறைக்கப்பட்டதால்) நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் ரமளானின்
 இறுதிப்பகுதியில் நோன்பாளிகளாக காலைப் பொழுதை அடைந்தார்கள். ஒரு பிரயாணக் கூட்டம் வந்து நேற்று பிறை கண்டதாக சாட்சி கூறினார்கள். அப்போது எஞ்சிய நாளில் நோன்பை விட்டு விட்டு அடுத்த நாள் காலை தொழும் திடலுக்கு செல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். நூல்: ஸுனனுஸ் ஸகீர் 1314)

3}:-⬇
عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ، فَقَدِمَ أَعْرَابِيَّانِ، فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا»، زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ،: «وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ(سنن أبي داود 2339)

ரமளான் மாத இறுதியில் (பிறை விடயத்தில்) மக்கள் சர்ச்சைப்பட்டனர். இரண்டு கிராமப்புறத்து அறபிகள் வந்து நேற்று மாலை பிறையைக் கண்டதாக நபி(ஸல்) அவர்களிடம் சான்று பகர்ந்தனர். எனவே நோன்பை விட்டு விட்டு அடுத்த நாள் காலை தொழும் திடலுக்கு செல்லுமாரு மக்களுக்கு நபி(ஸல் அவர்கள் மக்களுக்கு கட்டளை பிறப்பித்தார்கள். அறிவிப்பவர்: ரிப்யீ பின் ஹிராஷ் நூல்: அபூதாவுத் 2339
4}:-⬇
ﺍﻟﺼﻮﻡ ﻳﻮﻡ ﺗﺼﻮﻣﻮﻥ
ﻭﺍﻟﻔﻄﺮ ﻳﻮﻡ ﺗﻔﻄﺮﻭﻥ
ﻭﺍﻸﺿﺤﻰ ﻳﻮﻡ ﺗﻀﺤﻮﻥ
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
நீங்கள் நோன்பு நோற்கும் நாள்தான் நோன்பாகும், நீங்கள் நோன்புப் பெருநாள் கொண்டாடும் நாள்தான் நோன்புப் பெருநாள்,நீங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள் ...
நூல்:  திர்மிதி 697

5}:-⬇
ﺍﻟﻔﻄﺮ ﻳﻮﻡ ﻳﻔﻄﺮ ﺍﻟﻨﺎﺱ
ﻭﺍﻸﺿﺤﻰ ﻳﻮﻡ ﻳﻀﺤﻲ ﺍﻟﻨﺎﺱ
மக்கள் நோன்புப் பெருநாள் கொண்டாடும் நாள்தான் நோன்புப் பெருநாள்,  மக்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள் 
நூல் திர்மிதி:
மேலே உள்ளவை வாட்ஸ்அப்பில் வந்தவை கீழே பிறை சம்பந்தமான மற்ற வெளியீடுகள் கிளிக் செய்து பார்க்கவும்

ஹிஜிரி 1436 ரமழான் வந்து விட்டது. பிறை நோட்டீஸ்களும் வந்து விட்டன.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.