துபை அரசாங்கத்தால் கவுரவிக்கப்பட்ட தமிழக அறிஞர் ஷேக் முஹம்மது இக்பால் பாகவி, மதனி




வீல் சேரில் உட்கார்ந்து இருப்பவர்K.M.I.

DUBAI INTERNATIONAL HOLY QURAN AWARD, GOVERNMENT OF DUBAI, UNITED ARAB EMIRATES. என்ற துபை அரசாங்கத்தின் அமைப்பால் இந்த ஆண்டு தமிழக அறிஞர் ஷேக் முஹம்மது இக்பால் பாகவி, மதனி அவர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார். 40ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய பிரச்சாரப்பணி செய்தவர்.


K.M.I. என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் K. முஹம்மது இக்பால் அவர்கள். இவர் மணப்பாறையைச் சார்ந்தவர். வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மவுலவி பட்டம் பெற்று முஹம்மது இக்பால் பாகவி ஆனார்.

பிறகு சவூதி அரேபியா சென்று ஜாமியா இஸ்லாமியா மதினாவில் படித்து பட்டம் பெற்ற பின் முஹம்மது இக்பால் மதனி என்று அறியப்பட்டார்.

காயிதே மில்லத் என்று அழைக்கப்பட்ட முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப், சிராஜுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட ஆ.கா.அ. அப்துஸ்ஸமது ஸாஹிப், லிஸானுல் மில்லத், ஷம்ஷீரே மில்லத் என்று அழைக்கப்பட்ட M.A. அப்துல் லத்தீப் ஸாஹிப் போன்ற மு.லீக் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார்.

நபி வழியில் நம் ஹஜ் என்ற தலைப்பில் நுால் எழுதி காயிதே மில்லத் என்று அழைக்கப்பட்ட முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்களின் பாராட்டைப் பெற்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி, மூத்த தலைவர்களான M.H. ஜவாஹிருல்லாஹ் M.L.A, S.S. ஹைதர் அலி J.A,Q.H. முதல் அமீர் கமாலுத்தீன் மதனி போன்ற இன்றைய தலைவர்களுடனும் நெருக்கமான நட்பு உடையவர். 

'தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்என்ற பெயரில் குர்ஆன் மொழி பெயர்ப்பு 1943இல் வெளியாகி  இருந்தது. 1980களில் எம்.பி.க்களாக இருந்தவர்களின் முயற்சியால் ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமீ எனும் உலக முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்றது. எனவே சவூதி அரசின் நிதி தவி அதற்கு கிடைத்தது. தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களுக்கும் மதரஸாக்களுக்கும் இலவசமாக வழங்கினார்கள்.

சவூதி அரசே உலகம் முழுவதும் இலவசமாக வழங்க அதனை அச்சிட்டது. அதில் தவறு உள்ளதாக அறிந்த K. முஹம்மது இக்பால் மதனி அவர்கள் அதனை சுட்டிக் காட்டினார்கள். லட்சக்கணக்கில் அச்சிடப்பட்டதை வினியோகிக்காமல் கப்பலில் ஏற்றிய சவூதி அரசு.  நடுக்கடலில் இறக்கி விட்டது.

பிறகு ஷெய்ஹு  K. முஹம்மது இக்பால் மதனி அவர்களிடம் திரு குர்ஆனை மொழி பெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தது. சங்கைமிக்க குர்ஆன் கருத்துக்களின் மொழி பெயர்ப்பு எனும் பெயரில் K. முஹம்மது இக்பால் மதனி அவர்கள் மொழி பெயர்த்தார்கள்.  1992 முதல் சவூதி அரசு இலவசமாக வெளியிட்டு வருகிறது.

முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம் என்ற அரபி நுாலை மொழி பெயர்த்துள்ளார். இது 1988ஆம் ஆண்டு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய மாநாட்டில் வெளியிடப்பட்டது.  நபி வழியில் நம் தொழுகை, நபி வழியில் நம் ஹஜ், நபி வழியில் நம் ஜகாத் ஆகிய நுால்களும் 1988,89களில் ஷெய்கு  K. முஹம்மது இக்பால் மதனி அவர்கள் பெயரில் வெளிவந்துள்ளன.
சர்க்கரை நோய் அதிகமாக ஆகி கண் பார்வை இழந்த அவர்கள் 5 ஆண்டு காலமாக தாயகத்திலே இருந்து J.A.Q.H. என்ற அமைப்பின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரச்சாரப் பணி செய்து வருகிறார்.

யு...யில் பணி புரிந்த மதனிகளில் முஹம்மது இக்பால் மதனி அவர்கள் வித்தியாசமானவராக இருந்தார். யு...யில் பிரச்சாரம் செய்யவே சவூதி அரசு நியமித்து இருந்தது. எனவே யு...யில் மட்டும் பிரச்சாரம் செய்து விட்டு விடுமுறையில் தாயகம் வந்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது என அவர் இருந்து விடவில்லை.

அஹ்லே ஹதீஸ் சார்பாக மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும்  நடத்தக் கூடியவராக இருந்தார். துபை பாத்திமா பள்ளியில் அவர் செய்த பிரச்சாரத்தால் ஈர்க்கப்படவர்களைக் கொண்டு தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்கு வழி செய்தார்.

மதுரையில் இருந்து வெளி வந்த தவ்ஹீது என்ற மாத இதழ். இலங்கையில் நிஸார் குவ்வத்தி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த வான் சுடர் என்ற மாத இதழ். போன்றவற்றுக்கு பொருளாதார உதவி செய்தார்.

தமிழகத்தில் நிரந்தரமாக பிரச்சாரம் நடைபெற பத்திரிக்கை துவங்குவது. பிரச்சாரகர்களை நியமிப்பது என்று முடிவு செய்தார். சுலைமான் ஹாஜியார் என்று அழைக்கப்பட்ட கள்ளக் குறிச்சியைச் சார்ந்தவரை தலைவராகவும் பேட்மாநகர் முஹம்மது மீரான் அவர்களை செயலாளராகவும் மலர் குதுப் என்று அழைக்கப்பட்ட பொதக்குடியைச் சார்ந்தவைரை பொருளாளராகவும் கொண்டு ஜமாஅத் உருவானது. கவுரவ ஆலோசகராக K.M.I. இருந்தார்

இந்த ஜமாஅத்துக்கு இஸ்லாமிய எழுச்சி மையம் (I.A.C) என பெயரிடப்பட்டது. மேலப்பாளையத்திலிருந்து வெளி வந்த ரப்பானி மாத இதழ் ஆசிரியர் தீன் காஜா மைதீன் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டார் மலர் குதுப். அவர்களுக்கு சங்கரன் பந்தல் சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் பணிபுரிந்த மவுலவிகளிடமிருந்து பதில் வந்தது. மதரஸாவில் தரும் சம்பளத்தை நீங்கள் தந்தால் நாங்கள் தவ்ஹீது பிரச்சாரம் செய்கிறோம் என்று.

எனவே அவர்களை எழுத்தாளர்களாகவும் திருச்சி அபுஅப்துல்லாஹ் அவர்களை நிர்வாகியாகக் கொண்டு அந்நஜாத் என்ற மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. மதுரையிலிருந்து வந்த புரட்சி மின்னல் வாங்கப்பட்டு அல் முபீன் என்ற பெயரில் வந்தது. நிர்ப்பந்த நிலையில் அல் முபீன் ஆசிரியராக K.M.I. இருந்தார்கள்.
  
இன்றும் சவூதி அரசு அவரது மொழி பெயர்ப்பையே வழங்கி வருகிறது. வேறு ஒருவரின் மொழி பெயர்புக்கு சவூதி அரசு உதவி உள்ளதாக கூறுகிறார்கள். அவர்களோ இன்றும் விலைக்கு விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

துபை அவ்காபின் (வக்பு போர்டின்) தலைவராக ஷெய்கு அப்துல் ஜப்பார் அவர்கள் இருந்தவரை தேரா துபையில் உள்ள பாத்திமா பள்ளியை ஸெய்கு  K. முஹம்மது இக்பால் மதனி அவர்களின் முழு பொறுப்பில் கொடுத்து இருந்தார். யு.ஏ.இ.யில் முதன் முதலில் கியாமுல் லைல் தொழுகையை முதன் முதலில் இரவு 2 மணிக்குப் பிறகு நடத்திக் காட்டியவர் என்ற நன்மை அவருக்கு உண்டு.

துபை அவ்காபின் (வக்பு போர்டின்) தலைவராக ஷெய்கு ஈஸா அல்மானி வந்த பிறகு தேரா துபை பாத்திமா பள்ளியை விட்டு ஷெய்கு  K. முஹம்மது இக்பால் மதனி அவர்கள் வெளியேறினார்கள். ஷார்ஜாவிலுள்ள ரோலா பள்ளியில் தமிழ் மக்களுக்கான பிரச்சாரப் பணியை தொடர்ந்தார்கள். 


ஷேக் முஹம்மத் இக்பால் மதனி அவர்கள் மதீனாவில் படிக்கும் காலத்தில் ஜாமியா இஸ்லாமியா ஷேக் அப்துல் அஸீஸ் பின் பாஸ் அவர்கள் கட்டுபாட்டில் இருந்தது.

ஷேக் அல்பானி அவர்களும் , ஷேக் அப்துல் முஹ்சீன் அப்பாத் , ஷேக் ஷன்கீதி போன்ற பெரிய பெரிய உலமாக்கள் ஆசிரியர்களாக இருந்த காலத்தில் தான் ஷேக் முஹம்மத் இக்பால் மதனி அவர்கள் மதீனாவில் பயின்றார்கள். 

உசூலுல் பிஃஹ் ஷேக் அப்துல் முஹ்சின் அல் அப்பாத் அவர்களிடம் கற்றார்கள். தப்ஸீர் இமாம் ஷன்கீதி அவர்களிடம் கற்றார்கள். அகீதா கிதாபான ப்த்ஹுள் மஜீத் இமாம் பின் பாஸ் அவர்களிடம் கற்றார்கள். உசூலுல் ஹதீத் ஷேக் அல்பானி அவர்களிடம்  கற்றார்கள்.

ஆரம்பத்தில் ஹனபி மத்ஹபில் பிடிவாதமாக இருந்த ஷேக் முஹம்மது இக்பால் மதனி அவர்கள் , இந்த இமாம்களிடம் கல்வியை கற்று குர்ஆன் ஹதீஸை பற்றி ப்பிடித்துக் கொண்டார்கள்..

Comments

Unknown said…
வரலாறு சிறிதாக மாற்றப்பட்டதா?மறைக்கபட்டதா? என்பதா என்பதை சம்பந்த பட்டவர்கள் இந்த பதிவை படித்தால் நிறையவே மனகஷ்ட படுவார்கள் IAC என்னும் அமைப்பின் செயளாலர் செய்துங்கநல்லுர் மீரான் அல்ல பேட்மாநகர் மீரான் மலர் குதுப் அவரே அறியாத பெயர் அந்நஜாத்தில் முஹிப்புல் இஸ்லாம் என்னும் பெயரில் ஆக்கங்கள் எழுதிவரும் சகோ.பொதக்குடி குதப்புதீன் அவர்கள். சரியான தகவலோடு உண்மையாக எழுதினால் பிரச்சனை இல்லை உண்மக்கு புரம்பானதே இட்டகட்டப்பட்டது என்று உங்கள் மீதுதான் வேதனை பாயும் .அல்லாஹ் போதுமானவன்
பிற்காலத்தில் பேட்மாநகர் பாரூக் என்ற சகோதரர் இருந்ததால் உங்கள் அண்ணன் பெயருக்கு முன் தவறாக பதிந்து விட்டேன். http://mdfazlulilahi.blogspot.in/2004/11/blog-post_21.html இஸ்லாமிய பிரச்சார பிரசுரங்களை வெளியிட்ட குதுப் அவர்கள் மலர் 1 மலர் 2 மலர் 3 என வெளியிடுவார். அதனால் எங்களிடையே மட்டுமல்ல பொதக்குடி மக்களிடமும் குதுப்புத்தீன் அவர்கள் மலர் குதுப் என்றே அழைக்கப்பட்டார். மலர் என்பது கெட்ட வார்த்தை அல்ல. பொதக்குடி அப்துஸ்ஸமது அவர்களிடம் பேசும்போது இன்றும் மலர் குதுப் என்றே குறிப்பிடுவேன். IAC எனும்போது பிரச்சனை வந்து விடக் கூடாது என்பதாலேயே ஜமாஅத் உருவானது என்று குறிப்பிட்டேன். வரலாறு மறைக்கப்படவில்லை. மு.லீக் தலைவர்கள் துபை வந்தால் வரவேற்பு செய்து வந்த K.M.I. 1987க்குப் பிறகு துபை வந்த மு.லீக் தலைவர்களை சந்திக்க மறுத்து விட்டார். இது போன்றவைகளை எழுதப் போனால் வரலாறு நீண்டு கொண்டே போகும். சுருக்கி உள்ளோம் மறைக்கவில்லை. நம்மிடம் கூலி பேசி மாரடிக்க வந்தவர்கள்தான் வரலாற்றை மறைத்தும் திரித்தும் எழுதி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.