அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் பெண் அமைச்சர்

 Posted by: Sutha Published: Wednesday, July 22, 2015, 15:18 [IST]


கோதர்மா, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சரான நீரா யாதவ், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போட்டோவுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தியது பெரும் கண்டனங்களை குவித்துள்ளது. இந்து பாரம்பரியப்படி ஒருவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. எனவே நீரா யாதவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி நடந்து கொண்டார் அமைச்சர் நீரா யாதவ். சம்பந்தபட்ட நிகழ்ச்சியானது ஒரு பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழாவாகும். இதற்கு சிறப்பு விருந்தினராக நீரா யாதவ் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன்பு அவர் அப்துல் கலாம் படத்திற்கு மாலை போட்டு வணங்கினார். அவர் மட்டுமல்ல, பாஜக எம்.எல்.ஏ மனீஷ் ஜெய்ஸ்வால், பள்ளியின் முதல்வர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலாம் படத்தை வணங்கினர். யாருமே இந்த செயல் தவறு என்று எடுத்துச் சொல்லவில்லை என்பதுதான் வேதனையானது. இந்த சம்பவம் பெரும் கண்டனத்தைக் குவித்ததைத் தொடர்ந்து இதுகுறித்து நீரா யாதவ் விளக்குகையில் பெரிய மனிதர்கள், மக்களால் மதிக்கப்படும் தலைவர்களுக்கு இது போல மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்தான். கலாம் மாபெரும் விஞ்ஞானி. எனவேதான் அவருக்கு மாலை அணிவித்து வணங்கினேன் என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.

What the....? Jharkhand Education minister pays "homage" to @APJAbdulKalam !!!!


கலாமுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஐஐஎன்னில் படித்திருப்பாரோ?: ட்விட்டரில் திட்டும் மக்கள்
Posted by: Siva Published: Wednesday, July 22, 2015, 17:03 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/india/tweeples-make-fun-jharkhand-education-minister-231649.html

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவை மக்கள் ட்விட்டரில் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். உயிருடன் இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சரை மக்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.இது குறித்து மக்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பாரத ரத்னா "APJ Abdul Kalam" இந்த ஆண்டு பாரத ரத்னா விருது ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சருக்கு தான் என விஜய் பஞ்சியார் தெரிவித்துள்ளார்.


ஐஐஎன் நீரா யாதவ் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைக்கிறாரோ. அவர் என்ன ஐடியா ஐஐஎன்-னில் படித்தவரா? என குஸ்தக் நிகா ட்வீட் செய்துள்ளார்.  



லூசுகளா அட லூசுகளா அப்துல் கலாம் இன்னும் இறக்கவில்லை. பாஜக அமைச்சர் நீரா என ரோஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



கல்வி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தான் அவர்களின் கல்வி என ஆஷிஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.

பெரிய மனிதர்கள், மக்களால் மதிக்கப்படும் தலைவர்களுக்கு இது போல மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்தான். கலாம் மாபெரும் விஞ்ஞானி. எனவேதான் அவருக்கு மாலை அணிவித்து வணங்கினேன் என்று விளக்கம் கொடுத்துள்ள நீரா யாதவ்வின்மறுப்புச் செய்தி 

அப்துல் கலாம் படத்திற்கு தான் மாலை அணிவிக்கவில்லை: நீரா யாதவ் விளக்கம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் படத்திற்கு தான் மாலை அணிவிக்கவில்லை என ஜார்கண்ட் கல்வி அமைச்சர் நீரா யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் நீரா யாதவ், கொதர்மாவில் உள்ள பள்ளிக் கூடத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது போன்ற புகை படங்கள் நேற்று வெளியானது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நிரா யாதவ் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அப்துல் கலாமின் படத்திற்கு தான் மாலை அணிவிக்கவில்லை என நீரா யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

தாம் செல்லும் முன்பே மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும், பொட்டு மட்டுமே வைத்ததாகவும் நீரா யாதவ் தெரிவித்துள்ளார்.

Read more: http://www.ns7.tv/ta/garland-was-already-there-neera-yadav-said.html#ixzz3i0AKS1bQ

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.