சன் டி.வி. இப்போது துடிக்கிறது ஆனால் அது யாருக்கு சாதகமாக இயங்கியது? நிகழ்ச்சிகளை தயாரித்தது? நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது?
வாட்ஸப்பில் வந்தது +919444458712
சன் டி.வி. இப்போது துடிக்கிறது ஆனால் அது யாருக்கு சாதகமாக இயங்கியது? நிகழ்ச்சிகளை தயாரித்தது? நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது?
திருவீரபாண்டியனை எதற்காக நீக்கினார்கள்?
அங்கு எந்த சமுதாயம் ஆதிக்கம் செலுத்துகிறது?
யாருக்காக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது?
மூடநம்பிக்கைகளை தமிழக மக்கள் மத்தியில் விதைத்ததில் அல்லது வளர்த்ததில் சன் டி.வி.க்கு நிகர் சன் டி.வியே என்பதில் மாற்று கருத்துண்டா?
காலை வணக்கம் என்ற நிகழ்ச்சியை மாற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் சூர்ய வணக்கம் என்று மாற்றினார்களே ஏன் தெரியுமா? சூரிய வழிபாட்டை ஆதரிக்கும் போக்குடனே இது நடந்தது. இதனூடே யோகாவும்! எளிய தமிழ் மக்களை மறைமுகமாக இந்துத்துவமயப்படுத்துதலில் சன் டி.வி. களமாடியது என்றால் அது மிகையல்ல என்பது யாவரும் அறிந்ததே. இப்போது அவர்கள் எதை ஆதரித்தார்களோ யாருக்காக ஆதரித்தார்களோ அவர்கள் வருவார்களா? இவர்களுக்காக போராட? அவர்களால் தானே தற்போது பிரச்சினையே என்பதை மாறன்கள் அறிந்து துடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் சொல்லித் தானே திருவீரபாண்டியனை நீக்கினீர்கள் வினை விதைத்தவன் திணை அறுக்க முடியுமா? சாமானியர்களுக்கான நிகழ்ச்சிகள் எத்தனை உங்கள் டி.வி.யில்? அழுகையும், கள்ளக்காதல்களும், குடும்ப அமைப்புகளை சீரழிக்கும் சீரியல்களை சொல்லி விடாதீர்கள். நான் கேட்பது நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிகழ்வுகளை, அவர்களின் வாழ்வுப் போராட்டங்களை, அவர்களின் அரசியல் போராட்டங்களை புறக்ககணித்தே வந்தீர்களே மாறன் சகோதரர்களே. பல அரசியல் தலைவர்களின் முகங்களைக் கூட காட்ட மறுக்கும் உங்கள் டி.வியில் மோடி போன்ற பாசிஸ்ட் அரசியல்வாதிகளுக்காக எத்தனை நிமிடங்களை ஒதுக்கினீர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்? மோடியும் உங்களை கைகழுவத்தான் வேண்டும் அது தான் அவர்களின் அரசியல் வழி தந்திரம்.
இராமாயணம்
மகாபாரதம்
ஆலய வழிபாடு
ஆன்மீகக் கதைகள்
ஆன்மீகப் பாடல்கள்
சூர்ய வணக்கம்
மூடநம்பிக்கைகள், பேய்கள் என தொடர்கள்
மற்ற மத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் பக்க சார்புடனே உங்களது நிகழ்ச்சிகள் இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதுவும் கலைஞரின் பேரன்களாய்!
தொலைக்காட்சிகளை அனைவருமே பார்க்கின்றனர். ஆனால் உங்கள் நிகழ்ச்சிகள் பக்கசார்புடன் இருந்ததை எப்படி புறந்தள்ள முடியும்? தமிழக மக்களிடம் மூட நம்பிக்கைகளை கிராபிக்ஸ் நுட்பத்தை பயன்படுத்தி விதைத்ததை அல்லது வளர்த்ததை எண்ணிப்பாருங்கள். உங்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் மற்றவர்களை வளரவிடாமல் தடுத்ததை தாங்கள் அறிவீர்கள் தானே!
இன்று உங்களுக்காக குரல் கொடுக்க பல ஆளுமைகள் தயங்குகின்றனர் ஏன் தெரியுமா?
நீங்கள் சகோ. திருவீரபாண்டியன் எனும் ஆளுமையை புறக்கணித்தீர்கள்.
Comments