டிஜிட்டல் பெஸ்ட் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பெருமை கொள்வோம் நன்றிகளை சொல்வோம்...

டிஜிட்டல் டெஸ்ட் - 230 எம்.எல்.ஏ - க்கள் ஃபெயில்
ஜெயலலிதா , கருணாநிதி, விஜயகாந்த் தோல்வி
‘‘அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெறவைத்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். நான் உங்களில் ஒருவன். என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்’’ - 




இன்றைய
ஜுனியர் விகடன் இதழில்
வந்த செய்தியொன்று நம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பேராசிரியப் பெருந்தகை ஜவாஹிருல்லா அவர்களை
தொகுதி பிரச்சனைகளை தீர்க்கவல்ல
உறுப்பினராக அங்கரித்து
பாராட்டு பத்திரம் வாசித்துள்ளது...
234 MLA-க்களில்
தொகுதி பிரச்சனையை தீர்ப்பதில்
வ(ந)ல்லவர்கள் யார்?
என்பதை பல்ஸ் பார்க்கும் விதத்தில்
நடத்திய 'Digital test-ல்'
நான்கு உறுப்பினர்களே Reply
செய்துள்ளனர்
அந்த நான்கில் ஒருவராக நமது
இராமநாதபுரம் MLA
இருப்பது மகிழ்ச்சி கொள்ளதக்கதே...
நான் வைத்த பல்வேறு
கோரிக்கைகளை நிறைவேற்றிய
சந்தோஷம் எப்போதும்
என்னிடம் உண்டு
அதனை ஜுனியர் விகடன் உலகறிய
செய்திருப்பது உன்னதம் அல்லவா?
வாழ்க ஜனநாயகம்...

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரில் தனிச்சிறப்பு பெற்ற 4 எம்.எல்.ஏ --க்களை டிஜிட்டல் பெஸ்ட் எம்.எல்.ஏ-க்களாக தமிழகத்தின் முன்னணி அரசியல் புலனாய்வு இதழான ஜூனியர் விகடன் அறிவித்துள்ளது.
அதில் இராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர், முனைவர். M.H.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தொடர்ந்து மக்கள் நல பணிகளை தொய்வின்றி செய்திட வல்ல இறைவன் அருள்புரிவானாக!

டிஜிட்டல் டெஸ்ட் - 230 எம்.எல்.ஏ - க்கள் ஃபெயில்
ஜெயலலிதா , கருணாநிதி, விஜயகாந்த் தோல்வி
‘‘அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெறவைத்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். நான் உங்களில் ஒருவன். என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்’’ - கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசார மைக்கில் வேட்பாளர்கள் கொட்டிய வார்த்தைகள் இவை. வேட்பாளர்கள், ‘மக்கள் பிரதிநிதி’களாக மாறி ஐந்து ஆண்டுகள் ஆகப் போகின்றன. அடுத்த தேர்தலுக்கான களம் அமைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் மைக் டெஸ்டிங் ஒன்... டூ... த்ரி... காதை பிளக்கப் போகிறது. இந்த ஐந்தாண்டில் எம்.எல்.ஏ-க்கள் சாதித்தார்களா, சறுக்கினார்களா? ‘மக்கள் பிரதிநிதி’களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருந்தது? சின்னதாக ஒரு டெஸ்ட் வைத்துப் பார்த்தால் என்ன?
‘டிஜிட்டல் இந்தியா’ என்கிறார் பிரதமர். ஸ்டாலின், அன்புமணி என நம் அரசியல்வாதிகள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டின் 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் மக்கள் சேவையாற்ற வசதியாக, அரசின் சார்பில் லேப்டாப் தரப்பட்டிருக்கிறது. அவர்களைத் தொடர்புகொள்வதற்கு வசதியாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு இ-மெயில் ஐ.டி-யும் உண்டு. அரசின் இணையதளத்தில் இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். தேடிச்சென்று நேரடியாகக் கோரிக்கை மனு தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மின்னஞ்சல் வழியேகூட தொடர்புகொள்ளலாம்.
வாக்களித்தவர்கள் மீது எம்.எல்.ஏ-க்கள் காட்டும் அக்கறை எப்படி என்பதை ஆராய களத்தில் இறங்கினோம். ‘வலையப்பன்’ என்ற பெயரில் எம்.எல்.ஏ-க்களுக்கு ‘வலை’ விரித்தோம். இ-மெயில் முகவரிகளுக்குக் கோரிக்கை மனு அனுப்பினால் எம்.எல்.ஏ-க்கள் காட்டும் ரியாக்ஷன் என்ன, அக்கறை எப்படி..? இதுதான் டெஸ்ட்டுக்கான டார்க்கெட். ‘வலையப்பன்’ என்கிற பெயரில் ஒரு இ-மெயில் முகவரியை உருவாக்கி தமிழ்ச்செழியன் என்ற பெயரில் 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் தனித்தனியாக மெயில் அனுப்பினோம்.
சட்டமன்ற உறுப்பினருக்கு வணக்கம். நான் உங்கள் தொகுதியில் வசிப்பவன். பட்டா கேட்டு பல முறை முயற்சி செய்தும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், இந்த விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன். தாங்கள் முயற்சி எடுத்து எனக்கு பட்டா பெற்றுத் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தமிழ்ச்செழியன்’ என மெயில் அனுப்பினோம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் மெயில்கள் அனுப்பப்பட்டன. 234 ‘மக்கள் பிரதிநிதி’களுக்கு வைக்கப்பட்ட இந்த டெஸ்டில் தேறியது நான்கு பேர்தான். 230 பேர் ஃபெயில்.குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.
ஜெ.ஜி.பிரின்ஸ், பவானி சாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பி.எல்.சுந்தரம், கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.அன்பழகன், ராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர்தான் அந்த நான்கு பேர்.
டெஸ்டில் ஜெயித்த நான்கு பேர்!
** ‘பட்டா தொடர்பான ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கவும். உங்களுக்கு வேண்டிய உதவியைச் செய்கிறேன்’ என குளச்சல் எம்.எல்.ஏ. ஜெ.ஜி.பிரின்ஸ் அக்கறையோடு நமக்குப் பதில் அனுப்பினார். அதோடு ‘ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும் - நீதிமொழிகள் 29:14’ என வாசகத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தார் பிரின்ஸ். ‘ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில தொடரவும் என்று சொல்லி அந்த முகவரிகளையும்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.