சகிப்பின்மை குறித்த சங்பரிவார பதிவுக்கு பதிலடி ! -செங்கிஸ்கான்

இந்துக்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது  என்று சொல்பவர்களே உங்களுக்கான பதிவு இது...


//1.1947 ஆகஸ்ட் 14 இரவிலேயே முஸ்லீம்களுக்கு தனிநாடு கேட்டபோது இந்துக்களுக்கு தனிநாடு கேட்காமல் விட்டோமே, அதனால் நாங்கள்சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்..//

1947 முன்னாலேயே இன்னும் சொல்லப்போனால் ஜின்னாவுக்கு முன்னாலேயே இந்து நாடு கேட்டவர்கள்  சங்பரிவார்தான்! இன்றும் அதைத்தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள் ! 

ஆனால்  என்ன பரிதாபம்னா உங்கள் கோரிக்கையை பெரும்பான்மை இந்துக்கள் ஏற்கவில்லை ! ஆகையால் உங்கள் கனவு நிறைவேறப் போவதுமில்லை! இருந்த ஒரே இந்து நாடான நேபாளத்தையும் இழந்ததுதான் மிச்சம்!

//2. அடுத்த நாளிலேயே பாகிஸ்தானில் இந்துக்களை கண்மூடித்தனமாக தாக்கியும், பாலியல் பலாத்காரம், கொலைகள் கூட செய்தும் இங்கு இஸ்லாமியர்கள் எங்கள் சகோதரர்கள் என்று சொன்னோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.// 

அடேங்கப்பா என்ன சகிப்புத் தன்மை?  பிரிவினையின் போதும்   நவகாளியிலும் பாகல்பூரிலும் மீர்ட்டிலும்,பீவண்டியிலும்  கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்ட முஸ்லிகள் எல்லாம் யார் ? உங்கள் சகோதர சகோதரி  இல்லையா ?

//3. கிலபட் கிளர்ச்சியில் 3000 ஹிந்துக்கள் இறந்தபோதும் அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

இது போன்ற வரலாற்றுப் புரட்டுகளை விட கண்முன்னே நடந்த  குஜராத் கலவரத்தில் இறந்த 3000 முஸ்லிம்கள் படுகொலையில் உங்கள் சகிப்புத் தன்மை உலகுக்கே தெரிந்ததே !  மோடி ராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் பிரதமர் வாஜ்பாய்  கூறியதில் இருந்தும், உலகநாடுகளால் மோடிக்கு விசா மறுக்கப் படும் அளவுக்கு சகிப்பின்மை கண்டு உலகம் சிரித்ததே! தெரியாதா ?

//4. காஸ்மீரில் திருமணத்தில் புகுந்து மாப்பிள்ளை பெண்ணையும் சேர்த்து 22 பேரை கொன்றீர்களே அதையும் பார்த்து அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

என்றைக்கோ  காஷ்மீரில் நடந்தது முஸ்லிம்களின் சகிப்பின்மை என்றால்  இன்றைக்கும் அங்கு  நடக்கும் படுகொலைகளில் இருந்தும் முசாபர்நகரில் நடந்த படுகொலையிலும்  உங்களின் இந்து சகிப்பின்மை  இளிக்கிறதே ?

//5. நாங்கள் வணங்கும் கயிலை வாசனின் கோவில் பகுதியை வேண்டுமென்றே சீனாக்காரனுக்கு கூறுபோட்டுக் கொடுத்த போதும் அமைதியாகவே இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

400 ஆண்டுகால பாபர் மசூதியை சட்டத்திற்கு புறம்பாக இடித்துத் தரை மட்டமாக்கி விட்டு,  இடித்தவனுக்கு இரண்டு பங்கு இழந்தவனுக்கு ஒருபங்கு என்று கட்டப்பஞ்சாயத்து செய்த பின்னும் அமைதியாக இருக்கும் எங்கள் சகிப்புத் தன்மையை என்ன செய்வது? 

//6. நாங்கள் வணங்கும் பிள்ளையாரை செருப்பால் அடித்தானே ஒரு கெழட்டு மூதேவி அப்போதும் அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//
நீங்கள் வணங்கும் பிள்ளையாரை வருடாவருடம் விநாயக சதுர்த்தியில் காலால் மிதித்து உடைத்து கரைத்து இழிவுபடுத்தும் உங்களை விடவா? அந்தக் கிழவனை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னபிறகும் கூட   அவர்களும்   சகிப்புத் தன்மை யோடுதான் இருக்கிறார்கள்!  
 
//7. நாங்கள் தெய்வமாய் தாயாய் நினைக்கும் சாமி சிலைகளை எட்டி உதைத்தும், கேவலப்படுத்தியும் போட்டோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவ விட்டு பெருமையாக திரிந்த நாய்களையும் நாங்கள் எதிர்க்காமல் அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

பிறமத கடவுள்களை இழிவு படுத்தக கூடாது என்பது குரானின் கட்டளை ! நாங்கள் இழிவுபடுத்த மாட்டோம்! அதேசமயம் எங்கள் மார்க்கத்தை இழிவு படுத்தினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் ! அப்படி இழிவு படுத்தியவர்களை நாங்களும் கண்டித்தோம் ! அவர் மீது சட்டப்படி உங்களால்  நடவடிக்கை எடுக்கப்பட்டது!

ஆனால் ஓவியர் உசேன் நாட்டை விட்டு விரட்டப்பட்டார் , கல்புர்கி, கோவிந்பன்சாரே , நரேந்திர தபோலகர் கொல்லப்பட்டார்கள்!     இதில் இருந்தே உங்களின் சகிப்பின்மையை இந்தியாவே காறித் துப்பியது ! சிந்தனையாளர்கள் விருதை தூக்கி எறிந்தனர் ! 

//8. தாலியை அறுக்க பொது இடத்தில் கூட்டம் கூட்டினானே ஒரு புறம்போக்கு அதையும் நாங்கள் அமைதியாகவே பார்த்துக் கொண்டு இருந்தோம், அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

வருடாவருடம் கூத்தாண்டவர் கோவிலில் தாலியறுக்கும் அரவாணிகளை என்ன செய்யப் போகின்றீர்கள்?  தைரியம் இருந்தால் தடுத்து இருக்க வேண்டும்! அனால் என்ன செய்வது தடுக்க மக்களை அழைத்துப் பார்த்தீர்கள் ! ஆனால் தாலி சென்டிமென்ட் அதிகம் தமிழகத்தில் கூட  பெரும்பான்மை இந்துக்கள் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை! 

//9. இந்துக்களின் வழிபாட்டுத் தளங்களின் அருகே மசூதி கட்டவும், சர்ச் கட்டவும் இடம்கொடுத்து விட்டு நீங்கள் தினம் தினம் வழிபாடு செய்வதை தூர நின்று ரசித்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

இருந்த பாபர் மசூதியை இடித்த நீங்கள் எங்கே பள்ளிகட்ட இடம் கொடுத்தீர்கள் ?  ஆனால்  பாபர் மசூதி இடிப்புக்கு பின்னும் பிகாரில் உலகின் மிகப் பெரிய  கோவிலைக் கட்ட இடம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள், பாபர்மசூதி இடிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட கோவிலை கட்டிக் கொடுத்து அத்வானியை அழைத்து திறந்து வைத்தவர்கள் முஸ்லிம்கள், முஸ்லிம் நாட்டில் அமீரகத்தில்  கோவில்கட்ட    மோடி இடம்  அனுமதி வழங்கியவர்கள் முஸ்லிம்கள் ! இப்போது சொல்லுங்கள்  யார்  சகிப்புத் தன்மை உள்ளவர்கள் ?

//10. 1993ல் சென்னையில் 11 ஸ்வயம் சேவகர்களை கொன்ற போதும் வேடிக்கைப் பார்த்துகொண்டு அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

யார் கொன்றவர்கள் ? அவர்கள் சட்டப்படி தண்டிக்காமல் விட்டு விடுங்கள் என்று  கூறினீர்களா ? இல்லை தண்டனை வாங்கிக் கொடுக்க போராடிணீர்களா ?

//11. 1996 மே 18 ல் மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில் குண்டுவைத்ததையும் பார்த்து அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

குண்டு வைப்பது அதை முஸ்லிம்கள் மேல் பழிபோடுவது , அதை வைத்து கலவரங்களை உருவாக்குவது எல்லாம்     சங்கபரிவாரங்களின் வேலை ! அப்படியே வைத்து இருந்தால் அதற்காக சட்டப்படி கைது செய்து சிறையில்  அடைக்க உங்களுக்கு என்ன தடை ? 

//12. 1998 பிப்ரவரி 14ல் கோவையில் 11 இடங்களில் தொடர்ந்து வெடித்த குண்டுகளையும் கண்டு அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.// 

அதற்கு முன்னாடி காவலர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து  இருபதிற்கும் மேற்பட்ட முஸ்லிம்களையும் 200 கோடி சிறுபான்மையினர் சொத்துக்களையும் குறிவைத்துக்  கொன்று குவித்தது என்ன மாதிரியான சகிப்புத் தன்மை ?

//13. இந்துப் பிள்ளைகளுக்கு பள்ளியில் இந்துமத அடையாளங்களை அணிந்துகொண்டு வர தடை விதித்ததையும் பார்த்து பேசாமல் அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

எங்க பிள்ளைகளையும் தான் தொப்பி பர்தா அணிந்து வரக் கூடாது என்று கூறுகிறார்கள் ! எங்கள் உரிமைகளுக்காக சட்டப்படி நாங்கள் போராடுகிறோம் ! முடிந்தால் நீங்களும் போராடுங்கள் ! மதசார்பற்ற அரசு அலுவலகங்களில் இந்து தெய்வங்களின் புகைப்படங்கள்  பூஜை  புனஸ்காரங்கள், இந்து மத அடிப்படையில் பூமிபூஜை, இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் எங்களின் சகிப்புத்தன்மையை என்ன சொலவது ?  

//14. இந்துமத கடவுள்களை சாத்தான் என்று கூறுவதையும், கேலி கிண்டல் செய்வதையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

தங்கள் மதத்தை ஒருவர் கேலி செய்தால் அவர்களுக்கு தக்க வாதத்தின் மூலம்  பதிலடி கொடுப்பது அந்த மதத்தின் மீது பற்றுக் கொண்ட ஒருவரின் கடமை ! ஆனால் உங்களால் கேலிகிண்டலுக்கு பதில் கொடுக்க முடியவில்லை என்றால் அது உங்கள் கொள்கையில் உள்ள குறைபாடு அல்லது அதன் மீது உங்களுக்கு நம்பிக்கையின்மையாக இருக்கலாம்! 

//15. இந்துக்களை எதிர்க்க இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெரிய கூட்டத்தை கண்டும் அமைதியா இருக்கிறோமே அதனால் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான்.//

நீங்கள் சொல்லும் அனைவரையும் விட இந்துக்கள் தான்  இந்தநாட்டில் பெரும்பான்மை ஆனால்   அந்த பெரும்பான்மை மக்களில் பெரும்பாலோனோர் உங்களை ஆதரிக்காததில் இருந்தே தெரியவில்லையா ? உங்கள் வாதங்களில் நியாயமில்லை என்று ! உண்மை  என்னவெனில் உங்களின் மதவாதத்தை மக்கள் யாரும் விரும்பவில்லை என்பதே !



//இப்போது சொல்லுங்கள் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்களா? ஒரு தாத்ரி கொலைக்காக போராடும் நீங்கள் இதுவரை லட்சக்கணக்கான இந்துக்கள் இறந்தபோது எங்கே ?என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? அந்த கொலை கூட தாக்குதலுக்கு எதிர் தாக்குதலே தவிர ஒன்றுமே செய்யாத அப்பாவியை கொன்றது இல்லை..

பேசிகொண்டிருக்கும் போதே துப்பாய்கியால் சுட்டவனை தாக்கிய போது இறந்துவிட்டான் அவ்வளவே.. அவன் பாகிஸ்தானில் மூன்று மாதங்கள் ஆயுதபயிற்சி பெற்றதையும், அவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது என்பதையும் சொல்லிவிட்டு பிறகு சொல்லுங்கள் நாங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று.....//

லட்சக் கணக்கான இந்துக்கள் எங்கே இறந்தார்கள் ? கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டாமா ? 

கோவிலில் மணியடித்து ஆயிரம் பேரைத் திரட்டி  மாட்டுக்கறி வைத்திருந்தார் எனும் பொய்யை சொல்லி அடித்துக் கொல்வது திட்டமிடப்படாத எதிர்த் தாக்குதலா ? பொய்யை சொல்வதானாலும் பொருத்தமாக சொல்லவேண்டும்! துப்பாக்கி  எல்லாம் வைத்து  ஆயுத பூஜை செய்யும் நீங்கள் தான்  கொண்டு சென்று இருப்பீர்கள்! பாகிஸ்தான் போய்வந்தால்   மூன்றுமாதம் பாகிஸ்தானில் பயிற்சி   பெற்றவரா ? அப்போ வாஜ்பாய்  அத்வானி மோடி ஜஸ்வந்த்சிங் எல்லாம் அதுக்கத்தான் போய்வந்தர்களா ? ஒரு வயதான  முதியவர்  பாகிஸ்தானில் போய் பயிற்சி எடுத்தாரா ? கதை சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா ?

உங்கள கதைகளை எல்லாம் மக்கள் நம்பும் காலம் மலையேறிவிட்டது ! அதனால்தான் மக்கள் தெளிவான தீர்ப்பை பீகாரில் அளித்துள்ளார்கள் ! பெரும்பான்மை இந்துச் சொந்தங்கள் உங்களை ஏற்கமாட்டார்கள் !  நீங்கள் எங்களைப் பார்த்து சிறுபான்மை என்று சொல்லவேண்டாம் ! நீங்கள்தான்    சிறுபான்மை மக்களைவிட  சிறுபான்மையினர் !  ஆகையால்  இனியாவது திருந்துங்கள் ! மதவாதத்தைக் கைவிடுங்கள்!
-செங்கிஸ்கான்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.