இயக்கமா ? இஸ்லாமா ? நீங்களே முடிவெடுங்கள்! -செங்கிஸ்கான்


துவங்கி விட்டது சகோதர யுத்தம்!
கொடிக்கும் பெயருக்கும்
கோர்ட்டில் வழக்கு!
பரஸ்பரம் குற்றச்சாட்டு !
பொதுகூட்ட எதிர்ப்பு !
போஸ்டர் கிழிப்பு  !
முகநூலில் முகம்சுழிக்க
வைக்கும் பதிவுகள்!
சமூக வலைத்தளங்களில் 
சகிப்பின்மை  பதிவுகள் !
ஒருவருக்கொருவர்
முனாஃ பிக்  ஃ பத்வா !
நேற்றுவரை தியாகி
இன்று துரோகி!
நேற்றுவரை நேர்மையாளர்
இன்று நேர்மையற்றவர் !
மாட்டுக் கறி உரிமைக்காக
போராட வேண்டிய நாம்
ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி
மனிதக்கறி தின்னலாமா ?
சங் பரிவாருக்கு எதிராக
பயன்படவேண்டிய சக்தியை
சகோதரச் சண்டையில்
நாம் வீணாக்கலாமா ?
சமுதாயத்தின் உரிமைகளுக்காக
நீதிமன்றம் செல்லவேண்டிய நாம்
சகோதர சண்டைகளுக்காக
நீதிமன்றம் செல்லலாமா ?
சூழ்ந்து நிற்கும் அபாயத்தை
சேர்ந்து நின்று எதிர்க்க வேண்டிய
நாம் பிரிந்து நின்று போரிடலாமா ?
இஸ்லாத்துக்கு வக்கீலாக இருந்து
வாதிடுவதை விட்டு
இயக்கத்துக்கு வக்கீல்களாக
நின்று வாதிடலாமா ?
நேற்றுவரை எதிரிகளாக
இருந்தவர்களை
சகோதரர்களாக்கியது  இஸ்லாம்  !
நேற்றுவரை சகோதரர்களாக
இருந்தவர்களை
எதிரிகளாக்கியது இயக்கம் !
இஸ்லாமிய நெறிகளை  விட
இயக்க வெறி மிகைக்க வேண்டாம் !
இது பட்டுத் திருந்தியவனின்
பணிவான வேண்டுகோள் !
விட்டுக் கொடுங்கள் ! அல்லது
விட்டு விலகுங்கள் !
முட்டிக் கொள்வதில்
எந்த நன்மையையும் இல்லை !
இறைவன் கொடுக்க நினைப்பதை
யாரும் தடுக்க முடியாது !
இறைவன் தடுக்க நினைப்பதை
யாரும் கொடுக்க முடியாது! 
இயக்கமா ? இஸ்லாமா ?
நீங்களே முடிவெடுங்கள்!
நிதானமாக சிந்திப்போம்! நாளை
நிச்சயம் இறைவனை  சந்திப்போம்!
-செங்கிஸ்கான்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.