தாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல் தாடி

தாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்தாடி வளர்ப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஆனால் தாடி வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. 

இப்போதுள்ள இளம் தலைமுறையினர் பலர் க்ளீன் ஷேவ் செய்து கொள்வதுதான் ஸ்மார்ட்னஸ் என முகம் முழுவதையும் வழித்து எடுத்துக் கொண்டு சுற்றுகின்றனர்.ஆனால், தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்களாம். அதனால் தான் காதலர்களாக இருக்கும் போது ரசிக்கப்படும் தாடி திருமணத்திற்குப் பிறகு தடை சொல்லப்படுகிறது.

சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்துவரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம். தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். 

தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் தான் இளமையானவர்கள்.தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம். தாடி வைத்திருப்பதால்குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம். 

பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும். தாடி வைத்திருப்பதால்உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தாடி இருந்தாலும் எப்போது முகம் குளிர்ச்சியுடன்இருக்கும்.இதற்குதான் நபி அவர்கள் கூறினார்கள்:இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)நூல் : புகாரி 5892

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.