அல்லாஹ் நாடினால் மன்னிப்பானா? தண்டிப்பானா?

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் நமக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மனிதர் என்ற அடிப்படையில் எல்லாரும் ஒன்றுதான்.

நபி(ஸல்) அவர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்தும்பொழுது 'குல் இன்னமா அனா பஷருன்..(நபியே) சொல்வீராக நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதன்தான் (41:6) என்றுதான் அவனுடைய தூதரையே மக்களிடம் அறிமுகப்படுத்தச் சொல்லுகிறான் அல்லாஹ்.

மனிதருக்கு அப்பாற்பட்ட ஒரு நிலை கிடையாது. மனிதர் என்ற முறையில் சமம்தான். ஆனால் அவர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். 


எதில் உயர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்ற முறையில் உயர்ந்து இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் என்றால் என்ன சிறப்பு அம்சம்.

பிற சமுதாயத்தவர்கள் அவர்களாக கற்பனை செய்துள்ளவர்களுக்கு கற்பனை செய்துள்ளார்களே அது மாதிரியான கற்பனையான சிறப்பு அம்சமா? நிச்சயமாக இல்லை. சாதாரண மனிதர்களிலிருந்து அல்லாஹ்வுடைய தூதர் வித்தியாசப்படுவது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான்.

அது அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வரக் கூடிய 'வஹிஎன்பதையும் அல் குர்ஆன் 41:6 வசனத்திலேயே அல்லாஹ் சொல்லிக் காட்டச் செய்துள்ளான். 



அல்லாஹ்விடமிருந்து 'வஹிவருகிறது என்றால் அவருக்கு அல்லாஹ்விடமிருந்து தூதுச் செய்தி வருகிறது. அதனை அவர் மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்.


இது இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள நிலை அல்ல. அவர்ளுக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் அதே நிலைதான் அவர்களிலிருந்து இந்த தூதர் வேறுபடவும் இல்லை. 


இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களாக இருக்கட்டும். அவர்களுக்கு முன் வந்து சென்ற இபுறாஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூப், மூஸா, ஈஸா என யாராக இருந்தாலும் எந்த ஒரு தூதராக இருந்தாலும் இவர்களுக்கு மத்தியில் பாகுபடுத்தி பார்ப்பதற்கு மார்க்கத்தில் நமக்கு அனுமதி இல்லை. 


எனவே அவர்களிடையே பாகுபாடு காட்ட மாட்டோம் என்று சொல்லுமாறும் அல்லாஹ் தனது திருமறையில் (2:136,285,3:84) தெளிவாகச் சொல்லிக் காட்டியுள்ளான். 


இறைவனுடைய தூதர்கள் மத்தியில் நாம் வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. இவர் சிறந்தவர், அவர் உயர்ந்தவர், இவர் அழகானவர். இதுவெல்லாம் நமக்குத் தேவையே இல்லை. இறைத் தூதர்கள் என்று சொன்னால் எல்லாரும் சமம்தான். 


ஒரு இறைத் தூதரால் மிகப் பெருங் கூட்டம் சத்தியத்தை ஏற்றிருக்கலாம். ஒரு இறைத் தூதரால் மிகச் சிலரே சத்தியத்தை ஏற்றிருக்கலாம். இதுவெல்லாம் அல்லாஹ்வுடைய நாட்டமே தவிர இறைத் தூதருடைய முயற்சி எதுவுமே கிடையாது. 


அவர்களுக்கு சொல்லப்பட்டதெல்லாம் 'வமா அலைனா இல்லல் பலாகுல் முபீன்.' ( திரு குர்ஆன் 36:17) (அல்லாஹ் என்ன சொல்கிறானோ அதை) ”தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்பதுதான். 


அப்படி எடுத்துச் சொல்லும்பொழுது எதையெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு ஏவுகிறார்களோ அதனைத்தான் நாம் செய்ய வேண்டும். 


அதிலும் நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள். நான் உங்களுக்கு ஏவிய விஷயங்களில் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். எல்லாராலும் முடியாது என்பது சாதாரணமான ஒன்று. 


நபி(ஸல்) அவர்கள் சொன்ன அத்தனை விஷயங்களையும் நாம் வாழ்க்கையில் பின் பற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நல்ல ஆசைதான். ஆனால் செயல்படுத்தும்பொழுது 100 சதவிகிதம் முடியுமா? என்றால் அதற்கு சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு. 


அப்படி செயல்படுத்தி விட்டால் அது வரவேற்கத் தக்கதுதான். 100 சதவிகிதம் செயல்படக் கூடாது என்று பொருளல்ல. 100 சதவிகிதம் செயல்படக் கூடாது என்று விளங்கி விடக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் உங்களால் இயன்றதை செய்யுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். 


சிலரால் 70 சதவிகிதம் செயல்பட முடியும். சிலரால் 80 சதவிகிதம் செயல்பட முடியும். அவரவர்கள் தகுதியை பொறுத்த விஷயம் இது. எனவே தவறா? தவறு இல்லை. சொல்லாததை சொன்னதாகச் சொல்லி செயல்படுவது, செயல்படச் சொல்வது இதுதான் நிச்சயமாகத்  தவறு. 


உதாரணமாக நபி(ஸல்) அவர்களின் தலை முடியை எடுத்துக் கொள்வோம். சுருண்டு நெற்றியில் கிடந்தது. தோள் புஜம் வரை நீண்டு வளர்ந்திருந்தது என ஹதீஸ்களில் காண்கிறோம். இவ்வாறு நாமும் செய்ய வேண்டும். இது சுன்னத்து என்று சொல்வோமா. சொல்ல மாட்டோம்.


காரணம் இதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு ஏவவில்லை. அந்த காலக் கட்டத்தில் மக்கள் எப்படி இருந்தார்களோ அப்படி இருந்தார்கள். அப்படித்தான் அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தோள் புஜம் வரை முடி வளர்ப்பது சுன்னத்து என்று நாம் சொல்ல மாட்டோம். தோள் புஜம் வரை முடி வளர்க்க ஏவியதாகவும் சொல்ல மாட்டோம். 


இஸ்லாத்தில் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாக ஹஜ் என்ற கடமை இருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்திருக்கிறார்கள். இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அழகிய முன் மாதிரி என்று (33:21) அல்லாஹ் சொல்லி விட்டான். 


ஆகவே முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ் செய்தே ஆக வேண்டும் என்றா விளங்கி இருக்கிறோம். ஹஜ் செய்வது யார் மீது கடமையாகிறதோ அவர்கள் ஹஜ் செய்ய வேண்டும். ஹஜ் கடமையானவர்கள் நபி வழியில் ஹஜ் செய்ய வேண்டும். ஹஜ் கடமையானவர்களுக்கு ஹஜ் செய்ய அழகிய முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் என்றுதான் விளங்கி வைத்திருக்கிறோம். 


அது போல்தான் நபி(ஸல்) அவர்கள் கலந்து கொண்ட ஜிஹாது என்ற அறப்போர்களையும், அவர்கள் வாழ்நாளில் நடந்த ஜிஹாது என்ற அறப்போர்களையும் விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களில் பெரும்பலானவர்கள் தெரிந்திருப்பது பத்ரு போர்தான். 


பத்ரு போருக்கு முன்னால் எத்தனையோ போர்கள் நடக்காமல் முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அல்லாஹ்வுடைய நாட்டம்தான். எந்த ஒன்றிலிலும் நபி(ஸல்) அவர்கள் தங்களது மனோ இச்சைக்கு உட்பட்டு நடந்தார்களா? அல்லாஹ்வுடைய கட்டளைக்கு உட்பட்டு நடந்தார்களா?


அவற்றையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவற்றை சிந்தித்துப் பார்க்கும்பொழுது நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு உட்பட்டு இருந்துள்ளது என்பதை அறியலாம். இன்று நாம் ஒன்றை செய்கிறோம் என்றால் நமது மனதுக்கு சரி என்று பட்டால் செய்வோம். சரி இல்லை என்றானால் செய்ய மாட்டோம். இதுதான் நமது நிலை.


இதில் 10 இல் 8 சரியாகவும் இருக்கலாம். 2 தவறாகவும் கூட ஆகி விடலாம். அல்லது 10 இல் 2 சரியாகவும் இருக்கலாம். 8 தவறாகவும் கூட ஆகி விடலாம். இதில் சரியானவற்றுக்கு நன்மை கிடைக்கும். தவறாக ஆனதுக்கு அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். 


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் செயல்கள் யாவும் 100க்கு 100 அல்லாஹ்வால் ஏவப்பட்டவை. ஒவ்வொரு செயலும் அல்லாஹ் சொல்ல அல்லாஹ்வின் தூதர் செயல்பட்டிருக்கிறார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த போர்கள் விஷயத்தில் முதலில் நாம் என்ன படிப்பினை கொள்ள வேண்டும்


அவை யாவும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்தவை. இவற்றில் நமக்கு முன் மாதிரி இருக்கிறது. ஆனால் எந்த ஏவல்களும் கிடையாது. எந்த ஒரு போரிலும் நமக்கு ஏவல்கள் கிடையவே கிடையாது என்ற படிப்பினை கொள்ள வேண்டும்.


நபி(ஸல்) அவர்கள் செய்த எந்த ஒரு போரையும் ஏவல் என்று கூறிக் கொண்டு அந்த மாதிரி நாமும் நமது நாட்டில் போரிட முடியாது. எங்கேயாவது நபி(ஸல்) அவர்கள் இப்படி செய்யுங்கள் என்று கூறி இருந்தால், கட்டளை இட்டிருந்தால் அதை தலை மேல் ஏற்று அவ்வாறு செய்வோம். 

எங்கே வந்து நபி(ஸல்) அவர்கள் ஏவல் இருக்கிறதோ அங்கே அந்த ஏவலைச் செய்வோம். அப்படியானால் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு வாழ்ந்த ஸஹாபாக்கள் காலத்தில் போர் நடந்துள்ளதே. ஸஹாபாக்கள் எல்லாம் போர் புரிந்துள்ளார்களே. என்ற கேள்வி வரலாம். 



தொடரும் இன்ஷா அல்லாஹ்


நன்றி மக்கள் உரிமை
முஸ்லிம்கள் நடத்தியது போர்களா? போராட்டங்களா? 2 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.