தா்ஜுமாவில் விளையாடிய தறுதலை பீ.ஜை.

பீ.ஜை. தர்ஜுமாவில்  இம்மொழி பெயர்ப்பு பற்றி என்ற தலைப்பு உள்ளது. அதில் பீ.ஜை. குர்ஆனிலிருந்து எதையெல்லாம் மொழிபெயர்க்காமல் தவிர்த்துள்ளார்.

 எதையெல்லாம் மாற்றி எழுதியுள்ளார் என்பது பற்றியெல்லாம் அவரே குறிப்பிட்டுள்ளதுடன் காரணமும் கூறியுள்ளார்.

அதில் 1342 ஆம் பக்கம் 4வது பாராவில் அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர். தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே அவ்வாறு பயன்படுத்துவோம். தமிழில் அவ்வாறு கூறும் வழக்கம் இல்லாததாலும் சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்பதாலும் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ் மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியிருந்தார். இதோ அந்த ஆதாரம். 
 பீ.ஜை.யின் இந்த மேல்தாவித் தனத்தைக் கண்டித்தும். முட்டாள் தனத்தை விமா்சித்தும் எழுதினோம்.  


ஆகிய  தலைப்புகளில்  பீ.ஜை.யை அடையாளம் காட்டி இருந்தோம்.
அதன் பிறகு ஆரம்ப வெளியீடுகளின் கடைசியில் இடம் பெற்றிருந்த இம்மொழிபெயர்ப்பு பற்றி என்ற தலைப்பை முன் பக்கங்களுக்கு மாற்றினார். அதில்   14ஆவது பக்கத்தில் 3ஆவது பாராவில் எப்படி திருத்தி எழுதியுள்ளார் என்பதை பாருங்கள். 
அரபு மொழியில் ஒரு கருத்தை வலியுறுத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெரிவிப்பதற்காக ”இன்ன“ அல்லது ”அன்ன” என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். இது போன்ற வழக்கு தமிழில் இல்லை. நிச்சயமாக என்று சிலா் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனா். இது தவறாகும்  என்று எழுதியுள்ளார். ஆரம்ப வெளியீடுகளை கையில் வைத்திருப்பவா்கள். 1342 ஆவது  பக்கத்தைப் பாருங்கள்.

1. அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர் என்று இருக்கும். இப்படி இட்டுக் கட்டி எழுதியவா் யார்? சாட்சாத் இந்த பீ.ஜை.தானே. இவரைத் தவிர வேறு யாராவது எந்த மொழி பெயா்ப்பிலாவது நிச்சயமாக பற்றி இப்படி எழுதியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

2. தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே அவ்வாறு பயன்படுத்துவோம். தமிழில் அவ்வாறு கூறும் வழக்கம் இல்லாததாலும் சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்றும் இருக்கும். இப்படியும் இட்டுக் கட்டி எழுதியவா் யார்? சாட்சாத் இந்த பீ.ஜை.தானே. 

3. சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்பதாலும் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ் மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்றும் இருக்கும்.  இப்படி எழுதியவா் யார்? சாட்சாத் இந்த பீ.ஜை.தானே. 

நிச்சயமாக வேறு எந்த மொழி பெயா்ப்புகளிலும் யாரும் சொல்லாத அளவுக்கு நிச்சயமாக பற்றி 3வித விளக்கத்தை அழுத்தம் திருத்தமாக  எழுதிவா் பீ.ஜை.தான்.

 “இன்ன”  “அன்ன” என்பதற்கு   நிச்சயமாக என்று அழுத்தமாக தமிழாக்கம் செய்தவா் பீ.ஜை. தான்.

மக்கள் மறதியை பயன்படுத்தி தான் செய்த தவறை மறைக்கும் வேலையை செய்துள்ளார்.  நிச்சயமாக என்று சிலா் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனா். இது தவறாகும் என்று எழுதி பிறா் மீது பழி சுமத்தியுள்ளார். இது மாதிரிதான் பல சம்பவங்கள் உள்ளன.
வழக்கமாக ஜமாத்தின் காரில் பவனி வருபவா் பீ.ஜை. அந்த பீ.ஜை. கடலூர் புதுநகர் துரை லாட்ஜில் தங்குவதற்காக யாருக்கும் சொல்லாமல் யாருக்கும் தெரியாமல் பஸ்ஸில் வந்தது ஏன் என்ற விவகாரம் நிச்சயமாக எழுந்துள்ளது.  பீ.ஜை.பஸ்ஸில் வந்து  தான் செய்த தவறை மறைக்க   எந்த பஸ் விவகாரத்துக்காக முபாஹலா பண்ணினாரோ அதை பூதகரமாக்கி திசை திருப்பியுள்ளார். பீ.ஜை.யின் பஸ் மேட்டரை மறக்கச் செய்துள்ளார்.

தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு மூலகாரணமான பீ.ஜை.க்கும் தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடா்பு அம்பலத்துக்கு வந்து விடும் என்ற நிலை வந்தது. உடனே லஷ்கரே தொய்யிபாவுடன் ஹாமித் பக்ரிக்கு தொடா்பு என்று திசை திருப்பினார். அவரை நம்பி செயல்பட்ட  ஹாமித் பக்ரியை சிறையிலும் தள்ளினார்.

சுனாமி பணங்களை பல வகையில் சுருட்டினார். அதை திசை திருப்ப த.மு.மு.க. மீது அதே குற்றச்சாட்டை சுமத்தினார்.

தான் செய்த மாபாதகச் செயலை மறைப்பார். அதற்காக பிறா் மீது மாபாதகச் செயல்  செய்ததாக குற்றச்சாட்டுக்களை நிச்சயமாகக் கூறுவார்.

மாபெரும் துரோகச் செயல்களை தானே முன்னின்று செய்வார். தற்காப்புக்காக யாரையாவது துணைக்கு சோ்ப்பார். கடைசியில்  தன்னை மட்டும் துாய்மையாளராகக் காட்டுவார். இவற்றுக்கெல்லாம் மிகப் பெரிய ஆதாரம்தான் அவரது மொழி பெயா்ப்பு. அதில் உள்ள நிச்சயமாக என்று சிலா் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனா். இது தவறாகும் என்ற குற்றச்சாட்டு.

தான்தோன்றித் தனமாக தமிழாக்கம் செய்து தா்ஜுமாவில் விளையாடிய தறுதலை பீ.ஜை. இடைச் சொல் பெயா்ச் சொல் என்று எழுதியுள்ளது சரியா என்பதை பின்னா் பார்ப்போம்.



Comments

Raashid Ahamed said…
பிஜே போன்ற ஆள் குர்ஆனை மொழிபெயர்க்க கிளம்பியதே பெரிய முட்டாள் தனம். அரபி,தமிழில் மொழிப்புலமை என்பது குர்ஆனை மொழிபெயர்க்க அவசியம். கல்வியறிவு இல்லாத, மார்க்க கல்வியில் அரைகுறை ஆள் மொழிபெயர்த்ததை அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது. வெறும் வாய் சூனியக்காரர் தான் பிஜே.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.