வழிகேட்டில் விடப்பட்டுள்ள மெகா மோசடியாளன் PJன் தர்ஜுமாவை படியுங்கள்

பி.ஜே. தர்ஜுமாவில் தவறுகளா? என்ற ஆய்வின் முதல் பாகமான கீழ் காணும் தலைப்பு இளையவனின் சைட்டில் இடம் பெற்றிருந்தது. இப்பொழுது அந்த சைட் நிறுத்தப்பட்டுவிட்டதால் அதை இப்பொழுது நமது பிளாக்ஸ்பாட்டில் வெளியிடுகிறோம்.

http://mdfazlulilahi.blogspot.com/2007/05/blog-post_03.html


அவூதுபில்லாஹிமினஷ்ஷைத்தானிர்ரஜீம் பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
வழிகேட்டில் விடப்பட்டுள்ள மெகா மோசடியாளன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பிரபல டிரஸ்ட் மோசடியாளரும் தவ்ஹீது வியாபாரியுமான பி.ஜே. தனது சொந்த பப்ளிகேஷன் சார்பில் விற்பனை செய்து வரும் நூல்களில் ஒன்றுதான் அவர் மொழி பெயர்ப்பிலான திருக்குர்ஆன் தமிழாக்கம். இதை அவரது ஆதரவாளர்கள் பி.ஜே. குர்ஆன் என்றார்கள்.


அவர்கள்தான் விவரமில்லாமல் இப்படிச் சொன்னார்கள் என்றால் பேரறிஞர் என்று நம்பப்படும் பி.ஜே.யும் அவ்வாறே விளம்பரம் செய்தார். அவசர கோலத்தில் முதல் பதிப்பு வெளியானவுடன் தவறுகள் விமர்சிக்கப்பட்டன. உடனே தனது மீடியாக்கள் மூலம் பாக்கர் பின்னணி குரலில் அவர் செய்த விளம்பரம். பி.ஜே. குர்ஆனில் தவறுகளா? என்பதுதான். 


ஏன் இந்த பொருள் மயக்க விளம்பரம் செய்கிறீர்கள். பி.ஜே.க்கு என்று தனிக் குர்ஆன் உள்ளதா? பி.ஜே.க்கென்று தனிக் குர்ஆன் எப்பொழுது வந்தது? பி.ஜே.யின் மொழி பெயர்ப்பில் தவறுகளா? பி.ஜே.யின் தர்ஜுமாவில் தவறுகளா? என்று விளம்பரம் செய்ய வேண்டியதுதானே என்ற கடுமையான எதிர்ப்பு விமர்சனங்கள் வந்தன. ஆனால் அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலோர் இன்றும் பி.ஜே. குர்ஆன் என்றே கூறி வருகிறார்கள்.

அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்.

நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரபலமான மார்க்க அறிஞர்கள் எழுதிச் சென்றதை தனது சொந்த கருத்தாகச் சொல்லும் திறமை பெற்றவர் பி.ஜே. மறந்தும் அந்த அறிஞர்களின் பெயரைக் கூற மாட்டார். அந்த பி.ஜே. தனது சுய ஆய்வில் மொழி பெயர்த்துள்ளதுபோல் காட்டிக் கொண்டு வெளியிட்டுள்ள தர்ஜுமாவில் ஆயிரமாயிரம் தவறுகள் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

அந்த தர்ஜுமாவில் நாம் காணும் தவறுகள் பற்றி எழுத உள்ளோம். திருக்குர்ஆன் மனிதர்களுக்கு வழிகாட்டி என்பதால் அதை படிக்கும்போது ஷைத்தான் மனிதர்களை வழிகெடுக்க கடும் முயற்சி செய்வான். அதனால்தான் ஒவ்வொன்றையும் இறைவனின் திருப்பெயரால் துவங்குமாறு பணிக்கப்பட்டுள்ள மனிதர்கள், அல்லாஹ் அருளியுள்ள குர்ஆனை படிக்கத் துவங்கும்போது ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டுள்ளோம்.

நீ(ங்கள்) குர்ஆனை படிக்கத் துவங்கினால் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்(ளுங்கள்) (அல்குர்ஆன் 16:98)

நாம் பார்க்க உள்ளதும் வழிகாட்டும் திருக்குர்ஆன் சம்பந்தமானது. அதனால் துவக்கத்தில் அவூதுபில்லாஹிமினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்பதையும் எழுதியுள்ளோம். எனவே ஒவ்வொருவரும் இந்த ஆயத்துப்படி உள்ளச்சத்துடன்  பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக என்ற வார்த்தையை நீக்கியுள்ளார்.

பி.ஜே. தர்ஜுமாவின் கடைசியில் இம்மொழிபெயர்ப்பு பற்றி என்ற தலைப்பு உள்ளது. அதில் பி.ஜே. குர்ஆனிலிருந்து எதையெல்லாம் மொழிபெயர்க்காமல் தவிர்த்துள்ளார், எதையெல்லாம் மாற்றி எழுதியுள்ளார் என்பது பற்றியெல்லாம் அவரே குறிப்பிட்டுள்ளதுடன் காரணமும் கூறியுள்ளார்.

அதில் 1342 ஆம் பக்கம் 4வது பாராவில் அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர். தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே அவ்வாறு பயன்படுத்துவோம். தமிழில் அவ்வாறு கூறும் வழக்கம் இல்லாததாலும் சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்பதாலும் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ் மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியுள்ளார். அதாவது நிச்சயமாக என்ற வார்த்தையை நீக்கியுள்ளார்.


நிச்சயமாக என்ற வார்த்தை தமிழாக இருந்தபோதிலும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இப்பொழுது அது மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அது போன்ற பொருள்தரக் கூடிய உறுதியாக, உண்மையிலேயே, கண்டிப்பாக போன்ற வார்த்தைகளும்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நண்பர்களிடமோ உறவினர்களிடமோ பேசிக் கொண்டிருக்கும்பொழுது உண்மையிலேயே ஒரு விஷயம் தெரியுமா? என்று கேட்டுவிட்டு சொல்லும் வழக்கம் உள்ளது. ஏன் இவ்வாறு கேட்டுவிட்டு சொல்லப்படுகிறது. நம்ப மாட்டார்கள் என்பதற்காகவா? கவனத்தை ஈர்ப்பதற்காக. இதுவரை பேசப்பட்டதைவிட இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக. 

ஊருக்கு வந்தால் நம்ம வீட்டுக்கு நிச்சயமாக வரணும் என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. ஆக நிச்சயமாக என்பதும் அதுபோன்ற வார்த்தைகளும் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல. ஒரு விஷயத்தில் அழுத்தம் கொடுப்பதற்கும் கவனத்தை ஈர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் என பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகும். இது எல்லா மொழிகளிலும் உள்ளதுதான்.

மரணத்தை எந்த எதிரி நம்ப மாட்டான்?

நிச்சயமாக என்பது தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் வார்த்தை என்பது உண்மை அல்ல என்பதற்கு பிரபலமான தமிழ் பாடல் ஒன்றையும் சான்றாக தருகிறோம். கடவுளை நம்பாதவர்கள் உண்டு மரணத்தை நம்பாதவர்கள் உண்டா?

"நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்" என்று நாகூர் ஹனீபா படியுள்ள பாடல் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இந்த பாடலில் மரணத்தை எந்த எதிரி நம்ப மாட்டான் என்பதற்காக நிச்சயம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக தமிழில் அவ்வாறு கூறும் வழக்கம் இல்லை என்று பி.ஜே. கூறியுள்ள காரணம் உண்மை அல்ல.

பி.ஜே.யின் தர்ஜுமாவை மட்டும் படித்தால் என்ன ஆகும்.

பி.ஜே.யின் அறிவுப்படி தமிழில் நிச்சயமாக என்று கூறும் வழக்கம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த அடிப்படையில் பார்த்தாலும் அதை நீக்கியது அவரது கருத்துப்படியும் தவறுதான்.

முஸ்லிம் அல்லாத தமிழ் மக்களும் குர்ஆன் இறை வேதம் என்று விளங்கிட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளதாக கூறுகிறார். அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர் என்ற பி.ஜே.யின் வாதம் உண்மையாக இருந்து இந்த வரலாறு தெரிந்த மாற்று மத தமிழறிஞர்கள் பி.ஜே.யின் தர்ஜுமாவை மட்டும் படித்தால் என்ன ஆகும்?

அரபு மொழி வழக்கப்படி நிச்சயமாக என்ற வார்த்தை சரிபாதி பயன்படுத்தப்படும் என அறிந்துள்ளோமே இதில் நிச்சயமாக என்ற வார்த்தை ஒன்றுகூட இல்லையே. அரபு மொழி வழக்கத்திற்கு மாற்றமானது எப்படி இறை வேதமாக இருக்க முடியும் எனவே இது இறை வேதம் இல்லை என்ற முடிவுக்குத்தானே வருவார்கள்.

அல்லாஹ்வின் கலாமில் உள்ளதை நீக்கி மொழி பெயர்த்தது சரியா?

சரி நீக்கப்பட்டது எது? சாதாரண மனிதனின் வார்த்தையா? அல்லாஹ்வின் (கலாம்) வார்த்தை. அல்லாஹ்வின் கலாமில் உள்ளதை நீக்கி மொழி பெயர்த்தது சரியா?

மொழி பெயர்ப்பு என்றால் என்ன அர்த்தம். மூலத்தில் உள்ளதை எழுத வேண்டும். அதற்குப் பெயர்தான் மொழிபெயர்ப்பு. மூலத்தில் உள்ளதை நீக்கியும் மாற்றியும் எழுதினால் அதற்குப் பெயர் மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியுமா? சொந்த கருத்துக்களின் திணிப்பு என்றுதான் சொல்ல முடியும்.

சாதாரண மனிதர்களின் சொல்லாக இருந்தாலும் அதை மாற்றியோ திருத்தியோ தவிர்த்தோ எழுதினால் அதை மொழி பெயர்ப்பு என்று யாராவது சொல்வார்களா. சம்பந்தப்பட்டவர்கள்தான் ஏற்பார்களா? அப்படி இருக்க அல்லாஹ்வுடைய கலாமை (சொல்லை) மொழி பெயர்க்கும்பொழுது மாற்றி, திருத்தி, தவிர்த்து எழுதினால் என்ன அர்த்தம்?

அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியது முறையா? முறை கேடா?

நிச்சயமாக என்ற பொருள் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ள வார்த்தைளை அல்லாஹ்வின் கலாமிலிருந்து நீக்கி விட்டு காரணம் கற்பித்துள்ள பி.ஜே. அலிஃப், லாம். மீம், போன்ற பொருள் செய்ய முடியாத எழுத்துக்களை நீக்கவில்லை. அதை இடம் பெறச் செய்து 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அரபு பண்டிதர்களின் வழக்கம் என்ற விளக்கத்தையும் எழுதியுள்ளார். 

தற்கால அரபிகளிடமும் முற்கால அரபிகளிடமும் வழக்கத்தில் இல்லாதது. 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அரபு பண்டிதர்களின் வழக்கத்தில் மட்டுமே இருந்தது. எந்த மொழியிலும் பொருள் தராத எழுத்துக்கள் என குறிப்பிட்டு விட்டு காப். ஹா. யா. ஐய்ன். ஸாத். போன்ற எழுத்துக்களை அப்படியே தமிழில் இடம் பெறச் செய்து விளக்கம் எழுதியுள்ளார். அது மாதிரி நிச்சயமாக என பொருள் தரக் கூடிய வார்த்தைகளை இடம் பெறச் செய்து விளக்கம் எழுதுவதுதானே முறை. அல்லாஹ்வின் வார்த்தைகளை நீக்கியது முறையா? முறை கேடா?


கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதை அரபு மொழியில் பயன்படுத்துவர் என்ற பி.ஜே.யின் வாதம் பொய் என்பதற்கு குர்ஆன் ஆயத்துக்களே ஆதாரங்களாக உள்ளன. மூஸா(அலை) தன் சமூகத்தாரிடம் பேசியபோதும் அவரது சமூகத்தார்

மூஸா(அலை) அவர்களிடம் பேசிய போதும் நிச்சயமாக என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளதாக 2:61,67,70,71 ஆகிய வசனங்கள் உட்பட பல வசனங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.

இது மாதிரி நபிமார்களெல்லாம் தங்களது சமூகத்தாரிடம் பேசிய போதும் அவர்களது சமூகத்தார் நபிமார்களிடம் பேசிய போதும் நிச்சயமாக என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாகவே குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான்.

அவர்களெல்லாம் அரபி மொழிதான் பேசினார்கள் என வாதிக்கப் போகிறாரா? அல்லது அவர்கள் சொல்லாத நிச்சயமாக என்ற வார்த்தையை அல்லாஹ் சேர்த்து சொல்லி விட்டான் என்று வாதிக்கப் போகிறாரா? பி.ஜே. எப்படி வாதிக்கப் போகிறார்.


2:32வது வசனத்தில் "... நீயே அறிந்தவன்: ஞானமிக்கவன்" என்று மலக்குகள் சொன்னபோது நிச்சயமாக என்ற பொருள்படும் 'இன்ன' என்ற வார்த்தையை சேர்த்து "இன்னக அன்தல் அலீமுல் ஹகீம்" என்று சொன்னதாக அல்லாஹ் கூறியுள்ளான்.

3:39வது வசனத்திலும் மலக்குகள் சொன்னதில் நிச்சயமாக என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. பி.ஜே, மலக்குகளை அரபிகள் என வாதிக்கப் போகிறாரா? அல்லது குர்ஆன் அரபியில் அருளப்பட்டதால் மலக்குகள் சொல்லாத வார்த்தையை அல்லாஹ் சேர்த்து சொல்லி விட்டான் என்று வாதிக்கப் போகிறாரா?

ஹாரூத், மாரூத் ஆகிய ஷைத்தான்களும் நிச்சயமாக என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளன என்பதை 2:102 வசனத்தின் மூலம் அறிகிறோம்.

அல்லாஹ்வே ஆதம் (அலை) இடம் பேசும்போது நிச்சயமாக என்ற வார்த்தையை சொன்னதாக 2:38வது வசனத்தில் சொல்லிக் காட்டியுள்ளான்.

இதுவரை நாம் பார்த்துள்ள குர்ஆன் ஆயத்துக்களும் இனி நாம் பார்க்க உள்ள குர்ஆன் ஆயத்துக்களும் பி.ஜே. கூறியுள்ளவை பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பி.ஜே.யின் கூற்றை பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் ஆயத்துக்கள்.

அல்லாஹ் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கிறான் என்ற பொருள்படும் "..அலீமன் ஹலீமா" என்ற வார்த்தைகளை 33:51இல் இடம் பெறச் செய்துள்ள அல்லாஹ்தான் அதே மாதிரி பொருள் படும் வார்த்தைகளை 22:59இல் இடம் பெறச் செய்யும்போது நிச்சயமாக என்ற பொருள்படும் இன்ன என்ற வார்த்தையை சேர்த்து "இன்னல்லாஹ லஅலீமுன் ஹலீம்" நிச்சயமாக அல்லாஹ் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கிறான் என்று இடம் பெறச் செய்துள்ளான்.

"வல்லாஹு ஸமீவுன் அலீம்" அல்லாஹ் செவியுறுபவன்: அறிந்தவன் என்று 2:224வது வசனத்தில் கூறியுள்ள அல்லாஹ்தான் 8:61வது வசனத்திவ் "இன்னஹு ஹுவஸ்ஸமீவுல் அலீம்" நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன்: அறிந்தவன் என கூறியுள்ளான்.

"வல்லாஹு ஷதீதுல் இகாப்" தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் கடுமையானவன் என்று 3:11 வசனத்தில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ்தான் "பஇன்னல்லாஹ ஷதீதுல் இகாப்" தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன் என குறிப்பிட்டுள்ளான்.

"வல்லாஹு மஅஸ்ஸாபிரீன்" அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று 2:249வசனத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ள அல்லாஹ்தான் "இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன்" நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று 2:153, 8:46 ஆகிய வசனங்களில் குறிப்பிட்டு காட்டியுள்ளான்.

இவை மட்டுமல்ல இன்னுமுள்ள ஏராளமான குர்ஆன் வசனங்களும் பி.ஜே.யின் கூற்றை பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

நீக்கி விட்டவர்கள் நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி விட்டவர்களே.

"நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ் மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று பி.ஜே. எழுதியுள்ளதையே எடுத்துக் கொள்வோம்.

சூரத்துல் பகராவின் 225வது வசனத்தில் "அல்லாஹ் மன்னிப்பவன்" என்ற பொருள் தரும் ...வல்லாஹு கபூருன்... என்று குறிப்பிட்டுள்ள அல்லாஹ் அதற்கு அடுத்ததாக உள்ள 226வது வசனத்தில் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்ற பொருள் தரக் கூடிய ..இன்னல்லாஹ கபூருன்... என்று குறிப்பிட்டுள்ளான்.

226ல் நிச்சயமாக என்ற வார்த்தையை சேர்த்து சொன்ன அல்லாஹ் 225இல் அதைச் சொல்லவில்லை. அப்படியானால் அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர் என்பதை அல்லாஹ் மறந்து விட்டானா?

எனவே நிச்சயமாக என்பதில் உள்ள அர்த்தத்தை நிச்சயமாக அல்லாஹ் அறிவான். அறிவுள்ள மக்களுக்கு அந்த அர்த்தத்தை அல்லாஹ் புரிய வைப்பான். இதை சிந்தித்து உணரத் தெரியாமல் நீக்கி விட்டவர்கள் நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி விட்டவர்களே.



பி.ஜே.யும் அவருடன் தப்ஸீர் பணியில் ஈடுபட்டவர்களும் 16:98 வசனப்படி ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேட தவறி விட்டார்கள். அதனால்தான் பி.ஜே. அணியினரிடம் ஷைத்தான் புகுந்து விளையாடி விட்டான். இதை தப்ஸீர் பணியின்போது அவர்கள் செய்த ஷைத்தானுக்கு உவந்த செயல்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தப்ஸீர் பணிக்காக பி.ஜே. பொதுப்பணிகளிலிருந்து ஒதுங்கியதை அனைவரும் அறிவோம். மக்களுக்கு பயன் தரும் பொதுப்பணிகளிலிருந்து ஒதுங்கிய பி.ஜே. தப்ஸீர் பணியின்போதுதான் அவதூறு பிரசுரங்களையும் வீடியோக்களையும் சி.டி.க்களையும் பொய்க் கடிதங்களையும் வெளியிட்டார்.

இறுதியாக டிரஸ்டுகளை மோசடி செய்து அமானித மெகா மோசடியாளர் பி.ஜே. என்பதையும் நிரூபித்துக் கொண்டார். தப்ஸீர் பணியின்போது பி.ஜே. அணியினரிடம் ஷைத்தானின் ஆதிக்கம் இருக்கவில்லை என்பது உண்மையானால் பி.ஜே. அணியினர் கீழ் காணும் விஷயங்களுக்கு முபாஹலா செய்ய முன் வரட்டும்.

தப்ஸீர் பணியின் பெயரால் 2002 ஜுனில் கடையநல்லூரில் பி.ஜே. முகாமிட்டிருந்தபோது அவர் வெளியிட்ட அவதூறு பிரசுரம் சம்பந்தமாகவும் அதை ஒட்டி வெளியிட்ட வீடியோ சி.டி.க்களில் உள்ளவற்றுக்கும் பொய்யான தேதியிட்டு அவர் கொடுத்த கடிதங்களுக்கும் டிரஸ்டு மோசடிகளுக்கும் முபாஹலா செய்ய வரட்டும்.

பி.ஜே.யின் மொழி பெயர்ப்பில் குர்ஆனிலிருந்து சுமார் 2182 வார்த்தைகள் குறைக்கப்பட்டுள்ளது.

சவடால் பேர்வழிகளும் டிரஸ்டு மோசடியாளர்களுமான பி.ஜே. அணியினர் ஷைத்தானின் வழியிலும் அவனது பிடியிலும் வசமாக சிக்கி இருப்பதால் முபாஹாவுக்கு வரவே மாட்டார்கள்.

நாம் கணக்கிட்ட வரையில் நிச்சயமாக என்ற பொருள் தரக்கூடிய 'இன்ன' 'அன்ன' போன்ற வார்த்தைகள் திருக்குர்ஆனில் சுமார் 2182 இடங்களில் உள்ளன.

இவற்றின் மூலம் மட்டும் பி.ஜே.யின் மொழி பெயர்ப்பில் குர்ஆனிலிருந்து 2182 வார்த்தைகள் குறைக்கப்பட்டுள்ளது. ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடாமல் அவர்கள் வெளியிட்ட தர்ஜுமாவில் அவர்கள் நீக்கியுள்ள இன்னுமுள்ள வார்த்தைகளை எண்ணினால் எத்தனை ஆயிரங்கள் வருமோ அல்லாஹ்வே அறிவான்.

ஒரு எழுத்துக்கு 10 நன்மை என்றால் பீ.ஜே. தர்ஜுமாவை படிக்கும்பொழுது எத்தனை லட்சம் நன்மைகளை இழக்கிறோம்?

எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுபவராக இருந்தால் ஷைத்தானால் வழி கெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் பின்னால் செல்லலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வழிகேட்டில் விடப்பட்டுள்ள மெகா மோசடியாளனின் சூழ்ச்சிகளிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானக.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி
04-05-2005

05-05-2005 முதல் http://www.pjvstmmk.com/ என்ற சைட்டில் இதைப் பார்த்த பலர் காப்பி எடுத்து பள்ளிவாசல்களில் வினியோகித்துள்ளனர். குறிப்பாக தென்காசியிலிருந்து சுல்தான் அவர்கள் போன் செய்து இதைக் காப்பி எடுத்து பள்ளிவாசலில் போட்டுள்ளேன் என்று கூறினார். நீங்களும் படித்துவிட்டு காப்பி எடுத்து வினியோகியுங்கள்.

Comments

Anonymous said…
http://youtube.com/watch?v=E9cc3QzeszY

please log on watch full video..
Anonymous said…
http://youtube.com/watch?v=E9cc3QzeszY

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.