அண்ணன் சொன்னதும் பொய்யே பொய்யே! அலாவுதீன் சொன்னதும் பொய்யே பொய்யே!! அன்வர் பாஷா சொன்னதும் பொய்யே போய்யே!!!

                             பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                   10-04-2005

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  வளைகுடா பயணத்தில் பி.ஜே. தன்னால் இயன்ற அளவுக்கு  வதந்திகளையும் பொய்களையும் பரப்பினார். அவற்றை சி.டி.க்களாக தொகுத்தும் வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள சி.டி.க்களின் வரிசைப்படி பி.ஜே. வளைகுடாவில் பரப்பி உள்ள பொய்களை தொடராக அடையாளம் காட்ட முடிவு செய்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வரிசைப்படி எழுதவில்லை. 

தான் என்பதை நிலை நாட்ட பி.ஜே. இலங்கைக்கும் சென்றார். அல்லாஹ்வின் நாட்டப்படி அங்கும் தான் என்ற அகம்பாவத்துக்கும் மமதைக்கும் அடி  விழுந்து விட்டது. 

இலங்கை குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பி.ஜே. நாடு கடத்தப்பட்டார். இதை மறைக்க அவர்களது மீடியாக்கள் மூலம் அவசர அவசரமானப் பொய்களை இயன்ற வரை பரப்பினார்கள். 

குறிப்பாக பி.ஜே. வெளிநாடுகளுக்குச் சென்றதே தவ்ஹீது பயான் பண்ணத்தான் என்பது போலவும் மாயையை ஏற்படுத்தினார்கள். இந்த டி.வி. நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடிவிலும் அலாவுதீன் இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். 

எனவே இவைகளெல்லாம் பொய் என்பதையும், பி.ஜே. வெளிநாடுகளுக்கு வந்ததன் நோக்கம் தவ்ஹீது பயான் செய்ய அல்ல என்பதையும், தான் என்பதை நிலை நாட்டத்தான் என்பதையும் பி.ஜே. அவர்களே  நிரூபித்துள்ளதை  காண்போம். இன்ஷாஅல்லாஹ்.


மனம் திறந்த மடல் என்றால் எந்த மனம் திறந்த மடல்.

அபுதாபியில் உள்ள ஒரு ரூமுக்குள் நடந்த கூட்டத்தின் 3வது சி.டி.யில் 58வது நிமிடத்தில் ஒரு சகோதரர் மனம் திறந்த மடலில் நான் வெளி நாட்டுக்கே வர மாட்டேன் என நீங்கள் எழுதி இருந்தீர்கள் என்று கேட்கிறார். 

1986களிலிருந்தே வெளி நாடுகளுக்கு செல்ல மாட்டேன் என்று பி.ஜே. பேசியுள்ள கேஸட்கள் ஏராளமாக உள்ளன. இதுவெல்லாம் புதிய ஏமாளிகளுக்குத் தெரியாது. மனம் திறந்த மடலில்தான் இப்படி எழுதி இருப்பதாக இவர்கள் கேள்விப்பட்டுள்ளார்கள் போலும். 

அந்த அடிப்படையில் ஒருவர் கேட்கிறார். (இங்கே மனம் திறந்த மடல் என்று குறிப்பிடப்படுவது 2000 அக்டோபர் 20-26 உணர்வு இதழில் வந்ததையே குறிப்பிடுகிறோம். 

புதிதாக ஏமாந்து வருகிறவர்களுக்கு இந்த ஒரு மனம் திறந்த மடல் மட்டும்தான் தெரியும். பி.ஜே. யின் வாழ்க்கையில் பல மனம் திறந்த மடல்கள் எழுதி பல முறை பொது வாழ்விலிருந்து ஒதுங்கியிருக்கிறார். 

கடந்த காலத்தில் பி.ஜே.யின் கவரும் பேச்சில் மயங்கி ஏமாளிகளாக இருந்து புத்தி வந்து திருந்தியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மொட்டையாக மனம் திறந்த மடல் என்றால் எந்த மனம் திறந்த மடல் எந்த ஆண்டில் எழுதியதில் என்ற குழப்பம் வரும். எனவேதான் அதை முதலில் தெளிவு படுத்திக் கொள்கிறோம்.)

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பொய் சொல்வதில் வல்லவர்.

இந்த கேள்விக்குப் பி.ஜே, ”நான் வெளிநாடுகளுக்கு வரக் கூடாது என்ற நிலைப்பாடு எடுத்திருந்தோம். விவாதம் போன்ற எமர்ஜென்ஸியான விஷயங்கள் இருக்குமானால் போகலாம் என்று விதிவிலக்கு வைத்திருந்தோம். வெளிநாட்டுக்கு வருவதில்லை என்று எழுதிய பிறகும் கூட இலங்கைக்கு போனது விவாதத்திற்குத்தான். இலங்கைக்கு மாத்திரம் போய் இருக்கிறேன். 3 முறை போனதில் முதல் முறை எந்த ஒரு பாலிஸியும் எடுக்கவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் போனோம்” என்று பதில் சொல்கிறார். 

அதாவது கேள்வி கேட்டவரின் வார்த்தைகளையும் கூடி இருப்பவர்களெல்லாம் புதியவர்கள் என்ற சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு பொய் சொல்லி உள்ளார். அதாவது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பொய் சொல்வதில் வல்லவர் பி.ஜே. என்பதை இங்கும் நிரூபித்துள்ளார். 

பி.ஜே.யும் பி.ஜே.யானிகளும் பொய்யர்கள் என்பதற்கு பி.ஜே.யின் எழுத்துக்ளையும்  பேச்சுக்களையும் பி.ஜே.யானிகளின் கூற்றையும்தான் ஆதாரமாகக் காட்டி நிரூபித்து வருகிறோம். 

அந்த அடிப்படையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அபுதாபியில் பி.ஜே கூறியுள்ள இந்த பொய்யையும் பொய் என்று நிரூபிப்பதற்கு  ஆதாரம் பி.ஜே.தான். மனம் திறந்த மடலில் வெளிநாடு சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள அந்த பகுதியே பி.ஜே. அபுதாபியில் கூறி உள்ளது பொய் என நிரூபிப்பதைப் பாருங்கள்.

வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என்ற பாலிஸி

விவாதத்திற்காகவும் மாநாட்டிற்காகவும் பத்தாண்டுகளுக்கு முன்பு இரு முறை இலங்கைக்குச் சென்றிருக்கிறேன். இரண்டாவது முறை இலங்கை சென்றபோது அங்கிருந்து சிங்கப்பூருக்கு ஒரு குழுவாக சுற்றுலா சென்று வந்தோம்.  இது தவிர என் வாழ்நாளில் எந்த வெளிநாடுகளுக்கும் பயணித்ததில்லை. பல நாடுகளிலிருந்த அழைப்புகள் வந்தும் வெளிநாட்டுப் பயணங்கள் செய்து பயனடைய நினைத்ததுமில்லை  என்றுதான் எழுதி இருந்தார். 

உணர்வில் வந்த மனம் திறந்த மடலின் போதுதான் வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது என்ற பாலிஸி எடுத்து எழுதியது போலவும். அதுவும் மஷுரா பண்ணி முடிவு செய்து எழுதியது போலவும் அதற்குப் பிறகுதான் விவாதத்திற்காக  மட்டும் இலங்கை போனது போலவும் பேசி அபுதாபியில் கூடி இருந்தவர்களை ஏமாற்றியுள்ளார். 

1986களிலிருந்தே வெளி நாடுகளுக்கு செல்ல மாட்டேன் என்று கூறி வருவது பழைய ஏமாளிகளுக்குத் தெரியும். அதனால்தான் 10 ஆண்டுகளுக்கு முன் இலங்கை சென்றதும் வெளிநாடு செல்லக் கூடாது என்ற பாலிஸிக்கு உட்பட்டது என்ற பொருள்படத்தான் விவாதத்திற்காகவும் மாநாட்டிற்காகவும் பத்தாண்டுகளுக்கு முன்பு இரு முறை இலங்கைக்குச் சென்றிருக்கிறேன் என்று எழுதினார். 

மாடி வீட்டு ஏழை பி.ஜே. 1992லேயே சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றது புதிய ஏமாளிகளுக்குத் தெரியாது. எனவே சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றதைச் சொல்லாமல் இலங்கைக்கு மாத்திரம் போய் இருக்கிறேன் என்றும் கூறி அபுதாபியில் கூடி இருந்தவர்களை ஏமாற்றியுள்ளார். 

இதுதான் பி.ஜே.யின்  நிரந்தர நிலைப்பாடு.

பிரச்சாரம் செய்ய வெளிநாடுகளுக்கு வந்தால் பொருளாதரம் சம்பந்தமான தப்பான விமர்சனங்கள் வந்து விடுகிறது. அந்த மாதிரியான விமர்சனங்கள் வருவதை நான் விரும்பவில்லை அதனால் வரவில்லை என தனது பதிலில் கூறி உள்ளார். 

பொருளாதர குற்றச்சாட்டுகளுக்கு பயந்தவர் என்பது உண்மையானால் டிரஸ்டுகளுக்கு மட்டும் எப்படி தலைமை தாங்கினார். மோசடி குற்றச்சாட்டுக்கள் வந்த பின்னரும் அந்தப் பதவியை விடாப்பிடியாக - உடும்புப் பிடியாக பிடித்துத் தொங்கிக்  கொண்டிருப்பது ஏன்? 

எனவே தப்பான அபிப்பிராயம் வந்து விடக் கூடாது என்பதற்காக வரவில்லை என்பதெல்லாம் பொய். கேட்கப்பட்ட கேள்விக்கு ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி அந்தந்த இடத்துக்கு தக்கவாறு சமாளித்து இருப்பவர்களை ஏமாற்றிட வேண்டும் இதுதான் பி.ஜே.யின் நிரந்தர நிலைப்பாடு. இதைத்தான் இடத்துக்கு தக்கவாறு புதுப் புது பாலிஸி எடுத்து விடுவார் பி.ஜே. என  லுஹா, இபுறாஹீம், எம்.எஸ். சுலைமான் ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். 

தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாதவர். 

பொருளாதரம் சம்பந்தமான விமர்சனங்கள் வருவதை நான் விரும்பவில்லை. அதனால் ஜமாஅத்துக்காகவும் கூட வசூல் செய்ய மாட்டேன் என்ற கண்டிஷனுடன்தான் வந்துள்ளேன் என்றும் கூறுகிறார். 

ஒருவன் தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை அவன் முஃமின் இல்லை என்று  நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இவரது இன்றைய அமைப்பின் பொம்மைத் தலைவரான சைபுல்லாஹ், ஐ.ஜே.பி. கொடியை தூக்கிப் பிடிக்கத் தயாராகி விட்ட லுஹா மற்றுமுள்ளவர்களையும் பி.ஜே. அமைப்பின் சார்பான கல்லூரி வசூலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். 

பொருளாதரம் சம்பந்தமான விமர்சனங்கள் வந்தன. அதற்குப் பிறகு இப்பொழுதும் வசூலுக்காக அவர்களையும் மற்றவர்களைப் போகச் சொல்கிறார். இதன் மூலம் பி.ஜே. தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாதவர் என்பதையும் நிரூபித்துள்ளார். 

மொத்தத்தில்  கூடி இருந்தவர்களை மடையர்களாகவே கருதி உள்ளார்.

பயான் தலைப்பு உங்களுக்கு (கேஸட்களாக, சி.டி.க்களாக) வந்து சேர்ந்து விடும். நம்மீது தப்பான அபிப்பிராயங்கள் நிலவுகிறது. அதை களைகிற கடமை இருக்கிறது. விவாதம் மாதிரியான நெருக்கடி கட்டம் என்கிறதால் அதை ஏற்றுக் கொண்டு வெளிநாடு வந்தேன் என்றும் கூறியுள்ளார். 

விவாதம் மாதிரி நெருக்கடி மார்க்க விஷயங்களில் வரவில்லையா? அவரது விவகாரத்துக்கு மட்டும்தான் வந்துள்ளதா? அதற்குத்தான் சிறப்பு சி.டி.க்கள் வெளியிட்டு விட்டாரே அவை வெளிநாடுகளுக்கும் வந்து விட்டதே. பயான் சி.டி.க்களை இலவசமாக வெளியிடாத அவர் இந்த பசாது சி.டி.க்களை ஆயிரக் கணக்கில்  வெளியிட்டுள்ளாரே. இதை அவரே துபையில் கூறி உள்ளாரே. மொத்தத்தில்  கூடி இருந்தவர்களை மடையர்களாகவே கருதி உள்ளார். 

மறுமையில் பயன் பெற முடியாது  என்பதால் உலக ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்.

என்னைப் பற்றி யார் எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் அதை என் கவனத்துக்கு யாரும் கொண்டு வரத்தேவையில்லை. இதற்கு முன்னரும், இனியும் அவதூறுப் பிரச்சாரம் செய்யும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். அவற்றை மறுமை நாளுக்கான தயாரிப்பாக நான் படுத்துவேன்.... இதன் பிறகும் யாரேனும் அவதூறு பரப்பினால் மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு எதிராக நான் வழக்குத் தொடர்வேன். என்றும் மனம் திறந்த மடலில் எழுதி இருந்தார். 

தான் என்ற அகம்பாவத்துடன் டாமினேட் செய்தார். த.மு.மு.க. தலைமையை கைப்பற்ற சதிச் செயல் செய்தார். தஞ்சைப் பேரணியை தோழ்வியுறச் செய்ய முயற்சி செய்தார். டிரஸ்ட்டுகளை அபகரித்து விட்டார். 

இலங்கையில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் உட்பட பழுலுல் இலாஹியாகிய நான் பி.ஜே. மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் யாவும் அவதூறுகளாக இருந்தால் அவர் எழுதியுள்ளபடி எந்த பதிலும் சொல்லாமல் மறுமைக்கான தயாரிப்பு என வைத்திருந்திருப்பார். 

அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் யாவும் பொய்கள் அல்ல என்பதை அவரது வெளிநாட்டு பயணங்கள் மூலம் அவரே நிரூபித்து விட்டார். இதை வைத்து மறுமையில் பயன் பெற முடியாது  என்பதால் உலக ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்.

தான் என்பதை நிலை நாட்டவே வந்துள்ளார்.

பி.ஜே. பயான் பேச வரவில்லை பசாது பேசவே வந்துள்ளார் என்பதை பயான் தலைப்பு உங்களுக்கு வந்து சேர்ந்து விடும் என்ற வார்த்தையால் பி.ஜே.யே சொல்லி விட்டார். தவ்ஹீது பிரச்சாரம் செய்ய வாருங்கள் என்று அழைக்கப்பட்ட போதெல்லாம் வர மறுத்தவர் பி.ஜே. 

அரபகத்திலுள்ள  தமிழ் முஸ்லிம்களுக்கு தவ்ஹீது பிரச்சாரம் செய்ய ஆளில்லாத  காலத்தில் பிரச்சாரம் செய்ய வாருங்கள் என்று அழைக்கப்பட்ட போதெல்லாம் வர மறுத்தவர் பி.ஜே. 

அந்த பி.ஜே. தவ்ஹீது பிரச்சாரகர்கள் நிறைந்துள்ள இந்த காலத்தில் வந்துள்ளார். எனவே பி.ஜே. வெளிநாடு வந்துள்ளது தவ்ஹீது பிரச்சாரத்துக்காக அல்ல தான் மமதையை, அகம்பாவத்தை நிலை நாட்டவே வந்துள்ளார்.  

மார்க்க பயான் செய்ய வரவில்லை. இதுதான் பி.ஜே.யின் வெளிநாடு பயணம் பற்றி அவரை அறிந்து வைத்துள்ளவர்கள் கூறியது. இதைத்தான்  பி.ஜே.யின் இந்த அபுதாபி பேச்சு உண்மைபடுத்தி உள்ளது. அதாவது தவ்ஹீது பிரச்சாரத்திற்காக என பி.ஜே.யாகிய அண்ணன் சொன்னதும் பொய்யே பொய்யே! அலாவுதீன் சொன்னதும் பொய்யே பொய்யே!! அன்வர் பாஷா சொன்னதும் பொய்யே போய்யே!!! என்றும் நிரூபித்துள்ளது.                 அன்புடன்: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி








Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.