தவ்ஹீத் கொள்கை பிரச்சனையா? கூட்டுடைப்பு கொள்கை பிரச்சனையா?

ஜவாஹிருல்லாஹ் கைப்பட எழுதி உள்ள த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் எடுத்த தீர்மானம் 4 பக்கம் ஜே.பி.ஜி பைலாக வருவதால் கீழே டைப் செய்துள்ளோம். ஜே.பி.ஜி பைல் hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற வெப் சைட்டில் உள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கூட்டம் 10-4-2004 அன்று கழகத்தின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வருவோர் பங்கு கொண்டனர்.
மூத்த தலைவர் பி.ஜைனுல்ஆபிதீன் (என ஆரம்பித்து பொதுச்செயலாளர் பாக்கர் என எழுதி அழித்து திருத்தலுடன் கலந்து கொண்டோர் பெயர்கள் உள்ளன)

இக்கூட்டத்தின் பின் வரும் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அனைத்து பிரிவு முஸ்லிம்களின் நலன்களுக்கு பாடுபடுவதற்காக தொடங்கப்பட்டது. இருப்பினும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களது இயக்கம் மட்டுமே என்ற எண்ணம் மக்களிடம் பரவியுள்ளது. இதன் காரணமாக த.மு.மு.கவின் செயல்பாடுகளை மனதார விரும்பினாலும் பலதரப்பட்ட முஸ்லிம் சமுதாய மக்கள் த.மு.மு.கவில் தம்மை இணைத்துக் கொள்ள தயங்கி வருகின்றனர்.

முஸ்லிம் பொது மக்களிடையே நிலவி வரும் இந்த மன நிலையை மாற்றுவதற்காக அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை மட்டுமே கொண்டுள்ள இயக்கம் அல்ல (ஷமட்டுமல்ல| என்ற வாசகம் எழுதி அடிக்கப்பட்டுள்ளது) த.மு.மு.க. என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது என்பது உறுதிபடுத்தப்படுகிறது.

இந்த சூழலில் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் முக்கிய பிரச்சாரகராக இருக்கும் சகோதரர் பி. ஜைனுல்ஆபிதீன் அவர்கள், தான் த.மு.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அதன் அனைத்து பெறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக (சகோதரர் பி. ஜைனுல்ஆபிதீன் என்ற எழுதி அடிக்கப்பட்டுள்ளது) நிர்வாக குழுவிடம் தெரிவித்தார்.
சகோதரர் பி. ஜைனுல்ஆபிதீன் அவர்களது இந்த முடிவை த.மு.மு.க.வின் நிர்வாகக் குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. கொள்கை மற்றும் செயற்பாடுகள் அடிப்படையிலான இந்த பிரச்னை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

த.மு.மு.க. தலைமை நிர்வாக குழுவின் இந்த நடவடிக்கைக்கு வேறு விதமான காரணமும் இல்லையென சகோதரர் பி. ஜைனுல்ஆபிதீன் அவர்களாலும் தலைமை நிர்;வாக குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

சகோதரர் பி. ஜைனுல்ஆபிதீன் அவர்களுக்கும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கும் இனி அமைப்பு ரீதியான எவ்விதமான உறவும் இல்லை என்பது சுமூகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.(ஒப்பம்) என போட்டு கையெழுத்திற்காக நிர்வாகிகள் பெயரை எழுதி உள்ளார்)


மேற்கண்டவாறு எழுதியதை பி.ஜே. தள்ளுபடி செய்துள்ளார். நிர்வாகிகள் எழுத்திலிருந்து தவ்ஹீது பிரச்சனை அல்ல கூட்டுடைப்புக்கும் த.மு.மு.க.வுக்கும் உள்ள நிர்வாகப் பிரச்சனைதான் என்பது தௌ;ளத் தெளிவாகிறது. முஸ்லிம் டிரஸ்டிலிருந்து பி.ஜே வகையறா மவுலவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடியாமல் போகவே. மவுலவிகள் வருவாய்க்காக முஸ்லிம் டிரஸ்டு தஃவா பணியை 65 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கொடுத்ததை அறிவீர்கள். அதன் பிண்ணனிதான் இது என உணர முடிகிறது.

ஜாக் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வேறு அமைப்பில் இருக்கக் கூடாது என்று எஸ்.கே. பெயரில். அறிவிப்பு வந்தது. இது ஷஷத,மு.மு.கவில் நான் இருப்பதால் எனக்கு எதிராகவே எஸ்.கே. வெளியிட்டுள்ளார் என்று பி.ஜே. கூறி வந்தார். எல்லோரும் எஸ்.கே. மீது ஆத்திரப்பட்டார்கள். பிரச்சனை முற்றி;ய பிறகுதான், இப்படி ஒரு தீர்மானம் போடச் சொன்னதும் நீங்கள்தான், அதை அல் ஜன்னத்தில் போட்டதும் நீங்கள்தான் என பி.ஜே.யைப் பார்த்து எஸ்.கே. நேருக்கு நேர் சொன்னார். அப்போதுதான் பி.ஜே. சாயம் வெளுத்தது. கூட்டுடைப்பு கூட்டச் சாயம் இனிதான் வெளுக்கும்.

ஜவாஹிருல்லாஹ், பி.ஜே. கைப்பட எழுதி உள்ள தீர்மானம், இதை ஒட்டி அபுதாபி, அல் அய்ன், சார்ஜா, புஜைரா மு.மு.க. மண்டலங்கள் மற்றும் துபை ஜே.டி. அனுப்பி உள்ள கடிதங்கள் ஆகியவற்றின் காப்பிகள் நம்மிடம் உள்ளன.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.