எல்லா பிரச்சனைக்கும் காரணமான சதிகாரன் லுஹாவா? பி.ஜே.யா?

அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.கவிலிருந்து பி.ஜே.யும் அவரது ஆதரவாளர்களும் விலகி விட்டார்கள். இதற்குரிய காரணம் பற்றி பி.ஜே. அவர்கள் வெளியிட்டுள்ள மலிவு விலை சி.டி.யிலும் வட சென்னை பொதுக் குழுவில் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசியுள்ள பேச்சிலும் மேலப்பாளையம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனால் சமுதாயத்தவர் மத்தியில் பேசப்படும் பேச்சுக்களில் மேலப்பாளையம் விமர்சிக்கப்படும் இடத்தைப்  பெற்றுள்ளது.

எப்படிப்பட்ட மேலப்பாளையம்.

சுதந்திர போராட்டத்தின் போது தலைவர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் சுதந்திர போராட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்தார்கள். அப்பொழுது இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முஸ்லிம் லீக் தலைவர் கண்ணியத்திற்குரிய முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள் தேர்ந்தெடுத்த ஊர் மேலப்பாளையம். இதைக் கூறி இன்றைக்கும் மேலப்பாளையத்தை பெருமைபடுத்தக் கூடிய வரலாறு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

1986க்குப் பிறகு தவ்ஹீது ஜமாஅத்களின் முன்னோடிகளின் ஊர்களில் கூட இன்டோர் மீட்டிங் நடத்த முடியாத நிலை இருந்தது. அப்போது பொதுத்திடலில் பிரச்சாரம் நடத்த வழி வகுத்த ஊர் மேலப்பாளையம். அதுமட்டுமல்ல அப்பொழுதே வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்திக் காட்டியது மேலப்பாளையம்.

தடா என்றாலே தடா என்றிருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த தடாவை எதிர்த்து பேரணி நடத்த முயன்ற டாக்டர் ராமதாஸ் அவர்களைக் கூட வேட்டியை உருவி ஓட ஓட அடித்து ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட காலம். அப்படிப்பட்ட காலத்தில் தடா எதிர்ப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்தி த.மு.மு.க. எனும் போராட்ட அமைப்பு காண தெம்பை தந்த ஊர் மேலப்பாளையம்..

இது போன்ற பெருமைகளை நிறையவே கொண்ட மேலப்பாயைம்தான் வாழ்வுரிமை மாநாட்டையும் தஞ்சை பேரணியையும் கண்ட பேரியக்கமாம் த.மு.மு.க.வில் பிரச்சனை வரக்காரணம் என மக்கள் மத்தியில் இழிவாக பேசப்படுவது சரியா? இதற்கு பின்னணி மஸ்ஜிதுத் தக்வா என்றும் அதற்கு பின்னணி கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியாகிய நான் என்றும் பரப்பப்படுவது உண்மையா? இந்த பிளவு ஏற்படக் காரணம் யார்? என்பதை அறிய மஸ்ஜிதுத் தக்வா, மஸ்ஜிதுர்றஹ்மான் என விரிவாகவே விளக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அல்லாஹ் மகத்தான நன்னைமகளை கொடுப்பானாக ஆமீன்.

நம்மீது நல் எண்ணமும் பிரியமும் உடையவர்கள் நோட்டீஸ்கள் போடாதீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று விட்டு விடுங்கள் என்று கூறுகின்றனர். இது அவர்களுடைய நிலையில் இருந்து அவர்கள் கூறும் கருத்து. நல்ல நோக்கம் என்ற என்ற அடிப்படையில் கூறும் அவர்கள் நல்ல எண்ணத்திற்கு அல்லாஹ் மகத்தான நன்னைமகளை கொடுப்பானாக ஆமீன்.

அந்த அறிவாளிகளுக்கு எப்படி புரியும்.

முக்கி அறிவிப்பு பற்றி பிரசுரம் வெளியிட்டது த.மு.மு.க.வில் பதவி பெற என தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அறிஞர் ஹாமித்பக்ரியின் பெயர் சொன்னாலேயே ஜெயில் என பி.ஜே. பயம் காட்டிய போது அறிஞர் ஹாமித்பக்ரியின் தரப்பில் உள்ள நியாயத்தை பிரசுரமாக வெளியிட்டவன் நான். ஜாமீனே கிடைக்காது என்று பி.ஜே.யால் கூறப்பட்ட நிலையில், ஜெயிலில் இருந்த அறிஞர் ஹாமித்பக்ரி இடம் என்ன பதவியை எதிர் பார்த்திருக்க முடியும். இது அந்த அறிவாளிகளுக்கு எப்படி புரியும்.

என்னை ஒரு அரசியல் அமைப்புடன் இணைத்துப் பேசுகிறார்கள். அரசியல் அமைப்பில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் யாருக்கு எதிராகவும் வாய் திறப்பார்களா? இது கூட இந்த அறிவாளிகளுக்குத் தெரியவில்லை. இயக்கங்களில் இருந்தால் சுதந்திரமாக கருத்து வெளியிட முடியாது. எனவே நான் எந்த இயக்கங்களிலும் இல்லை. இனி எந்த இயக்கங்களிலும் இணைய மாட்டேன், எந்த ஜமாஅத்திலும் பொறுப்பு வகிக்க மாட்டேன் என்பதையும் அந்த அறிவாளிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்க ரீதியான கடமை.

அடிக்கடி கூடாரம் மாறும் சமுதாய விரோத சக்திகளை அவ்வப்போது உரிய நேரத்தில் அடையாளம் காட்டுவது மார்க்க ரீதியான கடமை என்று நான் நம்புகிறேன். எனவே அநியாயமாக பாதிக்கப்பட்வர்களுக்காக உரிய நேரத்தில் எதற்கும் அஞ்சாமல் நிகழ்வுகளை ஒட்டிய உண்மைகளை வெளியிடுகிறேன். எனது நோட்டீஸ்களால் எந்த பயன்களும் இல்லை என்று, பொதுவாகவோ எதிர் அணியாகவோ நின்று இப்பொழுது விமர்சிப்பவர்களுக்கு நமது பதில். அறிஞர் ஹாமித்பக்ரியும் அவருடன் சிறையில் இருந்தவர்களும் நமது பிரசுரங்களை இன்று எதிர்ப்பவர்ளைப் போல் ஒரு காலத்தில் எதிர்ப்பவர்களாக இருந்திருக்கலாம்.

நோட்டீஸ்களால் உள்ள பயன்.

அவர்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டபோது நாம் வெளியிட்ட பிரசுரங்கள் அவர்கள் மனதில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அதன் பயன் என்ன? என்று அவர்களிடம் கேளுங்கள். பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள் மத்தியில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பயன் அளிக்கும் வகையில் வெளி வரும் நமது பிரசுரங்களின் அருமையை பாதிக்கப்பட்வர்கள் உணர்வார்கள். பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்த்தால்தான் நமது பிரசுரங்களின் அருமைகளை புரிய முடியும்.

மஸ்ஜித் தக்வா.

மஸ்ஜித் தக்வா சம்பந்தமாக செல் மூலம் செய்திகள் வரப் பெற்றோம். இதுபோல் செய்திகள் வரப்பெற்ற மேலப்பாளையவாசிகள் எம்மை தொடர்பு கொண்டு நமது நிலைப்பாடு என்ன என்று விசாரித்தார்கள். சென்னை சன்ஞ்சார் நெட் வெப் சைட்டில் வெளியிடப்பட்டிருந்த கடிதங்களையும் காணப் பெற்றோம். எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஆதரவையும் கேட்டு செல்லில் அடுத்தடுத்து மெஸேஜ்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலப்பாயைம் தாஹிர் நேரில் வந்தார், ஆரம்ப கால தவ்ஹீதுவாதி என்ற அடிப்படையில் தக்வா பள்ளி அமைப்பது சம்பந்தமாக ஆலோசனை கூறுங்கள்| என்றார்.

பிரிவுப் பள்ளி கூடாது.

பிரிவுப் பள்ளி கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். மஸ்ஜிதுர்ரஹ்மானிலிருந்து பிரிந்து தனிப் பள்ளி என்று வந்துள்ளீர்கள். நீங்கள் ஆலோசனை கேட்டு வரவில்லை ஆதரவு கேட்டு வந்துள்ளீர்கள். ஆலோசனை என்றால் தனிப் பள்ளி என்று முடிவு செய்யும் முன்பே வந்திருக்க வேண்டும். 

800 ஆண்டுகளாக கஃபா துருக்கியர்களிடம் இருந்தது. அவர்கள் காலத்தில்தான் கபுரின் மீது கட்டிடம் கட்டும் கலாச்சாரம் மேலோங்கியது. கபுரின் மீது கட்டிடம் கட்டாதீர்கள் என்று கட்டளை இட்டு, கட்டுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அந்த நபியின் கபுரின் மேல் பச்சை நிறக் கல்லில் குப்பா கட்டினார்கள். அந்த குப்பா உட்பட இன்னும் பல அப்படியே உள்ளன. சீர்திருத்தம் செய்து வரும் சவூதி அரசு வந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆட்சி கையில் இருக்கும் அவர்களது நடவடிக்கைகளில் பல படிப்பினைகள் உள்ளது.

தனிக் கஃபா கட்டுவார்களா?

துருக்கி மாதிரி ஒரு ஆட்சி சவூதியில் மீண்டும் வந்தால் தவ்ஹீதுவாதிகள் தனிக் கஃபா கட்டுவார்களா? அல்லது அங்கு போய் தனி ஜமாஅத் செய்வார்களா? எனவே இப்படி பிரிந்து தனிப் பள்ளி காண்பது மார்க்க ரீதியாக தவறு என்பதுதான் எமது நிலை. இப்பொழுதுதான் இப்படிக் கூறுகிறேன் என்று எண்ணாதீர்கள். மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டர் கா.அ. முஹம்மது பழ்லுல் இலாஹி என்று பள்ளியில் பெயிண்டால் எழுதி இருந்ததை அழித்து விட்டு, பள்ளியின் எந்த பொறுப்பிலும் இல்லாத என்னை பொறுப்பில் இருந்து நீக்கியதாக நாடகம் நடந்ததை அனைவரும் அறிவார்கள். அந்த நேரத்தில் பலர் தனிப்பள்ளிக்கு தொடர்பு கொண்டார்கள் அப்பொழுதும் நாம் உடன் படவில்லை.

பொறுப்பு கிடைக்காததால் உருவான தனிப்பள்ளி.

பிறகு பெருநாள் தொழுகையாவது தனியாக நடத்துவோம் என்று தொடர்பு கொண்டார்கள். அதற்கும் நாம் உடன் படவில்லை. மஸ்ஜிதுர்றஹ்மான் ஜாக்குக்கு என ஹை கோர்ட்டில் தீர்ப்பு ஆகி விட்டால் இவர்தான் இமாமாகவோ கதீபாகவோ வருவார் என எதிர் பார்க்கப்பட்ட ஒரு மவுலவி கூட கடந்த ஆண்டு தனிப் பள்ளியின் அவசியம் பற்றி விரிவாக எழுதினார். நாம் பதிலே எழுதவில்லை. இதுதான் நமது நிலை. எவ்வளவு விளக்கங்கள் கூறினாலும் முடிவு செய்து விட்ட நிலையில் உள்ளவர்கள் மாறப் போவது இல்லை. இருந்தாலும் கடமையின் அடிப்படையில் சொல்கிறோம். பொறுப்பு கிடைக்காததால் உருவான தனிப்பள்ளி என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் உதவும் சாத்தியம் இல்லை.

யாரையும் ஒதுக்கக் கூடாது.

பிரச்சாரப் பணிக்கு என்று கேட்டால் அதற்கு தேவையான ஆடியோ, வீடியோ, சி.டிக்கள் உட்பட எல்லா உதவிகளும் செய்வோம். யாரையும் ஒதுக்கக் கூடாது என்ற நிபந்தனையில், பிரச்சாரத்திற்கு அபு அப்துல்லாஹ், எஸ்.கே, இம்தாதி, பி.ஜே. பக்ரி என எல்லாரையும் பயன் படுத்த வேண்டும். என்ற அடிப்படையில் உதவுவோம்.

பிரிந்து செல்லலாமா? தனிப்பள்ளி கட்டலாமா?|

தக்வா எனும் பெயரில் உருவாகும் பள்ளி உள்ளபடியே தக்வாவின் அடிப்படையில்தான் உருவாகி உள்ளது என்பது தெளிவாகி விட்டால் எனது சார்பில் ஒரு லட்சம் ரூபாய் தருவேன் இன்ஷா அல்லாஹ். ஆனால் ஒரு நிபந்தனை என நிபந்தனையைக் கூறினேன். அது என்ன நிபந்தனை என்பதை பிறகு பார்ப்போம். பிரிவுப் பள்ளியை ஆதரிக்கக் கூடாது என்ற எமது நிலையை விளக்குவதற்கு கூட்டம் போட்டோம். அதில் பிரிந்து செல்லலாமா? தனிப்பள்ளி கட்டலாமா?|| என்ற தலைப்பில் பெரம்பலூர் நாஸர் அலி கான் அவர்கள் பேசினார்கள். இதன் ஆடியோ, வீடியோ, சி.டிக்களை இலவசமாக வினியோகித்தோம்.

உண்மையிலேயே இது தக்வா உடைய பள்ளிதான்.

இப்படி பிரச்சாரத்துடன் நின்றுவிடக் கூடாதே, சம்பந்தப்பட்டோரிடம் நேரில் கூற வேண்டுமே. எனவே இனாயதுல்லாஹ்வை தொடர்பு கொண்டோம். தனிப் பள்ளியை தவிர்க்குமாறு போன் மூலம் அவர்களிடம் கூறினோம். இது தனிப்பள்ளி அல்ல துபையில் இருந்து வந்த 10 லட்சத்தில் கொட்டி குளம் பஜாரில் பள்ளிக்கு இடம் வாங்க மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாக குழுவில் நான் செயலாளராக இருக்கும் நிலையில் முடிவு செய்யப்பட்டது அதன் தொடர்தான் இது. இதை பிரிவினைப் பள்ளி என்று காரணம் கற்பிப்போர் எப்படிப்பட்ட ----யர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றார். இது உண்மை என்றால் உண்மையிலேயே இது தக்வா பள்ளிதான் என்றோம். அபுல்கலாம் ஆஸாத் மெயின் ரோட்டில் கடைப்பள்ளியில் இருந்து ஹாமீம் பள்ளி வரை வேறு இல்லை. நகரில் ஜன நெருக்கடியான பகுதிகளில் ஒன்று கொட்டி குளம் பஜார் என்பது குறிப்பிடத் தக்கது.

பதவிக்காக பள்ளி உருவாக்குபவர்கள் யார்?

பள்ளியை விரிவுபடுத்த என்று வசூலித்த 10ல் கோர்ட் செலவு போக ஏழரை லட்சம் மீதி உள்ளது. மஸ்ஜிதுர் றஹ்மான் ஜாக்குக்கு என தீர்ப்பு ஆகி விட்டால் பள்ளிக்கு இடம் வாங்க இதை வைத்துள்ளோம் என்று அறிவித்தவர்கள்தான் பதவிக்காக பள்ளி உருவாக்குபவர்கள் என்பதை அந்த வகையறாக்கள் புரியாமல் இருக்கலாம். இறையச்சமுடையவர்கள் புரிந்து விட்டார்கள்.

ரிபாஈயை விமர்சிக்க லுஹா பயன்படுத்திய வசனம்.

மெத்தை நீளத்தில் தலையணை சைஸில் தக்வா ஜமாஅத்திற்கு எதிராக வெளிநாடுகளுக்கு சம்சுல்லுஹா கடிதப் பிரசுரம் அனுப்பி உள்ளார். அந்த தலையணை மெத்தைகள் அவர் தம்பி காஜா மூலம் யு.ஏ.இல் வினியோகிகக்கப்பட்டன. அதில் ஜே.எஸ். ரிபாஈ ரஷhதி அவர்களை விமர்சிக்க அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்|| (அல் குர்ஆன் 9:18) என்ற வசனத்தை பயன்படுத்தியுள்ளார்.

அழுதது அனுதாபத்தைப் பெறவா? அல்லாஹ்வின் வசனத்தை நிலை நாட்டவா?
ஒண்ணரை ஆண்டுகளுக்கு முன்பு இதே(அல் குர்ஆன் 9:18) வசனத்தை ஜும்ஆவில் படித்துக் காட்டி ஸகாத்துக் கொடுக்கும் தகுதியில் உள்ளவர்கள்தான் பள்ளியின் தலைவராக இருக்க முடியும். எனவே நான் ராஜினாமா செய்கிறேன் இந்த ஆயத்துப்படி தலைவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அழுதுள்ளார். அப்படி அழுதது அனுதாபத்தைப் பெறவா? அல்லாஹ்வின் வசனத்தை நிலை நாட்டவா? அல்லாஹ்வின் வசனத்தை நிலை நாட்டும் நோக்கம் நிச்சயமாக இல்லை என்பது தெளிவாகிவிட்டது. மக்களின் அனுதாபத்தைப் பெறத்தான் என்பதற்கு அவரது செயல்கள் சாட்சியாக உள்ளன.

கேட்டு வாங்கும் நிலையில் உள்ளவர்.

இந்த வசனப்படி லுஹா ஸகாத் கொடுக்கும் நிலையில் உள்ளவரா என்றால் இல்லை. வாங்கும் நிலையில் உள்ளார் அதுவும் கேட்டு வாங்குபவராக உள்ளார். பொதுக் கூட்டங்களிலும் ஜும்ஆவிலும் ஜகாத் வாங்கும் நிலையில் உள்ளேன், ஜகாத்தை எனக்குத் தாருங்கள்| என்று யாசிப்பவராக உள்ளார். தனக்கு ஜக்காத் வேண்டும் என்று வெளிநாடுகளுக்கு போன் போட்டு கேட்கிறார். உடன் பிறந்த தம்பியை தனக்காக ஜகாத்தை கேட்டு வாங்கும் ஸ்பெஷல் ஏஜெண்டாக வைத்துள்ளார். இப்படி கேட்டு வாங்கும் நிலையில் உள்ள அவர் ஆதாரமாக வைத்துள்ள ஆயத்துபடி பள்ளியின் தலைவராக இருக்க முடியுமா? யோக்கிவான்தான் இருக்கலாமா?

எல்லாவற்றுக்கும் அஞ்சுவார்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் எடுத்து வைத்துள்ள அந்த ஆயத்து கூறுகிறது. அல்லாஹ்வைத் தவிர எல்லாருக்கும் அஞ்சுகிறவர்தான் லுஹா. பி.ஜே.க்கு அஞ்சுவார், பொது மக்களுக்கு அஞ்சுவார், வீடியோ ஆடியோ கேசட்களுக்கு அஞ்சுவார். எல்லாருக்கும் அஞ்சுவார் என்பதை விட எல்லாவற்றுக்கும் அஞ்சுவார் என்பதுதான் சரி. உதாரணத்திற்கு ஒன்று, பி.ஜேக்கு பயந்து ஊட்டியில் பிறை பார்த்தது செல்லாது என்று துபையில் இருந்து போன் போட்டு ஒரு நாள் நோன்பை பிற்படுத்தினார். பொதுமக்களுக்குப் பயந்து 28 நாளுடன் நோன்பை நிறுத்தி பெருநாள் என்று அறிவித்தார் இந்த இறையச்சத் தலைவர்.

அந்த ஆயத்து யாரை இழிவு படுத்துகிறது.

மக்களுக்கு நேர்வழி காட்டத்தான் ஆயத்து ஹதீஸ்களை உண்மையான தாஇகள் பயன்படுத்துவார்கள். லுஹா தன்னிடமுள்ள குறைகளை சுட்டிக் காட்டி திருத்த முயல்பவர்களை இழிவு படுத்த ஆயத்து ஹதீஸ்களை பயன் படுத்தக் கூடியவராக உள்ளார். இவர் எந்த ஆயத்தை பயன்படுத்தி ரிபாஈ ரஷhதியை இழிவு படுத்த எண்ணினாரோ அந்த ஆயத்து யாரை இழிவு படுத்துகிறது என்பதை லுஹா வகையறாக்கள் விளங்காமல் இருக்கலாம். மார்க்க அறிவு உள்ளவர்கள் விளங்கியே உள்ளார்கள்.

இடைக் குறிப்பு: - லுஹாவின் செயல்களை விமர்சிக்க நாம் பயன்படுத்தி உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மெத்தை-தலையணை உட்பட பிறரை விமர்சிக்க லுஹா பயன் படுத்திய வார்த்தைகளிலிருந்து எடுத்தவைதான். ஆது போல் பி.ஜேயை விமர்சிக்க பயன்படுத்தி உள்ள ஒவ்வொரு வார்த்தையும், மற்றவர்களை விமர்சிக்க பி.ஜே. அந்நஜாத்திலிருந்து ஏகத்துவம் வரை பயன்படுத்திய வார்த்தைகளிலிருந்து கற்றவைதான். அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் அவர்களுக்கே திரும்பவும் உரியதாக ஆகிறது.

நேற்று வந்த நாய் என்று பேசிய பி.ஜே.

எனது பிரசுரத்தில் வார்த்தை கடினம், நாகரீகம் இல்லை என்று பி.ஜே. வகையறாக்கள் விமர்சிக்கிறார்கள். திருக்குர்ஆன் விரிவுரையாளரும் பன்னூலாசிரியரும் கூட்டுடைப்பின் வேளான்மைக்குழு உறுப்பினருமான பி.ஜே. மலிவு விலைக்கு பேசியதில் நேற்று வந்த நாய் என்று பேசி உள்ளாரே அதுதான் நளினமான நாகரீகமான வார்த்தையா? 

அது மாதிரி நான் எழுதவில்லை. அதுதான் நாகரீகமானது நளினமாது என்றால், எனது பிரசுரத்தில் எங்கெல்லாம் கடினமான நாகரீகமற்ற வார்த்தைகள் உள்ளதாக பி.ஜே. வகையறாக்கள் கருதுகிறார்களோ அங்கெல்லாம் பி.ஜே. பயன்படுத்தி உள்ள வார்த்தையை பி.ஜே. வகையறாக்கள் அமைத்துக் கொள்ளட்டும். அதற்காக நடிகர் திலகத்தை பின்பற்றி தேவடியாள்மவன் என்று அமைக்கக் கூடாது.

லுஹாவை தலைவராக ஏற்று இருந்தேனா?

9:18 வசனப்படி பள்ளித் தலைமைக்கு லுஹா தகுதி உடையவர் இல்லை என்றால் பழ்லுல் இலாஹியும் லுஹாவை தலைவராகத்தானே ஏற்று இருந்தார் என்று கேட்கின்றனர். குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கையில் உறுதி உடையவர்கள் இது மாதிரி கேட்க மாட்டார்கள். ஆயத்து தெளிவாக இருக்கும்போது அதை செயல்படுத்தத்தான் முற்படுவார்கள். 

இன்று வந்த வரலாறு இல்லாதவர்கள்தான் இதை கேள்வியாக வைத்துள்ளனர். அவர்கள் வரலாறு இல்லாதவர்கள் மட்டுமல்ல வரலாறு தெரியாதவர்கள். எனவேதான் இப்படிக் கேட்கின்றனர். யாசிக்கும் கூட்டத்தினர் யாசிப்பவரை தலைவராக ஏற்கலாம். யாசிப்பதை தொழிலாகக் கொண்ட லுஹாவை மார்க்க ரீதியாக தலைவர் என்று எப்பொழுதுமே நாம் ஏற்றுக் கொண்டதில்லை. ஷம்சுல்லுஹா என்னிடம் சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலை ஆள். தவ்ஹீது பிரச்சார வேலை செய்ய நான் சேர்த்துக் கொண்ட வேலை ஆள். அவரை வேலையாளாகத்தான் ஏற்று இருந்தேன் என்பதுதான் உண்மை.

சேவை நோக்குடைய பணியாளர்கள்.

1986ல் துபையில் தவ்ஹீது பிரச்சார அமைப்பை நிறுவினோம். பிறகு உள்ளூரில் இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு 1987ல் மேலப்பாளையம் தவ்ஹீது பிரச்சார அமைப்பை நிறுவினோம். எனது வீட்டை அலுவலக முகவரியாக அறிவித்தோம். துவக்கத்தில் செயலாளர் பொறுப்பை ஏற்றிருந்த இனாயதுல்லாஹ் பிறகு சவூதி சென்றார். சிபதுல்லாஹ் ஆலோசகராக இருந்தார். அப்பொழுது இருந்தவர்கள் ஆலோசனைப்படி தவ்ஹீது பிரச்சார கேஸட்களை கொடுத்து வாங்குவதற்கு என்று சேவை நோக்குடைய ஒருவரை பணியாளராக சேர்த்தேன். அவருக்கு மாதம் ரூபாய் 150 கொடுத்து வந்தேன். 1990 ல் இன்னொருவரை இந்தப் பணிக்கு சேர்த்தேன் அவருக்கு 200 ரூபாய் கொடுத்து வந்தேன். சந்தா சேகரிக்கும் பணியையும் அவர் செய்தார். 1991 ல் வேறு ஒருவரை சேர்த்தேன்.

எதிப்புகள் குறைந்ததும் சுய நலத்திற்காக வேலைக்கு வந்தவர்.

இந்த வரிசையில் 4 வதாக சேர்க்கப்பட்டவர்தான் லுஹா. ஆனால் லுஹா சேவையாளராக சேரவில்லை வேலையாளாகத்தான் சேர்ந்தார். எதிர்ப்புகள் நிறைந்த பிரச்சனையான கால கட்டத்தில் உள்ளூரில் பணி செய்ய மறுத்தவர், எதிப்புகள் குறைந்ததும் தன் சுய நலத்திற்காக மேலப்பாளையத்தில் தங்கி தவ்ஹீது பிரச்சார வேலை செய்ய முன் வந்தார்.

லுஹாவின் தியாகம் உண்மையானதா?

இரண்டு பேர்களுக்கு மத்தியில் சண்டை நடந்தால்; மனித இதயம் உள்ள 3 வது ஆள் சமாதானம் செய்து வைக்கத்தான் முயற்சி செய்வார்கள். இவரிடம் தவறு குறைவு அவரிடம் கூடுதல் என்று கூறி இரு அணிகளாக ஆக்க மாட்டார்கள். அந்த மாதிரியான நல்ல எண்ணம் உடைய 3 வது ஆள் நல்ல நோக்குடன் சில பொய்களை சொல்வார். அந்த அடிப்படையில் லுஹாவுடன் காலித், சிபகத், மன்சூரை சமாதானம் செய்து வைக்க லுஹாவின் சுயநல முடிவுகளை சமாதானத்திற்காக தியாகமாகக் குறிப்பிட்டேன். அதை எடுத்துக் காட்டி தன்னை தியாகி மாதிரி சித்தரிக்கின்றார். மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை எனவே சவூதி செல்ல விரும்பவில்லை என்றுதான் ஊருடன் இருக்க வழி செய்யும்படி வேண்டினார்.

கட்டிடப் பணி மேற்பார்வையாளர் வேலைக்கு சேர்ந்தாரா?

1994 ல் சுலைமான் குனைனி, அஹ்மது அல் அஹ்மது ஆகிய சவூதி அரபிகள் வந்தனர். மஸ்ஜிதுர் றஹ்மான் கட்டிடப் பணிக்கு உதவிட கோரிடும் நிகழ்ச்சி என் வீட்டில் நடந்தது. நடு இரவில் நடந்த அதே நிகழ்ச்சியில் லுஹவாவை எங்களூக்கு தாஇயாகத் தாருங்கள். சவூதியில் உங்கள் மர்க்கஸில் இருந்து ஆற்றும் தஃவா பணியை உங்கள் தாஇயாக இங்கு பணியாற்றுவார் என்றும் கோரிக்கை வைத்தேன். இதை காலித், மன்சூர் மற்றுமுள்ளவர்கள் வற்புறுத்தி சொல்லுங்கள் என்றார்கள். சிபகதுல்லா ஆங்கிலத்தில் கூறினார். இந்த கோரிக்கையை ஏற்றுத்தான் பிரச்சார பணிக்கு என்றுதான் லுஹாவுக்கு மாதச் சம்பளம் ரூ4500 கொடுப்பதற்கு அஹ்மது அல் அஹ்மது ஒப்புக் கொண்டார். கள்ளக் கணக்கு எழுத ஐடியா கொடுத்தவர் குறிப்பிட்டுள்ள மாதிரி கட்டிடப் பணியின் மேற்பார்வைக்கு அல்ல.

சம்பளத்திற்காக என்னை பொய் சொல்லச் சொன்னவர்.

இதை இன்னும் தெளிவாக புரிய விரும்புகிறீர்களா? மேலப்பாளையத்தில் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் லுஹாவுக்கு மாதச் சம்பளம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு சென்ற அஹ்மது அல் அஹ்மது 2 மாதங்கள் ஆகியும் சம்பளம் அனுப்பவில்லை. அப்பொழுது லுஹா என்னிடம் அஹ்மது அல் அஹ்மதுக்கு போன் போட்டு லுஹா நல்ல முறையில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு நீங்கள் ஒப்புக் கொண்ட சம்பளத்தை அனுப்பி வையுங்கள் என்று சொல்லுங்கள்|| என்றார்.

வேலைக்கு சேர்ந்த வேலை ஆள்.

அப்பொழுது ஊரால் இருந்த கூலி இக்பால் அஹ்மது அல் அஹ்மதுக்கு போன் போடப் போகிறீர்களா? பிரச்சாரப் பணி எதுவும் செய்யாமல் எந்த நேரமும் வீட்டிலேயே சும்மா இருப்பவருக்கு சம்பளம் வாங்கி கொடுக்கப் போகிறீர்களா? எனக்கு இதில் உடன்பாடு இல்லை. நீங்கள் போன் போடக் கூடாது என்று கண்டிப்புடன் சொன்னார். 

பிரச்சாரப் பணி எதுவும் செய்யாமல் எந்த நேரமும் வீட்டிலேயே சும்மா இருந்து விட்டு சம்பளத்திற்காக இப்படி என்னை பொய் சொல்லச் சொன்னார் என்பதைச் சுட்டிக் காட்ட இதை குறிப்பிடவில்லை. என் மூலம் சம்பளம் பேசி வேலைக்குச் சேர்ந்த வேலை ஆள் என்பதற்கு ஆதாரமாகத்தான் இதை குறிப்பிடுகிறேன். அஹ்மது அல் அஹ்மது சம்பளம் கொடுப்பதை நிறுத்தியதும் வேலை தேடி விஸிட் விஸாவில் சவூதிக்கு ஓடினார். சவூதியில் வேலை கிடைக்கவில்லை. மீண்டும் என்னிடம் ரூ5000 சம்பளம் பேசி வேலைக்கு வந்தார்.

விடாப்பிடியாக ஜாக் அமீர் பதவியை கேட்டவர்.

இப்படி வேலைக்கு சேர்ந்த அவர் ஜாக் அமீராக காலித் ஸாஹிப் இருக்கவே தனக்கு ஜாக் அமீர் பதவி வேண்டும் என்று கேட்டார். 1988 ல் ஊர் நீக்கத்கதிற்கு பயந்து தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் ஓடிவிட்டார்கள். அப்பொழுது தவ்ஹீது ஜமாஅத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று ஜமாஅத்தின் கவுரவத்தைக் காப்பாற்றியவர் காலித் ஸாஹிப், பிறகு நல்ல சூழல் ஏற்பட்டதும் பிறகு வந்தவர்களுக்கு தலைவர் பொறுப்பை விட்டுக் கொடுத்தார். 1991ல் ஜிந்தாவின் அரிவாளுக்குப் பயந்து அப்பொழுது இருந்த ஜாக் அமீர் உட்பட பலர் ஓடினார்கள். அப்பொழுதும் ஜாக் அமீர் பொறுப்பை ஏற்று ஜமாஅத்தின் கவுரவத்தைக் காப்பாற்றியவர் காலித் ஸாஹிப் என்று சொல்லியும் அமீர் பதவி தனக்கு வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றார் லுஹா.

சட்டப் பிரச்சனைக்காகத்தான் தலைவர் பதவி.

அரசு மற்றும் பத்திரிக்கை அலுவலகங்களுக்குச் சென்றால் தாஇ என்பதை விட தலைவர் என்று சொன்னால்தான் மதிப்பு இருக்கிறது. எனவே நான் ஜாக் அமீர் என்று சொல்லி வருகிறேன் என்றார். இதை ஒரு திட்டமிட்ட சதிச் செயலாக அப்போது நாம் கருதவில்லை. இப்படி ஜாக் அமீர் என்றும் மேலப்பாளையம் தவ்ஹீது இயக்க தலைவர் என்றும் சொல்லி வந்தவர் 2000 ஜனவரியில் பொதுக்குழு கூடி நிர்வாகக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டு மஸ்ஜிதுர்றஹ்மான் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார். என்ன என்று விளக்கம் கேட்டதற்கு எல்லாம் சட்டப் பிரச்சனைக்காகத்தான். நீங்கள் எப்பொழுது வந்து கேட்டாலும் பள்ளியை உங்களிடம் ஒப்படைத்து விடுவோம். இதை நிர்வாக கமிட்டியில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டேன் என்று விளக்கம் கூறினார்.

அப்பொழுது விளங்காத சதி திட்டம்.

சட்டப் பிரச்சனைக்காகத்தான் என்றவர் சட்ட ரீதியாக பள்ளியைக் கைப்பற்ற சதி திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று அப்பொழுது நாம் விளங்கவில்லை. ஆக சட்ட பிரச்சனைக்காகத்தான் அவர் தலைவர் என்று கூறி வந்தோம். ஜகாத் வாங்கும் நிலையில் உள்ளவரை சன்மார்க்க ரீதியாக பள்ளித் தலைவராக ஏற்க நான் யாசக கூட்டத்தைச் சார்ந்தவன் இல்லை. இது உண்மை என்பதால்தான் இப்படி தெளிவாக விளக்குகிறோம். ஷம்சுல்லுஹா சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலை ஆள். இதை மறுப்போர் ஒரே மேடையில் சந்திக்கத்தயாரா? என்று சவாலுடன் முடிக்க நாம் பொய்யர்கள் இல்லை. என்னிடம் சம்பளம் பேசி வேலைக்குச் சேர்ந்த வேலையாள் என்பதால்தான் பள்ளிப் பணம் ஒண்ணரை லட்சத்தை காணவில்லை என்றதும் என் கணக்கில் பற்று எழுதி கணக்கு காட்டுங்கள் என்றேன்.

தீமைக்குத் தீமை பரிகாரம் ஆகாது.

இன்று தக்வா ஜமாஅத் என்று ஆகிவிட்டவர்களும் சேர்ந்துதானே பழ்லுல் இலாஹி பெருந் தொகை வாங்கி விட்டார் என்ற பொய்க் குற்றம் சாட்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக நீங்கள் ஏன் நியாயம் பேச வேண்டும் என்று பலர் கேட்கிறார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள் மீது களங்கம் சுமத்தியவருக்கு அபுபக்கர் (ரலி) அவர்கள் உதவ மறுத்ததை அல்லாஹ் கண்டிக்கிறான். தீமைக்குத் தீமை பரிகாரம் ஆகாது. அவர்களின் அன்றைய சூழலை அல்லாஹ் அறிவான்.

அறிஞர் ஹாமித்பக்ரியே உணராத துரோகம்.

பெருந் தொகை வாங்கி விட்டதாக பொய் பிரசுரம் வெளியிட்ட பி.ஜே. 2 அமைப்பின் சார்பாக, (பி.ஜேயாகிய) தான் பொறுப்பெடுத்து வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது கூட்டமைப்பு தலைவராக இருந்தவர் அறிஞர் ஹாமித்பக்ரி. அவர் மீதும் அந்த பி.ஜே. பழி சுமத்தினார். அறிஞர் ஹாமித்பக்ரிக்கு செய்யப்பட்டு விட்ட துரோகத்தை ஹாமித்பக்ரியே உணராது இருந்தார். 

அப்போதே அறிஞர் ஹாமித்பக்ரி தரப்பில் உள்ள நியாயத்தை முதன் முதலில் எடுத்தெழுதினேன். பக்ரியின் பெயர் சொன்னாலேயே உள்ளே தள்ளி விடுவார்கள் என்று பூச்சி பயம் காட்டினார் பி.ஜே. அந்த நேரத்தில் ஹாமித்பக்ரி கைது பற்றி தனி மேடை போட்டு மேலப்பாளையத்தில் பேச வழி செய்தேன். நம்பி ஏமாந்ததை அறிஞர் ஹாமித்பக்ரியே தன்னிலை விளக்கத்தில் குறிப்பிடும்போதுதான் சமுதாயம் எனது பிரசுரத்தில் உள்ள உண்மையை புரிந்தது.

கொள்கையில் உறுதி உடையவர்கள்.

உணர்வு பத்திரிக்கையை ஆக்கிரமித்த பி.ஜே. த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளது போல் பொய் செய்தியை உணர்வில் வெளியிட்டார். அப்போதும் அதில் மறைந்துள்ள உண்மைகளை எழுதினேன். குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கையில் உறுதி உடையவர்கள் தீமையை தடுப்பது சம்பந்தமான ஹதீஸ்படி எப்பொழுதும் நியாயத்தை தட்டிக் கேட்கத் தவரக் கூடாது. நம்மீது பழி சுமத்திய போது யாரும் கேட்கவில்லையே என்று இப்பொழுதும் ஒதுங்கி இருப்பவர்கள் நிலையில் நமக்கு உடன்பாடு இல்லை.

ஏற்ற கொள்கையுடன் இருப்பவர்கள்.

பி.ஜே. விடுத்துள்ள சவாலில் ரிபாஈ வகையறாவை விட லுஹாவின் கொள்கை வணக்கம் பலமானதுபோல் காட்டி உள்ளார். கொள்கை வணக்கம் பற்றி உள்ளத்தை ஊடுருவி பார்க்க முடியாது. வெளிரங்கமானதை வைத்துத்தான் மனிதர்களால் முடிவு செய்ய முடியும். அந்த அடிப்படையில் வெளிரங்கமானதைப் பார்ப்போம். 

இனாயதுல்லாவும் அப்பாஸ் ஹில்மியும் சம்பாதிப்பதற்காக சவூதி சென்று உழைத்தார்கள். மார்க்கப்பணிகளிலும் ஈடுபட்டார்கள். அங்கு உள்ள அறிஞர்களின் கருத்துப்படி நீளமான தாடிதான் சுன்னத்தானது என்ற கொள்கையை ஏற்றார்கள். நீளமான தாடி வைத்தார்கள். சவூதியில் இருந்து வந்துவிட்ட அவர்கள் இன்று வரை அதே நீளமான தாடியுடன் உள்ளார்கள்.

காசுக்காகவா? கொள்கைக்காகவா?

உடலால் உழைத்து சாப்பிடுங்கள் மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்தாதீர்கள் என்று மற்ற ஆலிம்களைப் பார்த்து பேசிய லுஹாவும் பிழைப்பு தேடி சவூதி சென்றார். உடலால் உழைத்து வேலை செய்ய வேண்டிய சூப்பர் மார்க்கட்டில் அவரது உடல் உழைப்பு செய்ய மறுக்கிறது. மார்க்கத்தை வைத்தே பிழைப்பு நடத்தி பழக்கப்பட்ட அவர் பிழைப்புக்காக மார்க்க பிரச்சார வேலையில் சேர்ந்தார். அங்குள்ள சென்டரில் வேலை செய்ய வேண்டும் என்றால் நீளமான தாடி வைக்க வேண்டும். லுஹாவும் நீளமான தாடி வைத்தார். நீளமான தாடி வைத்தது காசுக்காகவா? கொள்கைக்காகவா? அவரது செயலே விடையாகிறது. தாயகம் திரும்பியதும் டிரிம்தாடி ஆகிவிட்டார். அஹ்மது அல் அஹ்மது வருகிறார் என்றதும் டிரிம் செய்யாது விட்டு இருந்தார்.

கொள்கையற்ற வகையறாக்கள் யார்?

தாடி வைப்பது ஒரு வணக்கமா இல்லையா? தாடி வைக்க வேண்டும் என்பது கொள்கையா இல்லையா? வெளிரங்கமான இந்த செயல் எந்த வகையறாவின் கொள்கை வணக்கம் குறைவு உடையது என்று காட்டுகிறது? கொள்கைக்காக தாடி வைத்துள்ளவர்கள் எந்த வகையறா? பிழைப்புக்காக தாடி வைத்தவர்கள் எந்த வகையறா?

இவர்கள் கொள்கை பலமானதா?

கொள்கையற்ற வகையறாக்கள் யார் என்பதற்கு லுஹாவின் நீள தாடி சம்பவம் பழையதாக இருக்கலாம். இவர் ஆசிரியராக வேலை செய்யும் பத்திரிக்கையில் இமாமத் பணிக்கு சம்பளம் கொடுப்பதும் வாங்குவதும் கூடாது என்று பதில் எழுதியது கொள்கைக்காகவா? எழுத கொடுக்கப்படும் கூலிக்காகவா? 

இவர்கள் கொள்கைபலமானது என்றால் நாமியா ஸ்டோர் மாதிரி கடைகளில் மூட்டை தூக்கி சுமந்து வேலை செய்து அந்த வியர்வையுடன் வந்து இமாமத் செய்யட்டும். அதை விடுத்து தலையை சுற்றி மூக்கைத் தொடுகிற மாதிரி அந்த பதிலை எழுதி ஹீலா பண்ணுவது கொள்கை உள்ளவர்கள் செயலா?

கண்கலங்க பேசியது கள்ள அழுகையா?

இனாயதுல்லாஹ்வின் சேவையை மக்களிடம் சொல்லி, அவர் தேர்வு செய்யப் படாவிட்டாலும் அவரது சேவையை யாரும் மறந்து விட முடியாது என்று கண்கலங்க எடுத்துச் சொன்னேன். இனாயதுல்லாஹ்வை துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டோம், என்றெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் இனாயதுல்லாஹ்வை புகழ்ந்து உள்ளார். 

இப்படி இனாயதுல்லாவுக்கு புகழ் மாலை சூட்டி உள்ள லுஹா 19-03-2004 அன்று மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கைப்பட எழுதி கொடுத்து உள்ளதில், குறிப்பாக வில்லங்கமான நிலங்களை அபகரித்து விற்பனை செய்து வரும் அப்பாஸ் ஹில்மி என்பவருக்கு இனாயதுல்லாஹ் ஆதரவாக இருந்த மாதிரி எழுதி குற்றம் சாட்டி உள்ளார். இனாயதுல்லாஹ் பற்றி போலீஸில் எழுதி கொடுத்து உள்ளது பொய்யா, கண்கலங்க பேசியது கள்ள அழுகையா? எது உண்மை?

வில்லங்கம் பற்றி எழுத லுஹாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?

வில்லங்கம் என்றால் என்ன? அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் வில்லங்கத்திற்குரிய அளவு கோல் என்ன? ஒரு இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர் உரிமை கொண்டாடினால் அதற்குப் பெயர் வில்லங்கம். இன்று மஸ்ஜிதுர்றஹ்மான் நிலை என்ன? அது வில்லங்கமான பள்ளி என்று ஆகி விட்டது. லுஹா வகையறா மட்டமாக விமர்சிக்கக் கூடிய சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் கூட பள்ளி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டால் அவர்கள்தான் வெளியேறி உள்ளார்களே தவிர, திட்டமிட்டு பள்ளியை கைப்பற்றி அல்லாஹ்வின் பள்ளிவாசலை வில்லங்கமான இடமாக ஆக்கிடும் கேடுகெட்ட செயலை செய்த வரலாறு இல்லை. அல்லாஹ்வின் பள்ளிவாசலை கைப்பற்றி வில்லங்கமான இடமாக ஆக்கிய லுஹாவுக்கு வில்லங்மான நிலம் பற்றி எழுதுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

உண்மையாளராக நாணயம் உள்ளவராக இருந்தால்?

லுஹாவின் கூற்றுப்படி 4 ஆண்டுகளுக்கு முன் 14-01-2000 ல் பி.ஜே. தலைமையில் மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகக் கமிட்டி உருவானது. அதில் லுஹா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது போல் பொருளாளராக ரிபாஈ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அது வரை வரவு செலவுகளை வைத்திருந்த லுஹா உண்மையாளராக இருந்தால், நாணயம் உள்ளவராக இருந்தால், ஒழுங்காக கணக்குகள் எழுதி வைத்திருந்தால், அவரிடமுள்ள கணக்குகளும் சரியானதாக இருந்திருந்தால் அந்த சபையிலேயே தேர்வு செய்யப்பட்ட பொருளாளரிடம் ஒப்படைத்து இருப்பார். அல்லது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவராவது நியாயவானாக இருந்தால் சபையிலேயே வாங்கி கொடுத்து இருப்பார்.

சந்தி சிரிக்க பேசப்பட்டது யாருடைய நாணயத்தைப் பற்றி?

பொருளாளரிடமும் கணக்குகளை ஒப்படைக்கவில்லை, நிர்வாகக் கமிட்டியிலும் கணக்குகளை காட்டாமல் காலம் கடத்துகிறார். ஒண்ணரை லட்சத்தைக் காணவில்லை என்கிறார் இப்படி உலக அளவில் சந்தி சிரிக்க பேசப்பட்டது லுஹாவின் நாணயத்தைப் பற்றியா? ரிபாஈ நாணயத்தைப் பற்றியா? பொருளாளராக இருந்த ரிபாஈ நிர்வாகத்தை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். முந்தைய வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்படாத நிலையில் பொருளாளர் நிர்வாகத்தில் என்ன பணி செய்ய முடியும். வார்த்தை வித்தைகளால் லுஹா வைக்கும் சொத்தை வாதத்தை அவரது வகையறாக்கள் ஏற்கலாம். அறிவுடையவர்கள் ஏற்பார்களா?

உண்மையாளர் என்று யார் சொல்வார்கள்?

டைப் செய்த கடிதம் ஒன்று அனுப்பினார். ஜமாஅத்தின் அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிந்து நடைபெறுவதே முறையாகும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டாகக் கூறப்படுகிறது என்று எழுதி இருந்தார். 

வரவு செலவுகளை அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியாமல் பொருளாளரிடம் ரிபாஈ இடம் ஒப்படைக்காமல் முறை கேடாக வைத்திருந்த உண்மையாளர் யார்? 

 அந்த கடிதத்தின் இறுதியில் பலவிதமான பிரசுரங்கள் வெளி வர இருந்தததை தற்காலிகமாக தடுத்து விட்டேன் என்றும் எழுதி இருந்தார். அந்த பிரசுரம் யாரை விமர்சித்து வெளியாக இருந்தது. உத்தமர் லுஹாவை விமர்சித்துதானே. 

இப்படி நெடுங்காலமாக ஒழுங்கான பணி செய்யாதவரை, பிழைப்புத்தலம் தன் கையை விட்டு போகக் கூடாது என்பதற்காக சதி திட்டத்தோடு செயல்பட்டவரை உண்மையாளர் என்று யார் சொல்வார்கள்.

பொதுக்குழு கூடவே இல்லை என்பது உண்மையா?

நாலரை ஆண்டுகளாக பொதுக்குழு கூடவே இல்லை என்று கூறி உள்ளனர். 30-6-2001 அன்று மஸ்ஜிதுர்றஹ்மானில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஏன் கையெழுத்து போடுகிறோம் என்று கையெழுத்து போட்ட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது என்பது தனி விஷயம். அதில் எந்த பொறுப்பிலும் இல்லாத என்னை பொறுப்பில் இருந்து நீக்கியதாக முடிவு செய்தார்கள். அன்று கூடியது பொதுக்குழு இல்லையா?

லுஹா துபைக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் இமாம் என்பவர் அல்உம்மா ஹாமித்பக்ரி போன்ற விவகாரங்களில் ஜமாஅத்தின் நிலையை கடுமையாக விமர்சித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஹாமித்பக்ரி விவகாரங்களில் ஜமாஅத்தின் நிலையை முடிவு செய்ய ஜமாஅத் (பொதுக்குழு) எப்பொழுதெல்லாம் கூடியது. ஜமாஅத் (பொதுக்குழு) கூடியது உண்மையானால், நாலரை ஆண்டுகளாக பொதுக்குழு கூடவே இல்லை என்றவர்கள் யார் என்று விளக்கத் தேவை இல்லை. ஜமாஅத் (பொதுக்குழு) கூடாமல் ஜமாஅத்தின் நிலை என்று சொன்னால் சொல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் சொல்லத் தேவை இல்லை.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் மற்றும் தவ்ஹீது ஜமாஅத் என்பது மாநில அனைத்து தவ்ஹீது ஜமாஅத்தின் கிளையாக செயல்பட்டு வருகின்றது என்றும் லுஹா குறிப்பிட்டு எழுதி உள்ளார். 

1987 லேயே மேலப்பாளையம் தவ்ஹீது ஜமாஅத் துவங்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு ஜமாஅத் சந்தித்த வழக்குகளில் ஸ்தாபகர் ( நிறுவனர்) முஹம்மது பழ்லுல் இலாஹி, தலைவர் காலித் என்றே உள்ளது. 

மேலப்பாளையம் தவ்ஹீது ஜமாஅத் என்பது இன்றிலிருந்து 17 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு ஆதாரமாகத்தான் இதை குறிப்பிடுகிறோம். அதுபோல் மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டியை 1991ல் துவங்கி 1993ல் இடம் வாங்கினோம். 1995ல் கட்டிடப் பணியை துவக்கினோம்.

1987லிலும் 1991லிலும் உருவான ஜமாஅத்கள் 2000 செப்டம்பரில் உருவான கூட்மைப்பின் கிளையாக செயல்பட்டு வருகிறது என்றால் இந்த முடிவை பொதுக்குழு எனும் ஜமாஅத்தார் கூடிதான் முடிவு எடுக்க வேண்டும். பொதுக்குழு எனும் ஜமாஅத்தார் கூடி இந்த முடிவை எடுத்தார்கள் என்றால் நாலரை ஆண்டுகளாக பொதுக்குழு கூடவில்லை என்பவர்கள் யார்?. ஜமாஅத்தார் கூடி முடிவு எடுக்காமல் கூட்மைப்பின் கிளை என்று இட்டுக் கட்டியவர் யார்? அதில் உள்ள சுயநலம் என்ன?

சுயநலத்திற்காக நடுநிசி 12 மணிக்கு போன் போட்டவர்.

கூட்டமைப்பு உருவான பின் தலைமை நிர்வாகிகளின் முதல் கூட்டம் 25-9-2000 அன்று சென்னையில் நடந்தது. மறுநாள் காலை பிளைட் என்பதால் இரவு 9 மணிக்கு லாட்ஜ் சென்று விட்டேன். நடுநிசி 12 மணிக்கு போன் போட்ட லுஹா, துபையிலிருந்து நீங்கள் எனக்கு அனுப்பும் பணத்தை நேரடியாக எனக்கு அனுப்பக் கூடாதாம். கூட்டமைப்பு மூலம்தான் எனக்கு தர வேண்டுமாம். கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளார்கள். 

இது விஷயமாக பக்ரியோ, ஸைபுல்லாவோ போன் போட்டால் சம்மதிக்காதீர்கள். மேலப்பாளையம் ஜமாஅத் எப்பொழுதும் தனித்தே செயல்படுவோம்|| என்றார். எனவேதான் இவர்கள் கூட்மைப்பின் கிளை, பொதுக்குழு என்று பயன் படுத்தும் வார்த்தைகள் யாவும் சுயநலத்திற்காக என்கிறோம்.

லுஹாவின் தியாகம்?

கொலை வழக்கில் லுஹா 3 மாதம் ஜெயிலில் இருந்ததை தவ்ஹீதுவாதி என்பதால் போடப்பட்ட வழக்கு என்றும் லுஹாவின் தியாகம் என்றும் சித்தரிக்கிறார்கள். மேலப்பாளையத்தில் தவ்ஹீது ஜமாஅத் சிறுபான்மையாக இருந்த போது சட்டப்படி சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டிய உரிய பாதுகாப்பை வழங்கி பேருதவியாக இருந்தது காவல் துறை. அந்த கண்ணியத்திற்குரிய காவல் துறை அதிகாரிகளை மைக்கை கண்டதும் வரும் வீரத்தில் கண்டபடி பேசினார். ஜிஹாது பற்றி பேசி இளைஞர்களை தூண்டி விட்டார்.

காவல்துறையின் காக்கிச் சட்டையைப் பிடித்து கேட்கும் அதிகாரம் இ.பி.கோவில் உள்ளது என்று மேடையில் வீர முழக்கம் இட்ட மைக் மாவீரரே! உம் வீட்டுக் கதவை காவல் துறை தட்டிய போது இ.பி.கோ.வில் உள்ள சட்டம் உங்கள் ஞாபகத்தில் வந்ததா? உங்கள் வீட்டின் பின் பக்கம் கதவு உள்ளது என்ற ஞாபகம் வந்ததா? என்று லுஹாவின் செயல்களை விமர்சித்து அப்பொழுது நாம் லுஹாவுக்கு எழுதிய கடிதத்தில் முழு விபரம் உள்ளது. 

லுஹாவின் வாய்க் கொழுப்புக்கு கிடைத்த பரிசுதான் அந்த வழக்கு என்பது 2000க்குப் பிறகு வந்தவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் லுஹாவை தியாகியாக சித்தரிக்கும் பி.ஜேன் வார்த்தைகளை நம்புகிறார்கள்.

ரிபாஈ தியாகியா? இல்லையா?

நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி 3 மாதங்களுக்கு மேல் ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீன் பெற்று வெளியே வரும்போதே மயிலாடுதுறை பார்சல் குண்டு வழக்குக்கு என கைதாகி 7 மாதம் 7 நாட்கள் செய்யாத குற்றத்திற்கு அநியாயமாக சிறை கிடந்தவர் அப்பாவி ரிபாஈ. வாய்தா வாய்தா என 15 நாளுக்கு ஒரு முறை ஒவ்வொரு வழக்குக்கும் நாகப்பட்டினம் அழைந்து கொண்டிருப்பவர். ரிபாய் முயற்சியால் வெளிநாடு சென்றவர்கள் உண்டு. அந்த வழக்குகளால் ரிபாஈ வெளிநாடு செல்ல முடியாமல் இருக்கிறார். அவரது வாழ்க்கை தியாகம்.

நன்றி கெட்ட செயல்.

இதில் லுஹா மாட்டி இருந்தால் கிச்சான் புகாரியும் மேலப்பாளையம் இளைஞர்களும் இன்றும் சிறையில் கிடக்க மூலப் பிதா லுஹா வெளியே வந்த மாதிரி, என்றைக்கோ பி.ஜே.யை உள்ளே தள்ளி லுஹா மட்டும் விடுதலை ஆகி இருப்பார். பி.ஜேக்காக ரிபாஈ செய்த தியாகத்தை சிறுமை படுத்தி எழுதிய பி.ஜே. ரிபாஈயை சிறுமை படுத்திப் பேசி மலிவு விலை சி.டியும் வெளியிட்டுள்ளார். மறப்பது மனித இயல்பு. இது மாதிரி நன்றிகளை மறதியாளன் கூட மறக்க மாட்டான். நடந்தது நன்றி மறப்பு அல்ல. நன்றி கெட்ட செயல் என்பார்களே அதுதானே நடந்துள்ளது.

ரிபாஈ மீது கூறிய குற்றச்சாட்டு.

ரிபாஈ மீது குற்றம் சாட்டி நோட்டீஸ் போட்ட பழ்லுல் இலாஹியா? ரிபாஈயின் தியாகம் பற்றி எழுதி உள்ளார்? என்ற கேள்வி எழலாம். ஏனென்றால் பி.ஜே, லுஹா வகையறாக்கள் மக்களை அப்படித்தான் நம்ப வைத்துள்ளார்கள். பொதுமக்களுக்காக வெளியிடுவது நோட்டீஸ். தனி நபருக்கு எழுதினால் கடிதம். 

நான் பி.ஜேக்குத்தான் கடிதம் எழுதினேன். லுஹாவை நான் உண்மையாளராக நம்பிய காலத்தில் லுஹா கூறிய குற்றச்சாட்டுகள்தான் அந்த கடிதத்தில் உள்ளவை. எம்.ஐ. சுலைமான் பற்றியும் லுஹா போன் போட்டு சொன்னதை பி.ஜே இடம் போனில் கேட்டேன் ஆம் என்றார். 

பிர்தவ்ஸி பற்றியும் நேரில் வந்து சொன்னவர் லுஹாதான். அதைத்தான் பி.ஜேக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டேன்.  பிர்தவ்ஸி காதல் சமாச்சாரம் உட்பட லுஹா என்னிடம் சொன்னதாக நான் கூறுவது பொய்யாக இருந்தால் அல்லாஹ் என்னை நாசமாக்கட்டும். 

லுஹா தான் சொல்லி விட்டு இல்லை என்று மறுப்பாரானால் லுஹாவையும் லுஹாவை உண்மையாளராக சித்தரித்து இப்பொழுது அவர் பின்னால் நிற்கும் லுஹா வகையறாக்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன் என்று முபாஹலா செய்ய நான் தயார்.

நியாயவான்களாக அல்லாஹ்வுக்கு அஞ்சக் கூடியவர்களாக இருந்தால்.

2-8-02 தேதிய துபை ஜமாஅத்தார் கடிதம் போஸ்ட் மூலம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜமாஅத்தார்கட்கு கிடைத்தது. அதை அறிந்த லுஹா, அது சம்பந்தமாக ஒரு நாள் மஃரிபுக்குப் பிறகு மஸ்ஜிதுர்றஹ்மானில் இருந்த லுஹா வகையறாக்களிடம் உரையாற்றினார். 

அப்பொழுது (லுஹாவாகிய) நான் சொன்னதை எல்லாம் ஒன்று விடாமல் எழுதி விட்டார்| என்று பேசி உள்ளார். அங்கு கூடி இருந்த லுஹா வகையறாக்கள் நியாயவான்களாக அல்லாஹ்வுக்கு அஞ்சக் கூடியவர்களாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? 

நீங்கள் சொன்னதை எல்லாம் ஒன்று விடாமல் இலாஹி எழுதி விட்டார் என்று நீங்களே ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் தந்து விட்டீர்கள். அப்படியானால் பி.ஜே.விட்ட சவால்படி நீங்கள்தான் அதில் உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்று லுஹாவின் சட்டையை பிடித்து கேட்டிருப்பார்கள்.

நான் சொன்னதை எல்லாம் ஒன்று விடாமல் எழுதி விட்டார்| என்று லுஹா வகையறாக்களிடம் பேசிய அதே லுஹாதான் 30-6-2002 கூடிய பொதுக்குழுவில் இலாஹியின் 6-4-02 தேதிய கடிதத்தில் உள்ளவை எல்லாம் பொய் என்றும் கூறி உள்ளார். இதன் மூலம் ரிபாஈ மீது லுஹா கூறிய குற்றச்சாட்டை லுஹாவே பொய் சொல்லி என்று வாபஸ் பெற்று விட்ட பிறகு ரிபாஈ மீதான குற்றச்சாட்டு பற்றி நாம் பேச முடியாது.

நன்றி உள்ள லுஹாவும் ஒன்ணரை லட்சம் பள்ளிப் பணமும்.

ஒன்றரை லட்சம் ரூபாய் பள்ளிவாசல் பணத்தை லுஹா மோசடி செய்து விட்டதாக இலாஹி வைத்த குற்றச்சாட்டை| என்று எழுதி தக்வா பள்ளி விஷயத்தில் அனுதாபம் தேடி உள்ளார் லுஹா. 

ஒன்றரை லட்சம் ரூபாய் பள்ளிவாசல் பணத்தை லுஹா மோசடி செய்து விட்டார். அதனால்தான் பள்ளிக் கட்டிடப் பணி இடையில் நின்று விட்டது என்று 1997 லேயே குற்றச்சாட்டுகள் வந்து விட்டது. 

அப்பொழுதே லுஹாவின் எதிர் தரப்பாகி விட்ட ஜாக் சகோதரர்கள் நோட்டீஸும் வெளியிட்டார்கள். லுஹாவின் கைதை ஒட்டி அமைதியான அந்தப் பிரச்சனை 98ல் மீண்டும் வலுப் பெற்றது. மரக்கடையில் பாட்னராக பள்ளிப் பணத்தை லுஹா பயன்படுத்தி உள்ளார் என்ற செய்தி துபை வரை பரவியது.

லுஹாவை நல்லவர் என்று நம்பி இருந்த நான் அவர் மீது உள்ள களங்கத்தை துடைக்க ஜாக் சகோதரர்கள் என்னையும் மோசடி செய்து விட்டதாகக் கூறுகிறார்கள் என்று திசை திருப்பினேன். அதன் மூலம் லுஹா மீது உள்ள குற்றச்சாட்டை துபையில் வலு இலக்கச் செய்தேன். 

அது போல் 2000ல் தாயகம் வந்திருந்தபோது இதே மாதிரி என் மீது அவர்கள் மோசடி குற்றச்சாட்டுகள் கூறாத நிலையில் கூறியதாக திசை திருப்பி லுஹாவைப் பற்றி நல் எண்ணம் ஏற்படுத்தினேன். அதற்காகத்தான் நன்றி செய்துள்ளார் லுஹா. பி.ஜே.ன் நீண்ட கால நண்பர் அல்லவா அவர்.

வெளிநாட்டு வசூல் 10 லட்சம் படுத்தும் பாடு.

லுஹா 3 வது தடவையாக துபையில் இருந்தபோது கூட்டப்படவிருந்த பொதுக்குழு ஏதோ சில காரணங்களால் கைவிடப்பட்டதாக எழுதி உள்ளார். அது என்னக் காரணம்? 2002 ஜனவரியில் துபையில் இருந்து மஸ்ஜிதுர் றஹ்மானுக்காக வந்த 10 லட்சம் ரூபாயை பி.ஜே. உணர்வு பப்ளிஷர் அன்வர்பாஷாவிடம் கொடுக்கக் கூறுகிறார். அன்வர்பாஷா பி.ஜே.ன் பினாமி. 10 லட்சம் அன்வர்பாஷாவிடம் இருந்தாலும் பி.ஜே. இடம் இருந்தாலும் ஒன்றுதான்.

அமைப்பின் பெயரால் வாங்கி விட்டு பெரும்பாலும் பின் வழியான செலவுக்கு பயன்படுத்துவார். அல்லது அமைப்பின் பெயரால் வாங்கி விட்டு பெரும்பாலும் தானே அனுபவிப்பது போல, மஸ்ஜிதுர்றஹ்மான் பணத்தை மூன் பப்ளிகேஷனுக்கு பயன்படுத்த பி.ஜே. திட்டமிட்டிருக்கலாம். இதை எதிர்த்து தடுத்து நிறுத்தியவர் இனாயதுல்லாஹ். விடுவாரா பி.ஜே.

கைவிடப்பட்ட பொதுக்குழு.

கிடைத்தது கதவு பிரச்சனை. இனாயதுல்லாஹ் கதவு போட்டதில் ஊழல் பண்ணிவிட்டார் என்று மோசடி குற்றச்சாட்டு பரப்பப்பட்டது. பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. நோன்பில் நடந்த இந்த ஏற்பாடு லுஹாவுக்கும் சேர்ந்து பாதிப்பு வரும் என்றதும் கைவிடப்பட்டது.

கதவு வாங்கப்பட்டது லுஹாவும் பார்ட்னராக இருந்த அரசன் மரக்கடையில். பள்ளிப் பணத்தை பேங்கில் போடாமல் பி.ஜேன் தேவைக்கு கொடுக்கத் தயாரான லுஹாவை காப்பாற்றாமல் இருப்பாரா பி.ஜே? பொதுக்குழு கைவிடப்பட்டது. மோசடி குற்றச்சாட்டு மூலம் இனாயதுல்லாஹ்வை வெளியேற்ற போட்ட திட்டம் தோழ்வியானது.

மலிவாகி விட்ட பொய்கள்.

04-02-2004ல் மேலப்பாளையம் மஸ்தான் அவர்களுக்கு பி.ஜே. அனுப்பி உள்ள கடிதத்தில் (26-1-2004 தேதிய மஸ்ஜிதுர்றஹ்மான் பொதுக்குழு எனும்) இந்த நிகழ்ச்சிக்கு முன்வரை எனக்கும் ரிஃபாயிக்கும் எந்த பகைமையும் இருந்ததில்லை என்று எழுதி உள்ளார்.

மலிவு விலைக்கு பேசிய சி.டி.யில் 18-1-2004 ஆம்புலன்ஸ் நிகழ்ச்சிக்கு முன் ரிபாஈயை கன்னா பின்னா என்று திட்டி விட்டேன் அது மேடையில் சொல்ல முடியாத வார்த்தை என்று பேசி உள்ளார். அதன் மூலம் முன்பே பகை உள்ளது என்பதற்கு அவரே சாட்சி ஆகிவிட்டார். இதில் எது ஒன்று பொய்யானாலும் அந்த பொய்யைக் கூறியவராக ஆவது யார்?

பொய் சொல்வதில் புலமை வாய்ந்த வல்லவர் யார்?

பொதுக்குழுவை திடீரென கூட்டவில்லை தர்பியா நிகழ்ச்சிக்கு தேதி கேட்டேன் என்று சுற்றி வளைத்து திட்டமிட்டு கூட்டிய மாதிரி லுஹா எழுதி உள்ளார். மலிவு விலைக்கு பேசிய பி.ஜே. நான்தான் ஒரே நாளில் பொதுக்குழுவை கூட்டச் சொன்னேன் என்கிறார். இதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். பொய் சொல்வதில் புலமை வாய்ந்த வல்லவர் யார் என்ற போட்டி வேளான்மைக்குழவினருக்குள் நடக்கிறது.

இப்பொழுது ஹைதர் அலி ஆலிம்ஸாவுக்கும் லுஹா ஆலிம்ஸாவுக்கும் குத்பா போர் நடப்பதுபோல் பி.ஜே. ஆலிம்ஸா மலிவு விலையில் பேசி உள்ளார். மேலப்பாளையவாசிகள் பார்த்தால் பி.ஜேன் சுயரூபத்தை தெரிந்து கொள்வார்கள்.

த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களைத்தான் பி.ஜே. அழைக்கக் கூடாது என்று சொன்னார் என்பதை விரைவில் வெளியாகும் த.மு.மு.க. சி.டி. பதில் விளக்கும் என்று வெப்சைட் விளம்பரம் கூறுகிறது. லுஹா எப்படிப்பட்ட கொள்கைவாதி என்பது பற்றி மேலப்பாயைம் இமாம் அவர்கள் வெளியிட்ட சைட்டிலிருந்து 11வது எண்ணின் சுருக்கம் இதற்கு பதிலாக உள்ளது.

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு பள்ளியின் பணத்தை அள்ளிக் கொடுக்கும் லுஹா.
அப்துல் ரசீத் கொலையில் அவரது மகன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடந்த த.மு.மு.க. நிகழ்ச்சி. மேடையில் காஜா ஹஜரத், ஹைதர் அலி ஹஜரத் ஆகியோருடன் தவ்ஹீத் ஜமாஅத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்;.

சமீபத்தில் தலித் கலை நிகழ்ச்சி ஒன்றில் லுஹா கலந்து கொண்டு பள்ளியிலிருந்து நிர்வாகத்தினர் யாரிடமும் கலந்து கொள்ளாமல் ரூ.2,500-ஐ நன்கொடையாக கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போவதும், பள்ளியின் பணத்தை கொடுப்பதும் தவறு கிடையாதாம். விவகாரம் கொள்கையோ இந்த ஹைதர் அலி ஆலிம்ஸா இல்லை என்பது தெளிவு.

கூறு போட்ட தலைவர்.

பிரச்சனை ஏற்பட்டு 2 அணி ஆகிவிட்டால் 2 தரப்பையும் கூட்டி சமாதான முயற்சி செய்வார்களா? பொதுக்குழு கூட்டி தேர்தல் நடத்துவார்களா? மேலப்பாளையம் தவ்ஹீதை கூறு போட்ட கும்பல் தலைவர்தான் பி.ஜே. என்று எனது பிரசுரத்தில் குறிப்பிட்டது சரியானது என்பதை நிரூபித்துள்ளார்.

பள்ளிப் பணத்தை மரக்கடையில் போட்ட லுஹா.

பொதுக்குழுவில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய லுஹா இனாயதுல்லாஹ் எனக்கு கடன் தர வேண்டி உள்ளது என்று கூறி உள்ளார். பதில் சொல்ல வந்த இனாயதுல்லாஹ்வை தடுத்து நிறுத்துகிறார் பி.ஜே. நியாயவான்களாக இருந்தால் என்ன கடன் என்று விளக்கி இருப்பார்.

பி.ஜேயும் இனாயதுல்லாஹ்வை விளக்கம் கூற விட்டிருப்பார். மரக்கடை பாhட்னராக இருந்த லுஹா அதில் இருந்து விலகி விட்டார். பார்ட்னர்ஷிப் பணத்தைத்தான் நான் வாங்கிய கடன் என்கிறார் என்று இனாயதுல்லாஹ் சொன்னால்.

பள்ளிப் பணத்தை மரக்கடையில் போட்ட லுஹா என்று காலித் ஸாஹிப் சொன்ன குற்றச்சாட்டுதான் பலருக்கு ஞாபகத்தில் வரும். எப்படி பார்ட்னரானார் என்று விளக்க வேண்டி வரும் நன்றி உள்ள பி.ஜே. லுஹாவுக்கு இப்படிப்பட்ட சங்கடம் வர விடாமல் தடுத்து விட்டார். மலிவு விலையில் பேசி உள்ள பி.ஜே. மஸ்ஜிதுர்றஹ்மானை மக்கள் இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மஸ்ஜிதுர்றஹ்மான் எப்படி உருவானது.

இப்படி பொதுக்குழு பெயரால் இவர்கள் கூத்தடிப்பதற்கு வாய்ப்பாகிவிட்ட மஸ்ஜிதுர்றஹ்மான் எப்படி உருவானது. மேலப்பாளையத்தில் ஒரு தவ்ஹீது பள்ளியை நிறுவ முடிவு செய்த நாம் அதற்காக வசூலிக்கும் பணத்தை பேங்கில் போட கணக்கு துவங்கும்படி எழுதினோம்.

கணக்கு துவங்குவதற்காக சிபகதுல்லாஹ் வீட்டில் கூடி மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டியை உருவாக்கினார்கள். வெளிநாட்டில் இருந்த என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் தலைவர் செயலாளர் பொருளாளராக ஆக்கினார்கள். பேங்கில் கணக்கு துவங்க ஊரால் உள்ள ஒருவர் இருக்க வேண்டும் என்பதால் சிபகதுல்லாஹ்வும் சேர்க்கப்பட்டார்.

நிதி கேட்டு தனித்தனியாக கடிதம்.

இந்தப் பணியை 1991ல் துவங்கினோம். அப்பொழுது ஊரால் இருந்த லுஹாவுக்கு இந்த கமிட்டியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டி முகவரியாக சிபகதுல்லாஹ் வீட்டு முகவரியை பயன் படுத்தினோம். ஓவ்வொருவருக்கும்; நிதி கேட்டு தனித்தனியாக கைப்பட கடிதம் எழுதி கமாலுத்தீன் மதனி அவர்கள் தந்த பரிந்துரை கடிதக் காப்பியை இணைத்து அனுப்பினேன்.

பரிந்துரை கடிதம் பி.ஜே. தரவில்லை. சிறுகச் சிறுக சேர்த்த பணம் ஒரு லட்டசத்து 20 ஆயிரத்தை எட்டியது. 1993ல் 3 லட்சத்திற்கு இடம் வாங்கினோம். வசூல் ஆகுமோ ஆகாதோ என்ற நிலையில் ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ரூபாயை மேற்கொண்டு போட்டோம். போட்டது யார்? யாசக வகையறாவா? அன்று முதல் இருந்து வரும் கொள்கைவாதிகளுக்குத் தெரியும்.

சவூதியில் வசூலிக்க சம்பளம் பேசியவர்.

இப்படி அதிகப்பற்றான பணத்தை சவூதியில் வேலை செய்த லுஹாவிடம் வசூலிக்க வேண்டினேன். அப்பொழுதும் சம்பளம் பேசிதான் வசூல் வேலை செய்தார். மஸ்ஜிதுர்றஹ்மானுக்காக கூலி எதிர் பார்க்காமல் எல்லாரும் வேலை செய்து இருக்கிறார்கள். மேலப்பாளையம் தவ்ஹீது ஜமாஅத்தைக் கொண்டும் மஸ்ஜிதுர் றஹ்மானைக் கொண்டும் பிழைப்பு கண்டவர்கள் 4500, 5000, 7,000 , 10, 15, 20 என்று சம்பளம் கண்ட லுஹா வகையறாக்கள் மட்டும்தான்.

கிரஸன்ட் பார்ட்னர்கள்.

பற்றாக்குறை பணம் முழுமையாக வராத நிலையில் பணிகளை தொடர்ந்தோம். ஜமாஅத்தின் தொலை நோக்கு திட்டங்களில் மருத்துவ மனையும் ஒன்று. லுஹா வகையறாக்களான இப்றாஹீம், அஸதுல்லாஹ் பார்ட்னராக கிரஸன்ட் மருத்துவமனை துவங்கிவிட்டதால் ஜமாஅத் திட்டத்தை கைவிட்டதாக பகிரங்கமாக குத்பாவில் அறிவிக்கிறார், சுயநலமற்றவராக கூறிக் கொள்ளும் லுஹா. இந்த கிரஸன்ட் பார்ட்னர்களைத்தான் இப்பொழுது செயலாளர் பொருளாளர் என்ற பெயரில் மஸ்ஜிதுர்றஹ்மானில் பார்ட்னராக சேர்த்துள்ளார்.

வெளிநாட்டு பணக் கொள்கை.

மக்களை ஈர்க்க இவர்கள் செய்யும் ஏமாற்று கோஷங்களில் ஒன்று வெளிநாட்டுப் பணம் வாங்க மாட்டோம் என்பது. இவர்களது வெளிநாட்டு பணம் பற்றிய கொள்கை எப்படிப்பட்டது என்று முந்தைய பிரசுரங்களில் விளக்கி உள்ளோம். இங்கே இன்னும் தெளிவாக விளக்க உள்ளோம். வெளிநாட்டு பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையாகப் பார்த்து தேர்ந்தெடுத்து சோறு கொடுத்து நன்கொடை கேட்பார்கள். இதைப்பற்றிக் கேட்டால் நாங்கள் வெளிநாட்டவர்களிடமோ வெளி நாட்டு நிறுவனங்களிடமோதான் வாங்க மாட்டோம் என்று கோஷத்ததை திருத்திக் கூறுவார்கள்.

கேவலமானவர்கள் யார்?

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மான் இடம் வாங்கியதிலும் வெளிநாட்டவர்களின் பணம் உண்டு. அது கட்டப்பட95சதவீதம் உதவியது வெளிநாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டவர்களுமே. வெளிநாட்டவர்களிடமோ வெளி நாட்டு நிறுவனங்களிடமோ உதவி வாங்க மாட்டோம் என்று சொல்லும் இந்த கூட்டுடைப்புக் கூட்டம் மஸ்ஜிதுர்றஹ்மானை கைப்பற்றி உள்ளது.

இது என்ன கொள்கை? நாங்கள் பிச்சை எடுக்க மாட்டோம். பிச்சை எடுப்பது கேவலம் என்று பேசி விட்டு பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பிச்சைக்காரனின் தட்டையை தூக்கிக் கொண்டு ஓடுபவர்களின் செயலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.

கேவலமானவர்கள் பிச்சைக்காரர்களா? பிச்சை பாத்திரத்தை திருடி விட்டு ஓடுபவர்களா? வெளி நாட்டு நிறுவனங்களிடம் உதவி வாங்க மாட்டோம் என்று சொல்லி விட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் உதவி பெற்று கட்டிய பள்ளிகளை கையகப்படுத்தி பதவி பெற்று திரிபவர்களைக் கண்டால் உங்களுக்கு இனி என்ன ஞாபகம் வரும்? பிச்சைக்காரனின் பாத்திரத்தை திருடி விட்டு ஓடும் கூட்டம் என்ற ஞாபகம் வருமா? வராதா?

த.மு.மு.க.விலிருந்து பிரிந்து செல்லலாமா?

லுஹா தந்த தகவல்படி எழுதிய கடிதத்தை ஒட்டி சூத்திரதாரி விருப்பப்படி என்னை த.மு.மு.க, மற்றும் கூட்டுடைப்பில் இருந்து நீக்கினார்கள். நானாக எதிலிருந்தும் பிரிந்து செல்லவில்லை. அப்படி இருந்தும் லுஹா, நானாக பிரிந்து சென்ற மாதிரி விமர்சித்தார்.

தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியத்தை ஹதீஸ் ஆயத்து ஆதாரங்களுடன் வலியுறுத்திப் பேசி த.மு.மு.க.விலிருந்து பிரிந்து செல்லலாமா? என்று கேட்டார். த.மு.மு.க.விலிருந்து பிரிந்து செல்பவர்கள் வரட்டு கவுரவம் பிடித்த சமுதாய துரோகிகளாகத்தான் இருக்க முடியும் என்றும் பேசினார். இப்பொழுது த.மு.மு.க.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் யார்? வரட்டு கவுரவம் பிடித்த சமுதாய துரோகிகள் யார்? புரிகிறதா?


பிரிந்து சென்ற மாதிரி பேசிய அவரே வேறு ஒரு முறை ஓதுக்கி வைக்கப்பட்டதாக பேசி, ஒரு அமைப்பில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டால் ஒதுங்கி இருந்து விடுவதுதான் ஒரு முஃமினுக்கு உள்ள அழுகு என்றும் பேசினார். இன்று அந்த லுஹா வகையறா உடைய செயல் அவர்கள் முஃமின்கள் இல்லையோ என்று கேட்கச் செய்கிறது.

உயிருடன் இல்லையோ? நடை பிணமோ?

எங்கள் அண்ணன் லுஹாவை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து காப்பாற்றியது த.மு.மு.க. இதற்காக ஜவாஹிருல்லாஹ் பல முறை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் பேசி உள்ளார். இக்கட்டான கால கட்டத்தில் மேலப்பாளையம் வந்து களப்பணி ஆற்றியவர் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி. எனவே உயிறுள்ள வரை மறக்க மாட்டோம் என்று லுஹா தம்பி காஜா கர்ஜித்தார். இப்பொழுது அவர் பேசும் பேச்சைக் கேட்டால் உயிருடன் இல்லையோ? நடை பிணமோ? என்றுதான் கேட்பீர்கள்.

அந் நஜாத்தில் பிளவு.

துபையிலிருந்து பணம் வருகிறது என்றதும் சங்கரன்பந்தல் மதரஸாவில் இருந்து கூண்டோடு வெளியேறியவர்களில் ஒருவர் லுஹா. சுன்னத் ஜமாஅத் கல்யாணத்திற்கு தங்கள்மார்கள் சாய்புமார்கள் வருவதை கிண்டல் செய்தவர். இப்பொழுது இவரது வகையறாக்களுக்கு தான் இல்லாமல் கல்யாணம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி தன்னை தங்கள், ஷசாய்பாக ஆக்கிக் கொண்டார்.

அந்த லுஹா நினைத்தபடி அந்நஜாத்தில் தங்கள், சாய்பு மாதிரி இருந்து சாப்பிட அபு அப்துல்லாஹ் ஒத்துழைக்கவில்லை. ஆலிம் அவாம் பிரச்சனைக்கு ஊமைத் தூபம் போட்டுவிட்டு வண்டலூரில் போய் நுழைந்து விட்டார். அபு அப்துல்லாஹ்வின் நிர்வாக கண்டிஷன் சுயநலக் கூட்டத்தலைவரையும் பாதிக்க லுஹா போட்ட தூபம் 7 மாதத்தில் வெடித்தது. தவ்ஹீது எழுச்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

கையைவிட்டுப் போன கலாச்சாரப்பள்ளி.

1988ல் இருந்து அல்ஜன்னத், ஜாமிஅத்துல் பிர்தவ்ஸியா, கலாச்சாரப் பள்ளி என ஒரு ஒப்பந்தம் இல்லாத கூட்டு செயல்பாடுகள் மூலம் நாகர்கோயிலை அறிவிக்கப்படாத தலைமையாகக் கொண்டு தவ்ஹீது பணி வளர்ச்சி கண்டது. வண்டலூரிலிருந்து வெளியே விடப்பட்ட லுஹா நாகர்கோயில் பகுதியில் வந்து நுழைந்து கொண்டார்.

தனது சுயநலனுக்கு பாதிப்பு என்றால் பிறரை தூண்டிவிட்டு பழி வாங்குவதில் வல்லவரான லுஹாவின் வஞ்சகச் செயல் அங்கும் ஆட்கொண்டது. அப்பொழுது அங்குள்ள பிரச்சனைகளை பக்கம் பக்கமாக எழுதி எஸ்.கே.க்கு எதிராக என்னை தூண்டி விட்டார். அதுபோல் அங்கும் எஸ்.கே.க்கு எதிராக பி.ஜே, இம்தாதி என பிண்ணி விட்டார். பி.ஜே. அல்ஜன்னத்தை தூக்கிக் கொண்டு மதுரைக்கு ஓடினார். ஒற்றுமைக் குலைவால் கலாச்சாரப்பள்ளி தவ்ஹீதுவாதிகளின் கையைவிட்டுப் போனது.

ஸலபியை ஓரங்கட்ட.

ஆ ங்கா.. ஆ.. இப்படி இலுத்து இலுத்து பயான் பன்னும் லுஹா மஸ்ஜிதுர்றஹ்மானின் தலைமை பிறரிடம் இருந்தால் தன்னை நீக்கி விட்டு வேறு சிறந்த பிரச்சாரகர்களை கொண்டு வந்து விடுவார்கள் என்று பயந்து காலித் ஸாஹிப் இடமிருந்து தலைமையை கைப்பற்றினார். மற்றவர்கள் பயான் பண்ணினால் இவரது பருப்பு வேகாது என்பதால் முதலில் ஸலபியை ஓரங்கட்ட அவரைப்பற்றி அவதூறு பரப்பினார். என்னையும் அவ்வப்போது ஸலபிக்கு எதிராக தூண்டி வந்தார்.

ரிபாஈயை குத்பா மேடையில் ஏற விடாமல் தடுக்க.

இவர் பயான் பண்ணி மக்களை ஈர்க்கவில்லை. சாதாரண பேச்சை விட புறம் பேசுதல் அதிகக் கவர்ச்சியாக இருக்கும். பிறர் பற்றி புறம் கூறியே அணி சேர்த்து வந்த லுஹா அடுத்து வந்த ரிபாஈயையும் மஸ்ஜிதுர்றஹ்மானின் குத்பா மேடையில் ஏற விடாமல் தடுக்க அதே மாதிரி திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் செய்து ரிபாஈக்கு எதிராக அணி சேர்த்தார்.

2002ல் குவைத் வழியாக துபை வர இருந்த லுஹாவை பி.ஜே. ஜின்னா என்பவரை வைத்து அடிக்காத குறையாக கேவலப்படுத்தி உள்ளார். உடனே என்னிடம் வந்தார் ஜின்னாவின் லண்டன் பயணங்கள் உட்பட அவரைப் பற்றி எப்படியெல்லாம் சொல்ல முடியுமோ அப்படியெல்லாம் சொன்னார்.

அதற்கு முன்பு வரை பி.ஜேக்கு கட்டுப்பட்டு சரண் அடைந்து எனக்கு எதிராக செயல் பட்ட ரகசிய அணியில் தானும் இருந்ததை கூறி வருந்தினார். தனக்கு எதிரானவர்களை நேரில் சந்திக்க இயலாத லுஹா வழக்கம்போல் பி.ஜேக்கு எதிராக என்னை தூண்டி விட்டார். அதன் பிரதிபலிப்புதான் 6-4-02 கடிதம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

த.மு.மு.க.வில் பிரச்சனை ஏற்பட காரணமானவர்.

அப்துர்றஹ்மான் (பிர்தவ்ஸி) லுஹாவை கேவலமாக பேசியதால் அவருக்கு எதிராக என்னை தூண்டி விட்டார். அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸியை போனில் சப்தம் போட்டேன். இப்படி லுஹாவை சுத்த சூபியாக நம்பி இருந்தபொழுதுதான் கமாலுத்தீன் மதனி சம்பந்தமாக லுஹா கூறிய பொய் சாட்சியையும் அந்த பொய் சாட்சியத்தை உண்மைபடுத்த செய்த பொய் சத்தியத்தையும் அறிகிறேன்.

அதைதட்டிக் கேட்டதும் எனக்கு எதிராக பி.ஜே.யுடன் அணி சேர்ந்தார். அப்பொழுதுதான் லுஹாவின் சுயநலத்தையும் சுய ரூபத்தையும் உணர்ந்தேன். இப்படிப்பட்ட சுயநலமியான லுஹா என்ற தனி நபர்தான் தன் சுயநலத்திற்காக த.மு.மு.க.வில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்துள்ளாரே தவிர மேலப்பாளையம் அல்ல.

காத்திருந்த ஆக்கிரமித்த லுஹா.

அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட மஸ்ஜிதுர்றஹ்மான் லுஹாவின் பிழைப்புத்தலமாக ஆனதும் அதை அபகரிக்க காத்திருந்துள்ளார். பி.ஜே. பெருந்தொகை வாங்கிவிட்டதாக நோட்டீஸ் போட்டதும் அதுதான் சந்தர்ப்பம் என மக்களை கூட்டி ஆக்கிரமித்தார். கடந்த ரமழானில் துபை வந்திருந்தபோது பெருந்தொகை வாங்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டை நிரூபித்து விட்டு போங்கள் என்றவர்களிடம், நான் அந்த குற்றச்சாட்டை வைக்கவில்லை என்று கூறி நழுவி இருக்கிறார்.

ஒரு லட்சத்தை எப்பொழுது கொடுத்தேன்?

30-6-02 அன்று மஸ்ஜிதுர்றஹ்மானில் பேசிய லுஹா எனக்கு துணை நிற்க நான் அவருக்கு ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்த மாதிரி பொருள் வரும்படி பேசினார். எனக்கு ஒரு லட்சம் தரும் அளவுக்கு அவருக்கு ஏது பணம் என்று கூறி பி.ஜேன் பொய் குற்றச்சாட்டுப்படி பெருந்தொகை வாங்கி இருப்பார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தினார்.

இந்த ஒரு லட்சத்தை எப்பொழுது கொடுத்தேன்? இனி வீட்டில் சிறு பிள்ளைகளை வைத்துக் கொண்டு குடி இருக்க முடியாது. இரவு 11 மணி ஆகி விட்டால் அசிங்கமான படம் பார்க்கிறான் லுஹா|| என்று அவரது உடன் பிறந்த தம்பி தெருவில் நின்று சப்தம் போட்டார்.

அப்பொழுது லுஹாவை ஒழுக்கமானவராக நம்பிய நான் அவரது தம்பிக்கு பாகப் பணத்தை கொடுத்து வெளியேற்ற எந்த வித எழுத்தும் இன்றி கடனான ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். பிறகு அவரே தள்ளுபடி செய்யுமாறு வேண்டினார். தள்ளுபடி செய்து விட்டேன் என்று சொன்னேன். எழுதியும் கேட்டார், தள்ளுபடி செய்து விட்டதாக எழுதியும் அனுப்பினேன். எனவே அந்த பணத்திற்கும் எனக்கும் மார்க்க ரீதியாக சம்பந்தம் இல்லை என்று ஆனது.

முஸ்லிம் கடனை முதலில் கொடுக்க வேண்டுமா? வீட்டை கட்ட வேண்டுமா?
ஆனால் மக்கள் மத்தியில் லஞ்சம் மாதிரி சித்தரித்து அதை வசதி வந்ததும் திரும்ப கொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். எனவே அதை கேட்கும் தார்மீக உரிமை வந்து விட்டது.

அப்பொழுது அந்த சபையில் ரிபாஈ, இனாயதுல்லாஹ், செய்யது அலி உட்பட இன்றைய தக்வா ஜமாஅத்தினர் பெரும்பாலானவர்கள் இருந்தார்கள். இப்பொழுது லுஹா வீட்டின் முன் பக்கத்தை (மக்கள் பார்வைக்கு) பழையதாக வைத்து விட்டு பின் பக்கத்தை கட்டும் கட்டுமான பணி செய்யும் அளவுக்கு வசதியாகி விட்டார். எனவே வசதி வந்ததும் ஒரு முஸ்லிம் கடனை முதலில் கொடுக்க வேண்டுமா? வீட்டை கட்ட வேண்டுமா? லுஹா வசதி வந்ததும் வீடு கட்டுவேன் என்று அறிவிக்கவில்லை. இந்த கடனை தருவதாகத்தான் பகிரங்க அறிவிப்பு செய்தார்.

அது என்ன நிபந்தனை.

லுஹாவிடம் அணு அளவாவது வாய்மை இருந்தால் நேர்மை இருந்தால் வீடு கட்டாமல் அவர் பகிரங்கமாக அறிவித்தபடி ஒரு லட்சத்தை தந்திருப்பார். என்னிடம் எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லை. எனவே அவர் அறிவிக்கும்போது சாட்சியாக இருந்த தக்வா ஜமாஅத்தினர் லுஹா எனக்கு தர வேண்டிய ஒரு லட்சத்தை வாங்க வேண்டும்.

வாங்கி தக்வா ஜமாஅத்தில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்தால் மேலும் ஒரு லட்சம் தருவேன் என்று தாஹிர் அவர்களிடம் கூறினேன். இதுதான் அந்த நிபந்தனை.

மஸ்ஜிதுர் றஹ்மானில் உள்ள உரிமை போகாது.

மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிகளெல்லாம் தவ்ஹீது அடிப்படையில் ஆகணும் என்று கொள்கைவாதிகள் ஆசைப்படுவார்கள். மேலப்பாளையத்தில் தவ்ஹீது பள்ளி என்றால் அது மஸ்ஜிதுர்றஹ்மான் மட்டும்தான் இருக்க வேண்டும்| என்று துஆச் செய்யுங்கள் என்று லுஹா குத்பாவில் பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்.

மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிகளெல்லாம் தவ்ஹீது அடிப்படையில் ஆகி விட்டால், இவர் வசூல் பாதிக்கப்படும். இவருக்கு பிழைப்பு நடக்காது, அதுதானே காரணம். மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மான் மேலப்பாளையத்தில் உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானது. தவ்பா என்றும் தக்வா என்றும் எத்தனை ஜமாஅத்கள் தோன்றினாலும் மஸ்ஜிதுர் றஹ்மானில் அவர்களுக்கு உள்ள உரிமை போகாது.

சத்தியம் செய்து எழுத வெட்கமாக இருக்கிறது

பைத்துல் முகத்தஸ் யஹுதிகளிடம் சிக்கி உள்ள மாதிரி, பாபரி மஸ்ஜித் பஜ்ரங்தல்களிடம் சிக்கி விட்ட மாதிரி லுஹா வகையறாவிடம் மஸ்ஜிதுர்றஹ்மான் மாட்டிக் கொண்டுள்ளது. இதை மீட்பது தக்வா ஜமாஅத்தார்கள் மீதும் தவ்பா ஜமாஅத்தார்கள் மீதும் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஜமாஅத்களிலும் நான் பொறுப்பு வகிக்க மாட்டேன் என்பதை மீண்டும் உறுதி செய்கிறேன். பொய் சத்திய பேர்வழிகள் வாழும் காலத்தில் இதை சத்தியம் செய்து எழுத எனக்கு வெட்கமாக இருக்கிறது.

அதே நோட்டீஸ் புரட்சி தொடரும்.

தவ்ஹீதுக் கொள்கை என பிரபலமாகிவிட்ட குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான உண்மை இஸ்லாமிய பிரச்சாரப் பணி துவங்கியபோது மக்கள் கேட்காமல் ஓடினார்கள். அப்பொழுது நோட்டீஸ்கள் மூலம்தான் பிரச்சார புரட்சி செய்தோம். இப்பொழுது கண் மூடித் தலைவர்களை பின் பற்றும் கடிவாளம் கட்டிய குதிரைகள் நமது நோட்டீஸ்களை பார்க்க மறுப்பது போல், அந்த தவ்ஹீது பிரச்சார நோட்டீஸ்களை கை நீட்டி வாங்காத காலமும் இருந்தது.

அப்பொழுது நகருக்குள் செல்லும் பஸ்களின் கடைசி சீட்டில் இருந்து தவ்ஹீது பிரச்சார நோட்டீஸ்களை வீசுவோம். பஸ்களின் டெப்போக்களுக்குச் சென்று முஸ்லிம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் ஏறி ஒவ்வொரு சீட்டிலும் உள்ள கம்பிகளில் செருகி வைப்போம். யாருடையது என்று தெரியாத மக்கள் எடுத்து படிப்பார்கள். இப்படி வளர்க்கப்பட்ட ஜமாஅத்தில் ஊடுருவி விட்ட சுயநலக் கூட்டத்தாரின் கூடாரத்தை கலகலக்கச் செய்ய அதே நோட்டீஸ் புரட்சி தொடரும்.

அல்லாவுக்காக என்று சொல்லி விட்டு ரகசி கூலி வாங்காதவர்களும், மேடை ஏறி ஒப்பாரி வைத்து அழுவது போல் நடிக்கத் தெரியாதவர்களும், பொது சொத்தை ஆக்கிமித்து அதை தங்கள் பிழைப்புத்தலமாக ஆக்கத் தெரியாதவர்களும் எமது பிரசுரங்களை மக்களிடம் சேர்க்கும் பணியை நிச்சயமாக செய்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு:
கா.அ.முஹம்மது பல்லுல் இலாஹி, த.பெ.எண் 19661,துபை, யு.ஏ.இ.
தாயக முகவரி 22.ஏ. சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம். 627005

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.