2:17 கண்தெரியாக் காரிருளில் அவர்களைத் தத்தளிக்க விட்டு விட்டான்.


مَثَلُ - ம(ஸ)தலு

உதாரணம் - உவமானம்

هُمْ -ஹும்
அவர்கள் – இவர்கள்



مَثَلُهُمْ -  ம(ஸ)தலுஹும்

அவர்களுக்கு உதாரணம்


كَمَثَلِ - கம(ஸ)தலி

உதாரணத்தைப் போன்றது


الَّذِي - ல் லதீ(ரீ)

ஒருவன்


اسْتَوْقَدَ - ஸ்தவ்  ஃகத 

மூட்டினான்


نَارًا - நாரன்  

நெருப்பு - தீ


فَلَمَّا - Fபலம்மா 

அப்போது


أَضَاءَتْ - அழாஅத்

ஒளி வீசியது


مَا حَوْلَهُ - மா ஹவ்லஹு 
அவனைச் சுற்றிலும்

ذَهَبَ - த(ர)ஹப
போக்கிவிட்டான்


اللَّـهُ - அல்லாஹு 
அல்லாஹ்


بِنُورِهِمْ - பிநுாரிஹிம்

அவர்களுடை ஒளி


وَتَرَكَهُمْ - வ தரக ஹும் 

மேலும்  அவர்களை விட்டு விட்டான்


فِي ظُلُمَاتٍ - Feபீ ழுலுமாதின்  

காரிருள்களில்


لَّا يُبْصِرُونَ - லா யுப்ஸிரூ(ன)ன்.

பார்க்க முடியாது

https://mdfazlulilahi.blogspot.com/2019/11/217.html

مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّـهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَّا يُبْصِرُونَ


ம(ஸ)தலுஹும்  கம(ஸ)தலில் லதீ(ரீ) ஸ்தவ்  ஃகத நாரன்  Fபலம்மா  அழாஅத் மா ஹவ்லஹு த(ர)ஹபல்லாஹு  பிநுாரிஹிம் வ தரக ஹும்  Feபீ ழுலுமாதி(ன்)ல்  லா யுப்ஸிரூ(ன)ன்.


2:17. ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கிபார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது.- (PJதொண்டி)





இத்தகையோரின் நிலை, (தன் குழுவினருக்காக ஒளி பெற வேண்டித்) தீ மூட்டிய ஒருவனின் உவமையை ஒத்தது: (இருளில்) ஒருவன் தீ மூட்டினான். அச்சிறு தீப்பொறி வளர்ந்து, சுற்றிலும் ஒளி தரும் வேளையில், அல்லாஹ் அவ்வொளியைப் பறித்து, கண்தெரியாக் காரிருளில் அவர்களைத் தத்தளிக்க விட்டு விட்டான். (அதிரை ஜமீல்)

2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம்நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோதுஅல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (ஜான், அன்வாருல் குர்ஆன்)



இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (அதாவது: அபாயகரமான காட்டில்காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் விட்டுவிட்டான். (அப்துல் ஹமீது பாகவி)



இத்தகையோரின் உவமானம் (பின்வரும்) உதாரணத்தைப்போல் இருக்கிறது: ஒருவர் தீயை மூட்டினார்அது அவரைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்து விட்டான். மேலும் எதையுமே அவர்கள் காணமுடியாத நிலையில் அவர்களை இருள்களில் விட்டு விட்டான். (IFT)



இவர்களுக்கு உதாரணம்: (இருள் நீக்க) நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றாகும். அந்நெருப்பு அவரைச்சூழ ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியை (அணைத்து)ப் போக்கிவிட்டான்மேலும் அவர்கள் பார்க்கவும் முடியாத காரிருள்களில் அவர்களை விட்டுவிட்டான். (சவூதி)



இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அந் (நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் போக்கிவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருள்களில் அவர்களை விட்டு விட்டான்.(இம்தாதி)






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.