2:246. பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதும் ஜிஹாது செய்ய பாய்ந்து ஓடிவிடவில்லையே ஏன்?
உணர்ச்சிவசப்பட்டவர்கள்
பின்னால் மார்க்க அறிஞர்கள் போனார்கள் அதன் விளைவு? என்ற தலைப்பில் ஒரு சமுதாயத்தின் வரலாற்றை எழுதி இருந்தேன். அது மூஸா(அலை) அவர்களுக்கு பிறகு வந்த சமுதாயத்தின் வரலாறு.
அந்த முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் அவர்களது வீடு வாசல் சொத்து சுகங்களையெல்லாம் பறித்து விட்டு விரட்டி விட்டார்கள். இதனால் கொதித்துப் போன அந்த மக்கள் அவர்களது நபியிடத்தில் வந்தார்கள். ஜிஹாது செய்ய அல்லாஹ்விடத்தில் அனுமதி பெற்றுத் தர கேட்டார்கள். இது நமது கற்பனை கலவை அல்ல. அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ள வரலாறு. அல்லாஹ் அந்த நபியின் பெயரை சொல்லவில்லை.
அந்த முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் அவர்களது வீடு வாசல் சொத்து சுகங்களையெல்லாம் பறித்து விட்டு விரட்டி விட்டார்கள். இதனால் கொதித்துப் போன அந்த மக்கள் அவர்களது நபியிடத்தில் வந்தார்கள். ஜிஹாது செய்ய அல்லாஹ்விடத்தில் அனுமதி பெற்றுத் தர கேட்டார்கள். இது நமது கற்பனை கலவை அல்ல. அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ள வரலாறு. அல்லாஹ் அந்த நபியின் பெயரை சொல்லவில்லை.
பாதிக்கப்பட்ட அந்த மக்கள் பாதிக்கப்பட்டதும் ஜிஹாது செய்ய
பாய்ந்து ஓடிவிடவில்லை.
ஜிஹாதை அல்லாஹ்தான் கடமையாக்க வேண்டும் என்பதை விளங்கி இருந்ததால்
அந்த மக்கள் அனுமதி கேட்டார்கள். இதைச் சொல்லிக் காட்டும்
அல்லாஹ் இதை ஒரு சம்பவமாக சொல்லிக் காட்டவில்லை.
படைத்த
உமது இறைவனின் பெயரால் படிப்பீராக என்று துவங்கிய அல்லாஹ். ஆங்காங்கே சிந்தித்து பார்க்கவில்லையா? (அலம் தர , யரவ், யரவ்னஹா, அFAபலம் யன்ளுரூ) என்று கேட்பது யாரைப்
பார்த்து? .
இந்த வரலாற்றில் படிப்பினை இருக்கிறது பாடம் இருக்கிறது என்பதால் அலம் தர – நீர் அறியவில்லையா? - அறிவீரா? கவனித்தீரா? -கவனிக்கவில்லையா? சிந்தித்து பார்க்கவில்லையா? என்ற பீடிகையுடன் ஆரம்பம் செய்கிறான். என்ன சிந்தித்து பார்க்கவில்லையா? பாதிக்கப்பட்ட அந்த மக்கள் தங்கள் நபியிடத்தில் சொன்னார்கள். என்ன சொன்னார்கள்?
அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதற்காக எங்களுக்கு ஒரு மன்னரை – ஆட்சியாளரை நியமியுங்கள். அரசாங்கத்தை ஏற்படுத்துங்கள் என்று சொன்னார்கள்.. மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். ஜிஹாது செய்வது என்றால் செய்து விட்டு போக வேண்டியதுதானே. அது என்ன ஒரு மன்னரை – ஆட்சியாளரை நியமியுங்கள். அரசாங்கத்தை ஏற்படுத்துங்கள் என்று ஏன் கேட்கிறார்கள்?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த இஸ்ரவேலர்களுக்கே தெரிந்திருக்கிறது. ஆட்சியாளர் – அரசாங்கம் இருந்தால் தான் ஜிஹாது செய்ய முடியும் என்ற அறிவு இருந்திருக்கிறது. அதனால் தான் விரட்டி அடிக்கும்பொழுது சும்மா வந்து விட்டார்கள்.
ஒரு அரசாங்கம் அமைத்து விட்டுத்தான் ஜிஹாது - போர் –யுத்தம் செய்ய முடியும் என்பதை விளங்கி வைத்துள்ளார்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் விளங்கி இருக்கலாம்.
அவர்கள் விளங்கியது எல்லாம் மார்க்கமாகுமா? ஜிஹாது கடமையாக்கப்பட்ட பின் அல்லாஹ்வை
போய் சண்டை போடச் சொல்லுங்கள். நாங்கள் உட்கார்ந்து கொள்கிறோம் என்று சொன்ன சமுதாயம்
தானே அவர்கள்! ஆகிய கேள்விகள் வரலாம்.
அவர்கள் விளங்கியது மட்டுமல்ல யார் விளங்கியதும் மார்க்கமாகாது. அதை அல்லாஹ்
அங்கீகரிதுள்ளான். இதை அடுத்தடுத்துள்ள வசனங்களிலும் ஜிஹாது சம்பந்நதமாக இன்னுமுள்ள
வசனங்களிலும் காணலாம். ஆட்சி அதிகார முடைய அரசாங்கத்தை உடையவர்கள் தான் போர் – ஜிஹாது
செய்ய வேண்டும் என்று அல்லாஹ் அங்கீகரிதுள்ளான். அதனால் தான் அது மார்க்கமாகி உள்ளது.
ஜிஹாது - போர் செய்ய ஆட்சியாளர் தேவை இல்லை என்றால் அல்லாஹ் என்ன சொல்லி
இருக்க வேண்டும்? உங்களை உங்கள்
ஊர்களையும், நாட்டையும் வீட்டையும் பிள்ளைகளையும் விட்டும் உங்களை
துரத்தி அடித்து விரட்டி வெளியேற்றி இருக்கும்போது. ஜிஹாது - போர் செய்ய எதற்கு
ஆட்சியாளர்? போய் போர் செய்யுங்கள் என்றுதானே கூறி இருக்க வேண்டும்?
அவர்களது நபியாவது அல்லாஹ்வின் நபியாக நான் இருக்கும் போது ஜிஹாது - போர்
செய்ய ஆட்சியாளர் எதற்கு? வாருங்கள் ஜிஹாது செய்வோம் என்றாரா? அவர்கள் கோரிக்கையை ஏற்று
நபியும் அல்லாஹ்விடம் சொன்னார் அல்லாஹ்வும் அவர்கள் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளரை ஏற்படுத்தினான்.
ஜிஹாது – கிதால் ஒரு அரசாங்கத்துக்குத்தான் கடமை என்பதற்கு ஜிஹாது சம்பந்தமாக குர்ஆனில் உள்ள அனைத்தும் வசனங்களும் ஆதாரங்களாக உள்ளன.
1980களில் மார்க்க ஆய்வு அறிவு இல்லாதவர்களால் ஜிகாத் சம்பந்தமான தவறான கொள்கை பரப்பப்பட்டது. எதையாவது குண்டக்க மண்டக்க சொல்லி விட்டு குர்ஆனில் இருக்கிறது என்று கூறி விடுவார்கள். தாயுடன் சேர்ந்ததற்கு சமம் என்று குர்ஆனில் எந்த வசனமும் கிடையாது. எதையாவது சொல்லி விட்டு தாயுடன் சேர்ந்ததற்கு சமம் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறி உள்ளான் என்று முடித்து விடுவார்கள்.
அப்படிப்பட்டவர்களின் தவறான கருத்துக்களுக்கு பதில் அளித்து தான் இஸ்லாமும் ஜிஹாதும் என்ற ஆடியோ வீடியோவில் வெளியிடட்டோம். அதில் நாம் மேலே சொல்லி உள்ள கருத்துதான் இடம் பெற்றிருந்தது.
மேலே நாம் ஆதாரமாகக் காட்டி உள்ள வசனம் 2:246.
1980களில் மார்க்க ஆய்வு அறிவு இல்லாதவர்களால் ஜிகாத் சம்பந்தமான தவறான கொள்கை பரப்பப்பட்டது. எதையாவது குண்டக்க மண்டக்க சொல்லி விட்டு குர்ஆனில் இருக்கிறது என்று கூறி விடுவார்கள். தாயுடன் சேர்ந்ததற்கு சமம் என்று குர்ஆனில் எந்த வசனமும் கிடையாது. எதையாவது சொல்லி விட்டு தாயுடன் சேர்ந்ததற்கு சமம் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறி உள்ளான் என்று முடித்து விடுவார்கள்.
அப்படிப்பட்டவர்களின் தவறான கருத்துக்களுக்கு பதில் அளித்து தான் இஸ்லாமும் ஜிஹாதும் என்ற ஆடியோ வீடியோவில் வெளியிடட்டோம். அதில் நாம் மேலே சொல்லி உள்ள கருத்துதான் இடம் பெற்றிருந்தது.
மேலே நாம் ஆதாரமாகக் காட்டி உள்ள வசனம் 2:246.
أَلَمْ تَرَ - அலம் தர
நீர் பார்க்கவில்லையா? - அறியவில்லையா? - அறிவீரா? கவனித்தீரா? -கவனிக்கவில்லையா? சிந்தித்து பார்க்கவில்லையா?
إِلَى الْ- இலல்
பால் - ளை -க்கு -ளது
الْمَلَاِ- மலாயி
பிரமுகர்கள் - தலைவர்கள்
إِلَى الْمَلَإِ- இலல் மலாயி
தலைவர்கள் பால் -தலைவர்களது – தலைவர்களின் – தலைவர்களின் பால் - தலைவர்களை- தலைவர்களுக்கு
مِنْۢ- - மின்ம் -
இருந்து From -லிருந்து - க்கு
بَنِىْٓ- பனீ
மக்கள் - சந்ததிகள்
இஸ்ரவேல் மக்களில் நின்றும் - இஸ்ராயீலின் மக்களில் -மக்களின்- சந்ததிகளின் - இஸ்ரவேலர்களின்
مِن - மின்
இருந்து From -லிருந்து - க்கு
பின் - பின்னர் - பிறகு
مُوسَىٰ - மூஸா
اِذْ- இத்(ர்)
போது
اِذْ قَالُوْا- இத்(ர்) ஃகாலுா
அவர்கள் கூறிய போது
لِنَبِيٍّ - லிநபிய்யின்
நபியிடம்
لَّهُمُ - ல ஹுமு
அவர்களுக்கு
ابْعَثْ- ப்ஃஅஸ்
ஏற்படுத்து - நியமித்து
لَنَا- லனா
எங்களுக்கு
مَلِكًا - மலிகன்
அரசன் - மன்னன் - ராஜா - ஆட்சியாளன் - ஆளும் தலைவர்
نُّقَاتِلْ- நுஃகாதில்
போரிடுவோம்
فِي سَبِيلِ اللَّهِ- FEEபீ ஸபீலில்லாஹி
அல்லாஹ்வின் பாதையில்
قَالَ - கால
கேட்டார்
هَلْ عَسَيْتُمْ - ஹல் ஃஅஸைதும்
நீங்கள் இருந்து விடுவீர்களா?
إِن كُتِبَ- இன்குதிப
கடமையாக்கப்பட்டால் - விதியாக்கப்பட்டால்
عَلَيْكُمُ- அலைக்குமு
உங்கள் மீது -உங்களுக்கு
الْقِتَالُ- அல்ஃகிதாலு
போர் செய்தல்
أَلَّا تُقَاتِلُوا- அல்லா துகாதிலுா
நீங்கள் போரிடாதவர்களா?
قَالُوا - ஃகாலுா
கூறினார்கள்
وَمَا لَنَا- வமா லனா
எங்களுக்கு என்ன நேர்ந்தது
أَلَّا نُقَاتِلَ- அல்லா நுகாதில
நாங்கள் போரிடாமல் இருக்க
فِي سَبِيلِ اللَّهِ- FEEபீ ஸபீலில்லாஹி
அல்லாஹ்வின் பாதையில்
وَقَدْ أُخْرِجْنَا- வஃகத் ஃஉஃக்ரிஜ்னா
நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்பட்டோம்
مِن دِيَارِنَا - மின் தியாரினா
எங்கள் வீடுகளைவிட்டு
وَأَبْنَائِنَا- வஅப்னாஃயினா
எங்கள்
மக்களையும் -பிள்ளைகளையும்
فَلَمَّاكُتِبَ -FAபலம்மா குதிப
கட்டளையிடப்பட்ட போது
عَلَيْهِمُ- ஃஅலைஹிமு
அவர்கள் மீது
الْقِتَالُ- அல்ஃகிதாலு
போர் செய்தல்
போர் செய்தல்
تَوَلَّوْا- தவல்லவ்
புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர்
اِلَّا- இல்லா
தவிர
قَلِيلً- ஃகலீலன்
مِّنْهُمْؕ- மின்ஹும்
அவர்களில் இருந்து
وَاللَّهُ- வல்லாஹு
அல்லாஹ்
عَلِيمٌ- அலீமுன்
நன்கறிபவன்
بِالظَّالِمِينَ- பிழ்ழாலிமீன
அக்கிரமக்காரர்கள்
(நபியே!) மூஸாவுக்குப்பின்
இஸ்ரவேல் மக்களின் தலைவர்களது நிலை என்னவாயிற்று என நீர் அறிவீரா? அவர்கள், தம் நபி (க்ஷம்வீல்) இடம், "நாங்கள் அல்லாஹ்வின்
பாதையில் போரிடுவதற்காக ஓர் ஆளும் தலைவரை ஏற்படுத்தித் தாருங்கள்" என்று
வேண்டியபோது "போரிடுதல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, போரிட மறுத்த கூட்டமாயிற்றே நீங்கள்?" என்று அவர் கேட்டார். அதற்கவர்கள், "எங்கள் மக்களையும் எங்கள்
வீடுகளையும்விட்டு நாங்கள் துரத்தப்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் வழியில் நாங்கள்
போரிடாமல் இருப்போமா என்ன?" எனக் கூறினார்கள்.
நடந்ததென்ன? போரிடுமாறு அவர்களுக்குக்
கட்டளையிடப் பட்டவேளை, அவர்களுள் மிகச்சிலரைத்
தவிர மற்ற அனைவரும் போருக்குப் புறப்பட மறுத்து விட்டனர். (இத்தகைய) பாவிகளை
அல்லாஹ் நன்கறிந்து வைத்துள்ளான். (அதிரை ஜமீல்)
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின்
தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்; "நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்"
என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள்
போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார்; அதற்கவர்கள்; "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள்
வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க
எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள்;. எனினும்
போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர
மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம்
செய்வோரை அல்லாஹ் நன்கறிவான். ( ஜான் , அன்வாருல் குர்ஆன்)
246. (நபியே!) மூஸாவுக்குப் பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர்அரசனை ஏற்படுத்துங்கள்” என்று கூறிய போது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்ட பின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது அவர்களில் ஒரு
சிலரைத் தவிர மற்ற எல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு )
அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான். (இம்தாதி)
2:246. மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின்
மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர்
ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்''76 என்று தமது நபியிடம்
கூறினர். "உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க
மாட்டீர்கள் அல்லவா?''
என்று
அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு
நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க
எங்களுக்கு என்ன வந்தது?''
என்று
அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் சிலரைத் தவிர
(மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.
(PJ)
(நபியே!) இஸ்ராயீலின்
சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்கள்) "அல்லாஹ்வுடைய பாதையில்
நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்க) ஒரு அரசனை அனுப்பி
வையுங்கள்" என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) "போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால்
நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?" என்று கேட்டார். (அதற்கு)
அவர்கள் "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்
விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்க,
(எங்களை
வெளியேற்றிய) அவர்களுடன் அல்லாஹ் வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க
எங்களுக்கென்ன (தடை)?"
என்று
கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி
கட்டளையிடப்பட்டபொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின்
சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான். ( அப்துல் ஹமீது பாகவி)
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ரவேலர்களின்
தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளைப் பற்றி நீர் சிந்தித்துப் பார்க்கவில்லையா? “அல்லாஹ்வின் வழியில் நாங்கள் போர்
புரிவதற்காக எங்களுக்கு ஓர் அரசனை நியமனம் செய்யுங்கள்!” என்று அவர்கள் தம் நபியிடம் கூறியபோது
அவர், “போர் உங்கள் மீது
விதியாக்கப்படும்போது, நீங்கள் போர் புரியாமல்
இருந்து விட்டால்?”
என்று
கேட்டார். அதற்கு அவர்கள்,
“எங்கள்
வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டும், எங்கள் பிள்ளைகளைவிட்டு
பிரிக்கப்பட்டும் இருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போர் புரியாமலிருக்க, எங்களுக்கு என்ன கேடு?” என்று கூறினார்கள். ஆனால் போர்
புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும்
பின்வாங்கிவிட்டனர்! மேலும், அல்லாஹ் இத்தகைய
அக்கிரமக்காரர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவான். (IFT
(நபியே!) மூஸாவுக்குப்
பின் இஸ்ராயீலின் மக்களில் இருந்த தலைவர்கள்பால் நீர் பார்க்கவில்லையா? அவர்கள் தங்கள் நபியிடம் “எங்களுக்கு(த் தலைமை வகிக்க) ஓர் அரசனை
அனுப்பி வையும், அல்லாஹ்வுடைய பாதையில்
நாங்கள் போரிடுகிறோம்” என்று கூறியபொழுது அவர், “போரிடுவது உங்கள் மீது
விதிக்கப்பட்டுவிட்டால், நீங்கள் போரிடாமலே
இருந்துவிடலாம் அல்லவா?”
என்று
கேட்டார். (அதற்கு) அவர்கள் “எங்கள் வீடுகளையும்
எங்கள் மக்களையும் விட்டு திட்டமாக நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்க, அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள்
போரிடாமலிருக்க எங்களுக்கென்ன?”
என்று
கூறினார்கள். பின்னர், அவர்கள் மீது போரிடுவது
கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறமுதுகிட்டு (த்திரும்பிவிட்டனர்).
இன்னும் அநியாயக்காரர்களை அல்லாஹ், நன்கறிந்தவன். (சவூதி)
Comments