உணர்ச்சிவசப்பட்டவர்கள் பின்னால் மார்க்க அறிஞர்கள் போனார்கள் அதன் விளைவு?


முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் வீடு வாசல்களையும் உடமைகளையும் (வணக்கத்தலங்களையும்) பறித்தார்கள். பிறகு  அவர்களை ஊரை விட்டே வெளியேற்றி (விரட்டி) விட்டார்கள். இதனால் கொதித்துப் போன அந்த மக்கள் அவர்களின் தலைவரிடம் சென்றார்கள்

தலைவரே ஊரை விட்டே வெளியேற்றி விட்டார்கள். வீடு வாசல்கள் உடமைகள் (வணக்கத்தலங்கள்)  என சொத்துக்களையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். ஆகவே நாங்கள் ஜிஹாது (போர்) செய்யப் போகிறோம். ஜிஹாது போர் செய்ய எங்களுக்கு அனுமதி தர வேண்டும். என்றார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_21.html


அநியாயமாக அநீதி இழைக்கப்பட்டு விட்டோம். பாதிக்கப்பட்டு விட்டோம். ஆகவே ஜிஹாது (போர்). இப்படி அவரவர்கள் தான் தோன்றித்தனமாக தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்று ரகசியமாகக் கூடி ஜிஹாது (போர்) பிரகடனம் செய்து ஜிஹாது என போய் விடவில்லை. தலைவரிடம் வந்து அணுமதி கேட்டார்கள்.

உடனே அந்த அமீர் (தலைவர்) ஜிஹாது செய்யப் போங்கள். நமது லேபில் தெரியாமல், நாம் செய்கிறோம் என்று தெரியாமல் நம்ம அமைப்புதான் செய்கிறது என்று தெரியாமல் செய்யுங்கள். நம்ம அமைப்புக்கு பாதிப்பு வந்து விடக் கூடாது. இப்படி பிறரை துாண்டி விட்டு விட்டு அமீர் (தலைவர்)கள் ஒதுங்கி இரட்டை வேஷம் போடுகிறார்களே அது போல் அந்த தலைவர் இரட்டை வேஷம்  போடவில்லை.

அந்த தலைவர் சொன்னார் நீங்கள் ஜிஹாது (போர்-யுத்தம்) செய்ய வீரமாக அனுமதி கேட்கிறீர்கள்.  உங்களுக்கு போர் கடமையாக்கப்பட்டு நீங்கள் போர் செய்யாவிட்டால். ஓட்டம் பிடித்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்போது நாங்கள் எப்படி ஜிஹாது - போர் செய்யாமல் இருப்போம் என்றார்கள். கண்டிப்பாக ஜிஹாது - போர் செய்வோம் என்றார்கள். 

இப்படி அவர்களாகவே கேட்ட ஜிஹாது கடமையாக்கபட்டதும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பின் வாங்கி புறமுதுகு காட்டி பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடி விட்டார்கள். இது கற்பனை கலவை அல்ல வரலாறு.

இதற்குப் போய் உணர்ச்சிவசப்படாமல் வேறு எதற்குத்தான் உணர்ச்சிவசப்படுவது என்று வீராவேசம் கொள்பவர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள். 

இந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டவர்களுக்கு மார்க்க ரீதியான விளக்கத்தை கூற கடமைப்பட்டவர்கள் மார்க்க அறிஞர்கள். அந்த அறிஞர்கள் மார்க்க விளக்கத்தைக் கூறி மார்க்கத்தின் பக்கம் அவர்களை அழைக்கவில்லை.

உணர்ச்சிவசப்பட்டவர்கள் அழைப்பை ஏற்றார்கள். 1992க்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் பின்னால் மார்க்க அறிஞர்கள் போனார்கள். இளைஞர்கள் 25 ஆண்டுகளாக மீளாத சிறை வாழ்வை கண்டுள்ளார்கள். 

ஆகவே ரகசிய கூட்டம் நம்மீது ஜிஹாது கடமை என்று சொல்பவர்கள்  எவன் பின்னாலும் போகாதீர்கள். 

முதலில் கூறியுள்ள அந்த உண்மை வரலாற்றையும்  மார்க்க ரீதியான படிப்பினை ஆதாரத்தையும் பின்னர் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ்


பாபரி தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையிலானதா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு