2:16 டிரைனேஜ்களை தலையில் சுமந்து அப்புறப்படுத்தியவன் நான்
என்னைப் பற்றி விமர்சனம் செய்து எழுதிய சகோதரர் உங்களை என்னமோ நினைத்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை வெளியிடுவதால் என்னை என்னமோ என யாரும் நினைக்க வேண்டாம். நான் அரபிக் கல்லுாரிகளில் படித்தவன் அல்ல. அரபிக் கல்லுாரிகளில் படித்தவர்களுடன் நட்பாக இருந்தவன், இருப்பவன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/216.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/216.html
1979 முதல் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட் என்ற அரபி கடையில் ஒரே கபீலிடம் வேலை செய்து வருகிறேன். திக்கா, கபாப், சிக்கன் டிக்கா போன்றவை சுட்டு கொடுக்கும் வேலை செய்பவன்தான் நான். என்னை எதிரியாக கருதுபவர்கள் சமையல்காரன் என்று கூறி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். நான் ஹோட்டலில் வேலை செய்பவன் என்று சொல்வதில் வெட்கப்படுபவன் அல்ல.
எங்கள் கடையில் இப்பொழுது ஒரு பிளேட் 35 திர்ஹங்களிலிருந்து 50 வரை உள்ளன. இதை நான் நின்று சுட்டு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு பிளேட் 100 திர்ஹங்கள் அல்லது ஆயிரம் திர்ஹங்களுக்கு குறையாமல் ஆர்டர் தர வேண்டும். அதுவும் ஒரு நாளுக்கு முன் ஆர்டர் சொல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளேன். இதையே அல்லாஹ் எனக்கு அளித்த உயர்வாக - கண்ணியமாகக் கருதுகிறேன்.
1983- 86 களில் கக்கூஸ் கழுவியவர்கள் தங்களை கேஷியர்கள் என்றும் நகர் சுத்தி தொழிலாளிகளாக இருந்தவர்கள் சானிடரி இன்ஸ்பெக்டர்கள் எனவும் ஆடு, ஒட்டகம் மேய்த்தவர்கள், முடி திருத்தம் செய்தவர்கள். தாங்கள் மன்னர் வீட்டில் வேலை செய்வதாக கூறி பெருமைப்பட்டார்கள்.
அந்தக் காலக் கட்டத்தில் மு.லீக் மேடைகளில் பேசிய நான் துபையில் கக்கூஸ் அள்ளியவன் என்று கக்கூஸ் அள்ளிய சம்பவங்களை மேடைகளில் சொல்லிக் காட்டி இருக்கிறேன்.
அந்தக் காலக் கட்டத்தில் மு.லீக் மேடைகளில் பேசிய நான் துபையில் கக்கூஸ் அள்ளியவன் என்று கக்கூஸ் அள்ளிய சம்பவங்களை மேடைகளில் சொல்லிக் காட்டி இருக்கிறேன்.
டிரைனேஜ் வண்டிகள் வர முடியாத அளவுக்கு சுற்றிலும் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் நிறைந்து விட்ட டிரைனேஜ்களான மல ஜலங்களை தலையில் சுமந்து அப்புறப்படுத்தியவன் கட்டரை காலி செய்தவன் நான். இதையும் மேடையிலேயே சொல்லிக் காட்டி உள்ளேன். எனக்கு எந்த வரட்டு கவுரமும் கிடையாது. உண்மை எங்கு இருந்தாலும் யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன்.
இனி 2:16 வசனத்தின் சொல்லுக்கு சொல் பார்ப்போம்.
இனி 2:16 வசனத்தின் சொல்லுக்கு சொல் பார்ப்போம்.
أُولَـٰئِكَ - உலாயிக
இவர்கள் -அவர்கள் - இத்தகையவர்கள்
இவர்கள் -அவர்கள் - இத்தகையவர்கள்
الَّذِينَ - அல்லதீ(ரீ)ன
அவர்கள் – எவர்கள்- சிலர்
அவர்கள் – எவர்கள்- சிலர்
اشْتَرَوُا - அஷ்தரஉ
வாங்கிக்கொண்டார்கள்
வாங்கிக்கொண்டார்கள்
الضَّلَالَةَ - (அ)ழ்ழலாலத
வழிகேடு
வழிகேடு
بِالْهُدَىٰ - பில் ஹுதா
நேர்வழி
நேர்வழி
فَمَا - Fபமா
இல்லை
இல்லை
رَبِحَت - றபிஹத்
இலாபம் - பயன் - அடைந்துவிட்டது
تِّجَارَتُ- திஜாறது
வியாபாரம்
هُمْ- ஹும்
அவர்கள் – இவர்கள்
تِّجَارَتُهُمْ- திஜாறது ஹும்
இலாபம் - பயன் - அடைந்துவிட்டது
تِّجَارَتُ- திஜாறது
வியாபாரம்
هُمْ- ஹும்
அவர்கள் – இவர்கள்
تِّجَارَتُهُمْ- திஜாறது ஹும்
அவர்களுடைய இந்த வியாபாரம்
وَ- வ
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி
وَ- வ
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி
وَ مَا - மா
இல்லை
இல்லை
كَانُوا - கானுா
ஆகிவிட்டார்கள்
ஆகிவிட்டார்கள்
مُهْتَدِينَ - முஹ்ததீ(ன)ன்
நேர்வழி பெற்றவர்கள்
இனி வசனத்தை முழுமையாகப் படிப்போம்
أُولَـٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ
தமிழாக்கங்கள்
நேர்வழி பெற்றவர்கள்
இனி வசனத்தை முழுமையாகப் படிப்போம்
أُولَـٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ
உலாயிகல் லதீ(ரீ)ன ஷ்தராஉ ழ்ழலாலத பில் ஹுதா Fபமா றபிஹத் திஜாறது ஹும் வ மா கானுா முஹ்ததீ(ன)ன்.
தமிழாக்கங்கள்
அவர்களே, நேர்வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர்.2:16. (P.J.)
1. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் வாங்கிக் கொண்டார்கள் இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.2:16 ( KSR)
2. இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டைக் கொள்முதல் செய்து கொண்ட, தடம் புரண்ட வணிகர்கள். இவர்களுடைய (இந்த) வணிகம் இலாபம் ஈட்டித் தராது; இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர் (அதிரை ஜமீல்)
3. இவர்கள் எத்தகையவர்கள் என்றால் நேர்வழிக்குப் பதிலாக தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டார்கள், எனவே இவர்கள் (இந்த) வியாபாரம் இலாபம் தரவில்லை. மேலும் இவர்கள் நேர்வழி பெறுகிறவர்களாகவுமில்லை (மலிவு பதிப்பு)
4. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்(ஜான், அன்வாறுல் குர்ஆன்)
5. (நயவஞ்சகர்களான) அவர்களோ நேர்வழிக்குப் பகரமாகத் தீய வழியை கொள்முதல் செய்து கொண்டவர்கள். ஆகவே அவர்களது வியாபாரம் (அவர்களுக்கு) ஆதாயம் கொடுக்கவில்லை. அவர்கள் நேர்வழி பெற்றபவர்ளும் அல்லர்.(பஷாரத்)
6. இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. (அப்துல் ஹமீது பாகவி)
7. இத்தகையோரே நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டைக் கொள்முதல் செய்தோர்! ஆனால் இவர்களின் இவ்வாணிபம் இலாபம் தரக்கூடியதாக இல்லை. இன்னும் (அறவே) நேர்வழி பெற்றவர்களாகவும் இவர்கள் இருக்கவில்லை. (IFT)
8. இத்தகையோர்தான் நேர்வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்; ஆகவே இவர்களுடைய (இந்த) வியாபாரம், இலாபமளிக்கவில்லை. மேலும், இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும் இலர்.
9. அவர்களே, நேர்வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர்.2:16. (P.J.)
Comments