வீடியோ மேலப்பாளையம் பாளையங் கால்வாய் மேலக்கரையில் உள்ள பள்ளி. விமர்சனம் கீழக்கரை.

எங்கள் ஊர் ஜமாஅத் நிர்வாக தேர்தல் அடிதடி சண்டையோடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது! 

இதற்கு மாற்று தீர்வு உண்டா? கொஞ்சம் விளக்கமா பதிவு போடுங்க ஹஜ்ரத்துனு ஒரு நண்பரிடமிருந்து வேண்டுகோள் வந்துள்ளது! (வேண்டுகோள் வைத்தது நாமல்ல)
அல்லாஹ்வின் இல்லத்தை நிர்வாகம் செய்வதற்கு கடும் போட்டியும் அரசியல் கட்சி தேர்தலைப் போன்று பரபரப்பும் அதிகரிக்க என்ன காரணம்? எது காரணம்? என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது.

அதிக சொத்தும் அதன் மூலம் அதிக வருமானமும் பண புழக்கமும் உள்ள மஹல்லாக்களில் நிர்வாகிகளாக வருவதற்கு கடும் போட்டி நிலவுவதை காண முடிகிறதென்றால்....?

ஒன்று அந்த பணத்தை கையாடல் செய்யும் நோக்கமும் மற்றொன்று அந்த அமானித பணத்தை பாதுகாக்க வேண்டுமென்னும் அக்கறையுமாக இருக்கலாம்?

தற்போதைய காலச்சூழலில் அமானிதங்களை கையாடல் செய்யும் போக்கு தான் அதிகமாக காண முடிகிறது. 

ஒவ்வொரு மஹல்லாவிலும் நிர்வாகிகளாக வர விரும்புவோர் சுபுஹு உள்ளிட்ட 5 வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்தோடு தொழக்கூடியவர்களாகவும், வட்டி வாங்கல் கொடுக்கல் இல்லாதவர்களாகவும், மது அருந்தாதவர்களாகவும், குர்ஆன் ஓத தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை சட்டமாக்கிட வேண்டும்.

இத்தகைய நற்பண்புகள் கொண்டோர்களை அடையாளம் கண்டு அவர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்வதே சிறப்பாகும்.

இதுபோன்ற பேணுதல் இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரராகவோ? அல்லது அரசியல் கட்சி பிரமுகராகவோ? வாழையடி வாழையாக முத்தவல்லி பரம்பரையாகவோ? இருந்தாலும் அவர்களை மஹல்லா நிர்வாகிகளாக தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைப்பதே நன்று.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

---------------------------------------------------------------
ஐனுல் கிப்லா ஹஜரத்களும்  அறியாமையில் ஆழ்த்தப்படும் அவாம்களும்


அல்லாஹ்வை முன்னிறுத்தி சொல்கிறேன்அல்லாஹ் உடைய பள்ளியில் வைத்து சொல்கிறேன்நிறைந்த இடத்தில் வைத்து சொல்கிறேன். இந்த மாதிரி பீடிகைகளுடன் ஹஜரத்களால் சொல்லப்படும் கப்ஸாக்கள் ஏராளமாகவும் தாராளாகவும் பள்ளிவாசல்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. மக்களும் உணர்ச்சி பொங்க அல்லாஹு அக்பர் என்று கூறி அந்த கப்ஸாக்களுக்கு உரமூட்டிக்  கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஹஜரத்கள் எந்த பள்ளிகளுக்குப் பேசப் போனாலும். அந்தந்த பள்ளிகளின் சிறப்புகளைப் பற்றி அளந்து விடுவார்கள்இது சாதாரண பள்ளி அல்லதப்பு செய்தவர்கள் யாரையும் விட்டு வைக்காத பள்ளிஇது காரணம் காட்டும் பள்ளி.

காரணம் காட்டும் பள்ளி என்பது தான் மறுவி  காட்டுப் பள்ளி என்று ஆகி விட்டது. இந்தப் பள்ளி காட்டிலா இருக்கிறது? ஊருக்குள் தான் இருக்கிறது. இது காட்டுப் பள்ளி அல்ல. காரணம் காட்டிய பள்ளி. காரணம் காட்டும் பள்ளி இப்படியாக பல சிறப்பு கப்ஸாக்களை அந்த பள்ளியின் பெயரால் அளந்து விடுவார்கள்.

அதில் மிக முக்கியமான சிறப்பாக இவர்கள் பேசும் ஒவ்வொரு பள்ளியிலும்  அந்தப் பள்ளியை ஐனுல் கிப்லா என்பார்கள்ஐனுல் கிப்லா என்றால் யாருக்கு என்ன தெரியும்? தெரிந்த மாதிரி தலையை மேலும் கீழுமாக ஆட்டிக் கொள்வார்கள்.

எல்லா பள்ளிகளும் கிப்லாவை நோக்கித்தான் மிஹ்ராபை அமைத்து இருப்பார்கள்இந்தப் பள்ளிவாசலை கட்டக் கூடிய அந்த நேரத்திலேகிப்லா உடைய திசையை நோக்கி இந்த பள்ளியின் மிஹ்ராப் கட்டப்படவில்லை என்ற குண்டை போடுவார்கள்

உடனே எல்லாரும் அதிர்ச்சி அடைந்து ஹஜரத் அடுத்த என்ன சொல்லப் போகிறார் என்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனிப்பார்கள்.

கட்டிடம் கட்டிய கண்ணனுக்கும் கனகனுக்கும் கஃபாவை சுட்டிக் காட்டினார்கள். இதுதான் கஅஃபா என்று அவர்கள் கண்ணில் காட்டி மிஹ்ராப் கட்டினார்கள்கஅஃபாவை கண்ணால் நேரடியாக பார்த்து கிப்லா அமைக்கப்பட்டதால். இந்தப் பள்ளியை ஐனுல் கிப்லா என்று சொல்வார்கள்.

இதற்கு என்ன ஆதாரம் என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகஇதை வலிமார்கள் நாதாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்றும் அடித்து விடுவார்கள். இனி சாட்சிகள் தேவையா? போடு அல்லாஹு அக்பரை என்று அல்லாஹு அக்பர் போட்டு விடுவார்கள்

 இந்த 2019ல் உங்களிடம் சொன்ன வலிமார்கள் நாதாக்கள் யாரு ஹஜரத்? அந்த வலிமார்களை நாதாக்களை நாங்களும் கண்ணால் பார்க்க வேண்டும் என்று எந்த தலையாட்டிகளும் கேட்க மாட்டார்கள்.

இந்த மாதிரி ஹஜரத்கள் பேசும் எல்லா பள்ளிகளுக்கும் ஐனுல் கிப்லா பள்ளி என்ற சர்ட்பிகேட்டை கொடுத்து விடுவார்கள்உலகம் உருண்டை வடிவமாயிற்றே பூமியின் உருண்டையான அமைப்பு படி பார்க்க வாய்ப்பே இல்லையே!

பூமி தட்டை என்று வைத்துக் கொண்டாலும். கஃபாவின் உயரம் 53 அடிதானே. உலகத்திலேயே மிக உயரமான 165 மாடிகளுடைய  கட்டிட உயரம் 2722 அடி. அரபு நாட்டில் உள்ள அதைக் கூட பைனாகுலர் போன்ற துார  நோக்கு கருவிகளைக் கொண்டு. LIC யை விட உயரமான கட்டிடத்தின் மேல் நின்று பார்த்தாலும் தெரியாதே

இப்படியெல்லாம் விஞ்ஞான அடிப்படையில் அறிவுப்பூர்வமாக யாரும் கேட்கக் கூடாதுகேட்டால் ஐனுல் கிப்லா பள்ளியின் வடக்கு வாசல் காரணம் காட்டி கண்ணை கொத்தி விடும்அதற்கு பரிகாரமாக பள்ளியின் வடக்கு வாசலுக்கு மாலை வாங்கி போட வேண்டி வரும்.

கஃஅபாவை முன்னோக்கி தொழ வேண்டும் என்பது மஸ்ஜிதுல் ஹராமில் மட்டும் தான். அங்கு மட்டுமே கஃஅபாவை முன்னோக்கி தொழுதல் என்பது சாத்தியம்.

கஃஅபா என்பது கிழக்கில் 49அடி நீளமும்வடக்கில் 31 அடி நீளமும்மேற்கில் 45 அடி நீளமும்தெற்கில் 31 அடி நீளமும் தான் உள்ளது. அப்படி இருக்க அதை நோக்கி உலகில் உள்ள அனைவரும் தொழ முடியுமா என்று அறிவியல் ரீதியாக கேள்வி கேட்கவில்லை. அல்லாஹ் கஅஃபாவை நோக்கி  தொழும்படி கட்டளையிட்டுள்ளானா? என்பதுதான் கேள்வி. அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்?

நபியே! நீங்கள் விரும்புகிற கிப்லாவை (திசையை) நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் (மஸ்ஜிதுல் ஹராமின்) திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! 2:144  

நபியே! நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! (2:149,2:150 )

வெறுமனே மஸ்ஜிதுல் ஹராம் என்று சொல்லாமல் ஷத்ரல் மஸ்ஜிதுல் ஹராம்  என்றே சொல்லி உள்ளான்


شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ


இப்படித்தான் அல்லாஹ்வே சொல்லி உள்ளான். கஅஃபா என்பது ஆதம்(அலை) அவர்களும் அவரது பிள்ளைகளும் தொழும் அளவிலான மிகச் சிறிய பள்ளிதான். மஸ்ஜிதுல் ஹராம் என்பது கஅஃபாவையும் உள்ளடக்கியது. மஸ்ஜிதுல் ஹராம் என்பதுகஅஃபாவையும் அதன் வளாகத்தையும் குறிக்கும் சொல்லாகும்.

நபி(ஸல்காலத்திலேயே லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொழும் பெரிய பள்ளியாக ஆகி விட்டதுஇன்று தினமும் 30 லட்சம் உலக மக்கள் ஒன்று கூடி தொழ வசதியான உலகிலேயே மிகப் பெரிய பள்ளியாக அது உள்ளது.

அவ்வளவு பெரிய பள்ளியாக இருந்தும் அந்த மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி தொழுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடவில்லை. மஸ்ஜிதுல் ஹராம் இருக்கும் பக்கம் (திசை) நோக்கி தொழுங்கள் என்றே கட்டளை இட்டுள்ளான். அப்படி இருக்க எதற்கு இந்த ஐனுல் கிப்லா கதைகள்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு