இந்திய மதச்சார்பின்மை ஓர் ஆய்வு. வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளில் ஒன்று.
மேலப்பாளையம்
அல்லாமா இக்பால் (பஜார்) திடலில் 17-12-1994 சனி அன்று
பீ.ஜே. பேசினார். அதில் என்ன பேசினாரோ அதே கருத்துக்களைத்தான் 24_11_2019
அன்று மண்ணடியில் நடந்த கூட்டத்தில்
அதிகமாகப் பேசினார்.
17-12-1994 தேதிய அந்தப் பேச்சு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று போல் அன்று அவ்வளவு விரைவு தகவல் தொடர்புகள்
கிடையாது. ஆனால் கூட்டம் நடந்த மறுநாள் 18 ஆம் தேதி முற்பகலில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
முதல் முறையாக எனக்கு போன் செய்தார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_26.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_26.html
நான் ஜவாஹிருல்லாஹ்
பேசுகிறேன். கூட்டம் நன்றாக இருந்தது என்றும் பீ.ஜே. பேச்சு நன்றாக இருந்தது
என்றும் அறிந்தேன். அவர் பேச்சு நன்றாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம்.
கூட்டம்
எதிர்பாராத அளவுக்கு கூடியதற்கும் பேச்சு எல்லா மக்களையும் ஈர்த்து தாக்கத்தை
ஏற்படுத்தியதற்கு காரணம்
நீங்கள் தான். நீங்கள் கொடுத்த தலைப்பு
தான் அதற்கு
பாராட்டு தெரிவிக்கவே போன் போன் போட்டேன்
என்றார்கள். அந்தக் கூட்டத்திற்கு நாம் கொடுத்த தலைப்பு இந்திய மதச்சார்பின்மை ஓர்
ஆய்வு.
24_11_2019 தேதிய மண்ணடி கூட்டம் இன்னொரு வரலாற்று நிகழ்ச்சிகளையும் நமக்கு நினைவுக்கு கொண்டு வந்தது. தடா எதிர்ப்பு பேரணி நடத்தியவர்கள் எல்லாம் தடாவில் போனார்கள்.
அன்றைய இரும்பு
மனிதர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தடா எதிர்ப்பு பேரணி நடத்தினார். போலீஸ் ஓட ஓட அடித்து ராமதாஸ் வேட்டியை
உருவி விட்டது. சிறையிலும்
தள்ளியது.
அவர் நெஞ்சு வலி
என ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். ராமதாஸின் மனைவி ஒரு பெண்ணின் மன நிலை இன்னொரு பெண்ணுக்குத்தான்
தெரியும் என்று மனம் உருகும்படி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள்
வைத்தார். ஜெயலலிதா ராமதாஸை
விடுதலை செய்தார்.
அதே முதல்வர்
ஜெயலலிதா ஆட்சியில் தான் 22-01-1995 அன்று மேலப்பாளையத்தில் தடா எதிர்ப்பு பேரணி வெற்றிகரமாக
நடந்தது. இந்தப் பேரணியை
நடத்தும் பொறுப்பு M.S. லுஹா, M.S. சுலைமான், J.S. ரிபாஇ, அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற மவுலவிகளிடம் ஒப்படைத்து
இருந்தால் போலீஸ் ஓட ஓட அடித்து வேட்டியை உருவி விடுவதோடு மட்டுமல்லாமல்
ஜட்டியையும் கழட்டி விட்டிருக்கும்.
அதனால்தான் பீ.ஜே. அல்லாஹ்வின் அருளுக்குரியவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். அ.தி.மு,க. நகரச் செயலாளராக இருந்த R.M.A. அப்துல் ஸமது மற்றும் காங்ரஸ் பிரமுகர்கள் தடா எதிர்ப்பு
பேரணிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எல்லா அதிகாரிகளையும் நேரில் பார்த்துச்
சொல்லி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.
அப்பொழுது சிறையில் இருந்த மு.லீக். பிரமுகர் காயல் மஹ்பூபுக்காகவும் குரல் கொடுக்கும் பேரணி
என்றாலும். மு.லீக் கட்சி சார்பில் ஆதரித்து
கலந்து கொள்ளவில்லை.
அல்லாஹ்வின்
அருளுக்குரியவர், 35 ஆண்டுகள் தி.மு,க.வில் நகரச் செயலாளராக இருந்து பலரால் அரசியல் ஆசான் என்று
அழைக்கப்பட்ட மு.லீக்.
பாளை தொகுதி அமைப்பாளராக இருந்த செ.கா.மு.யூசுப், மணியாச்சி காஜா. Ex M.C. சேனாதிபதி மைதீன் பிச்சை Ex M.C.
அ.தி.மு.கவைச் சார்ந்த. த.மு,சா. காஜா மைதீன், ஓவியர் மைதீன், ஷாஜஹான்,
தி.மு.க. செய்யது மைதீன், செந்தமிழ் அடியான், நெல்லை மைதீன், ம.தி.மு.க. கி.மு. சாகுல் ஹமீது, தி.க. ஷண்முகம், காங்ரஸ் அருணாசலத் தேவர், ஜனதா கட்சி சிரோன்மணி, நெல்லை மன்சூர், பா.ம.க. வியனரசு என பல கட்சி பிரமுகர்களையும் அரசு அதிகாரிகளையும்
மாமா கலாம் ரசூல் அவர்களுடன் போய் அறிவுப்பூர்மாக சந்தித்துப் பேசி தடா எதிர்ப்பு
பேரணிக்கு தடையில்லா அணுமதி பெற்றார்.
மக்களை திரட்ட
முடவன் இஸ்மாயில், அல்கபீர் ஷம்சு, மசூது, உசேன், ஜில்லி என இளைஞர் பட்டாளத்தை அமைத்தார். லுஹா போன்ற மவுலவிகளோ
மக்கள் வராமல் கேவலப்படும் முன் தடா எதிர்ப்பு பேரணியை கவுரமாக கேன்சல் செய்து
விடுங்கள். என்று மதியம் இரண்டரை வரை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
தவ்ஹீதுவாதிகள்
பின்னால் மக்கள் வர மாட்டார்கள் என்று சொன்னவர்களுக்கு வாய்ப் பூட்டு போட்டு மக்கள்
திரண்டு விட்டார்கள். விடுதலை செய். விடுதலை செய். தடாக் கைதிகளை விடுதலை செய்
என்று கடையநல்லுார் ஸைபுல்லா ஹாஜாவின் வெண்கலக் குரல் முழக்கத்தில் பேரணி
புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறது.
போங்கள் என்றேன்.
Comments