இந்திய முஸ்லீம்களே இன்னுமா உறக்கம்? உங்கள் மீது இன்னுமா ஜிகாத் கடமையாகவில்லை?

எவ்வளவு காலம்தான் அடி வாங்கிய மக்கா வாழ்க்கை? பதிலடி கொடுத்த மதீனா வாழ்க்கை இல்லையா? அதில் முன் மாதிரி  இல்லையா? பத்ரு படை கண்ட மதீனா வாழ்க்கை உங்களுக்கு தெரியாதா?  உங்கள் ரத்தம் இன்னுமா கொதித்து சூடாகவில்லை? அறிவிக்கப்பட்ட பத்ருகள் என்ன ஆயிற்று? எதற்கெல்லாமோ பத்ர் பத்ர் என்றவர்கள் இதற்கு பத்ர் அறிவிக்காமல் பதர்களாக ஆனது ஏனோ?

1980களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்களில் ஒரு ஜாதியினர் தங்கள் ஜாதியின் பெயரால் பேரவை ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் சமுதாய நலனுக்கு அமைப்புகள் காண்பது அவர்களது உரிமை. அதை நாம் குறை கூற மாட்டோம். 

அவர்கள் நடத்திய ஊர்வலங்களில்
, பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நுறுக்கு, முக்கால் உனக்கு எதற்கு முழுசு நான் தாரேன் என்ற கோஷங்களுடன் கடையநல்லுார் போன்ற முஸ்லிம் பகுதிகளில் ஊர்வலம் போனார்கள். இதுபோல் இந்து சகோதரர்களின் உணர்ச்சிகளை முஸ்லிம்களுக்கு எதிராக  துாண்டி விட்டு சுயநலம் கண்டவர்கள் பலர் தோன்றினார்கள்.

அவர்களுக்கு எதிராக தி.மு.க
, அ.தி.மு.க, என எல்லா கட்சிகளையும் இணைத்து இஸ்லாமிய பேரவை கண்டார். அன்றைய தென்காசி மு.லீக். M.L.A ஷாகுல் ஹமீது. மு.லீக் இருக்க இஸ்லாமிய பேரவை தேவையா என  அவர் மு.லீக்கிலிருந்தும் நீக்கப்பட்டார். அந்த கால கட்டத்தில் தான் ஆங்காங்கே ஜிகாத் கமிட்டிகள் அதிகம் தோன்றின. 

அந்த ஜிகாத் கமிட்டிகளில் மிகவும் பிரபலமாகவும் வலுவாகவும் இருந்து சினிமா வரை தாக்கத்தை ஏற்படுத்தியது நெல்லை
 மாவட்ட ஜிகாத் கமிட்டி தான். நபிகள் நாயகத்தையும் அவரது மனைவிமார்களையும் இழிவாகப் பேசிய இன்ன இன்னவர்களை போட்டுத் தள்ளுவதே தங்கள் லட்சியம் என்றார்கள்.

..
பேரவை என்ற பெயரால் செயல்பட்ட அந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் முஸ்லிம் விரோத போக்கை அடக்கப் போவதாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக தங்களை அர்ப்பணித்து விட்டதாகவும் கூறி வேகமாக வளர்ந்தார்கள். பகிரங்கமாக வாளுடன் வலம் வந்தார்கள் அந்த ஜிகாத் கமிட்டியினர். 

தவ்ஹீதை சொன்ன
  எம்மை அவர்களைக் கொண்டு சுன்னத் ஜமாஅத்தினர் மிரட்டினார்கள். அதற்கு பதிலடியாக கோவை பாஷா பாய் அவர்களையும் பிலால் ஹாஜியார் அவர்களையும் கொண்டு வந்து 1989ல் மீட்டிங் போட்டோம். இதை முன்பு பல முறை எழுதி விட்டோம்.


எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் முஸ்லிம் விரோத போக்கை எதிர்க்கப் போவதாகக் கூறி ஜிகாத் கமிட்டியினர் வளர்ந்தார்களோ.  அந்த சமுதாயத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக 1991 தேர்தலில் களப் பணி ஆற்றினார்கள் ஜிகாத் கமிட்டியினர். எப்படி தெரியுமா? 

முஸ்லிம்களை அதட்டி மிரட்டினார்கள்.
 முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராகவும் முஸ்லிம் அல்லாத வேட்பாளருக்கு ஆதரவாகவும் கடும்  களம் கண்டார்கள். முஸ்லிம் வேட்பாளர் பிரசார கூட்டத்தில் புகுந்து  கொடிகளையும் பேனர்களையும் கிழித்தெரிந்து கலாட்டா செய்தார்கள் அந்த ஜிகாத் கமிட்டியினர்.


ஜிகாத் கமிட்டி தலைவர் ஆணையிடுகிறார். உங்கள் ஓட்டுக்களை முஸ்லிம்  வேட்பாளருக்கு போடக் கூடாது.  முஸ்லிம் அல்லாத இன்ன இந்து வேட்பாளருக்கே ஓட்டுப் போட வேண்டும். ஜிகாத் கமிட்டி தலைவர் ஆணை என்று தெருத் தெருவாக மைக்கில் ஆணை இட்டார்கள். 

தேர்தல் முடிந்த பிறகு நடந்த தவ்ஹீது பிரச்சார கூட்டத்தில் பேசிய பீ.ஜே.யை பேசிக் கொண்டிருக்கும் போதே வெட்டினார்கள். இவை 1991ல் நடந்தவை.

1992
ல் ஜிகாத் கமிட்டி தலைவரை ஜிகாத் கமிட்டி பொருளாளர் அணி போட்டுத் தள்ளினார்கள். ஜிகாத் கமிட்டி பொருளாளரை ஜிகாத் கமிட்டி செயலாளர் அணி போட்டுத் தள்ளினார்கள்.  (இன்னாலில்லாஹி....)
வெற்றி விழா படத்தில் பிரபலமானவர்கள் இப்படி மாறி மாறி போட்டுத் தள்ளி அந்த ஜிகாத் கமிட்டிக்கு மூடு விழா கண்டார்கள்.

நபிகள் நாயகத்தையும் அவரது மனைவிமார்களையும் இழிவாகப் பேசிய இன்ன இன்னவர்களை போட்டுத் தள்ளுவதே தங்கள் லட்சியம் என்ற ஜிகாத் கமிட்டியினர் யார் யாரை போட்டுத் தள்ளி உள்ளார்கள்?  

இவர்கள் குர்ஆனிலிருந்து சொன்ன ஜிகாத் எந்த அளவிற்கு இருந்துள்ளது? ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளும் அளவுக்கு  இருந்துள்ளது. பழனி பாபாவை பள்ளிவாசலுக்குள் பேச விடாமல் கதவை பூட்டி விட்டு ஓடிய பள்ளி நிர்வாகிகள்  இவர்களுக்குத்தான் குர்ஆன் கூறும் ஜிகாத் பற்றி வாளுடன் பள்ளிவசாலில் நின்று பேச சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் இடம் கொடுத்தார்கள்.

அந்த ஜிகாத் கமிட்டியில் இருந்தவர்களில் பலர் இன்று காபிரான தலைவர்களை ஈமான் கொண்டு டாஸ்மாக் வருமானம் பார்த்து  கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம் அல்லாதவர்களை தலைவர்களாக ஏற்று டாஸ்மாக் வருவாய்களில் கண்ணும் கருத்துமாக  இருக்கிறார்கள். இது தான் குர்ஆனிலிருந்து அந்த ஜிகாத் கமிட்டி விளக்கிய ஜிகாத்தோ? என்னவோ? 

இதை இப்பொழுது எழுதுவதற்கு காரணம். 1992ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு இவர்கள் போன்ற தவறான ஜிகாத் கொள்கை சிந்தனை உடையவர்கள் மீண்டும் தலை துாக்கினார்கள். 

ஆங்காங்கே பலர் பல குழுக்களாகக் கூடினார்கள்.
  ரகசிய பைஅத் கூட்டங்கள் நடத்தியவர்கள் உட்பட பல கூட்டத்தினரும் எம்மை துபை வரை வந்து தொடர்பு கொண்டார்கள். 

பல குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டோம். முன்னணியாளராக இருந்தோம். பல ரகசிய கூட்டங்கள் அரபகத்திலும் தாயகத்திலும் என் வீட்டின் மாடிகளிலும் நான் வேலை செய்யும் ஹோட்டல் மாடியிலும் நடந்தன. இருந்தாலும் இந்த தவறான ஜிகாத் கொள்கையில் எனக்கு உடன்பாடு கிடையாது. 

அரசாங்கத்தின் மீது - ஆட்சியாளர்கள் மீது விதிக்கப்பட்டதுதான் கிதால் - போர் என்பது தான் நமது நிலைபாடு.

உடன்பாடு இல்லை என்பது ஏதோ சந்தர்ப்ப வாதம் என்று பலர் எண்ணலாம். 1994ல் அடிக்கடி மதுரை சென்று ரகசிய பேச்சுக்களில் கலந்து கொண்ட அதே நேரத்தில். ரகசிய பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் நட்பு ரீதியாக உடன் வந்து தனித்து இருந்து பொறுமை காத்த நண்பர் இக்பால் அவர்களிடம் மதுரையில் வைத்தே  சொன்னேன். 

இந்த ஜிகாத் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை.
  இருந்தாலும் நான் அவர்களோடு இருப்பதற்கு இது தான் காரணம் என்று காரணத்தைச் சொன்னேன்.

நண்பரிடம் சொன்ன காரணத்தை இப்பொழுது சொன்னால் அது திசை திருப்பும். அதை பின்னர் வெளியிடுவோம். நண்பர் கூளி இக்பால்  வேறு யாருமல்ல இன்றைய TNDJன் நீண்ட நாள் ஆம்லன்ஸ் Ex டிரைவர். 

பொறுமை காத்த நண்பர் இக்பால் என குறிப்பிடுவதற்கு காரணம் உடன் வந்த வேறு 2 மவுலவிகள் கொதித்துப் போனார்கள். கோழைகளான அவர்களை தவிர்த்து என்னிடம் ரகசியம் பேசியது அவர்களுக்கு மானப் பிரச்சனையாகி கோபத்தை கொப்பழிக்க வைத்தது. 

ரகசிய கூட்டங்களில் ஜிகாதுக்கு அழைப்பு விட்டு குர்ஆன் கூறும் ஜிகாத்துக்கு விளக்கம் அளித்து பேசியவர்கள் யார் தெரியுமா?  அவர்கள் சமுதாயத்தால் சண்டியர்கள் என்று அறியப்பட்டவர்கள். 

இவர் பல கொலைகள் செய்தவர். அவர் அம்மாவுடன் உடன் பிறந்த அண்ணனான தாய் மாமாவையே கொலை செய்தவர். இவர் அக்காள் மாப்பிள்ளையான மச்சானையே கொலை செய்தவர் என்ற அறிமுகத்துடன் கூடியவர்கள் தான்.

அரபு கல்லூரிகளில் படித்த ஆலிம்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு தெரியாத ஜிகாத் பற்றிய விளக்கத்தை அலிப் பே தெரியாத இந்த ஜிகாதிகள் பாடம் நடத்தினார்கள்.  

30க்கும் மேற்பட்ட  மவுலவிகள் கூடிய கூட்டத்தில் கூட அத்தனை மவுலவிகளும் நமக்கே  தெரியாத ஜிகாத் பற்றிய குர்ஆன் வசனங்களை சொன்னவர் அவர்தான் என ஒருவரை புகழ்ந்து தள்ளினார்கள். 

அரசாங்கத்தின் மீது - ஆட்சியாளர்கள் மீது விதிக்கப்பட்டதுதான் கிதால் - போர் என்பது அரபி படித்த ஆலிம்களுக்கு தெரியாதா? என்பார்கள். படித்தவர்கள் என்பது வேறு. மேதைகள் (அறிஞர்கள்)  என்பது வேறு. படித்தவர்களெல்லாம் மேதைகள் (அறிஞர்கள்)  அல்ல. படிக்காதவர்களெல்லாம் அறிவிலிகளும் அல்ல. 

அதனால் தான் பள்ளிக் கூடங்களுக்கே செல்லாத அறிஞர்களை படிக்காத மேதை என்பார்கள். படித்தல் என்பது வேறு அறிவைக் கொண்டு சிந்தித்தல், அறிதல், புரிதல் என்பது வேறு. 

1980
களில் தமிழக அரபி கல்லுாரிகளில் ஸனது பெற்றவர்களுக்கு விஸா எடுத்து துபை கொண்டு வந்தோம். அரபிகளிடம் இவர் ஆலிம் என்று கூறி வேலை கேட்டோம். அப்பொழுது அரபிகள் எதில் ஆலிம் என்றார்கள். இது பற்றியும் முன்பு விரிவாக எழுதி விட்டேன் என்பதை நினைவூட்டிக் கொள்கிறேன். 


அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் ஜிஹாது பற்றி தாங்கள் தவறாக விளங்கி கூறியதை தவறாக கூறி விட்டோம் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.  அதற்கு மாற்றானவர்கள் தங்கள் வரட்டு கவுரவத்தால் நாங்கள் சொன்னோம். உங்களுக்கு மூளை எங்கே போனது என்று கேட்டார்கள்.


கோவை சிறைவாசிகளுக்கு துபையில் வசூலிக்க முதன் முதலாக விஸா கொடுத்து அழைத்த நான், வசூலிக்க வந்தவர்களிடம் சொன்னது குர்ஆன் கூறும்  சிறைவாசிகளுக்கு உதவுதல்  என்ற அடிப்படையிலேயே உதவுகிறோம். அவர்கள் செய்த செயல்களில் நமக்கு உடன்பாடு இல்லை  என்பதை விளக்கி விட்டே வசூலுக்கு அழைத்து சென்றோம்.


2006ல் தி.மு.க. ஆட்சி வந்ததும் த.மு.மு.க. தலைமை மூலம்  கருணாநிதியை அணுகி சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக பேச முயற்சிகள் செய்தோம். இது சம்பந்தமாக பேச 25.05.2006 அன்று மஃரிபுக்கு பிறகு என் வீட்டிற்கு வந்திருந்தவர்களிடம் சொன்னோம். சிறைவாசிகளுக்கு உதவுதல் என்ற அடிப்படையில் தான் இதில் ஈடுபடுகிறோம் அவர்கள் செயல்களில் உடன்பாடு கிடையாது.  என்பதை விளக்கினோம்.  இனி சம்பவங்கள் நடக்காது என்று வாக்குறுதி அளித்தார்கள். 

இதற்காக சென்னை, கோவை, மதுரை, பாளை என எல்லா சிறைகளுக்கும் சென்று பேச்சு வார்த்தை நடத்தினேன். 

அவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி இவர்கள் இனி எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நான் பொறுப்பு ஏற்கிறேன் என த.மு.மு.க. தலைமைக்கு நான் எழுதி கொடுத்தேன். ஆனால் சம்பவங்கள் நடந்தன. த.மு.மு.க. தலைமை எடுத்த சிறைவாசிகள் விடுதலை முயற்சி தோழ்வியுற்றது


மேற்கண்டபடி உருவான ஜிகாதிகளால் முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம்  செல்வந்தர்களும் மிரட்டப்பட்டு பாதிக்கப்பட்டார்கள். 

என்னிடம் உதவி பெற்ற  சிறைவாசிகளாலேயே நான்  மிரட்டப்பட்டேன். 1980 முதல் சிறைவாசிகளுக்கு உதவி வரும் எனது பணியையும் விடுதலை முயற்சியில் ஈடுபட்ட த.மு.மு.க.வையும் கொச்சைப்படுத்தி  நோட்டீஸ் போட்டார்கள்.



பெயர் குறிப்பிட்டு எழுத நமக்கு எந்த தயக்கமும் கிடையாது. சார்புத்தன்மையால் உண்மையை பொய்ப்படுத்த முயல்வார்கள். 

பிறகு
 நாம் கூறும் உண்மையை மறுப்பவர்கள் மீது அல்லாஹ்வின்  சாபம் உண்டாகட்டுமாக என்று எழுத வேண்டி வரும். அதனால் நமது நோக்கம் திசை திரும்பி விடும். எனவே தான் இப்பொழுது இதில் பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை. எல்லாமே முன்பே பெயர் குறிப்பட்டு எழுதப்பட்டவைதான். அனைத்தும் பிளாக்கரில் உள்ளன.
  
2002ல் லுஹா, பீ.ஜே. போன்றவர்களை கத்தல் செய்ய பைஅத் குரூப் எம்மை தொடர்பு கொண்டார்கள்.  நாம் உடன்படவில்லை.

2006ல் சென்னையில் பீ.ஜே.யை போட்டுத்தள்ள ஒரு ஜிகாத் குரூப் செயல்பட்டது. ஆனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது. 

அதே 2006ல் லுஹாவை போட்டுத்தள்ள உள்ள விஷயத்தை ஒரு ஜிகாத் குரூப் என்னிடமே பேச்சு வார்த்தை நடத்தியது. உடனே  த.மு,மு.க. தலைவர் MHJ  மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி மூலம் லுஹாவுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமே செய்து கொடுத்தோம்.  இதையும் முன்பு எழுதி உள்ளோம்.

கடந்த ஆண்டு ஒரு ஜிகாத் குரூப் நேரடியாகவே சொன்னது பீ.ஜே.யை கொன்று விடுகிறோம் உத்தரவு தாருங்கள் என்று என்னிடம் பேசியது. அதில் நமக்கு உடன்பாடு இல்லை என்று கூறி விட்டோம்.  

இந்த ஆண்டு ஒரு ஜிகாத் குரூப் பீ.ஜே.யை கொன்று விட சுற்றி வளைத்துப் பேசி பொருளாதார உதவி தாருங்கள் என்று என்னிடம் கேட்டது. நாம் உடன்படவில்லை.

மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் பள்ளியில் 1995 ரமழான் மாதம் நடந்த தொடர் பயானில், எவ்வளவு காலம்தான் அடி வாங்கிய மக்கா வாழ்க்கை? பதிலடி கொடுத்த மதீனா வாழ்க்கை இல்லையா? அதில் முன் மாதிரி இல்லையா? பத்ரு நோக்கி படை சென்ற மதீனா வாழ்க்கை உங்களுக்கு தெரியாதா?  உங்கள் ரத்தம் இன்னுமா கொதிக்கவில்லை? இன்னுமா உறக்கம் என்பதுதான் முக்கிய கருத்தாக இருந்தது.

அதை  வீடியோ செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.  நமது நிகழ்ச்சிகளை புரபஷனலாக பதிய நம்மிடம் படித்த நெல்லை கோமத் வீடியோ கண்ணன் குழுவை நாம் தான் அனுப்பி வீடியோ செய்தோம். பிறகு  வேறு காரணங்கள் கூறி அதை சரியாக வெளியிடவில்லை. 

இஸ்லாமும் ஜிஹாதும் என்ற தலைப்பில் 1987ல் பேசியதிலிருந்து தடா எதிர்ப்பு மற்றும் த.மு.மு.க. வீடியோக்களை வேகமாக வளைகுடாவில் பரப்பிய நான் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் வீடியோவை பரப்பவில்லை. அந்த ஜிகாத்தில் உடன்பாடில்லை என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.


இந்திய முஸ்லீம்களே இன்னுமா உறக்கம்? உங்கள் மீது ஜிஹாது இன்னுமா கடமையாகவில்லை? என்ற தலைப்புக்கு தக்கவாறு சூடாக இல்லையே என்று எண்ணாதீர்கள்.

எவ்வளவு காலம்தான் அடி வாங்கிய மக்கா வாழ்க்கை? பதிலடி கொடுத்த மதீனா வாழ்க்கை இல்லையா? என்று கேட்டார்கள். அபிஸீனியா வாழ்க்கையை மறந்தார்கள். கடைசியில் மீளா சிறை வாழ்க்கையை  பெற்றார்கள். பலருக்கு  வாங்கி கொடுத்து விட்டார்கள். 

நாங்கள் தான் இளமையை இழந்தோம். வாழ்க்கையை இழந்தோம் என்று சொல்பவர்கள் செயல்பாடுகள். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல் இருக்கக் கூடாது. அடுத்து வரும் சமுதாயம் இந்த மாதிரி ஆகி விடக் கூடாது என்று செயல்பட வேண்டும். 

மக்கா வாழ்க்கை ஆட்சி அதிகாரம் இல்லாத அடி வாங்கிய வாழ்க்கை தான். மதீனா வாழ்க்கை பதிலடி கொடுத்த வாழ்க்கை அல்ல. தாங்களாகவே சென்று தட்டிக் கேட்ட ஆட்சி அதிகாரம் உடைய வாழ்க்கை. வித்தியாசங்களை விளங்கிக் கொள்ளுங்கள். 

அரசாங்கத்தை எதிர்த்து ரகசிய கூட்டங்கள் கூறும் ஜிகாது செய்ய, ஆளும் ஆட்சி அதிகாரம் இல்லாத யார் மீதும் எந்த தனி நபர் மீதும் இயக்கங்களின் மீதும் கிதால் - ஜிஹாது - போர்- யுத்தம் அல்லாஹ் விதியாக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

இன்றைய சூழலைப் பயன்படுத்தி  இந்திய முஸ்லீம்களே இன்னுமா உறக்கம்? உங்கள் மீது ஜிஹாது இன்னுமா கடமையாகவில்லை? என்று யார் துாண்டினாலும் அவர்கள் தான் முஸ்லிம்களின் முதல் விரோதிகள். இஸ்லாத்தின் முதல் விரோதிகள் என்று அடையாளம் கண்டு ஒதுங்குங்கள் ஒதுக்குங்கள்.

நம்மீது ஜிஹாது கடமை இல்லை என்பதற்குரிய மார்க்க ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவோம்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு