“மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று நபி(ஸல்) பொதுவாகக் கேட்டதன் நோக்கம் என்ன?

எல்லார் மன நிலைகளையும் அறிவதற்காக ஆலோசனை கூட்டத்தை இறைத் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூட்டினார்கள். சூழ்நிலைகளை விளக்கினார்கள். போர் விதியாக்கப்பட்டு விட்டதைக் கூறி ஆலோசனை கேட்டார்கள்

அபுபக்கர்(ரலி) அவர்கள் எழுந்து களத்தை சந்தித்து விடுவோம் என்று கூறி விட்டு மக்கள் மத்தியிலே ஆர்வம் ஊட்டி அழகான உருக்கமான ஒரு உரையை நிகழ்த்தி மக்களுக்கு தெம்பூட்டினார்கள்.


உமர் (ரலி) அவர்கள் எழுந்து அவர்களுக்கே உரிய வேகப்படி உறுதி கூறினார்கள். மக்கள் மத்தியிலே வீரத்தை ஊட்டி அழகான ஒரு உரையை நிகழ்த்தினார்கள்

மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) எழுந்து பேசினார்கள். மிக்தாத் அவர்களின் உரை இருவரின் உரைகளையும் மிஞ்சி விட்டது. அது வரலாற்றில் சிறப்பாக பதியப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. வரலாற்றில் எல்லா அறிஞர்களும் அந்த உரையை பாராட்டி உள்ளார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களே அந்த இடத்தில் பாராட்டி உள்ளார்கள். மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அப்படி என்ன சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு என்ன உத்தரவு போடுகிறானோ அதைச் செய்யுங்கள். என்ன வழி காட்டுகிறானோ அந்த வழியில் செல்லுங்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பனீ இஸ்ராயீல்கள் மூஸா(அலை) அவர்களிடம் சொன்னார்களே அது போல சொல்ல மாட்டோம் என்றார். 

இஸ்ரவேலர்கள் நபி மூஸா (அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? அதை சூரத்துல் மாயிதாவில் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான். நபி மூஸா (அலை) அவர்கள் போராடியது இஸ்ரவேலர்களுக்காகத்தான். நபி மூஸா (அலை) அவர்களுக்கு போராட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இஸ்ரவேலர்களுக்காக மூஸா (அலை) போராடும்பொழுதும். போர் என்று சொன்ன உடன் இஸ்ரவேலர்கள் என்ன சொன்னார்கள்? 

நீயும் உமது ரப்புமாகப் போய் சண்டை போடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம் என்றார்கள் அதைச் சொல்லிக் காட்டினார்.

லா நகூலு லக கமா கால பனீ இஸ்ராயீல் லிமூஸா. மூஸா(அலை) அவர்களுக்கு பனீ இஸ்ராயீல்கள் சொன்ன மாதிரி நாங்கள் உங்களிடம் சொல்ல மாட்டோம். “பர்ஹப் அன்த வறப்புக பகாதிலா இன்னா ஹாஉனா காஇதுான்நீரும் உமது இறைவனும் சென்று போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருக்கிறோம் (அல்குர்ஆன் 5:24) என்று சொன்னார்களே அப்படிச் செய்ய மாட்டோம்

சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு பர்குல் ஃகிமாது“” என்ற இடம் வரை சென்றாலும் நாங்களும் உங்களுடன் மிகத்துணிவுடன் வருவோம்.இவ்வாறு மிக்தாத் (ரழி) கூறி முடித்தார்.

பர்குல் ஃகிமாது“” என்பது மக்கா பார்டர். இப்பொழுது நாம் மக்காவுக்கு பக்கமாக இல்லை. நமது ஊரான மதீனாவுக்கு பக்கமாகத்தான் உள்ளோம். அவர்களது ஊரான மக்காவுக்கு பக்கத்திலே போய் போர் செய்ய அழைத்தாலும் வருவோம் என்றார்கள். மக்காவுக்கு பக்கத்திலே போனால் பாதுகாப்புகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அங்கேயும் நிச்சயமாக வருவோம் என்றார். 

மிக்தாத் (ரழி) அவர்களின் இந்த வீர உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் அகமகிழ்ந்து அவரைப் பாராட்டி புகழ்ந்து அவருக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தார்கள். நன்றி உள்ளவர்களின் நல்ல செயல் நன்றி என்று சொல்வது மட்டும் அல்ல. நன்றியுடன் பிரார்த்திப்பதுதான். குறைந்த பட்சம் ஜஸாக்கல்லாஹு கைரன் என்றாவது சொல்ல வேண்டும்.

போருக்கு தயார் என்று சொன்ன 3 பேர் தைரியத்தை ஊட்டினாலும். 3பேருமே முஹாஜிர்கள். மக்காவில் இருந்து வந்தவர்கள். எல்லாவற்றையும் இழந்தவர்கள். என்ன வந்தாலும் சரி என்று நின்று விடுவார்கள். அன்சாரிகள் எவ்வளவு உறுதியாக இருப்பார்கள் என்பதுதான் தெரிய வேண்டிய ஒன்று

அன்சாரிகள் (மதீனாவாசிகள்) யாரும் வாயை திறக்கவில்லை. முஹாஜிர்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். இதையும் படைத் தளபதி ரசூல்(ஸல்) அவர்கள் உன்னிப்பாக கவனித்தார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் எதை எதிர் பார்தார்கள்? அன்சாரிகள் நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்று. ஏன்? என்ன காரணம்? எண்ணிக்கையில் அவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.

அன்சாரிகள் 230 பேர் வரை இருந்தார்கள். முஹாஜிர்கள் வெறும் 80அல்லது 85 பேர்தான் இருந்தார்கள். முஹாஜிர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அன்சாரிகள் சாந்தமானவர்கள். அன்சாரிகள் போர் செய்து பழக்கம் இல்லாதவர்கள். ஏதாவது உயிர்ச் சேதம் ஏற்பட்டால் அன்சாரிகளுக்குத்தான் அதிக பாதிப்புகள் ஏற்படும். மற்ற விளைவுகளுக்கு அவர்கள்தான் பொறுப்புதாரி ஆவார்கள். போர் என்றால் பொருளாதாரமும் அவர்களுடையதுதான் பயன்படுத்த வேண்டி உள்ளது. முஹாஜிர்களிடம் எந்த பொருளாதாரமும் கிடையாது.

நபி(ஸல்) அவர்கள் அகபாவில் செய்த உடன்படிக்கையில் வெளியே எல்லாம் போய் போர் புரியும் போது என்னுடன் வர வேண்டும் என்ற எந்த ஒரு ஒப்பந்தமும் அதில் எழுதப்படவில்லை. இந்த மாதிரி காரணங்களால் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள். அன்சாரிகளிடம் தயங்கி தயங்கி பேசுகிறார்கள். சுற்றி வளைத்து பேசுதல் என்பார்களே. அது மாதிரி ரசூல்(ஸல்) அவர்கள் பேச்சு இருந்தது.

மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பும் அன்சாரிகளை மனதில் கொண்டு மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே. எங்களைப் பார்த்துதான் உங்களுடைய ஆலோசனை திசை திரும்புகிறதுஎன்றார். அதற்கு நபி (ஸல்) ஆம்!என்றார்கள். 

ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து. அல்லாஹ்வின் துாதரே எங்களிடமா கருத்து கேட்கிறீர்கள்? முதன் முதலில் மக்காவுக்கு மறைமுகமாக வந்த நாங்கள் அகபாவில் உங்களிடம் உடன்படிக்கை செய்தோம். உங்களை இறைத்துாதராக ஏற்றுக் கொண்டோம். அப்பொழுது நாங்கள் என்ன பைஅத்- உடன்படிக்கை செய்தோம் தெரியுமா? 

நீங்கள் எங்களிடம் வந்து விட்டீர்களேயானால். எங்கள் பொறுப்பில் நீங்கள் வந்து விட்டீர்கள். எங்கள் மனைவி மக்களை காப்பாற்றுகிற மாதிரி நாங்கள் உங்களை காப்பாற்றுவோம் என்று உறுதி மொழி தரவில்லையா? அந்த உறுதி மொழியிலே இன்று வரை நாங்கள் மாற்றம் செய்யவில்லை. நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

நாங்கள் சொர்க்கத்திற்காக உங்களை பின் பற்றிய மக்கள். எங்களிடமிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எதிர் பார்க்கலாம்.  நாங்கள் உங்களை நம்பினோம். நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம். இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவிமடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையில் ஒப்பந்தம் செய்து எழுதி கொடுத்தோம்.

உங்களுக்கு சத்தியத்தை கொடுத்து அனுப்பிய இறைவன் மீது சத்தியமாக. எங்களை அழைத்துக் கொண்டு நீங்கள் கடலுக்குள்ளே சென்று மூழ்கினாலும். பின்னாலே வருவதற்கு நாங்கள் தயார். எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார்கள். மதீனாவாசிகளின் ஒட்டு மொத்த பொறுப்பாளியாக நான் பேசுகிறேன்.

நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை. போரைக் கண்டு நாம் ஒரு போதும் அஞ்சவில்லை. நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம். எதிரிகளைச் சந்திப்பதில் உண்மையாளர்களாக இருப்போம். உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவை எதுவாக இருந்தாலும். அல்லாஹ் எங்களால் வழங்கலாம். அல்லாஹ்வுடைய அருளால் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

இன்னொரு அறிவிப்பில் மேலதிகமான விபரமாக உள்ளது. அன்சாரிகள் என்று சொன்னால். தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு மட்டுமே உதவி செய்யக் கூடியவர்கள். இதுதான்  கடமை என நினைப்பார்கள் அன்சாரிகள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா

அன்சாரிகள் என்றால் உதவி செய்யக் கூடியவர்கள் என்று அர்த்தம். அதனால் வீட்டில் உட்கார்ந்து கொண்டு காசை மட்டும் தருவார்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ்வின் தூதரே! அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் என்ற அவர் மேலும் சொன்ன பதில் என்ன?

http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/blog-post_95.html 

தொடரும் இன்ஷாஅல்லாஹ்

அடுத்த தலைப்பு

கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளா?

வருகின்ற செப்டம்பர்2-8,2016 மக்கள் உரிமையில் கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளா?
காவல்துறையினர் குற்றவாளிகள் என்று  எண்ணக் கூடியவர்களை பிடித்துச் சென்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கருணை நபியின் அறிவுரை என்ன? 

கைதிகள் விஷயத்தில் கீழுள்ளவர்கள் தவறு செய்தாலும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படி நடக்க வேண்டும்? ஆட்சியாளர்களுக்கு பொறுப்பான ஆட்சியாளர் நபி(ஸல்காட்டி உள்ள வழிமுறை என்ன?  

நீதி நபி(ஸல்வழி காட்டுதல்படி அப்பாவிகளை ஆட்சியாளர்கள்  என்ன செய்ய வேண்டும். 

பத்ருப் போர், பத்ருப் போர் என்று கர்ஜித்தவர்களுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.