நாசாவுக்கு சென்று வந்த மேலப்பாளையம் மாணவர் - மக்கள் உரிமை

மேலப்பாளையம்  பசீரப்பா தெருவைச் சார்ந்தவர் பர்ஹானி ரசூல் பஷீர். அவர் அபுதாபியில்   பொருளாதார நிபுணராக இருந்து வருகிறார்.  அவரது மகன் அம்மார் அகமது அபுதாபி பிரைவேட் இண்டர்நேஷனல் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
விண் கலையில் ஆர்வவம் உள்ள அவருக்கு அமெரிக்காவில் உள்ள விண் வெளி ஆராய்ச்சி மையமான நாசா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விண் வெளி ஆய்வில் ஆர்வமுள்ள 79 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

03.08.2016 அன்று துபை விமான நிலையத்திலிருந்து கத்தர் ஏர்வேய்ஸ் மூலம் கத்தர் வழியாக நியுயார்க் சென்றடைந்தார்கள்.
சுற்றுலா மற்றும் பயிற்சி நோக்குடன் சென்ற அவர்களுக்கு முதலில் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி டவர் சுற்றி காட்டப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸு  ஆகிய இரு நாடுகளின் நட்பு சின்னம் எனப்படும் லிபர்ட்டி டவர் (அமெரிக்க சுதந்திர தேவி சிலை)  உலக அதிசயங்களில் ஒன்றாகும். 

அடுத்து வெள்ளை மாளிகை சுற்றிக் காட்டப்பட்டது. 


பிறகு பயணத்தின் நோக்கமான விண் வெளி ஆராய்ச்சி சம்பந்மாக 3 நாள் பயிற்சி நாசாவில் அளித்தார்கள்.

நாசாவின் உள் அரங்கத்திலும் செயல் அரங்கத்திலும் மூன்று நாட்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்விண்வெளி பற்றிய ஆய்வுகள் மற்றும் செயல்முறை பயிற்சிகளையும் பெற்றார்கள். நாசாவில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. விண் வெளி ஆராய்ச்சியின் தலைமை மையமான நாசாவில் மதிய உணவு என்பது அரிதான ஒரு வாய்ப்பாகும். அங்கு இருந்த விஞ்ஞானிகளிடம் அவர்களது அணுபவங்களை கேள்விகளாகவும் கேட்டு தெரிந்து கொண்டனர். நாசாவில் 3 நாள் பயிற்சி பெற்ற சான்றிதழும் பெற்றார்கள்.

12..08.2016 அன்று துபை வந்தடைந்த மேலப்பாளையம் அம்மார் அகமது அவர்களை மக்கள் உரிமை சார்பில் பேட்டி கண்டோம். குறைந்த எண்ணிக்கையிலான 79 பேர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதில். அவருக்கும் வாய்ப்பு கிடைக்கச் செய்த அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி கூறினார்

இயல்பாகவே விண்வெளி மற்றும் விமானத்துறையிலும் ஆர்வம் உள்ள அம்மார் அகமது தான் ஒரு விண்வெளி விஞ்ஞானியாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக எல்லாரும் துஆச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்துள்ளார்.
சுற்றுலா மற்றும் டிரைனிங் டூரில் நாசா பார்க்கும் வாய்ப்பு என் மகனுக்கு கிடைக்கனும் என்ற எண்ணத்தோடு, அல்லாஹ்வின் கிருபயால் அனுப்பி வைத்தோம். அவனும் இந்த படிப்பு துறையில் ஆர்வம் உள்ளவன் என்பதும் குறிப்பிடதக்கது என்று மாணவரின் தந்தையும் பொருளாதார நிபுணருமான ர்ஹானி ரசூல் பஷீர் அவர்கள் நம்மிடம் கூறினார்.

நிச்சயமாக, வானங்களையும்  பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவு உடைய மக்களுக்கு நிச்சயமாகப் பல சான்றுகள் இருக்கின்றன. அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிப்பார்கள்.  மேலும், வானங்களையும் பூமியையும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்தித்து ஆராய்ச்சி செய்வார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக! ல்குர்ஆன் (3;190,191) நன்றி ஆக 26 - செப் 1, 2016 மக்கள் உரிமை

ல்குர்ஆன் 3;190,191 வசனங்களில் கூறப்பட்டுள்ள விஞ்ஞானியாக 

நாசாவுக்கு சென்று வந்த மேலப்பாளையம் மாணவர் அம்மார் அகமது ஆவதற்கு நாமும் துஆச் செய்வோம். 


http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/blog-post_27.html



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن