பத்ருக்குப் போவோம், பத்ருக்குப் போவோம் என்று சொன்னது யார்?
மக்காவாசிகள் அபு ஜஹ்ல் தலைமையில் ஒன்று
கூடினார்கள். உண்பதற்கு உணவு இல்லாமல். உடுப்பதற்கு உடை இல்லாமல்.
இங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்ட அவர்களுக்கு இவ்வளவு பெரிய வீரமா?
நமது வியாபார பொருளை மீட்க வேண்டும். அதன்
மூலம் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். எல்லோரும் கட்டாயமாக
உங்கள் செல்வங்களில் இருந்து இதற்கு பொருள்களை தந்து உபகாரம் செய்ய வேண்டும்.
இப்படிப் பேசி அபு ஜஹ்ல் ஆட்களை திரட்டினான்.
மக்காவில் உள்ள அனைவரும் வெளியேற வேண்டும். அப்படி தன்னால் முடியவில்லையானாலும் தனக்குப் பதிலாக மற்றொருவரை
அனுப்பி வைத்தே ஆக வேண்டும். இப்படி ஊர்க்
கட்டுப்பாட்டுப்படி தீர்மானம் போட்டார்கள். மக்காவிலுள்ள பிரபலமான பிரமுகர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள தயாரானார்கள்.
ஆனால், அபூலஹப் மட்டும் கலந்து கொள்ளவில்லை. யார் இந்த அபூலஹப்? முஹம்மது(ஸல்) அவர்களை வளர்த்து ஆளாக்கியவர்.
நபியாக ஆனதும் மண்ணை வாரி வீசியவர். அந்த அபூலஹப் என்னால் கலந்து கொள்ள முடியாது. இன்னவர் எனக்கு கடன் தர
வேண்டும். கடனை தள்ளுபடி செய்கிறேன். எனக்குப் பகரமாக இவரை அழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பினான். மேலும், குறைஷிகள் தங்களைச் சுற்றியுள்ள அரபியர்கள் அனைவரையும் ஒன்று
சேர்த்தனர். இருந்தாலும் “அதீ“ கோத்திரத்தாரிலிருந்து ஒருவர் கூட கலந்து
கொள்ள போகவில்லை.
மீதி உள்ளவர்கள் கிளம்பினார்கள். குறுகிய காலத்தில்
சுமார் 1300 பேர் தயாராகி விட்டார்கள். 1300 என்பது அந்தக் காலத்து மக்கா மக்கள் தொகையில் அது மிகப் பெரியது. ரசூல்(ஸல்)
அவர்களுடன் வருபவர்களை விட நான்கு மடங்குக்கும் அதிகமானவர்கள் புறப்பட
தயாராகி விட்டார்கள். இவர்களோடு 200 குதிரைகளை
தயார் செய்தனர்.
இறைத் துாதர் அணியில் 2 குதிரைகள்தான். எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்கு. அதாவது அளவுக்கு அதிகமான
ஒட்டகங்களையும் தயார் செய்தனர். இறைத் துாதர் அணியில்
70 ஒட்டகங்கள்தான் இருந்தன. மேலும் 600
கவச ஆடைகளையும் தயார் செய்து விட்டார்கள். அப்படி
என்றால் இவர்களில் பெரும்பாலானவர்கள் எண்ணம் என்ன? ஒவ்வொரு குடும்பத்தாரும்
உங்கள் பொருளாதாரத்தை பாதுகாக்க நீங்கள் வந்தாக வேண்டும் என்றுதானே அழைக்கப்பட்டார்கள்.
பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற
நோக்கம் மட்டும் அல்ல. போகிறதே போகிறோம் ஏற்கனவே உள்ள திட்டப்படி முஸ்லிம்களை தாக்கி
விட்டு வருவோம். முஸ்லிம்களோடு போர் செய்து அழித்து விட்டு வருவோம்
என்பதுதான் இவர்களில் பெரும்பாலானவர்களின் ஆயத்தங்கள் இருந்தன.
இதற்கு தலைமை ஏற்று நடத்திக் செல்லக் கூடியவன் எவன்? சாட்சாத் அபுஜஹ்ல்தான் இந்த படைக்கு தளபதியாக இருந்தான். ஜாலியாக உட்சாகம் ஊட்டுவதற்காக ஆடிப்பாடி கூத்தடிக்கக் கூடிய பெண்கள்.
அதையெல்லாம் எப்பொழுது போனாலும் கூட்டிக் கொண்டு போவார்கள். ஜாலியாக பொழுது போவதற்காக. பாட்டு படிக்கின்ற பெண்கள்.
ஆக இப்படி எல்லா ஏற்பாடுகளுடன் இவர்கள்
புறப்பட தயார் ஆனார்கள். அப்பொழுது மக்காவிலுள்ள முக்கியஸ்தர்களான மிகப் பெரிய குறைஷிப்
பணக்காரர்கள் 9பேர் ஒரு வாக்குறுதி அளித்தார்கள். என்ன
வாக்குறுதி?
இந்த படைக்கு ஆகும் செலவுகளை நாங்கள்
ஏற்றுக் கொள்கிறோம். எவ்வளவு செலவு ஆனாலும் பரவா இல்லை.
பொருளாதார செலவு பற்றி கவலைப் படாமல் போங்கள் என்று
தேவையான பொருளாதாரங்களோடு அபுஜஹ்ல் இப்னு
ஹிஷாம் தலைமையிலான 1300 பேரும் ஒட்டகம் மற்றும் குதிரைப் பட்டாளத்துடன் அபுஸுப்யான்
வரக் கூடிய வழியை எதிர் நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அபுசுப்யான் என்ன செய்கிறார்? அவர்தான் ராஜ தந்திரி
ஆயிற்றே. ராஜ தந்திரியான அபூ ஸுஃப்யான் மக்காவை நோக்கிய பிரதான பாதையில் சென்று
கொண்டிருந்தார். இருந்தாலும் மிகவும் சுதாரிப்புடன் நிலைமைகளை
நன்கு அலசி ஆராய்ந்து கொண்டு. எதிரில் வருகின்றவர்களிடம் விசாரித்துக் கொண்டு. தன்னுடைய வியாபாரக் கூட்டத்தை வழி நடத்திச் சென்றார்.
ரசூல்(ஸல்) அவர்கள் அணியில் 2 பேரைத்
தவிர மற்றவர்கள் 3 பேருக்கு ஒரு ஒட்டகம் என வருவதால் அவர்கள் மெதுவாகத்தான்
வருவார்கள். ஆங்காங்கு தங்கித்தான் வர முடியும். குதிரைகளில் வரக் கூடிய மற்ற
பயணிகளோ 2 நாள் 3 நாள் முன்னதாகவே ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு வந்து
விடுவார்கள். அந்த மாதிரி ஆட்களிடம் விசாரித்துக் கொண்டே சென்றார் அபூ ஸுஃப்யான்.
அப்பொழுது பத்ருக்கு அருகில் மஜ்தீ இப்னு அம்ர் என்பவரை சந்தித்தார். இவர் சாதாரணமான நடுத்தர ஆள். அவரிடம் ரசூல்(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தோடு வந்து கொண்டு இருக்கிறார்களா என்ற விபரத்தை கேட்கிறார். “மதீனாவின் படைகளை நீங்கள் பார்த்தீர்களா?” முஹம்மது என்பவர் ஒரு கூட்டத்தோடு வந்து கொண்டு இருக்கிறாரா? என்று
விசாரித்தார்.
அதற்கவர் “ அதுவெல்லாம் எனக்குத் தெரியாது. நான் இங்கு புதிதாக யாரையும் பார்க்கவில்லை. வழியில் ஒரு இடத்தில் தண்ணீர் இருக்கிறது. அந்த இடத்தில் இரு வாகனிகள் தங்களது ஒட்டகங்களுடன் வந்து தங்கினார்கள் அவர்களது தோல் பையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து
அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதை நான் பார்த்தேன் அது யார் என்று எனக்குத்
தெரியாது” என்று
கூறினார்.
இதைக் கேட்டவுடன், அபூ
ஸுஃப்யான் அவர்கள் மற்றவர்களை அங்கேயே தங்க வைத்து விட்டு அவர் மட்டும்
குதிரையில் மஜ்தீ இப்னு அம்ர் சொன்ன பகுதிக்கு வந்து பார்வை
இட்டார். ஒட்டகங்களைப் படுக்க
வைத்திருந்த இடத்தையும் கிணற்றையும்
சுற்றிப் பார்த்தார். அங்கே கிடந்த ஒட்டகங்களின் சாணங்களைக் கிளறிப் பார்த்தார். சாணங்களில் உள்ள பேரீத்தங் கொட்டைகளை எடுத்துப் பார்த்தார். உடனே சொன்னார் இறைவன் மீது
ஆணையாக! இது யஸ்ரிப் (மதீனா) வாசிகளின் ஒட்டகங்களின் உணவுதான். இது யஸ்ரிப் (மதீனா) உடைய பேரீத்தம்
பழம்தான் என்று.
பிறகு தனது வியாபாரக் கூட்டத்திடம் விரைந்து வந்தார். வந்ததும் சொன்னார். இந்த வழியாகப் போனால் நமக்கு ஆபத்துதான். மக்காவில் இருந்து
அவர்கள் வருகின்றபடி வரட்டும். நாம் வேறு வழியாகப் போய் விடுவோம் என்று அவர்களது பயண திசையை
மாற்றினார் கில்லாடியான அபூ ஸுஃப்யான். மேற்கே, கடற்கரை பகுதியை நோக்கி பிரயாணத்தை மாற்றி அமைத்தார்.
பத்ர் வழியாக மக்கா நோக்கி செல்லும் பிரதான பாதையை விட்டு விட்டார். கடற்கரை வழியை பிடித்து
ஜித்தா வழியாக சென்று மக்கா போய் சேர்ந்து விட்டார். தனது இந்த தந்திரத்தின் மூலம் மதீனாவின் படையிடம் சிக்காமல் முழு பொருளாதாரத்துடன் தப்பித்துக் கொண்டார். ஆக இந்த
பொருளாதாரத்தையும் ரசூல்(ஸல்) அவர்களால் தடை செய்து முறியடிக்க முடியவில்லை.
மக்கா போய்ச் சேர்ந்த அபூ ஸுஃப்யான் 1300 பேருடன் ஒரு படை சென்றுள்ளதை அறிகிறார்.
உடனே கடிதம் எழுதி ஒரு
ஆளிடம் கொடுத்து குதிரையில் அனுப்புகிறார். அபூ ஸுஃப்யான் நல்ல முறையில் வந்து சேர்ந்து விட்டார். பொருளாதாரங்களும் வந்து சேர்ந்து விட்டன. முஹம்மது மூலம்
நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எனவே திரும்பி வாருங்கள் என்ற பொருள்பட எழுதி
அனுப்புகிறார்.
உங்களுடைய வியாபார பொருட்கள். உங்களுடைய
கூட்டம். உங்களுடைய செல்வம் ஆகியவை பாதுகாப்பாக வந்து விட்டது.
இறைவன் அதனை பாதுகாத்து விட்டான். நீங்கள் திரும்பி
வாருங்கள் என்று அபூஸுஃப்யான் எழுதிய
கடிதம் அபுஜஹ்ல் கைக்கு கிடைத்தது. உடனே அபுஜஹ்ல் என்ன
சொன்னான்?
இறைவன் மீது ஆணையாக நாங்கள் திரும்ப மாட்டோம். யார் சொல்கிறார்கள்? அபு
ஜஹ்ல் சொல்கிறான். நாம் இங்கிருந்து பத்ருக்குப் போவோம்.
பத்ருக்குப் போவோம் என்று சொன்னது யார்? அபுஜஹ்ல்.
பத்ருக்குப் போவோம்
பத்ருக்குப் போவோம் என்று சொன்னவன் அபுஜஹ்ல்தான்.
மூன்று நாட்கள் அங்கு தங்குவோம். தங்கி என்ன செய்வோம்? இருக்கக் கூடிய ஒட்டகங்களை அறுத்து
சமைத்து சாப்பிடுவோம்.
ஏற்கனவே 9 பேர் எவ்வளவு செலவு ஆனாலும். பொருளாதாரம் தருவோம் என்று ஒப்புக் கொண்டு வாக்குறுதி அளித்து விட்டார்களே.
அடுத்தவன் காசு என்றால் அயோக்கியர்கள் அதை சர்வ சாதாரணமாக செலவு செய்வார்கள்.
அதுதான் இன்றும் உள்ளது. அன்றும் இருந்தது.
அடுத்தவர்கள் காசு என்றால் அநியாயமாக
செலவு செய்வது என்பது அபுஜஹ்ல் காட்டிய வழிதான். சொந்த காசில் தாகத்துக்கு பாக்கட்
தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டான். அடுத்தவன் காசு, பொதுப் பணம் என்றால் அநியாயக்காரன்
என்ன செய்வான்?
பத்து கிலோ மீட்டர் துாரத்துக்கு புது
மாடல் காரில் போய். பழமுதிர் சோலையில் ஜுஸ் குடிப்பான். இப்படி யார் பொதுப் பணத்தை
அநியாயமாக செலவு செய்கிறானோ அவன் அபுஜஹ்ல்
வழி நடக்கிறான் என்று நாம் அவனை அடையாளம் காண வேண்டும்.
ஊர்ப் பணத்தை
ஊதாரித்தனமாக செலவு செய்பவன் என்று தெரிந்த பின்பும். அவனை யாரால் தலைவனாக ஏற்று
செயல்பட முடியும்? அவர்களும் அபுஜஹ்லின் வாரிசாக இருந்தால்தான். ஏற்று செயல்பட
முடியும். பத்ரில் அபு ஜஹ்ல் என்ன சொன்னான்?
நன்றி ; மக்கள் உரிமை
அடுத்த தலைப்பு
அடுத்த தலைப்பு
பத்ருப் போர், பத்ருப்
போர் என்று கர்ஜித்தவர்களுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி
முந்தைய தலைப்பு
Comments