கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளா?

காவல்துறையினர் குற்றவாளிகள் என்று  எண்ணக் கூடியவர்களை பிடித்துச் சென்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கருணை நபியின் அறிவுரை என்ன? 

கைதிகள் விஷயத்தில் கீழுள்ளவர்கள் தவறு செய்தாலும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படி நடக்க வேண்டும்? ஆட்சியாளர்களுக்கு பொறுப்பான ஆட்சியாளர் நபி(ஸல்) காட்டி உள்ள வழிமுறை என்ன?  

நீதி நபி(ஸல்வழி காட்டுதல்படி அப்பாவிகளை ஆட்சியாளர்கள்  என்ன செய்ய வேண்டும். மேலும் விபரங்கள் அறிய தொடரை படியுங்கள்.


ஸஅது இப்னு முஆது (ரலி) அவர்கள் மேலும் சொன்னார்கள். ”நீங்கள் விரும்பிய இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்லலாம். அப்படிப்பட்ட உடலால் ஆன உதவியும் அன்சாரிகளின் புறத்திலிருந்து உண்டு.  நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பியவன் உறவை துண்டித்துக் கொள்ளலாம். ஆகவே எங்களிடம் கருத்துக்கள் கேட்க வேண்டாம். நீங்கள் கட்டளை இடுங்கள். நாங்கள் கட்டுப்படுவதற்கு தயாராக இருக்கிறோம்.

நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும். நீங்கள் எங்களுக்கு எந்த விஷயத்திலும் எதைக் கட்டளை இடுகிறீர்களோ. அந்த விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக்கு கீழ்தான் ணங்கித்தான் இருக்கும். 

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் எங்களை கிம்தான்பகுதியில் உள்ள பர்க்என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்என்று ஸஅது இப்னு முஆது (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

ஸஅது (ரலி) அவர்களின் பேச்சையும் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் முகத்தில் மிகுந்த சந்தோஷம் வந்தது. ஏனென்றால் எதிர் தரப்பினர் போருக்கு தயாராகி அதற்கான தயாரிப்புகளுடன் வந்து விட்டார்கள். அபுஜஹ்ல் பத்ருக்கு வந்து பத்ருப்போர் என்று அறிவிப்பும் செய்து விட்டான். நபி (ஸல்) அவர்கள் தரப்பில் இன்னும் அறிவிப்பு செய்யப்படவில்லை. போர் அறிவிப்பு வந்த பிறகு அன்சாரிகள் மட்டும் ஒத்துழைக்கவில்லை என்று சொன்னால். திரும்பி போகிறதைத் தவிர வேறு வழி இல்லை. எங்கே போக முடியும். ஒன்று அங்கே. அல்லது இங்கே.

நபி (ஸல்) அவர்கள் முகத்தில் சந்தோஷம் வந்த உடனே போருக்கான ஏற்பாடுகளை செய்தார்கள். கிளம்புங்கள், ''எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் போர்ப் படையினர் ஆகிய இரு கூட்டங்களில் ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு” என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான்   (திரு குர்ஆன் 8;7) வணிகக் கூட்டம் தப்பித்து போய் விட்டார்கள். அல்லாஹ் வாக்களித்துள்ளபடி இவர்களிடம் நமக்கு வெற்றி கிடைக்கும் என்றார்கள்.

யார் முன்னின்று போரிட வேண்டும். எங்கு தங்க வேண்டும் என்பதை முடிவு செய்தார்கள். பிறகு நபி (ஸல்) ஃதபிரான்என்ற இடத்திலிருந்து புறப்பட்டார்கள். அஸாஃபிர் வழியாகச் சென்று, ‘தப்பாஎன்ற இடத்தை அடைந்தார்கள். பின்பு பத்ருக்குச் சமீபமாக வந்து ஒரு இடத்தில் தங்கினார்கள். தனது குகைத் தோழரும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் தந்தையுமான அபூபக்ர் சித்தீக்(ரலி) அவர்களுடன் மக்கா படைகளைக் கண்காணிக்கப் புறப்பட்டார்கள்.

மக்கா படையினர் எங்கு கூடாரம்ட்டுத் தங்கியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள சுற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வயது முதிர்ந்தவரைப் பார்த்தார்கள். அவர் தங்களை யார் என விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஹிக்மத்தாக இரு படைகளைப் பற்றியும் விசாரித்தார்கள். குறைஷிகளைப் பற்றியும் முஹம்மது மற்றும் அவரது தோழர்களைப் பற்றியும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். 

அந்த வயது முதிர்ந்தவரோ நீங்கள் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாத வரை நான் உங்களுக்கு எந்த செய்தியையும் சொல்ல மாட்டேன்என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாங்கள் கேட்டதை நீர் கூறினால் நாங்கள் யார் என்பதை உமக்குக் கூறுவோம்என்றார்கள். அதற்கு அந்த வயோதிகர் அவ்வாறுதானே!என்று கேட்க அதற்கு நபி (ஸல்) ஆம்!என்றார்கள்.

அதற்குப் பின் அந்த வயோதிகர் சொன்னார். முஹம்மதும் அவன் தோழர்களும் இன்ன நாளில் மதீனாவிலிருந்து வெளியேறினார்கள் என்று எனக்குச் செய்தி கிடைத்தது. எனக்கு இந்த செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இந்த இடத்தில் இருப்பார்கள்என்று இஸ்லாமியப் படை தங்கி இருந்த இடத்தை சரியாகச் சொன்னார். 

மேலும், “குறைஷிகள் இந்த நாளில் மக்காவிலிருந்து கிளம்பினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இச்செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இன்ன இடத்தில் இருப்பார்கள்என்று பத்ருப் போர் என்று அறிவித்த அபூஹ்லின் கூட்டம்  தங்கியிருந்த இடத்தைச் சரியாகக் கூறினார்.

பின்பு அவர் நீங்கள் யார்?” என்று கேட்டார்.  நபி (ஸல்) என்ன பதில் சொன்னார்கள்? நாங்கள் (மாஃ) தண்ணீலிருந்து வந்திருக்கிறோம்என்று கூறி, அங்கிருந்து உடனே சென்று விட்டார்கள். நபி (ஸல்) சொன்னது  பொய்தான். போர்க் காலத்தில் அனுமதிக்கப்பட்ட பொய்தான் இது என்று  ஓரு சாரார் நிலைப்பாடாக உள்ளது

இது பொய் அல்ல. போர்ச் சூழலிலும் ஹிக்மத்தாகவும் (அறிவுப்பூர்வமாகவும்) சொன்ன உண்மையை உள்ளடக்கிய பதில். அல்குர்ஆன்  21; 30, 25;54, 32;8, 86;6 ஆகிய வசனங்களின் அடிப்படையில் தண்ணீலிருந்து வந்திருக்கிறோம் என்பது உண்மைதானே! இது இன்னொரு சாரார் நிலைப்பாடாக உள்ளது

தைக் கேட்ட அந்த வயோதிகரின் நிலைப்பாடோ என்ன! தண்ணீலிருந்து வந்தவர்களா? எந்தத் தண்ணீலிருந்து...? இராக் நாட்டு தண்ணீலிருந்தா...?” என்று யோசித்துக் கொண்டிருந்ததுதான்.

அன்றைய மாலைப்பொழுதில் அலீ இப்னு அபூ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரலி) ஆகிய முஹாஜிர்களில் உள்ள முக்கிய மூன்று தளபதிகளையும் அனுப்பி வைத்தார்கள். நீங்கள் போய் மறைமுகமாக எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வாருங்கள்.. வேவு பார்த்து விட்டு வாருங்கள் என்று நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.

இன்றைக்கு நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டு. ஹதீஸ்களையும் வரலாற்று நுால்களையும் இன்டர்நெட் வசதியுடன் தட்டிப் பார்க்கிறோம். பார்த்து விட்டு அபூஜஹ்ல் படையில் 1000பேர் என சொல்லி விடுகிறோம். 

அன்றைய நிலை என்ன? எதிரிகளைப் பற்றி அறிய எந்த அளவுகோலும் இல்லை. எத்தனை பேர் வந்திருப்பார்கள். என்ன என்ன ஏற்பாடுகளோடு வந்திருப்பார்கள்? என்பதை அறிய எந்தக் கருவிகளும் இல்லை. ஓரளவாவது எதிரிகளின் பலம் நமக்குத் தெரிய வேண்டும். எனவே ரசூல்(ஸல்) அவர்கள் 3 பேரையும் அனுப்பி வைத்தார்கள்.

3 தளபதிகளும் பத்ரில் தண்ணீர் உள்ள இடத்திற்குப் போனார்கள். அங்கு இரண்டு சிறுவர்கள் மக்கா படையினருக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்ததை அறிந்தார்கள். அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து  கொண்டு வந்தார்கள். அப்பொழுது ரசூல்(ஸல்) அவர்கள் தொழுது கொண்டு இருந்தார்கள்

எனவே அந்த இரண்டு பேரையும் மற்றவர்கள் விசாரித்தார்கள். நீங்கள் யார் என்று கேட்டார்கள். நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் கொடுப்பவர்கள் என்றார்கள். இதனை அவர்கள் நம்பவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டார்கள். மிரட்டியும் கேட்டார்கள். அதையே அவர்கள் பதிலாகச் சொன்னார்கள்

நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அபூஸுப்யான் எங்கே இருக்கிறார் சொல்லுங்கள் என்றார்கள். அபூஸுப்யானெல்லாம் எங்களுக்குத் தெரியாது. குறைஷி கூட்டத்திற்குத்தான் தண்ணீர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். இவர்கள் அபூஸுஃப்யானின் ஆட்களாக  இருக்கலாம் என்று தளபதிகள் எண்ணினார்கள். அதனால் இவர்களின் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் அடித்தனர். 

அடிக்குப் பயந்த அவ்விருவரும் ஆம்! நாங்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்என்றனர். உடனே அவ்விருவரையும் அடிக்காமல் விட்டு விட்டனர். தெரியாது என்று ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதுதான் உண்மை

தொழுது முடித்த ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். நீங்கள் அடித்தீர்கள்அவர்கள் பொய் சொல்ல ஆரம்பித்ததும் அடிக்காமல் விட்டு விட்டீர்கள் என்று. இதை இன்றும் உலகில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளாகுற்றவாளிகள் என்று காவல்துறையினர் எண்ணக் கூடியவர்களை பிடித்து விசாரிப்பார்கள். கேட்டதற்கெல்லாம் உண்மையையே சொல்வார்கள். அதை நம்பாத அதிகாரிகள் மிரட்டல்கள், சித்திரவதைகள் செய்வார்கள். அதற்குப் பயந்து அதிகாரிகள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் என ஒப்புக் கொண்டு விடுவார்கள். வேறு வழியில்லாமல் கையெழுத்தும் போட்டு விட்டு சிறை சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட கைதிகளை எல்லா சிறைகளிலும் பார்க்கிறோம். மிரட்டலுடன் கொடுமைப்படுத்திக் கேட்டால் வேறு என்ன செய்ய முடியும்?

ஏதாவது ஒரு குற்ற சம்பவத்தை ஒட்டி ஒரு அப்பாவி கைது செய்யப்படுவார். தான் குற்றவாளி இல்லை என்பார். அதை அதிகாரிகள் ஒப்புக் கொண்டால்தான் உண்டு. மீண்டும் மீண்டும் சித்திரவதை செய்யும்பொழுது. அந்த கொடுமைக்கு பயந்து சார் நீங்க என்ன சொல்கிறீர்களோ அதை நான் ஒப்புக் கொள்கிறேன். என்கிற நிலைக்கு வந்து விடுவார்

அந்த நிலைக்கு யாரையும் கொண்டு போகாதீர்கள். இதுதான் கருணை நபியின் அறிவுரை. கீழுள்ளவர்கள் தவறு செய்தாலும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும். இது ஆட்சியாளர்களுக்கு பொறுப்பான ஆட்சியாளர்  நபி(ஸல்) காட்டி உள்ள வழிமுறை. ஆகவே நீதி நபி(ஸல்) வழி காட்டுதல்படி அப்பாவிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். த.மு.மு.க, ம.ம.க. வின் பொறுப்புள்ள சமுதாய தலைவர்கள் சொன்னபடி  இந்த ஆண்டிலாவது விடுதலை செய்வார்களா?

ஆரம்பத்தில் சொன்னார்களே அதுதான் உண்மை என்று சொன்ன நீதி நபி(ஸல்) அவர்கள். அவர்களை அழைத்து விசாரித்தார்கள். என்ன விசாரித்தார்கள்? எப்படி விசாரித்தார்கள்?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்  

அடுத்த தலைப்புகள்
விசாரணை முடிந்ததும் விசாரணைக் கைதிகளை நபி(ஸல்) என்ன செய்தார்கள்?

ஹிஸ்புல்லாஹ்க்களா?  ஹிஸ்புஷ் ஷய்த்தான்களா?

முந்ததைய தலைப்பு

“மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று நபி(ஸல்) பொதுவாகக் கேட்டதன் நோக்கம் என்ன?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு