பத்ருப் போர், பத்ருப் போர் என்று கர்ஜித்தவர்களுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி

பத்ருப் போரை அறிவித்தவர்கள் யார்?  பத்ருப் போரை அறிவித்த பிறகு பின் வாங்கியவர்கள் யார்? த்ருப் போர் த்ருப் போர்  என கூக்குரலிட்ட அபூஜஹ்லின் பெருங் கூட்டத்திற்கு ஏற்பட்ட முதல் முதல் தோல்வி என்ன? அறிஞர்கள், பெரியவர்கள், மூத்தவர்கள், முதியவர்கள் போன்றவர்களின் அறிவுரைகளை  அபூஜஹ்ல் ஏற்றானா? அபுஸுப்யான் பத்திரமாக மக்காப் போய் சோ்ந்து விட்டார் என்ற தகவல் அறிந்த அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள். ஸஹாபாக்களோடு மதீனாவுக்கு திரும்ப ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. அது என்னச் செய்தி? அறிந்திட தொடர்ந்து படியுங்கள். 

அபு ஜஹ்ல் சொன்னான். மூன்று நாட்கள் பத்ரில் தங்குவோம். நம்மோடு அழைத்து வந்துள்ள அடிமைப் பெண்களை பாடச் சொல்லுவோம். அவர்களை வைத்து  ஆட்டம் பாட்டம் கூத்து எல்லாம் நடத்துவோம்மதுபானங்களை அருந்துவோம். அடிமைப் பெண்கள் இசைத்து பாடுவார்கள்.



நம்மைப் பற்றியும் நமது பயணத்தைப் பற்றியும்நமது கூட்டத்தைப் பற்றியும் அரபிகள் கேள்விப்படுவார்கள். அதனால் நம்மை எப்பொழுதும் பயந்தே வாழ்வார்கள். நாம் எதற்கும் தயாரானவர்கள் என்பதை. நம்மைப் பற்றிய ஒரு அச்சத்தை மதீனாவில் உள்ள முஸ்லிம்கள் உள்ளத்தில் ஏற்படுத்தி விட்டு திரும்பி வருவோம் என்று திமிராகக் கூறினான். 

இப்பொழுது கூட அபு ஜஹ்ல் அவனது உள்ளத்தில் பத்ரில் போய் போர் செய்ய வேண்டும் என்று உள்ள எண்ணத்தை வெளிப்படுத்தவில்லை.  இறுதியில் பத்ருப் போர் செய்து ஆக வேண்டும் என்று அபு ஜஹ்ல் அவனது உள்ளத்தில் உள்ள எண்ணத்தை வெளிப்படுத்தியபொழுது என்ன ஆனது.

ஜுஹ்ரா கிளையினரைச் சார்ந்தவர்கள் ஏறக்குறைய 300 நபர்கள் இருந்தனர். போர்  என்று சொல்லிய உடன். நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை பாதுகாக்கத்தான் வந்தோம். முஹம்மதுவையோ மதீனாவாசிகளையோ எதிர்த்து நீங்கள் போர் செய்வதாக இருந்தால். ஒரு போதும் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம்.  உடன்பட மாட்டோம். போருக்கு என்று சொல்லி எங்களை நீங்கள் அழைத்து வரவில்லை. எதற்கு அழைத்து வந்தீர்கள்? 

எங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாக்கத்தான் அழைத்தீர்கள் வந்தோம். எங்கள் பொருளாதாரம் மக்கா போய் சேர்ந்து விட்டது என்று அபு சுப்யான் லட்டர் எழுதி விட்டார். எனவே திரும்பி விடுவோம்  இப்படிஅபூஜஹ்லுக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் கூறி விட்டார். இவர் ஜுஹ்ரா கிளையினரைச் சார்ந்தவர்.ஜுஹ்ரா கிளையினருக்கு அக்னஸ்தான் தலைவராக இருந்தார்.

ஆனால்அக்னஸ் பேச்சை மற்றவர்கள் செவிமடுக்கவில்லை. ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். எனவேஜுஹ்ரா கிளையினரில் எவரும் போரில் கலந்து கொள்ளாமல் அக்னஸுடன் வந்த சுமார்300 பேரும் திரும்பி விட்டனர். 

ஆக பத்ருப் போரை அறிவித்தவர்களும் காபிர்கள்தான். பத்ருப் போரை அறிவித்த பிறகு பின் வாங்கியவர்களும் காபிராகத்தான் இருந்தார்கள். பத்ருப் போர், பத்ருப் போர் என்று கர்ஜித்த காபிர்களின் கூட்டத்திற்கு ஏற்பட்ட முதல் தோல்வி இது. பத்ரில் காபிர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாக அமைந்தது.

பத்ர் போர் நடந்து முடிந்தபின். பத்ருப் போர் த்ருப் போர்  என கூக்குரலிட்ட அபூஜஹ்லின் பெருங் கூட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வியையும் நஷ்டத்தையும் பார்த்த பின். ஜுஹ்ரா கிளையினர் அக்னஸின் ஆலோசனையை பெரிதும் பாராட்டினார்கள். 

நல்ல வேளை நாம் தப்பித்தோம். நாமும் கலந்து இருந்தால் கொல்லப்பட்டு இருப்போம். அல்லது கைது செய்யப்பட்டு இருப்போம். முஹம்மதுக்கு முன்னாலே இழிந்தவர்களாக நின்று இருப்போம் என்று அக்னஸின் முடிவை பாராட்டினார்கள். அதற்குப் பின் அக்னஸ் ஜுஹ்ராவினரிடம் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்கு உரியவராகவும் கடைசி வரை இருந்தார்.

இந்த நிலையில் ஹாஷிம் கிளையினரும் திரும்பி விட எண்ணினார்கள். நாங்கள் திரும்பும் வரை நீங்கள் திரும்பக் கூடாதென அபூஜஹ்ல் அவர்களைப் பலவந்தமாக இருக்க வைத்தான். இன்னும் அந்த குழுவில் இருந்த எத்தனையோ அறிஞர்கள், பெரியவர்கள், மூத்தவர்கள், முதியவர்கள் என எல்லாரும் அறிவுரை சொன்னார்கள். 

திரும்பி விடுவோம். நமது நோக்கம் அபுசுப்யானை காப்பாற்றுவதுதான். நமது  சாமான்களான பொருளாதாரங்களை காப்பாற்றுவதுதான். சரக்குகளெல்லாம் பத்திரமாக வீடு போய் சேர்ந்து விட்டது. இப்பொழுது முஹம்மதை நோக்கி நாம் போனால் நாம் சண்டைக்கு வந்த மாதிரிதான் ஆகும். நாம் சண்டைக்காக வரவில்லை. எனவே இப்போதைக்கு போர் தேவை இல்லை என்றனர்.

அவர்களில் ஒருவர் உளவு பார்த்து விட்டு வந்து  சொன்னார்அவர்கள் 300 பேர்கள் இருக்கிறார்கள்நாம் 1000பேர்கள் இருக்கிறோம்அவர்களில் உள்ள ஒவ்வொருவரும் நம்மில் ஒருவரை கொல்லாமல் சாக மாட்டார்கள்.நாம் பெரிய படையாக இருந்தும் நம்மில் 300 பேர் செத்தால் அது கேவலம்தானேஇது தேவையாவேண்டாம்வம்பை தவிர்த்துக் கொள்வோம் என்று

இந்த கருத்து அவர்களிடையே பரவலாக  உண்டானதுஅபு ஜஹ்ல் மாத்திரம் முடியாது முன்னே வைத்த கால் வைத்ததுதான்இரண்டில் ஒன்று பார்க்காமல் நாம் திரும்பக் கூடாதுபத்ருக்கு போவோம் என உறுதியாக நின்றான்.

பத்ருக்கு போவோம் முஹம்மதை சந்திப்போம்முஹம்மதுவும் அவரது சகாக்களும் நம்மைக் கண்டு பயந்து ஓடிப் போய் விடுவார்கள்அங்கே தங்கி ஒட்டகங்களை அறுத்து சாப்பிட்டு விட்டு நாம் யார் என்பதை காட்டி விட்டு வருவோம்அப்போதுதான் நம்மைக் கண்டால் எல்லாரும் பயப்படுவார்கள்மக்காவாசிகள் என்றால் படை எடுத்து வந்து இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள்அவர்களை எதிர்க்கக் கூடாதுஅவர்களை வழி மறிக்கக் கூடாது என்ற பயத்தை உண்டாக்க வேண்டும் என்கிறான்

அவனுக்கு ஆதரவாகப் பேச ஹழ்ரமியின் சகோதரரை துாண்டி விட்டு பேசச் சொன்னான். அவன் மற்றவர்களுக்கு சூடு ஏறுகிற மாதிரி பேசினான். தனது அண்ணன் கொல்லப்பட்ட சம்பவத்தை மிக உருக்கமாகச் சொன்னான். எல்லோருக்கும் உசுப்பு ஏற்றி விட்டான்.

பிறகு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்எத்தனையோ தடவை இந்த மாதிரி நமது பொருளாதாரத்தை தடை செய்யும் நிகழ்ச்சி நடந்து விட்டதுநாம் வந்ததே வந்தோம்யுத்தப் பிரகடனம் செய்து விட்டு போவோம் என முடிவு எடுத்தார்கள்

ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் போரிடாமல் திரும்பி விட்டனர். அதனால் மீதமுள்ள 1000பேரோடு வீர வசனங்கள் பேசி படையுடன் பத்ரை நோக்கிக் கிளம்பினான் அபு ஜஹ்ல். பத்ர் பள்ளத்தாக்கில் உள்ளஅல் உத்வதுல் குஸ்வா’ என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.

அபுஸுப்யான் பத்திரமாக மக்காப் போய் சோ்ந்து விட்டார் என்ற தகவல் அறிந்த அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள். ஸஹாபாக்களோடு மதீனாவுக்கு திரும்ப ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. அது என்னச் செய்தி? 

பத்ர் என்ற இடத்தில் இப்படிப்பட்டவர்களெல்லாம் ஆயுதங்களோடு பெரிய அளவில் படை திரட்டி வந்துள்ளார்கள். முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து வேறறுக்க வேண்டும் என்று வந்து அமர்ந்து இருக்கிறார்கள் என்ற செய்தி கிடைக்கிறது.

அப்பொழுது நபி (ஸல்) தஃபிரான்’ என்ற பள்ளத்தாக்கில் இருந்தார்கள். செய்திகளை அறிந்த பின் கண்டிப்பாக அபாயகரமான போரைச் சந்திக்காமல் தவிர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆகவேண்டும் என்பது கட்டாய நிலையாக ஆகி விட்டது.

படைகளை திரட்டி வந்து விட்ட மக்காவாசிகளை எதிர்க்காமல் விட்டு விட்டால். அந்தப் பகுதியில் மக்காவாசிகள் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தி விடுவார்கள். இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணி தனது வலிமையை இழந்து விடலாம். இஸ்லாத்தின் மீது வெறுப்பும் பகைமையும் கொண்ட ஒவ்வொருவரும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய துணிவு வந்து விடும்.

யுத்தம் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் வந்து விட்டவர்களுடன் முஸ்லிம்கள் சண்டையிடாமல் மதீனாவுக்குத் திரும்பி விட்டால். மக்கா எதிரிகள் மதீனாவரை படையெடுத்து வரமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்திரவாதமுமில்லை. 

இறைத் துாதர் முஹம்மது(ஸல்அவர்களுக்கு தா்ம சங்கடமான சூழ்நிலை. நாம் அழைத்துக் கொண்டு வந்தது. ஒரு குழுவை மடக்கி பொருளாதாரத் தடை ஏற்படுத்தத்தான். கிளம்பி வந்த நோக்கம் போர் செய்வதற்கு இல்லை. போரை எதிர் பார்த்து வரவில்லை. போர் திணிக்கப்படுகிறது. 

போர் என்று ஆகி விட்டால் முஹாஜிர்களுக்கு ஒன்றுமே இல்லை. ஏற்கனவே எல்லாவற்றையும் இழந்து விட்டுத்தான் வந்துள்ளார்கள். இனி அவர்கள் இழப்பதற்கு என்று ஒன்றுமே இல்லை அவர்கள் உயிரையும் இழப்பதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். எனவே முஹாஜிர்கள் பற்றி கவலைப்படுவதற்கு அவசியமே இல்லை.

ஆனால் இப்பொழுது படை எண்ணிக்கையில் அதிகமாக இருக்கக் கூடியவர்கள் அன்சாரிகள்போரில் ஏதாவது ஒரு பாதிப்பு என்று சொன்னால்பாதிக்கப்படப் போவது முஹாஜிர்களை விட அன்சாரிகளுக்குத்தான் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்

எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்லஇது அவர்களுடைய பகுதிஎதிர் தரப்பு கை ஓங்கி முன்னேறி மதீனாவை பிடித்து விட்டார்கள் என்று சொன்னால்முஹம்மது வந்து நம் எல்லோரையும் கைதாகிட வைத்து விட்டார்இப்படி ஒரு விமர்சனம் வந்து விடக் கூடாது என்பதற்காக.அல்லாஹ்வின் துாதர் என்ன செய்கிறார்கள்?


http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/blog-post_22.html


தொடரும் இன்ஷாஅல்லாஹ்


நாசாவுக்கு சென்று வந்த மேலப்பாளையம் மாணவரும்  அவரது தந்தையும் மக்கள் உரிமைக்கு அளித்த பேட்டி மற்றும் செய்திகள் ஆக 26 - செப் 1, 2016 மக்கள் உரிமையில்



அடுத்த தலைப்பு


மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று நபி(ஸல்) பொதுவாகக் கேட்டதன் நோக்கம் என்ன?


                                  முந்ததைய தலைப்பு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு