த.மு.மு.க. உதய தினம் எது?
1995 ஆகஸ்டு 25 த.மு.மு.க. உதய தினம் என்று
இன்று பலர் பதிவிட்டுள்ளதைக் கண்டேன். 1995 ஆகஸ்டு 25 த.மு.மு.க. உதய தினம் அல்ல
புணரமைக்கப்பட்ட தினம்தான். மேலும் விபரம் அறிய http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/blog-post_81.html
1987 ஆண்டு ஒரு
அமைப்பின் தலைவர்குடியரசு தினத்தை கறுப்புத் தினமாக அறிவித்து விட்டார். அதைக்
கண்டித்து 16-1-87இல் சென்னை
காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம்
என அறிவித்தார் குணங்குடி R.M. ஹனீபா. 16-1-87 தேதி
வந்தது. காந்தி சிலை அருகில் காவல்துறை அதிகாரிகள் குவிந்தனர்.
உண்ணாவிரதம் இருக்க யார்
வந்தார்கள். அவரும் மைதீன் ரஸாக், சுல்தான் ஆகிய அவரது இரு சிறு பையன்கள் மட்டுமே
வந்தனர். காவல் துறை அதிகாரிகள் படிக்க
வேண்டிய வயதப்பா உங்களுக்கு என்று கூறி இரண்டு பையன்களையும் வீட்டில் கொண்டு போய்
விட்டனர். குணங்குடி R.M. ஹனீபா
அவர்களை அரஸ்டு பண்ணி கொண்டு போய் விட்டார்கள்.
செய்தி அறிந்த அன்றைய முதல்வர் M.G.R. அவர்கள் குணங்குடி R.M. ஹனீபா அவர்களுக்கு தேசப் பற்றாளர் விருது வழங்குவதாக அறிவித்தார்.
செய்தி அறிந்த அன்றைய முதல்வர் M.G.R. அவர்கள் குணங்குடி R.M. ஹனீபா அவர்களுக்கு தேசப் பற்றாளர் விருது வழங்குவதாக அறிவித்தார்.
அதன் பிறகு இறந்து
விட்டதால் விருது கிடைக்கவில்லை.
அதே ஆண்டு M.G.R. உடைய வீட்டிற்கு போய் விட்டார் குணங்குடி R.M. ஹனீபா. அப்பொழுது த.மு.மு.க. என்பது லட்டர் பேடு இயக்கம்தான். அவரோடு 10 பேரை சேர்த்துக் கொண்டு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டிற்கு போய் விட்டார். தொப்பி போட்டுக் கொண்டு சென்றதால் காவல்துறை அதிகாரிகள் உள்ளே விட்டு விட்டனர். அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் என்றால் காவல்துறை அதிகாரிகள் நன்கு மதிப்பார்கள். ரொம்ப சோதனை செய்ய மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர். வெளியே
வந்ததும் மறைத்து வைத்திருந்த கறுப்பு துணியை அசைத்துக் காட்டி இட ஒதுக்கீடு கொடு, இட
ஒதுக்கீடு கொடு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு
கொடு என்று கோஷம் போட்டார். அங்கே நின்ற காவல்துறை
அதிகாரிகள் இவர்களை ஒடுக்க முயற்சித்தனர். எம்.ஜி.ஆர். அதிகாரிகளை தடுத்து குணங்குடி
R.M.
ஹனீபா அவர்களை தட்டிக் கொடுத்து இனி இது மாதிரி செய்யக்
கூடாது என அன்போடும் கண்டிப்போடும் கூறி, உங்கள் கோரிக்கைகளை எழுதி
கொடுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
26-11-1987 அன்று அனைத்து ஜாதி அமைப்புகளையும் அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக எம்.ஜி.ஆர். பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் முஸ்லிம்கள் சார்பாக அழைக்கப்பட்ட ஒரே அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்தான். குணங்குடி R.M. ஹனீபா முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தார்கள். அதில் என்ன சிக்கல் என்றால், எல்லா அமைப்பினரும் கொடுத்த மொத்த சதவீதத்தை கூட்டினால் 100க்கு பதிலாக 200 தாண்டி விட்டது. அதனால் எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீடு திட்டத்தை கை விட்டு விட்டார்.
ஆனால் குணங்குடி R.M. ஹனீபா வைத்த நிய்யத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அவர் நினைத்து பார்க்காத அளவுக்கு பெரிய அமைப்பாக மாறியது. இந்த இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தது என்பதை நீங்களெல்லாம் அறிவீர்கள். த.மு.மு.க.வின் நிறுவனர் இன்றைய துணைத் தலைவர் குணங்குடி R.M. ஹனீபா இன்று அனைவருக்கும் நன்றி கூறி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த சிறிய உரையை

ஜனநாயக முறையில் தமுமுக வின் முதல் பேரணி "25.08.1995"
தமுமுக துணை தலைவர் குனங்குடி R.M.அனீஃபா அவர்களின் சிறிய உரை.
TMMK MEDIA
Comments