இறந்து விட்ட செங்கிஸ்கான் பற்றி TNTJ வினர் விமர்சனமும் நாச்சியார்கோவில் ரஹ்மத்துல்லாஹ் பதிலும்
சகோதரர் செங்கிஸ்கானின் இறைச்சியை தின்ற TNTJ வினர்
மரணம் ஏற்படுத்தும் கொள்கைக் குழப்பம்!
எல்லாவற்றையும் மறக்கச் செய்து மனிதனை சில விநாடிகள் நிலைகுலையச் செய்யும் வலிமை நிச்சயமாக மரணத்திற்கு உண்டு.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்கள் 23 ஆண்டு காலம் போதித்து வந்த ஏகத்துவ கொள்கையில் பலர் குழப்ப நிலைக்கு ஆளானார்கள். உமரின் நாவில் இருந்து அல்லாஹ் பேசுகின்றான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட உமர்(ரலி) அவர்களே கொள்கைக் குழப்பத்திற்கு ஆளானார்கள். நபிகளாரின் மரணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முஹம்மதை வணங்குபவர்கள் கேட்டுக் கொள்ளுங்கள் முஹம்மது இறந்து விட்டார், அல்லாஹ்வை வணங்குபவர்கள் கேட்டுக் கொள்ளுங்கள், அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பன் என்று அபூபக்கர்(ரலி) அவர்கள் எழுச்சியுரை ஆற்றிய பிறகு கொள்கைக் குழப்பம் தெளிவுக்கு வந்தது.
இதோ இன்று சகோ.செங்கிஸ்கான் அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அவர்களின் குடும்பத்தாருக்கு இறைவன் அமைதியை வழங்குவானாக! சகோ.செங்கிஸ்கானின் மரணம் நம்மை மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மரணத்தின் தாக்கம் அவரது கொள்கையை, அவரது தவ்ஹீதுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை மறக்கடித்து விடக்கூடாது.
எல்லா கொள்கையும் சரிதான் என்று இருப்பவர்கள் வேண்டுமானால் அவர் சிறந்த பேச்சாளர், சிறந்த கொள்கையாளர், சிறப்பாக தாவா பணி செய்தவர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைத்துக் கொள்கையையும் ஜமக்காளத்தில் வடிகட்டி தவ்ஹீத் கொள்கையை மட்டும் சரியாக பற்றிப் பிடித்திருக்கும் நாம் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கொடுத்துவிடக்கூடாது.
எல்லா கொள்கையும் சரிதான் என்று இருப்பவர்கள் வேண்டுமானால் அவர் சிறந்த பேச்சாளர், சிறந்த கொள்கையாளர், சிறப்பாக தாவா பணி செய்தவர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைத்துக் கொள்கையையும் ஜமக்காளத்தில் வடிகட்டி தவ்ஹீத் கொள்கையை மட்டும் சரியாக பற்றிப் பிடித்திருக்கும் நாம் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் கொடுத்துவிடக்கூடாது.
சகோ.செங்கிஸ்கான் தவ்ஹீத் ஜமாஅத்துக்காக பாடுபட்டவர் என்று சொல்கிறார்கள். சரிதான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதே சகோதரர் செங்கிஸ்கான் தவ்ஹீத் கொள்கையை/தவ்ஹீத் ஜமாஅத்தை அழிப்பதற்காக அதை விட பாடுபட்டார் என்பதை மறுக்க முடியுமா? கடைசிவரை தவ்ஹீத் கொள்கைக்கு எதிராகவே செயல்பட்டார். தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பதற்காக ஷிர்க்கிற்கு ஆதரவானவர்களுடன் கைகோர்த்தார். ஷிர்க்கிற்கு எதிரான தவ்ஹீத் ஜமாஅத் போராட்டை விமர்சித்த அவர் இந்த போராட்டங்களை விலைவாசி உயர்வுக்கு நடத்தினால் மக்களுக்கு பிரையோஜனமாக இருக்கும் என்று தன்னுடைய முகநூலில் எழுதியவர் இந்த செங்கிஸ்கான்.
சகாபாக்கள் வழி நடப்போம் என்று கடைசிவரைக்கும் வழிதவறி நின்றவர். தொடர் உரை கூட நிகழ்த்தியவர். திருச்சியில் ஒரு கூட்டத்தில் சூனியத்தை ஆதரித்தும் பேசியிருக்கிறார்.
அடுத்து தனிநபர் தாக்குதல். சகோ.பீஜேவை களங்கப்படுத்தி விட்டால் அதன்மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழித்துக் கட்டிவிடலாம் என்ற குறிக்கோளுடன் கங்கனம் கட்டிக் கொண்டு அலைந்தவர் இந்த செங்கிஸ்கான். பாக்கருடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய பெயரில் ஒரு இணையதளத்தை துவங்கி சகோ.பீஜே மீது இல்லாத பொல்லாத அவதூறுகளை இட்டுக்கட்டி பிரம்மாண்ட தூபம் போட்டவர் இந்த செங்கிஸ்கான். ஆற்காட்டில் உள்ள ஒரு டீச்சருக்கும் பீஜேவுக்கும் தொடர்பு இருப்பதாக எழுதியவர் இவர்தான். பாக்கர் செய்த அனைத்து அயோக்கியத்தனங்களுக்கும் துணை போனவர் இவர். கடைசியில் பாக்கரை விட்டே வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சகோ.பீஜேவுக்கு குப்ரா என்ற பெண் காதல் கடிதம் எழுதினார் என்று அதை பலங்கொண்டு பரப்பியவரும் இவர்தான். சகோ.பீஜே இவரால் ஒரு கட்டத்தில் நிலை குலைந்து போனார். மார்க்க ஆய்வுகள் வெளிவர வேண்டிய ஆன்லைன்பீஜே இணையதளத்தில் தன் மீதான அவதூறுகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் பீஜே. அதன்பிறகு ஆன்லைன்பீஜேவின் நிலையைக் கண்ட சகோ.அபூயூசுப் என்ற சகோதரர் பொய்யன்டிஜே என்ற தளத்தை துவக்கி செங்கிஸ்கானின் அவதூறுகளை துவம்சம் செய்தார்.
அதுமட்டுமின்றி இவர் மோசடி செய்த பணத்திற்கு இவருக்கு எதிராக சாட்சி சொன்ன இஸ்லாத்திற்கு புதிதாக வந்த சகோதரர் அப்துர் ரஹ்மான் என்பவரை தொழுது முடித்த கையோடு அடித்து உதைத்தவர் இந்த செங்கிஸ்கான். இதெல்லாம் கொள்கை சார்ந்த விடயங்கள்.
கொள்கை சாராத விசயத்தையும் இங்கே சொல்லவேண்டும். சகோ.பீஜேவை எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று அவரது மனைவி பேரக்குழந்தைகள் இருந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தியதும் இந்த செங்கிஸ்கான் தான்.
ஆனால் இதெயெல்லாம் நாம் இப்போது புறந்தள்ளிவிட்டோம். அவரது மரணத்திற்காக கலங்குகின்றோ. அவர் அவருக்கானதை அடைந்து விட்டார். அவர் செய்தவைகள் சகோ.பீஜே மன்னிக்க வேண்டும், சகோ.அப்துர் ரஹ்மான் மன்னிக்க வேண்டும். இதெல்லாம் அவர்களுக்குள்ள மறுமை சார்ந்த விசயங்கள்.
இறந்தவர்களை ஏசாதீர்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒருவரை திட்டுவது என்பது வேறு அவரது கொள்கையை விமர்சனம் செய்வது என்பது வேறு. தவ்ஹீத்வாதிகள் கொள்கைகளை விமர்சிப்பவராக இருக்க வேண்டும். கொள்கையில் சமரசம் செய்யாதவர்களாக இருக்க வேண்டும். இறந்து விட்டார் என்
பதற்காக அவரது கொள்கையை மறந்து விட்டு அவரை சிலாகிப்பது தவ்ஹீத்வாதிக்கு ஆகாத செயல்.
பதற்காக அவரது கொள்கையை மறந்து விட்டு அவரை சிலாகிப்பது தவ்ஹீத்வாதிக்கு ஆகாத செயல்.
அப்படி பார்த்தால் சகோ. அப்துல்லா (பெரியார் தாசன்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்து மரணித்தார்கள். அதற்காக அவரது கொள்கைய நாம் சரிகாணவில்லை. அதை விட சகோ.அப்துல்கலாம் அவர்கள். எளிமையிலும் நேர்மையிலும் பொருப்பிலும் அவர் சிறந்தவராக இருந்தார். ஆனால் நாம் அவரது கொள்கையை விமர்சித்தோம். இந்த விவகாரத்தில் நம்மை எதிர்த்து சம்சுதீன் காசிமி கூட இதேபோலச் சொல்லியிருந்தார். ஆனால் அவர் மரணத்திற்காக நாம் வருத்தப்பட்டோமே தவிர அவரது கொள்கையை எதிர்க்கத்தான் செய்தோம். ஆனால் செங்கிஸ்கான் வியசத்தில் அது அப்படியே முரண்படுகின்றது. பல தவ்ஹீத்வாதிகள் அவரை பெரிய அளவில் உயர்த்திப் பிடிக்கும் நிலை கூட இன்றைக்கு முகநூலில் காணப்படுகின்றது.
அப்துல்கலாம் நம் கொள்கையை அழிக்க செயல்படவில்லை, ஆனால் செங்கிஸ்கான் செயல்பட்டார். அப்துல்கலாமை விமர்சித்தோம், செங்கிஸ்கானை தூக்கிப் பிடிக்கிறோம். அப்படியானால் இங்கே நம்மை குழப்பத்தில் ஆழ்த்துவது முதியவயது மரணம், இளவயது மரணம் என்பதுதானா?
ஆனால் அதேநேரம் சகோ.MMசைபுல்லா அவர்கள் இறந்து போன போது இலங்கை அயோக்கியன் அஸ்டோ மனாஸ் என்பவன் பூமிக்கு பாரம் குறைந்தது என்று எழுதி தீபாவளி வெடி வெடிக்கும் படத்தைப் போட்டிருந்தானே அந்த இழிநிலைக்கு நாம் சென்றுவிடவில்லை. மீண்டும் சொல்கிறேன். சகோ.செங்கிஸ்கான் மறைவு நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது. அதேநேரம் அவரை மாற்றுக் கொள்கைவாதியாகத்தான் பார்க்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எந்நிலையிலும் கொள்கையில் சமரசம் இல்லை. இறைவன் நம்மை கடைசிவரை இந்தக் கொள்கையில் நிலை பெறச் செய்ய வேண்டும்.
நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 28:56)
🏽🏽🏽🏽🏽🏽🏽
🏽🏽🏽🏽🏽🏽🏽🏽
🏽🏽🏽🏽🏽🏽🏽
🏽🏽🏽🏽🏽🏽🏽🏽
TNTJ வினரின் மரணம் ஏற்படுத்தும் கொள்கை குழப்பம் என்ற தவரான பின்னூட்டத்திற்கு பதில்
முதலில் இரந்தவர்களைப் பற்றி நல்லதையே பேசுங்கள் என்ற நபி மொழிக்கும் நபிவழிக்கும் மாற்றமாக , தனது இயக்கமான TNPJ வை தூக்கிப்பிடித்து தன் மனதில் இருக்கும் விரோதத்தையும் குரோதத்தையும் கொட்டி தீர்த்திருக்கும் கொஞ்சமும் இஸ்லாமிய அடிப்படையை பேனாமல் எழுதப்பட்ட பதிவாகும் இது!
1. நபிகளார் இரந்தபோது அவர்கள் இரக்கவில்லை என உமர் ரழி அவர்கள் கூறியது நபி ஸல் அவர்கள் மீது இருந்த அளவிலா பற்றின் காரணமாக சொன்ன வார்த்தைகள் அது.
இஸ்லாமிய அடிப்படை தெறியாமல் உமர் ரழி அவர்கள் கூறியது அல்ல.
கொள்கை குழப்பம் ஏற்பட்டது கொள்கை குழப்பம் ஏற்பட்டது என பிஜேயானிகள் கூறுவது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்யாகும்.
உமர் ரழி அவர்கள் அல்லாஹ் இரண்டு என சொன்னார்களா? அல்லது அல்லாஹ் இல்லை என மறுத்தார்களா? நவூதுபில்லாஹ்.
இதில் எங்கே கொள்கை, குழப்பம் ஏற்பட்டது?
பிஜே என்ற முஃதஸிலாவைத் தவிர 1400 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில் இதை கொள்கை குழப்பம் என்று யாரும் கூறவில்லை ! பிஜேயானிகளே இவ்வாறு கூறிவருகின்றனர்.
2. செங்கிஸ்கான் அவர்களைப்பற்றி பல தவரான செய்திகளை கூறி அவர்மீது நல்லென்னம் ஏற்படாதவாறு எழுதியிருப்பது ஒரு இரந்துவிட்ட சகோதரனின் மீது கூட, பிஜேவும் பிஜேயானிகளும் எவ்வாறு வஞ்சக விஷத்தை விதைக்கின்றனர் என்பதை இவர்களின் பதிவு படம்பிடித்து காட்டுகிறது .
3. TNTJ வை விட்டு வெளியேரினால்... அவர் ஏகத்துவ கொள்கையை விட்டே வெளியேறி விட்டார் என இவர் எவ்வாறு கூறமுடியும்? செங்கிஸ்கான் உள்ளத்தை ஈமானை இவர் என்ன பிளந்து பார்த்தாரா?
4. நபிகளார் அவர்கள் யூதர்களோடும் நஸாராக்கலோடும் நட்புரவோடும் இருந்திருக்கின்றார்கள்! ஆனால் கொண்ட கொள்கையில் சரியாகவும் இருந்திருக்கின்றார்கள். அதுபோல சகோதரர் செங்கிஸ்கான் அவர்களும் தான் கொண்ட ஏகத்துவ கொள்கையை விட்டு விட்டு, தர்ஹா வழிபாடு ஒன்றும் செய்துவிடவில்லை.
ஏகத்துவத்தையும் தூதுத்துவத்தையும் தனது உயிர்மூச்சாக நினைத்து அழைப்புப்பனியை மரணிக்கும் வரையில் செய்தவர் செங்கிஸ்கான் அவர்கள்.
மரணித்துவிட்ட சகோதரனின் மாமிசத்தைகூட விட்டுவைக்காதவர்கள் இவர்கள் அந்த அளவுக்கு இயக்க வெறி !
5. பிஜே பற்றி செங்கிஸ்கான் போட்ட பதிவுகள் அனைத்தும் பிஜே வின் email லிலிருந்து எடுத்த விடயங்கலாகும். இது சம்மந்தமாக பழைய சகோதரர்கள் அனைவருக்கும் தெரிந்த ஊரரிந்த விடயமாக இருக்கிறது அந்த இருவரும் சாட்சிகளாக இன்றும் உயிரோடுதான் இருக்கின்றனர். இதுகூட இவர் இதைப்பற்றி பேசாமல் இருந்திருந்தால் நாமும் இதைப்பற்றி பேசாமல் இருந்திருப்போம்.
6. செங்கிஸ்கான் ஸஹாபாக்களின் வழியை பின்பற்றி வழி தவரிய கொள்கைக்கு போய்விட்டார் என கூறுகிறார். எது வழிகேடு? பிஜே விடம் தனது மார்க்கத்தை ஒப்படைத்து விட்டு புத்திக்கு முறன்படுகிறது எனகூறி வஹி மறுப்பு கொள்கைக்கு போனது வழிகேடா?
நேர்வழி பெற்ற சுவனத்திற்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்ட ஸஹாபாக்களின் வழிமுறைகளை விளக்கங்களை ஏற்கவேண்டும் என கூறுவது வழிகேடா?
ஸஹாபாக்களுக்கு சுவனம் கேரன்டி என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
பிஜே அவர்களுக்கோ அவரல்லாதவர்களுக்கோ சுவனம் கேரன்டி என கூறமுடியுமா?
ஆனால் ஸஹாபாக்கள் போன்று ஈமான் கொள்ளவில்லை என்றால் அது நேர்வழியே அல்ல என அல்லாஹ் கூறுகின்றான் .
فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُم بِهِ فَقَدِ اهْتَدَوا ۖ وَّإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ ۖ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:137)
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:137)
இந்த பாதையைதான் நண்பர் செங்கிஸ்கான் தேர்வுசெய்தார்.
TNTJ வின் வழிகேட்டை விட்டு விளகினார். அனைவரோடும் நல்லிணக்கம் காட்டினார். அழகிய அழைப்பு பணியை இருதி மூச்சுவரை செய்தார். அதிலேயே மரணித்தார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
TNTJ வின் வழிகேட்டை விட்டு விளகினார். அனைவரோடும் நல்லிணக்கம் காட்டினார். அழகிய அழைப்பு பணியை இருதி மூச்சுவரை செய்தார். அதிலேயே மரணித்தார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
கருத்து முரண்பாடு இருந்தாலும் அனைத்து சகோதர இயக்கங்களும் அதன் தலைவர்களும் ஜனாஸாவில் கலந்துகொண்டனர் கண்ணீர்விட்டனர்.
TNPJ வினரைத் தவிர!!
கவாரிஜிகள் போன்று உங்கள் பாதையும் தனிப் பாதையாகிவிட்டது உங்கள் செயல்களும் அவர்களை ஒத்தே இருக்கிறது!
TNPJ வினரைத் தவிர!!
கவாரிஜிகள் போன்று உங்கள் பாதையும் தனிப் பாதையாகிவிட்டது உங்கள் செயல்களும் அவர்களை ஒத்தே இருக்கிறது!
உங்களை நீங்களே தூய்மையாக்கி கொள்ளாதீர்கள் - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 24:21)
(அல்குர்ஆன் : 24:21)
TNTJ சகோதரர்களே!சிந்தியுங்கள்!! தனி மனிதரை உங்களை அறியாமலேயே கடவுலாக்கி விடாதீர்கள் !!!
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(அல்குர்ஆன் : 3:64)
(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(அல்குர்ஆன் : 3:64)
“நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!”
“நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!”
“நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!”
MS. ரஹ்மத்துல்லாஹ்
நாச்சியார்கோவில்
நாச்சியார்கோவில்
Comments